Followers

Wednesday, April 02, 2014

ஹிட்லரின் இடத்தில் இன்று நரேந்திர மோடி!மிக அருமையான காணொளி! ஹிட்லர் தனது நாஜி படைகளோடு கொடுமைகளை அரங்கேற்றிய போது நிகழ்ந்த நிகழ்வுகளை இந்திய ஹிட்லரான நரேந்திர மோடியை வைத்து அழகான கற்பனை காணொளியை வழங்கியுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள வரிகளை தமிழப்படுத்தியுள்ளேன். பார்த்து கேட்டு படித்து ரசியுங்கள் சில உண்மைகளை! பரப்புங்கள் அனைவருக்கும்.

காட்சி ஆரம்பம்:

தனது நாஜி படைகள் புடைசூழ ஹிட்லர் நாட்டு நடப்புகளை தளபதிகளிடம் கேட்கிறார். அதில் ஒரு தளபதி ஹிட்லரைப் பார்த்து பேசுகிறார்.

தளபதி: 'சாஹேப்! புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி பார்ட்டி நமது நாட்டையும் கடந்து சர்வதேச அரங்கிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மிகப் பிரம்மாண்டமான பேரணிகளை குஜராத், மஹாராஷ்ட்ரா, பெங்களூரில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார். தற்போது வாரணாசிக்கும் வந்துள்ளார்.

(இந்திய வரைப்படத்தைக் காட்டி கெஜ்ரிவாலின் பயண விபரம் மற்றும் மக்களின் ஆதரவையும் தளபதி ஹிட்லருக்கு விவரிக்கிறார்)

தளபதி: கெஜ்ரிவால் உங்களை எதிர்த்து நிற்கப் போவதாக அறிவித்து விட்டார். வாரணாசியில் மக்கள் ரொம்பவும் சந்தோஷத்தோடு அவரை ஆதரிக்கின்றனர்.

இதனைக் கேட்ட ஹிட்லருக்கு கோபம் தலைக்கேறுகிறது. தனது தளபதியைப் பார்த்து கோபத்தோடு பேசுகிறார்:

ஹிட்லர்: 'வாரணாசி மக்கள் கெஜ்ரிவாலை ஆதரிக்க மாட்டார்கள். அனைத்து ஹிந்துக்களும் நமது கட்டுப்பாட்டில் உள்ளனர். நம்மை யாரும் அசைக்க முடியாது.

(தளபதிகள் தங்களுக்குள் பார்வையாலேயே ஹிட்லரின் அறியாமையைக் கண்டு வெதும்புகின்றனர். ஒரு தளபதி தயக்கத்துடன் சற்று பயத்துடன் பேசத் துவங்கிளார்.)

தளபதி: 'சாஹேப்! மன்னிக்கவும்! நாங்களும் முன்பு உங்களைப் போல்தான் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. இந்த முறை பிஜேபியையும் உங்களையும் வாரணாசி மக்கள் தூரமாக்கி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். நாம் அந்த மக்களை 15 வருடங்களாக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளோம். அதனை அவர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் போல் தெரிகிறது.

தனது நம்பிக்கைக்குரிய தளபதியே இவ்வாறு பேசுவது ஹிட்லருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்குகிறது. முகம் கோபத்தால் சிவக்கிறது. உண்மை ஹிட்லருக்கு புரிய ஆரம்பிக்கிறது. தனது நிலை குறித்து உடைந்து போகிறார். தனது மூக்கு கண்ணாடியை சோகத்தோடு கழட்டி மேசையில் வைத்து விட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பிக்கிறார்.

ஹிட்லர்: 'அனைவரும் இந்த அறையை விட்டு வெளியேறுங்கள். ஊடகத் துறையைச் சார்ந்த ராகுல் கென்வால், அர்னாஸ் கோஸ்வாமி, ராஜத் சர்மா, துக்ளக் சோ மட்டும் உள்ளே இருக்கவும்'

ஹிட்லர் குறிப்பிட்ட ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் தவிர மற்ற அனைவரும் ஒரு வித சோகத்தோடு அறையை விட்டு வெளியேறுகின்றனர். அறை சாத்தப்படுகிறது. ஊடகத் துறையைச் சார்ந்தவர்களை நோக்கி ஹிட்லர் வெறி பிடித்தவர் போல் கத்துகிறார்.

ஹிட்லர்: 'இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோடிக்கணக்கான ரூபாய்களை தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைத் துறைக்கும் கொட்டிக் கொடுத்தேனே! எதற்காக? இந்திய மக்களை முட்டாள்களாக மாற்றுவதற்காககத்தானே! நான் உருவாக்கி வைத்திருந்த குஜராத்தைப் பற்றிய போலி பிம்பங்களை மக்களிடம் சரியாக நீங்கள் கொண்டு செல்லவில்லை. அனைத்து உண்மைகளையும் இன்று கெஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு விளக்கி விட்டார். உங்களுக்கு கொடுத்த பணம் அம்பானியும் அதானியும் கொடுத்ததே! அதனை அவர்களுக்கு எவ்வாறு திருப்பிக் கொடுக்கப் போகிறேன் என்று எனக்கு விளங்கவில்லை. எனது ஹெலிகாப்டர் பயணத்துக்கும், பேரணிகளுக்கும், டிவி சேனல்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை அம்பானியிடமிருந்து வாங்கியுள்ளேனே! ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரத்தால் வெற்றி பெறுவது தற்போது மிகக் கடினமாகி விட்டதே!"

கோபத்தில் ஹிட்லர் தாறுமாறாக கத்த ஆரம்பிக்கிறார். அர்னப் கோஸ்வாமி உடன் குறுக்கிடுகிறார்.

அர்னப் கோஸ்வாமி: 'சார்! கெஜ்ரிவால் பொய்யன் என்பதை நிரூபிக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அவரிடம் உண்மை இருப்பதால் எங்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஹிட்லர்: ' நிறுத்துங்கள்! குஜராத்தில் நடந்த மஹா ஊழலை உங்களால் மறைக்கத் தெரியவில்லை. குஜராத்தில் விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொண்டதையும் உங்களால் சமாளிக்கத் தெரியவில்லை.

அர்னப் கோஸ்வாமி: 'சாஹேப்! நாங்கள் எங்களால் முடிந்ததை செய்தோம். ஆனால் கெஜ்ரிவால் இதற்கெல்லாம் காரணம் நரேந்திர மோடிதான் என்று உங்களை முன்னிலைப்படுத்தி அனைத்தையும் கெடுத்து விட்டார்.

ஹிட்லர்: 'ஆ........ கெஜ்ரிவால்! இந்த பொடியன் இந்தியாவின் பிரதமராகும் எனது நீண்ட நாள் கனவை கலைத்து விட்டான். இதற்காக பல ஆண்டுகளாக பல திட்டங்களைத் தீட்டி பலரை பலி கொடுத்து இந்த நிலைக்கு வந்தேன். ஆனால் இந்த கெஜ்ரிவால் அனைத்தையும் கெடுத்து விட்டான்.'

(கோபத்தில் அருகில் இருந்த பொருட்களை தாறு மாறாக போட்டு உடைக்கிறார். சிறிது நேரத்திற்கு பிறகு தொடர்கிறார்.)

'பொய்களை திறமையாக பேச எத்தனை நாள் பயிற்சி எடுத்திருப்பேன் தெரியுமா? பாரதத்தை தங்கத்தைப் போல் மின்னச் செய்வேன்: குஜராத்தைப் போல் ஒளிரச் செய்வேன்: என்று பல ஆண்டுகளாக நான் திட்டம் போட்டு மக்களை நம்ப வைத்திருந்தேன். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் இந்த கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி பார்ட்டியும் அரசியலில் குதித்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. என் திட்டங்கள் அனைத்தும் என் முன்னேயே ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து வருகிறது. முதலில் அவர்கள் டெல்லியைக் கைப்பற்றினார்கள். தற்போது முழு இந்தியாவுக்கும் குறி வைத்துள்ளார்கள். கடவுள்தான் என்னை கெஜ்ரிவாலிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.'

நீண்ட நேரம் பேசியதால் களைப்பு மேலிடவே சோர்ந்து போய் இருக்கையில் அமர்கிறார். அறைக்கு வெளியே அவரது கட்சிக் காரர்கள் சோகத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். சிறிது நேர மௌனத்துக்குப் பின் ஹிட்லர் திரும்பவும் பேச ஆரம்பிக்கிறார்.

ஹிட்லர்: 'எனக்கு இரண்ட சீட்டுக்களை ஒதுக்கியதற்காக பிஜேபிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாரணாசியில் நான் தோற்றாலும் குஜராத்தில் நான் கரையேறி விடுவேன்'

'நான் ஏன் கெஜ்ரிவாலை சந்திப்பதை தவிர்க்கிறேன் தெரியுமா? அவர் எனக்கு 17 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் ஒன்றுக்குக் கூட என்னிடம் உருப்படியான பதில் இல்லை. அவருக்கு பதில் சொல்லாமல் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களை சந்திக்கப் போகிறேன் என்பது எனக்கு விளங்கவில்லை. காந்திஜி பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அதே போல் கெஜ்ரிவால் எனக்கும் மற்ற கட்சிக் காரர்களுக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கிறார். தேசத்தின் போக்கையே மாற்றி விட்டார்.'

வெளியில் நின்று கொண்டிருந்த சுஷ்மா சுவராஜ் துக்கம் தாளாமல் தேம்பி அழ ஆரம்பிக்கிறார். (அத்வானியை பழி வாங்கிய மோடிக்கு இதுவும் வேண்டும்.. இன்னமும் வேண்டும்... என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார்) அருகில் இருந்த பெண் 'சுஷ்மா! கவலைப்படாதே! கெஜ்ரிவால் உனக்கு எதிராகவோ அத்வானிக்கு எதிராகவோ எதுவும் சொல்லவில்லையே' என்று தேற்றுகிறார். 10 நிமிடம் மயான அமைதி நிலவுகிறது. பிறகு உடைந்த குரலில் ஹிட்லர் பேச ஆரம்பிக்கிறார்.

ஹிட்லர்: 'வாரணாசியில் கெஜ்ரிவால் வெற்றி பெற்று விட்டால் என்னை நானே சுட்டுக் கொண்டு இறந்து விடுவேன். நீங்கள் அனைவரும் இந்த செய்திக்கு தயாராக இருந்து கொள்ளுங்கள்.'

மோடியின் இந்த பேச்சால் பத்திரிக்கைத் துறையைச் சார்ந்த நான்கு பேருக்கும் வியர்க்க ஆரம்பிக்கிறது. முடி இல்லாததால் சோ ராமசாயின் தலையிலிருந்து வியர்வை வழிய ஆரம்பித்தது.

ஹிட்லர்:' என்ன செய்வீர்களோ தெரியாது. ஆம் ஆத்மி பார்ட்டியை எப்படியாவது அழிக்க வேண்டும். குஜராத்தின் பொய் பிம்பம் சற்றும் கலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டம். இதற்கு வன்முறையைக் கையிலெடுத்தாலும் எனது ஆதரவு உண்டு. அம்பானியிடம் சொல்லி தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். இதனால் எத்தனை உயிர்கள் அழிந்தாலும் கவலையில்லை. இப்போது நீங்கள் செல்லலாம்'

காட்சி நிறைவுறுகிறது.


1 comment:

ஆனந்த் சாகர் said...

கிறுக்கர்களால் கிறுக்கர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த காணொளியை கோயபல்ஸ் பிரச்சாரம் செய்துவரும் சுவனப்பிரியன் என்ற மாபெரும் கிறுக்கர் தனது வலைப்பூவில் வெளியிட்டிருப்பதில் வியப்பேதும் இல்லை.