Followers

Saturday, April 05, 2014

கேரள மக்களின் முயற்சியை நாமும் செயல்படுத்தலாமே!



நமக்கு அருகில் உள்ள கேரளாவின் பல கிராமங்களில் இது போன்ற நீர் சேமிப்பு முறைகளைக் காணலாம். மழை தண்ணீர் வீணாகி கடலோடு சென்று கலப்பதில் யாருக்கு நன்மை? இது போல் கூரைகளில் பிளாஸ்டிக் குழாய்களைக் கொண்டு தண்ணீர் செல்ல வழி அமைத்துக் கொள்ளுங்கள். மழை காலத்துக்கு முன்னால் கூரையை இலைகள் மண்களை நீக்கி சுத்தம் செய்து விடுங்கள். நைலான் அல்லது மணலைக் கொண்டு வரும் தண்ணீரை வடி கட்டி அருகில் உள்ள கிணற்றுக்குள் மழை நீரை விட்டு விடுங்கள். மழை நீரானது உடலுக்கு மிக ஆரோக்கியத்தை தரக் கூடியது. மனிதன் எத்தணை கெமிகல் போட்டு தண்ணீரை சுத்திகரித்தாலும் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் இந்த மழை நீருக்கு ஈடாக முடியாது மினரல் வாட்டர்கள்.

இன்று பல கிராமங்களிலும் நகரங்களிலும் தண்ணீருக்கென்றே ஒரு குறிப்பிட்ட தொகையை செலவழிக்கிறோம். குறைந்த ஊதியத்தை பெறும் பெரும்பாலான உழைக்கும் மக்கள் சுத்தமில்லாத தண்ணீரை அருந்தி நோய்களை வரவழைத்துக் கொள்கின்றனர். அதிகம் செலவில்லாத இந்த முறையை அக்கம் பக்கத்திலுள்ள வீட்டினரின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தினால் நோயற்ற வாழ்வை நாம் பெறலாம். மழை நீரானது பல ஆண்டுகள் வரை கெடாமல் இருப்பதாக ஆராய்ச்சிகளும் சொல்கின்றன.

No comments: