Followers

Wednesday, April 16, 2014

நடிகை மம்தா குல்கர்னியும் நடிகர் ஜெய்யும் இஸ்லாத்தை ஏற்றனர்!அதென்னமோ தெரியலை! என்ன மாயமோ புரியலை! இந்த சினிமா நடிகர்களுக்கு இஸ்லாத்தின் மேல் நாளுக்கு நாள் ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ் கதாநாயகன் ஜெய் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியை மாலை மலர் வெளியிட்டுள்ளது. அது சம்பந்தமாக விபரம் திரட்ட கூகுளில் தேடினால் இந்தி நடிகை மம்தா குல்கர்னி இஸ்லாத்தை ஏற்ற விபரமும் தெரிய வந்தது.

1997 ஆம் ஆண்டு விக்கி கோஸ்வாமி ஐக்கிய அரபு அமீரகத்தில் போதை பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தண்டனை காலம் 25 வருடங்கள். தனது தண்டனை காலங்களில் செய்த தவறுகளை எண்ணி வருந்தி சிறைச்சாலையில் இஸ்லாத்தை படிக்க ஆரம்பிக்கிறார். அங்கு அவருக்கு மாற்றங்கள் ஏற்படுகிறது. இஸ்லாத்தை தனது வாழ்வியலாக மாற்றிக் கொள்கிறார் கோஸ்வாமி.(பெயரைப் பார்த்தால் இவர் ஒரு பார்பனர் என்று தெரிகிறது)

நல்ல நடத்தைகளால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு 2012ல் விடுதலையடைந்து அதன் பிறகு கென்யாவின் நெய்ரோபியில் தங்குகிறார். அங்கு முன்பே பழக்கமான ஹிந்தி நடிகை மம்தா குல்கர்னியோடு மேலும் நெருக்கமடைகிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அவருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்தை கொடுக்கிறார் கோஸ்வாமி. பிறகென்ன.... வழக்கம் போல் மம்தா குல்கர்னியையும் இஸ்லாம் தனது அன்பு கரங்களால் அரவணைத்துக் கொள்கிறது. ஹிந்தி திரை உலகில் முன்பு செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தத்தை இஸ்லாத்தை தழுவியதன் மூலம் கழுவிக் கொண்டார். மே பத்து 2013ல் இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. 90 களில் பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர் மம்தா குல்கர்னி. 1991 லிருந்து 2002 வரை பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர். கலங்கிய அந்த நீரோடையானது இஸ்லாத்தை ஏற்றதனால் புனிதமடைந்துள்ளது. இனி இந்த ஓடையானது இஸ்லாமிய வழியில் பயணிக்கும். தம்பதிகள் இருவரும் தவறுகளிலிருந்து விலகி சிறந்த இஸ்லாமியர்களாக வாழ நாமும் வாழ்த்துவோம்.

http://thenewsfocus.blogspot.com/2013/05/former-bollywood-actress-mamta-kulkarni.html

அடுத்து தமிழ் சினிமா ஹீரோ ஜெய் இஸ்லாத்தை தழுவிய செய்தியையும் மாலை மலர் தருகிறது. அதையும் பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக ஊடகங்கள் செய்தி பரவியது. இதை அவரும் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. நடிகர் ஜெய், 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருமணம் எனும் நிக்கா’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவர் போன்று நடித்திருக்கிறார். இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே முஸ்லீம் மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக மாறியுள்ளார். இதையடுத்தே இவர் முஸ்லீம் மதத்துக்கு மாறியதாக கூறப்படுகிறது.

http://cinema.maalaimalar.com/2014/04/16170641/actor-jai-change-to-muslim-cas.html

இந்த நடிகரும் நடிகையும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த மதிப்பும் கூடி விடப் போவதில்லை. மாறாக இந்த நடிகரும் நடிகையும் சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய வாழ்வு முறையை இறப்பு வரை தொடர்ந்தால் இறப்புக்கு பிறகும் நிம்மதியான வாழ்வைப் பெற்றுக் கொள்வார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? பணமும் புகழும் எப்படியும் வாழலாம் என்ற தான்தோன்றித் தனமான வாழ்க்கையும் மட்டுமே ஒரு மனிதனுக்கு நிம்மதியை தந்து விடாது. எனவே தான் மன நிம்மதியைத் தரும் இறை மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி அவர்களாகவே வருகின்றனர். இந்துத்வாவாதிகளின் ஆதிக்கம் இந்து மதத்துக்குள் இன்னும் அதிகமானால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இஸ்லாத்தை நோக்கி இன்னும் வேகமாக வருவார்கள். தற்போது தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் மர்கஜ்களில் தினமும் இஸ்லாத்தை ஏற்கும் சொந்தங்களை தினமும் பார்த்து படித்து வருகிறோம்.

மோடி பிரதமராக ஒருக்காலும் முடியாது. அப்படியே ஆனாலும் அதுதான் இந்தியாவில் இஸ்லாம் மேலும் வளர பெரும் காரணமாக இருக்கும். ஏனெனில் எங்கெல்லாம் எதிர்ப்பு அதிகம் வலுக்கிறதோ அங்கு தான் இஸ்லாம் மிக வேகமாக பரவியதாக வரலாறு. ஆரம்ப கால மக்கா வாழ்க்கையும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.


5 comments:

நட்புடன் ஜமால் said...

அல் ஹம்துலில்லாஹ்

அவர்களுக்காக(வும்) வல்ல ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்

சுவனப் பிரியன் said...

//கணவர் இஸ்லாமியராக மாறினால் மனைவியும் மதம் மாறவேண்டும் . அது சட்டம் .
அதற்க்கு அமைய மம்தாவும் மதம் மாறியுள்ளார் .//

ஷாருக்கான் மனைவி இன்று வரை இந்துவாகவே வாழ்வதை படித்ததில்லையா? யாரும் அவர்களிடம் சண்டைக்கு போகவில்லையே!

2012ல் விடுதலையாகி 2013ல்தான் மம்தா குல்கர்னியை திருமணம் செய்கிறார். யார் அடித்து விடுவது என்பது தெரிகிறதா? :-)

அடுத்து தற்போது அவர்கள் வாழ்வது நைரோபியில். இங்கும் இஸ்லாத்தை பின்பற்றியே ஆக வேண்டும் என்ற எந்த கட்டளையும் இல்லை. தாய் மதமான இந்து மதத்துக்கே திரும்பினால் அதனை யாரும் கேட்க முடியாது. ஆனாலும் இஸ்லாத்தை அவர்களால் தவிர்க்க முடியாது.

ஏ ஆர் ரஹ்மானிடமும், யுவன் சங்கரிடமும் தாய் மதம் திரும்பி விடுங்கள் என்று கோரிக்கை வைத்துப் பாருங்களேன். அழகிய பதிலை உங்களுக்குக் கொடுப்பார்கள்.

Anonymous said...

கோஸ்வாமி மம்தாவின் நீண்டகால துணைவர் .
கோஸ்வாமி போதைபொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது 1997 . 25 வருட சிறை தண்டனை . முஸ்லிமாக மதம் மாற ஒப்புகொண்டபின் 2012 நவம்பர் விடுதலை செய்யப்படுகின்றார் .

மம்தா கோஸ்வாமி சிறையில் இருக்கும் போதுதான் திருமணம் செய்தார் . விடுதலை செய்யப்பட்ட பின் அல்ல .
கோஸ்வாமி சிறையில் இருக்கும் போது அவரை திருமணம் செய்த மம்தா விடுதலை ஆகும் வரை கணவரது ஹோட்டல் பிசினஸ் ஐ கவனித்து வந்தார் .

கோஸ்வாமிக்கு இஸ்லாமில் நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ அவர் தனது அந்த தொழிலை விடபோவதில்லை .
நைரோபியில் என்ன தோசை கடையா வைத்திருக்க்ன்றார் ?

எல்லாவறையும் பார்த்த சுவனம் மம்தா எப்போது திருமணம் செய்தார் என்பதை சரியாக கவனிக்காம விட்டுவிட்டார்

Anonymous said...

நைரோபியில் இருக்கும் கோஸ்வாமி பழைய தொழிலை திறம்பட செய்ய இருப்பதால் இப்போது போட்டுள்ள வேஷமே மிகவும் பாதுகாப்பானது .
அத்துடன் பல புதிய தொழில் நண்பர்களையும் பெற்று தரும்

Anonymous said...

மம்தாவை பற்றி இப்படி கூட செய்திகள் வருகின்றன
http://entertainment.oneindia.in/bollywood/news/2013/mamta-kulkarni-spiritual-latest-pictures-115155.html#slide252019

அதோட மம்தா எழுதிய Autobiography Of An Yogini பற்றியும் சுவனம் ஏதாவது கருத்து கூறினால் நல்லது .

"ஏ ஆர் ரஹ்மானிடமும், யுவன் சங்கரிடமும் தாய் மதம் திரும்பி விடுங்கள் என்று கோரிக்கை வைத்துப் பாருங்களேன். அழகிய பதிலை உங்களுக்குக் கொடுப்பார்கள்."

அவரசப்பட்டு சவால் விடாதீர்கள் சுவனம் ... AR ரஹ்மான ஓகே . ஆனால் யுவன் அப்படி அல்ல . யுவன் எதற்காக மதம் மாறினார் என்பது பலருக்கு தெரியும் . அந்த பொண்ணு திருமணம் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தால் யுவனின் வேசமும் கலைந்து விடும் . ஒரு வருஷம் பொறுத்து இருந்து பாருங்கள்