'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, April 15, 2014
பாகிஸ்தான் அனாதை சிறுவர்களுக்கு சவுதியின் உதவி!
சென்ற திங்கட்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் சவுதி மன்னர் அப்துல்லாவின் உத்தரவின் பேரில் 8000 க்கும் அதிகமான அனாதை சிறுவர் சிறுமியருக்கு பள்ளி சீருடைகளும், புத்தகங்களும், ஸ்கூல் பேக்குகளும் இலவசமாக கொடுக்கப்பட்டது. இயற்கை பேரிடர்களில் சிக்கி அதனால் தங்களது சொத்து சுகங்களை இழந்த ஏழைகளுக்கு இந்த உதவியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. செல்வந்த நாடுகள் இது போன்ற வறிய நாட்டு குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏற்றுக் கொண்டால் இன்னும் சில ஆண்டுகளிலேயே உலகம் முழுவதிலும் உள்ள படிப்பறிவின்மையை ஒழித்து விடலாம். செல்வந்த நாடுகள் மனது வைக்க வேண்டும்.
தகவல் உதவி
சவுதிகெஜட்
15-04-2014
'இறைவன் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்த பாவியையும் இறைவன் விரும்ப மாட்டான்'
-குர்ஆன் 2:276
சிலர் நினைப்பது போல் செல்வம் ஒருவனிடம் குவிவது அவனது திறமையினால் அல்ல. அவனை செல்வந்தனாக்குவது இறைவனே! இறைவன் சிலருக்கு பொருளை கொடுத்து சோதிப்பான்: இன்னும் சிலருக்கு பொருளை எடுத்து சோதிப்பான். கொடுத்த அந்த இறைவன் சொல்கிறான் உனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஏழைகளுக்கு தானமாக கொடுத்து விடு. அதில் நான் அபிவிருத்தியை கொடுக்கிறேன் என்று. ஆனால் பல செல்வந்தர்களோ வங்கியில் பணத்தை சேமித்து வைத்து அதில் வரும் வட்டியில் தங்களின் குடும்பத்தை ஓட்டுகின்றனர். அதனை இஸ்லாமியர்களும் செய்வதுதான் ஆச்சரியம். இது போன்றவர்களைப் பார்த்துதான் 'நன்றி கெட்டவர்கள்' என்று இறைவன் கடுமையாக எச்சரிக்கிறான். ஏழைகளுக்கு உதவும் மன நிலையை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சோ ராமசாமிக்கும் மது தொழிலுக்கும் உள்ள தொடர்பு புதிதல்ல.அவரது தந்தை ஆத்தூர் சீனிவாசய்யர், சாராய வியாபாரி ராமசாமி உடையார் நடத்திய ஓரியன் கெமிகல்ஸ் என்ற சாராய ஆலையை நிர்வகித்து வந்தார். ( இது பற்றி 1989லேயே நான் எழுதியிருக்கிறேன்.) பின்னர் உடையார் ஆரம்பித்த கோல்டன் ஈகிள் சேனலின் நிர்வாகியாக சோ இருந்தார். அந்த சேனலைத்தான் விஜய் மல்லையா வாங்கி விஜய் டிவியாக்கினார். பின்னர் அது ஸ்டார் விஜய் ஆயிற்று.“
-ஞாநி சங்கரன்.
Post a Comment