Followers

Friday, April 11, 2014

நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!



நரேந்திர மோடி எத்தனையோ தேர்தலில் நின்று வாக்கு கேட்டுள்ளார். அத்தனை தேர்தலிலும் தனது மனைவியின் பெயரை பூர்த்தி செய்யாமல் விட்டுள்ளார். தேர்தல் கமிஷனின் நெருக்குதலுக்குப் பிறகு இந்த தேர்தலில் முதன் முதலாக தனது மனைவி பெயரை பூர்த்தி செய்துள்ளார் நரேந்திர மோடி. இது தான் பெண் விடுதலையா?

இன்னொரு புறம் குஜராத்தில் ஒரு பெண்ணுக்காக முழு அரசு அதிகாரிகளும் உளவு வேலையில் ஈடுபடுகின்றனர். யாருக்காக இந்த வேலை? இது தான் பெண் விடுதலையா?

இத்தனையும் செய்து விட்டு டெல்லியில் வந்து இந்நாட்டில் பெண்கள் கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்று மோடி வடிக்கும் கண்ணீர் நீலிக் கண்ணீர் அல்லவா?

1 comment:

Anonymous said...

samy from Singapore

மோடி ஒன்றும் குஜராத் முதல்வர் தேர்தலில் நிற்கவில்லை. இந்த நாட்டை வழி நடத்ததும் பிரதமர் தேர்தலில் நிற்கிறார். பல நாடுகளில் பல தலைவர்களை சந்திக்க வேண்டி வரும். அப்போது அவர் இந்தியாவை வழி நடத்தும் தலைவராக பார்க்கப்படுவார். அவருடன் இந்திய கலாசாரத்தையும் சுமந்து செல்ல வேண்டும். இவரின் தனி பட்ட வாழ்க்கையாவது சுத்தமாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒரு சாதாரன குடிமகன் அவன் மனைவியை விட்டு விட்டு எனக்கு அரசியல், பதவி தான் முக்கியம் என்று சென்று விட்டால் அவனுக்கு இந்த சமுதாயம் என்ன மரியாதையை கொடுக்கும். அதுவே அந்த பெண் நம் சகோதிரியாகவோ அல்லது மகளாகவோ இருந்தால் நமக்கு எப்படி இருக்கும். அப்படி பட்ட ஒரு நபர் பிரதமாராக ஆசைபடுகிறார். அது சிறு வயது திருமணம் என்று தப்பிக்க பார்க்கிறார். நம் முன்னோர்கள் பலர் சிறு வயதில் திருமணம் செய்தவர்கள் தான் எல்லோரும் விட்டு விட்டா சென்று விட்டார்கள். இது வரை அவர் திருமண தகவலை சொல்லவில்லை என்பது அல்ல அவர் மறைக்க முயன்றார் என்பது தான் உண்மை. தான் மனைவிக்கே அல்வா கொடுத்த இந்த மகான் இந்திய மக்களுக்கும் பெரிய அல்வா கொடுப்பார்.