Followers

Tuesday, April 08, 2014

மனதை நெகிழ வைத்த நிகழ்வு!

மனதை நெகிழ வைத்த நிகழ்வு!

நேற்று அஸர் தொழுகைக்காக எனது அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் பள்ளிக்குச் சென்றேன். தொழுகை முடிந்து வெளியேறும் சமயம் ஒரு சவுதி நாட்டவர் தனது வாகனத்தில் இருந்து எதையோ எடுத்து அனைவருக்கும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார். என்ன கொடுக்கிறார் என்று நானும் அருகில் சென்றேன்.

'ஸலாம்! எந்த மொழி உங்களின் தாய் மொழி'

'தமிழ்'

தனது வாகனத்தில் புத்தக கும்பலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட 'வருமுன் உரைத்த இஸ்லாம்' என்ற அழகிய புத்தகத்தை தேடி எடுத்து எனக்கு தந்தார். அதே போல் தொழ வந்தவர்களில் அரபி, பங்காளி, உருது, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், என்று அவரவர் மொழிகளைக் கேட்டு அந்த மொழியில் உள்ள 'வருமுன் உரைத்த இஸ்லாம்' என்ற புத்தகத்தை கொடுத்துக் கொண்டிருந்தார். 50 பேருக்கு மேல் அந்த புத்தகத்தை வாங்கிச் சென்றனர். தனது வேலை முடிந்தவுடன் மற்றொரு பள்ளியை நோக்கி அவரது வாகனம் நகர்ந்து சென்றது.

நடந்து கொண்டே புத்தகத்தை புரட்டினேன். 'மூன் பப்ளிகேஷன்' ஆசிரியர் பி.ஜெய்னுல்லாபுதீன். என்று பார்த்தவுடன் ஆச்சரியத்தோடு நின்று விட்டேன். பிறகுதான் தெரிந்தது இது முதலில் தமிழில் வந்து பிறகு சவுதி அழைப்பு வழி காட்டல் மையத்தினால் உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று. ஒரு தமிழ் முஸ்லிமுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன். இஸ்லாத்தைப் பற்றி தாங்கள் தான் அதிகம் அறிந்தவர்கள் என்று சில அரபிகள் என்னோடு வாதமும் செய்துள்ளனர். அரபி அல்லாத ஒருவரின் புத்தகங்கள் பல இது போன்று மொழி மாற்றம் செய்து அதுவும் அரபியிலும் மொழி மாற்றம் செய்யப்படுவது உண்மையில் சிறந்த மாற்றத்தைத்தான் இந்த அரபிகளிடம் கொடுத்துள்ளது.

உங்கள் அறையில் உள்ள மாற்று மத நண்பருக்கும் இந்த புத்தகங்களைக் கொடுங்கள் என்று அந்த சவுதி நாட்டவர் மற்றவர்களிடம் சொன்னதையும் கேட்டேன். இதன் மூலம் நேர்வழிப் பெறும் லட்சக்கணக்கான மக்களின் நன்மைகள் ராயல்டியாக சகோதரர் பிஜேயை சென்றடையும்.

மார்க்கத்தில் இவ்வளவு தெளிவு பெற்ற அண்ணன் பிஜே அவர்கள் பாக்கரோடும், ஜவாஹிருல்லாவோடும் 'உன்னை விட்டேனா பார்' என்று மல்லு கட்டுவதுதான் வருத்தத்தை தருகிறது. பிஜே அவர்களின் தகுதிக்கு இவ்வாறு அவர்கள் அளவுக்கு கீழிறங்கி செயல்பட வேண்டியது அவசியம்தானா என்று கேட்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்று தமிழகத்தில் இளைஞர்களை குர்ஆன் ஹதீஸில் திறம் படைத்தவர்களாக மாற்றியமைத்த பெருமை பிஜே அவர்களையே சாரும். இன்று இணையத்தில் மதரஸா செல்லாதவர்களான எங்களைப் போன்றவர்கள் தர்ஹா வாதிகளையும், மத்ஹப் வாதிகளையும், இந்துத்வா வெறியர்களையும் தக்க ஆதாரங்களோடு வாதம் புரியும் அளவுக்கு தகுதியாக்கியது உங்களது தவ்ஹீத் பிரசாரமே! எனவே அத்தகைய பழைய பிஜேயை காண நாங்கள் பிரியப்படுகிறோம். அதற்கான மன மாற்றத்தை இறைவன் உங்களுக்கு அருள்வானாக!

5 comments:

வாசகன் said...

குர்ஆன் ஹதீஸை நன்றாகக் கற்றறிந்தவர், அவை கூறும் அகந்தையில்லாத் தனத்தை கடைபிடிக்காதவர், இனியாவது தனது தொண்டரடிப் பொடியாழ்வாரின் கருத்தையாவது ஏற்கிறாரா? பார்ப்போம். ஏற்றால் சந்தோஷம் தான்.

ஆனந்த் சாகர் said...

P.ஜெய்னுல் ஆபிதீன் நயவஞ்சக நாடகம் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கோமாளி. அவர் தன்னுடய அடிபொடிகளை ரவுடிகளாக்கியதுதான் அவர் முஸ்லிம்களுக்கு இதுவரை செய்துள்ள சேவை. தவ்ஹீத் ஜமாத் என்று கூறிக்கொண்டு அவர் ரவுடி கூட்டத்தை தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த ரவுடி கூட்டத்தின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

ஆனந்த் சாகர் said...

வன்முறையை அடிப்படையாகக்கொண்ட மதத்தை பின்பற்றுபவர் வன்முறைவாதியாகத்தான் இருப்பார். எனவே அந்த பெண் வன்முறையை கையிலெடுத்தது வியப்பை தரவில்லை. பாவம் அந்த பாதிரியார்! அவருக்கு முஸ்லிம்களை பற்றி சரியாக தெரியவில்லை போலும். அதனால்தான் அவர் அந்த முஸ்லிம் பெண்ணிடம் தேவை இல்லாமல் வாதத்தில் ஈடுபட்டு அந்த பெண்ணின் அநாகரீக தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டார். துஷ்டனை கண்டால் தூர விலகு என்று அவர் இருந்திருக்க வேண்டும்.

சுவனப் பிரியன் said...

//தவ்ஹீத் ஜமாத் என்று கூறிக்கொண்டு அவர் ரவுடி கூட்டத்தை தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த ரவுடி கூட்டத்தின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. //

ஹிந்துத்வா போன்ற வன்முறை கூட்டங்களை வாதத்தால் வெல்ல சரியான தேர்வு இந்த தவ்ஹீத் ஜமாத். இது மேலும் வளரும்.

ஆனந்த் சாகர் said...

//ஹிந்துத்வா போன்ற வன்முறை கூட்டங்களை வாதத்தால் வெல்ல சரியான தேர்வு இந்த தவ்ஹீத் ஜமாத். இது மேலும் வளரும்.//

உங்கள் அண்ணன் P.ஜெய்னுல் ஆபிதீனுக்கு தைரியம் இருந்தால் அலி சினாவுடன்(Ali சினா) இணைய தளத்தில் விவாதம் புரிய முன்வர வேண்டும். நேரடி விவாதத்துக்குத்தான் வருவேன் என்று ஓடி ஒளிய கூடாது.