Followers

Monday, April 07, 2014

முஸ்லிம்களை பயமுறுத்தி ஓட்டறுவடை செய்ய வேண்டாம்!



ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்களைக் கொண்ட ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் தலைவர் மவுலானா முஹம்மது மதனி!

பேட்டியாளர்: காங்கிரஸ் முஸ்லிம்களை பயமுறுத்தி ஓட்டு கேட்க வேண்டாம் என்று சொன்னீர்களா?

மவுலானா முஹம்மத் மதனி: ஆம். மோடி வந்து விடுவார். ஆகவே எங்களுக்கு ஓட்டளித்தே தீர வேண்டும் என்ற ரீதியில் முஸ்லிம்களை பயமுறுத்த வேண்டாம். முஸ்லிம்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து விட்டு பிறகு ஓட்டு கேளுங்கள் என்று சொன்னேன். முன்பு முஸ்லிம்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு பிறகு எங்களிடம் வாக்கு கேட்க வாருங்கள் என்று சொன்னேன். இதில் தவறில்லையே!

பேட்டியாளர்: குஜராத் கலவரத்தில் காங்கிரஸாரும் பங்கெடுத்ததாக சொல்லியுள்ளீர்களே?

மவுலானா முஹம்மது மதனி: ஆம். 2002 கலவரத்தில் மோடிக்கு ஆதரவாக பல ஊர்களில் முஸ்லிம்களை கொன்று குவித்தவர்களில் காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர். 18 நபர்களின் பெயர்களை சோனியா அம்மையாரிடம் சமர்ப்பித்தேன். அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களில் பெரும்பாலோர் பணத்தை வாங்கிக் கொண்டு மோடிக்கு சேவகம் செய்கின்றனர். எனவேதான் அவர் அங்கு தொடர்ச்சியாக வெற்றியை ஈட்ட முடிகிறது.

குஜராத்தில் நடந்ததைப் போன்று உபியிலும் ராஜஸ்தானிலும் மஹாராஷ்ட்ராவிலும் தொடர்ந்து ஹிந்து முஸ்லிம் கலவரம் நடந்து வருகிறது. வழக்கமாக பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! குஜராத்தை விட அதிக முஸ்லிம்கள் மஹாராஷ்ட்ராவிலும், ராஜஸ்தானிலும் சிறையில் உள்ளனர். பிறகு மோடிக்கும் காங்கிரஸூக்கும் என்ன வித்தியாசம்? எதனால் முஸ்லிம்கள் தங்கள் ஓட்டை காங்கிரஸூக்கு போட வேண்டும் என்று நான் கேட்கக் கூடாதா?

No comments: