Followers

Saturday, April 19, 2014

பாகிஸ்தானில் கிறித்தவர்களின் 'புனித வெள்ளி'







பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் புனித வெள்ளி சிறப்பாக கொண்டாடப்ட்டது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. பைபிளும் வாசிக்கப்பட்டது.

லாஹூரிலும் கிறித்தவர்கள் புனித வெள்ளியை விமரிசையாக கொண்டாடினர். செயின்ட் ஆண்டனி சர்சில் பாதிரிகளும் இளைஞர்களும் தங்களின் மத கடமைகளை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி சுதந்திரமாக கொண்டாடினர். ரோமர்களுக்கும் ஏசுவுக்கும் நடந்த சம்பாஷணைகளின் முக்கிய பகுதிகளை ஃபாதர் மணி பெருந் திரளான கூட்டத்துக்கு மத்தியில் எடுத்துரைத்தார். மழை வேறு தொடர்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்தின் உள்ளிலேயே தங்களின் கடமைகளை நிறைவேற்றினர். தலைமை மத குரு 'நாங்கள் பாகிஸ்தானிகள் என்பதில் பெருமைபடுகிறோம். எங்களின் மத சுதந்திரத்துக்கு பல வகையிலும் உதவிடும் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

அமைச்சர் சுஜாவுர் ரஹ்மான் தனது அறிக்கையில் 'கிறித்தவர்கள் தங்களின் மத கடமைகளை பூரண சுதந்திரத்தோடு கடைபிடித்து வருகின்றனர். வறுமையில் வாடும் 1320 கிறித்தவர்களுக்கு அரசு மான்யமாக காசோலைகளை அவரவர் பெயருக்கு அனுப்பியுள்ளது. அதே போல் கல்வி, அறிவியல் முன்னேற்றத்திலும் சிறுபான்மையினரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக 17 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். சிறுபான்மையினர் சுகாதார மேம்பாட்டு திட்டத்துக்காக 7.5 பில்லியன் ரூபாய்களை அரசு ஒதுக்கி செலவழித்து வருகிறது. மொத்த பட்ஜெட்டில் 10.9 சதவீதம் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக செலவழிக்கிறோம். இது மிகப் பெரும் தொகையாகும். லாஹூரில் 300 தேவாலயங்களில் 56 கிறித்தவ குடியிருப்புகளிலும் சேவையாற்ற 6000 கிறித்தவ இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களின் கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கியமாக இவர்கள் அந்த இடங்களை தூய்மபைடுத்துவதிலும், மக்களின் கல்வி விழிப்புணர்வில் ஆர்வம் காட்டவும் பணிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறுகிறார்.

இஸ்லாமிய குடியரசாக பிரகடனப்படுத்தியிருக்கும் பாகிஸ்தானில் அரசு அவர்களை அரவணைத்துச் செல்கிறது. ஆனால் மதசார்பற்ற நாடு என்று உலகுக்கு கூறி வரும் நமது இந்திய நிலையை பார்ப்போம்.

இந்த வருட புனித வெள்ளியில் வழக்கமாக அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த வருடம் குஜராத்தில் மோடியின் தலைமையிலான அரசு விடுமுறையை திரும்பப் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறித்தவர்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சொல்லியுள்ளனர். அரசின் முடிவை எதிர்த்து மிகப் பெரும் போராட்டம் நடந்தேறியுள்ளது. ஆனால் மோடி எதற்கும் மசியவில்லை. கிறித்தவர்கள் இந்த பிரச்னையை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிடுகின்றனர். இந்த சர்வாதிகாரி 5 சதவீதமே இருக்கும் பார்பனர்களுக்காக மற்ற 95 சதவீத இஸலாம், கிறித்தவ, பவுத்த, இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பார்பன கலாசாரத்துக்கு மாற்ற எத்தனிக்கிறார். பலதரப்பட்ட கலாசாரங்களை கொண்ட இந்த நாடு மோடி என்ற சர்வாதிகாரியின் சில முடிவுகளால் அழிவுக்கே இட்டுச் செல்லும். இந்த நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் மோடி போன்ற சர்வாதிகாரிகளை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முடிந்த வரை முயற்சிக்க வேண்டும்.

இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் 100 மோடியைப் போன்றவர்கள் வந்தாலும் இந்திய இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் பார்பன கலாசாரத்துக்கு மாற்றி விட முடியாது. அவ்வாறு மாற்ற முயற்சித்தால் இந்தியா பல நாடுகளாக சிதறி விடும். அதைத்தான் இந்துத்வாவாதிகளும் விரும்புகிறார்களா?

தகவல் உதவி
அல்அரபியா,
ரெடிஃப்.காம்
19-04-2014

No comments: