Followers

Thursday, April 03, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலின் மற்றுமொரு அழகிய பேட்டி!"இங்கு இந்த சபையில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் சிறந்த வாழ்க்கை முறையை பெற்றுள்ளோம். ஆனால் இது மட்டுமே இந்தியா அல்ல. வெளியே உண்ண உணவின்றி உடுக்க உடை இன்றி கோடிக்கணக்கான இந்தியர்கள் தினமும் அல்லல் படுவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த மக்களையும் கை தூக்கி விட நம்மால் முயன்றது என்ன என்பதை சிந்திக்கும் வேளை நெருங்கி விட்டதாகவே நினைக்கிறேன்.

'நான் குஜராத் சென்று ராம ராஜ்ஜியம் எவ்வாறு மோடி தலைமையில் செயல்படுகிறது என்று பார்க்க போனேன். ஆனால் என்னால் நம்ப முடியாத பல கொடுமைகளை அந்த மக்கள் அனுபவிப்பதை பார்க்க முடிந்தது. சாதாரண அரசு உத்தியோகம் பெற 10 லட்சம் ரூபாய் லஞ்சம்: அஸிஸடன்ட் கிளார்க் உத்தியோகத்திற்கு 35 லட்சம்: காவல் துறையில் வேலை மற்றும் பணி மாற்றத்துக்கு 3 கோடி ரூபாய் லஞ்சம்: தொழில் தொடங்க லைசென்ஸூக்கு லஞ்சம்: எஃப்ஐஆர் போடவும் லஞ்சம்: பிபிஎல் கார்ட் வாங்கவும் லஞ்சம் என்று எங்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

நரேந்திர மோடியின் அமைச்சர் பாபுலால் லஞ்சத்தில் பிடி பட்டு 3 வருடம் சிறைத் தண்டனை பெற்று தற்போது பிணையில் வந்துள்ளார். மற்றொரு மந்திரி ஷோலங்கி 450 கோடி ரூபாய் ஊழலில் பிடிபட்டு தற்போது கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். மாயா கோட்னானி சிறை தண்டனை அனுபவித்து வருவதும் உங்களுக்கும் தெரியும்.

குஜராத் கிராமத்தில் ஒரு விவசாயி தனது நிலம் ஏழரை ஏக்கர் அரசு குண்டர்களால் மிரட்டப்பட்டு கையகப்படுத்தப்பட்டு அதற்கு இன்று வரை ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்றார். கேட்டால் ரோட்டை அகலப்படுத்தப் பொகிறோம் என்று சொன்னார்களாம். இவ்வாறு பிடுங்கப்பட்ட பல ஆயிரம் விவசாயிகளின் பல லட்சம் பெறுமானமுள்ள இந்த நிலங்கள் அதானிக்கும், அம்பானிக்கும், டாடாவுக்கும் ஸ்கொயர் மீட்டர் 2 ரூபாய், ஐந்து ரூபாய், 10 ரூபாய் வீதம் கொடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நான்கு லட்சம் விவசாயிகளின் வீடுகளுக்கு இது வரை மின்சார இணைப்பே கிடையாது. இது தான் ராமராஜ்யமா?

2002 கலவரத்துக்குப் பிறகு குஜராத்தில் இந்து முஸ்லிம் கலவரமே கிடையாது என்ற பொய்யை மோடி சொல்கிறார். ஆனால் இன்று வரை அங்கு 2002க்கு பிறகு 12 கலவரங்கள் நடந்துள்ளது. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. முஸ்லிம்களை காங்கிரஸூம், இந்துக்களை பிஜேபியும் நன்றாகவே ஏமாற்றி வருகின்றன.

சிறு தொழில்கள் அனைத்தும் மோடி ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளன. அனைத்தும் டாடா, அம்பானியின் கைகளுக்கு சென்று விட்டது. ராபர்ட் வதேராவின் ஊழலை பிஜேபி கண்டு கொள்ளாது, அதே போல் அம்பானியின் உறவினர் மோடி அமைச்சரவையில் உள்ளார். அவர் பண்ணும் ஊழல்களை காங்கிரஸ் கண்டு கொள்ளாது. இரண்டு ஊழல்களையும் வெளிக் கொண்டு வந்தது ஆம் ஆத்மி பார்ட்டி.

குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட கிராமத்துக்கு அன்றைய வாஜ்பாய் அரசு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மருத்துவ மனை கட்டிக் கொடுத்தது. ஆனால் மோடி அரசு இது நாள் வரை அதனை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு இன்று அதனை அதானிக்கு அடி மாட்டு விலைக்கு கொடுத்துள்ளது. இதுதான் ராமராஜ்யமா?

பெண் பார்வையாளர் கேள்வி: மோடியின் மீது வரிசையாக குற்றச்சாட்டு வைக்கிறீர்களே? ஆனால் மூன்று முறை அந்த மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்களே? அது எப்படி?

அரவிந்த் கெஜ்ரிவால்: இதே கேள்விதான் எனக்குள்ளும் இருந்தது. அந்த மாநிலத்தில் பல மக்களிடம் கேட்ட கருத்துகளில் அதற்கான விடை கிடைத்தது.

முதலில் காங்கிரஸ் அங்கு மிக பலகீனமாகி விட்டது. பிஜேபியை விட காங்கிரஸை அந்த மக்கள் வெறுக்கின்றனர். அடுத்து காங்கிரஸின் பெரும் தலைவர்களை மிரட்டியோ, அல்லது பணத்தைக் கொண்டோ பிஜேபியில் இணைத்து விடுகின்றனர். எதுவும் முடியாத பட்சத்தில் முக்கிய புள்ளிகளை என்கவுண்டர் பண்ணி வேலையை சுளூவாக முடித்து விடுகின்றன. சரியான எதிர்கட்சி இல்லாத போது மோடியை அந்த மக்கள் எவ்வாறு எதிர்க்க முடியும். இது தான் மோடி திரும்பவும் முதல்வரான சூட்சுமம். ஆனால் இந்த முறை அது பலிக்காது.


http://www.youtube.com/watch?v=PtRUwZgmERU

3 comments:

Anonymous said...

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873


சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610


உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746

ஆனந்த் சாகர் said...

மனநோய் பீடித்த முஹம்மது தன்னை எப்பொழுதும் மற்றவர்கள் துதிக்க வேண்டும் என்று விரும்பியவர். தன்னுடய பெயர் சொல்லப்படும்போதெல்லாம் முஸ்லிம்கள் அவர் மேல் ஸலவாத்து (தொழுகை/துதி) சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டவர். எவரேனும் அப்படி அவர் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் அல்லாஹ்வும் வானவர்களும் அவரை சபிக்கின்றனர் என்று வழக்கம்போல மிரட்டியவர். மனிதர்கள் மட்டுமல்ல, அல்லாஹ்வும் வானவர்களும் அவருக்கு ஸலவாத் சொல்வதாக குரானில் அவர் புருடா விட்டு முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக முட்டாளாகி இருக்கிறார்.

தன்னை அல்லாஹ்வும், வானவர்களும், மனிதர்களும் துதிக்க வேண்டும், தொழ வேண்டும் என்று ஏங்கிய , அதனை முஸ்லிம்கள் மீது விதித்த முஹம்மது ஒரு பக்கம் இணை வைப்பு கூடாது என்றும் கூறிக்கொண்டு இருந்தார். ஏனெனில் இணை வைப்பு கூடாது என்ற அவரின் வெளி உலகத்துக்கான பேச்சுதான் அவரின் இஸ்லாம் என்ற தொழிலுக்கு மூலதனம்.

ஆனந்த் சாகர் said...

மனநோய் பீடித்த முஹம்மது தன்னை எப்பொழுதும் மற்றவர்கள் துதிக்க வேண்டும் என்று விரும்பியவர். தன்னுடய பெயர் சொல்லப்படும்போதெல்லாம் முஸ்லிம்கள் அவர் மேல் ஸலவாத்து (தொழுகை/துதி) சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டவர். எவரேனும் அப்படி அவர் மீது ஸலவாத்து சொல்லாவிட்டால் அல்லாஹ்வும் வானவர்களும் அவரை சபிக்கின்றனர் என்று வழக்கம்போல மிரட்டியவர். மனிதர்கள் மட்டுமல்ல, அல்லாஹ்வும் வானவர்களும் அவருக்கு ஸலவாத் சொல்வதாக குரானில் அவர் புருடா விட்டு முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக முட்டாளாகி இருக்கிறார்.

தன்னை அல்லாஹ்வும், வானவர்களும், மனிதர்களும் துதிக்க வேண்டும், தொழ வேண்டும் என்று ஏங்கிய , அதனை முஸ்லிம்கள் மீது விதித்த முஹம்மது ஒரு பக்கம் இணை வைப்பு கூடாது என்றும் கூறிக்கொண்டு இருந்தார். ஏனெனில் இணை வைப்பு கூடாது என்ற அவரின் வெளி உலகத்துக்கான பேச்சுதான் அவரின் இஸ்லாம் என்ற தொழிலுக்கு மூலதனம்.