'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, April 10, 2014
அமெரிக்க பாதிரியை அறைந்த இஸ்லாமிய பெண்!
கிறித்தவ மதத்தை பரப்ப ஒரு பாதிரியார் அமெரிக்க நகரம் ஒன்றில் பிரசாரம் மேற்கொண்டார். திரித்துவமான மூன்று கடவுள் கொள்கையை தனது பிரசாரத்தில் மிக சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற ஒரு அமெரிக்க முஸ்லிம் பெண்மணி இவரின் பொய்யான தகவல்களை சிறிது நேரம் கேட்டார். ஏசு நாதரைப் பற்றி தவறான செய்திகளை அந்த பாதிரி சொல்வதைக் கேட்டு அவருக்கு பதிலளிக்க முற்பட்டார். ஏசு நாதர் மூன்று கடவுள் கொள்ளையை பிரசிங்கவில்லை. அவரும் ஏக இறைவனையே வணங்கச் சொன்னார் என்று பைபிளிலிருந்து ஆதாரங்களை சொல்ல ஆரம்பித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாதிரி அந்த பெண்ணை நோக்கி இஸ்லாத்தை பற்றிய தவறான விமரிசனங்களை வைக்க ஆரம்பித்தார். முகமது நபியை மிகவும் கீழ்த்தரமாக விமரிசித்தார். முகமது நபியின் மீது அவதூறுகளை வைத்ததை அந்த பெண்ணால் பொறுக்க முடியவில்லை. கோபம் உச்சத்துக்கு ஏற அந்த பாதிரியை ஓங்கி ஒரு அறை விடுகிறார் அந்த பெண்மணி. அங்கு கூடியிருந்தவர்கள் அந்த அமெரிக்க பெண்ணுக்கு எங்கோ ஒரு பாலைவனத்தில் பிறந்த நபிகள் நாயகத்தின் மேல் உள்ள அதீத பற்றை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.
அமெரிக்காவானது நாகரிகத்தின் உச்சத்தில் உள்ள நாடு. ஆனால் நபிகள் நாயகத்தின் கொள்கையோ அமெரிக்க கலாசாரத்துக்கு எதிரானது. அந்த நாகரீக சமூகத்தில் வாழ்ந்து வரும் அந்த பெண் நபிகள் நாயகத்தின் மேல் வைத்த அன்பை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால் இஸ்லாம் இவ்வாறு அழைப்பு பணியில் உள்ளவர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று சொல்கிறது. எந்த நிலையிலும் வன்முறையை நாம் கையில் எடுக்கக் கூடாது. அழகிய முறையில் நமது விளக்கங்களை அவர்களுக்கு சொல்லவே முயற்சிக்க வேண்டும். அதைத்தான் இஸ்லாமும் நமக்கு அறிவுறுத்துகிறது.
'முஹம்மதே! இறைவனின் அருள் காரணமாகவே அவர்களிடம் நீர் நளினமாக நடந்து கொள்கிறீர். முரட்டுத் தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக!'
-குர்ஆன் 3:159
ஓரிறைக் கொள்கை பிரசாரத்தில் நம் அனைவருக்கும் இறைவன் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பகிர்வுக்கு நன்றி...
//முகமது நபியின் மீது அவதூறுகளை வைத்ததை அந்த பெண்ணால் பொறுக்க முடியவில்லை. கோபம் உச்சத்துக்கு ஏற அந்த பாதிரியை ஓங்கி ஒரு அறை விடுகிறார் //
இதற்கு பெயர் தான் மூளை சலவை , அல்லாவை பற்றி தவறாக பேசினால் எந்த முஸ்லிமும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் முகமதுவை பேசினால் வெறி பிடித்தவர்கள் போல் ஆகி விடுகிறார்கள் . முகமது உலகிற்கு செய்த நன்மை இதுதான். ஒரு தனி மனிதனை உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் துதி பாடி கொண்டிருக்கிறார்கள். கடவுளை விட அதிக மரியாதையை வணக்கத்தை முகமதுவிற்கு செய்கிறார்கள். அல்லாவை ஐந்து வேளை மட்டும் வணங்கும் இவர்கள் முகமதுவை நொடி பொழுதும் மறக்காமல் துதிப்பார்கள். ஆனால் எந்த யோக்கியதையில் பிற மதத்தவர் வழிபாடுகளை இவர்கள் கேலி செய்கிறார்கள்.
முகமதுவின் மீது இவ்வளவும் வெறி வைத்திருப்பது அவரை இவர்கள் கடவுளை விட அதிகமாக வணங்குகிறார்கள் என்று தான் பொருள்.
Post a Comment