Followers

Friday, April 25, 2014

சினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்தை ஏற்றார்!அர்னார்ட் வேன் தூர்ன் என்ற இந்த பெயரை முஸ்லிம்கள் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது. டச்சு அரசியல்வாதியும், இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பின் உறுப்பினருமான அர்னார்ட் 'பித்னா' என்ற திரைப்படத்தினை உலகமெங்கும் விநியோகம் செய்தவர். இது நடந்தது 2008ல். இந்த படத்தில் பல கற்பனை கதைகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டு இஸ்லாத்தை கொச்சை படுத்தியதால் உலக முஸ்லிம்களால் கடும் கண்டனத்தை சம்பாதித்தது.

அடுத்த ஐந்து வருடத்தில் உலகம் அதே அர்னார்டை ஆச்சரியத்தோடு பார்த்தது. ஆம். செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பல ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். குர்ஆனை விளங்கினார். இன்று மிக அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டார்.

அதே போல் இன்று மறுபடியும் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் அர்னார்ட். ஆம். அவரது மகன் இஸ்கந்தர் அமீன் டே விரி தனது தந்தையை பின் பற்றி இஸ்லாத்தை ஏற்றுள்ளார். சென்ற ஏப்ரல் 18 ந்தேதி துபாயில் நடந்த சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கில் 37 நபர்கள் தங்கள் வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டனர். அந்த 37 பேரில் ஒருவர்தான் அர்னார்டின் மகன் இஸ்கந்தர் அமீன்.

'ஏக இறைவன் ஒருவனே! அவனே அல்லாஹ்! அவனது கடைசி இறைத் தூதர் முகமது நபியாகும் என்று உளப் பூர்வமாக உறுதி கூறுகிறேன்' என்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் உரத்து கூறினார் இஸ்கந்தர் அமீன். மக்கா பள்ளி இமாம் சுதைஸிடமிருந்து, அர்னார்டும், இஸ்கந்தரும் சந்தோஷத்தோடு குர்ஆனை பெற்றுக் கொள்வதைத்தான் மேலே பார்க்கிறோம்.

'கலீஜ் டைம்ஸ்' என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இஸ்கந்தர் கூறுகிறார் : 'எனது தந்தை முன்னெப்போதும் இல்லாததை விட மிக அமைதியாக தென் பட்டார். இந்த மாற்றம் அவர் இஸ்லாத்தை ஏற்றவுடன்தான் நிகழ்ந்தது. எனது தந்தையின் அந்த மாற்றமானது இந்த இஸ்லாத்தில் ஏதோ இருக்கிறது என்ற தேடலை என்னுள் ஏற்படுத்தியது. அந்த தேடல்தான் என்னை இன்று உங்கள் முன் இஸ்லாமியனாக நிற்க வைத்துள்ளது. குர்ஆனின் விளக்கவுரைகளை பல அறிஞர்களின் குறிப்புகளோடு இன்று தீவிரமாக ஆய்வு செய்து வருகிறேன். 22 வயதான எனக்குள் எனது கல்லூரி இஸ்லாமிய சக தோழனும் இஸ்லாத்தை எனக்குள் எத்தி வைத்தான். அந்த நண்பனின் ஊக்கமும் எனது தந்தையின் வாழ்வு முறையும் என்னையும் இந்த இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள தூண்டியது.'

கலீஜ் டைம்ஸிடம் அர்னார்ட் பின் வருமாறு கூறுகிறார்: "நான் முன்பு செய்த தவறுகளை நானே திருத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனது திறமைகளை பயன்படுத்தி மிகச்சிறந்த உண்மையை பறைசாற்றும் ஒரு இஸ்லாமிய திரைப்படத்தை எடுக்க நினைத்துள்ளேன். பல இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் உண்மையை விளக்க முயற்சிப்பேன்".

அர்னார்ட் ஒரு இஸ்லாமிய பவுண்டேஷனை தனது நாட்டில் உருவாக்கியுள்ளார். அதற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அமைப்பானது ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை ஆதாரங்களோடு எதிர் கொள்ளும். இதன் உறுப்பினர்கள் இஸ்லாமியர்களையும் இஸ்லாம் அல்லாதவர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுவர். தந்தையின் பயணத்தில் தற்போது மகனும் உதவி புரிய வந்துள்ளார். அவரது தாய் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்று விட்டதால் இவர்களின் அமைதியான வாழ்வை பார்த்து கவரப்பட்டு அர்னாடின் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி:

சவுதி கெஜட்
24-04-2014

10 comments:

சிராஜ் said...

அல்ஹம்துலில்லாஹ்...

பகிர்விற்கு நன்றி அண்ணே...

இறைவன் நாடினால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் வெகு விரைவில் இஸ்லாமிய மயம் ஆகும்....

ஆனந்த் சாகர் said...


//இறைவன் நாடினால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் வெகு விரைவில் இஸ்லாமிய மயம் ஆகும்....//

அது நடக்காது.

ஆனந்த் சாகர் said...

பாவம், அப்பனும் மகனும்! அறியாமையில் புதை குழிக்குள் காலை வைத்துவிட்டார்கள். அந்தோ பரிதாபம்!

Anonymous said...

Anand Sagar, you have no choice,. You are creating hatred, and you will reap hatred only...

சுவனப் பிரியன் said...

//அது நடக்காது.//

இன்னும் 10 வருடம்தான். அமெரிக்காவும், ஐரோப்பாவும் இஸ்லாமிய குடியரசுகளாக மாறி விடும். நமது காலத்திலேயே அந்த காட்சியை பார்ப்போம்.

Nasar said...

Alhamdulillah....
Good news...

ஆனந்த் சாகர் said...

//இன்னும் 10 வருடம்தான். அமெரிக்காவும், ஐரோப்பாவும் இஸ்லாமிய குடியரசுகளாக மாறி விடும். நமது காலத்திலேயே அந்த காட்சியை பார்ப்போம்.//


அது நடக்காது.

Anonymous said...

//இன்னும் 10 வருடம்தான். அமெரிக்காவும், ஐரோப்பாவும் இஸ்லாமிய குடியரசுகளாக மாறி விடும்.// ஒன்றும் ஆகிவிடாது சுவ்னரே, இப்போதே பல நாடுகளில் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு செத்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் கூட்டத்தவரின் மத மாற்ற நடவடிக்கைகளால் கொஞ்சம் பேர் மதம் மாறும் நிலை வந்தாலும் அதற்கு எதிரானவர்களும் உருவாகத்தானே செய்வார்கள். பர்மாவில் பார்க்கத்தானே செய்தீர்கள். என்ன செய்ய முடிந்தது அரபு நாடுகளால். இது போன்று தான் ஒவ்வொரு நாடுகளிலும் நடக்கும். கடைசியில் நீங்கள் விதைத்ததின் பலனை நீங்கள் தான் அனுபவிக்க போகிறீர்கள். எந்த காலத்திலும் ஒட்டு மொத்த உலகமும் இஸ்லாமின் பின்னால் வர போவதில்லை. உங்கள் மத மாற்ற நடவடிக்கைகள் அதிகமாக அதிகமாக, நீங்களும் ஷியா என்றும் சன்னி என்றும் இயக்கங்கள் பெயராலும் உங்களுக்குள்ளேயே அடித்து கொண்டு அழிவீர்கள், உங்களை அழிப்பதற்கும் அப்போது ஒரு காபிர் கூட்டம் தயாராக எல்லா நாடுகளிலும் உருவாகி இருக்கும். மொத்தத்தில் உலகில் ஒரு பெரும் மத கலவரம் அல்லது மத ரீதியிலான இன அழிவுகளுக்கு வேண்டுமென்றால் நீங்கள் காரணமாக அமையலாமே தவிர, இனி இஸ்லாமிய குடியரசெல்லாம் சுவ்னப்ரியர் பதிவில் மட்டுமே சாத்தியம். ஐரோப்பா இஸ்லாமிய நாடாகும் என்பதை விடு இஸ்ரேல் மறுபடியும் இஸ்லாமிய நாடாக பாலஸ்தீன நாடாக மாறும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன். முடியுமா உங்களால், எத்தனை யூதர்களை மதம் மாற்றுவீர்கள். அமெரிக்காவில் கூட அதிக எண்ணிக்கையில் இருப்பது யூதர்கள் தான் என்பது தெரிந்திருக்குமே. நமது காலத்திலேயே இஸ்ரேல் மறுபடியும் இஸ்லாமிய நாடாகும் வாய்ப்பு இருக்கிறதா என்று கொஞ்சம் சொல்லுங்களேன். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்து கொண்டு சென்றது போல இஸ்லாமிய குடியரசு எதாவது அமைந்தாலும் பல உயிர்களை பலி கொண்டே அது நடக்க முடியும். இப்படி எத்தனை காலத்திற்கு மற்றவர் வெறுப்பின் மீதே உங்கள் மதத்தை வளர்ப்பீர்கள் இந்த வெறுப்பு வளரும் போது உங்கள் கூட்டத்தவருக்கு எதிராக வன்முறையோ கலவரமோ எங்காவது நடந்தால் பெயருக்கு யாராவது கண்டனம் சொல்வார்களே தவிர தடுத்து நிறுத்த யாரும் வரமாட்டார்கள். பர்மாவிலும் அது தான் நடந்தது. பர்மிய மக்களே எதிர்க்கவில்லையே. இதுதான் எதார்த்த நிலை

MOHOMAD AMJATTH said...

சகோதரரே அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் கூட இஸ்லாமிய நாடாக மாறும்

MOHOMAD AMJATTH said...

சகோ அமெரிக்கா மட்டுமல்ல இந்தியாவும் கூட இஸ்லாமிய நாடாக மாறும்