'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, May 30, 2014
நடிகை மோனிகா எம்ஜி ரஹிமாவாக மாறியது ஏன்?
http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். சுஹாசினி டைரக்ஷனில் வெளி வந்த இந்திரா படத்தில் நடித்துள்ள நடிகை மோனிகா தற்போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியமாகி உள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே! சொந்த வீடு இருக்கிறது: தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பேரும் புகழும் பணமும் இருக்கிறது. ஆனால்....
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.........
நோ பீஸ் ஆஃப் மைன்ட்! (no peace of mind) ஞான ஒளி சிவாஜி பாணியில் சொல்லிக் கொள்ளவும் :-)
ஆம். மனதில் அமைதியில்லாததுதான் இது போன்ற பிரபலங்கள் இஸ்லாத்தை தாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கான காரணம். அவரது பேட்டியிலும் அதனைத்தான் பிரதானமாக கூறுகிறார்.
கோடிகள் புரளும் இந்த சினிமா துறையை விட்டு விட்டு வேறு தொழில்களை நாடப் போவதாக சொல்கிறார். சமூகத்தை ஆபாசத்தால் சீரழிக்கும் இந்த சினிமா தொழிலை விட்டது மிக நன்று. மற்ற தொழில்களில் இதை விட இறைவன் அதிக அபிவிருத்தியை தரலாம்.
பணத்துக்காக மாறி விட்டார்: அரபு ஷேக்கை கல்யாணம் செய்யப் போகிறார்: பைத்தியம் பிடித்து விட்டது: இந்து மதத்தில் இல்லாத தத்துவங்களா: என்றெல்லாம் பலவாறாக அவர் எள்ளி நகையாடப்படுவார். அதனை எல்லாம் ஒரு புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டு சிறந்த ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு வாழ்வில் வெற்றி பெற நாமும் இந்த சகோதரியை வாழ்த்துவோம்.
'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!
முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!
உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'
-குர்ஆன் 110: 1,2,3
உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!
குர்ஆன் : 49:17
ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார்.
இந்து நண்பர்கள் கோபப்படாமல் எதனால் இவ்வாறு தாய் மதம் விட்டு மாறுகிறார்கள் என்று யோசிக்க வேண்டும். நேற்றைய பதிவில் கூட 14-15 வயது தலித் சிறுமிகளை கற்பழித்து கொன்று அந்த பெண்களை தூக்கிலும் ஏற்றியுள்ளார்கள். தமிழகத்திலும் தலித் வன்னியர் நாடார் தேவர் மோதல்களை தினமும் பார்த்து வருகிறோம். நரேந்திர மோடி வந்து எதனையும் சாதிக்கப் போவதில்லை. சாதி வெறியை அவர் மேலோங்கவே செய்வார். அல்லது இஸ்லாமியர்களை வம்புக்கிழுப்பார். இதைத் தவிர வேறு மாற்றங்கள் எதுவும் நிகழப் போவதில்லை. மாற்றங்கள் வேதங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
இறைவன் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்
இறைவன் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்
இறைவன் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்
இறைவன் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்
முஹம்மது குர்ஆனில் சொன்ன இந்த வாக்கியம் அடி முட்டாள்தனமானது.
//ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை.//
அப்படியானால் எங்காவது ஒரு பிரபலம் ஏமாந்து இஸ்லாத்தை ஏற்றால் முஸ்லிம்கள் உடனே பதிவிட்டு தம்பட்டம் அடித்து பெருமை படுவது ஏன்? இதே பிழைப்பாகதானே நீரும் இருக்கிறீர்?
அவர் இஸ்லாத்துக்கு மாறினார், இவர் இஸ்லாத்துக்கு மாறினார் என்று தம்பட்டம் அடிப்பது முஸ்லிம்களின் தாழ்வு மனப்பான்மையை தான் காட்டுகிறது.
இஸ்லாமின், முஹம்மதின் கோர முகம் உலகம் முழுவதும் அம்பலமாகிக்கொண்டு இருப்பதால் அதனால் ஏற்பாடு அவமானத்தை மறைப்பதற்காக முஸ்லிம்கள் இப்படி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
//ஆம். மனதில் அமைதியில்லாததுதான் இது போன்ற பிரபலங்கள் இஸ்லாத்தை தாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கான காரணம். அவரது பேட்டியிலும் அதனைத்தான் பிரதானமாக கூறுகிறார்.//
இஸ்லாத்துக்கு மாறுபவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியும் போய்விடும். ஞான ஒளி சிவாஜியின் வசனத்தை முஸ்லிம்கள்தான் சொல்ல வேண்டும்.
எண்ணெய் வளம் மிக்க ஒரு சில வளைகுடா முஸ்லிம் நாடுகளை தவிர மற்ற அனைத்து முஸ்லிம் நாடுகளும் சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நாடுகளாகத்தான் இருக்கின்றன. அவற்றில் வாழும் முஸ்லிம்களும் மிகவும் வறுமையிலும் கல்வியில் பின் தங்கியும், இஸ்லாமிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டும் தான் இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் இஸ்லாம்தான். இந்த லட்சணத்தில் முஸ்லிமாக மாறினால் மன அமைதி கிட்டும் என்று தமாஷ் பண்ணிக்கொண்டு இருக்கிறது உங்கள் ஈன கூட்டம்.
வீர தமிழன் said....
அன்று நயன்தாரா கிறுத்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் என்ற செய்தி வந்த பொழுது இந்து மதத்தின் மேன்மையை பாரிர் என்று ஸ்டேடஸ் போட்ட ஒரு டவுசர் பாண்டி.
இன்று மோனிகா இஸ்லாமிய மதத்தை ஏற்று கொண்டவுடன் அதே டவுசர், மோனிகா ஒரு டிக்கெட், அது ஒரு ஐட்டம் என்று மிகவும் தரக்குறைவாக எழுதி தனது அரிப்பை தீர்த்து கொண்டு அலைகிறது..
அப்போ நயன்தார என்ன டிக்கட் என்று விளக்கினால் மிகவும் சரியாக இருக்கும்.
அவதூறுகளின் பிறப்பிடம் தினமலம்...
புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ரஹிமா (மோனிகா) அவர்கள் மலேஷிய காதலனுக்காக இஸ்லாத்தை ஏற்றதாக பயங்கரவாதிகளின் பத்திரிக்கையான தினமலர் அவதூறு பரப்பி வருகின்றது..
இப்படியெல்லாம் சொல்வார்கள் என்று தான் அந்த சகோதரி நான் அற்பமான விஷயங்களுக்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்கவில்லை என தெளிவாக கூறியுள்ளார்..
ஹிஜாபை என் பாதுகாப்பு கருதி எதார்த்தமாக அணிந்த நான், மனதால் நல்லதோர் உணர்வை உணர்ந்தேன். அதன் காரணத்தால் இஸ்லாத்தை ஆய்வு செய்ய துவங்கினேன் என்று தன் கருத்தை உணர்ப்பூர்வமாக பத்திரிக்கையாளார் சந்திப்பில் எத்தி வைத்தும்,
அவர் சொல்லாத ஒன்றை கற்பனை செய்து எழுதுவது இவர்களின் பத்திரிக்கையின் கேவலமான தரம் என்ன என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்..
இது உண்மை நிகழ்வுகளை சொல்லும் சமுதாய பத்திரிக்கையா.??
அல்லது சிறுவர்கள் படிக்கும் கதை காமிக்ஸா என்று தெரியவில்லை...
தினமலர் போன்ற அவதூறு பரப்பிகளை செருப்பால் அடித்து விரட்ட வேண்டும்..
ஒருநாள் மக்களே அதை செய்யத் தான் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்..
by shaik dawood
ஹானஸ்ட் மேன்!
//உத்திரபிரதேசத்தில் 2 தலித்துகள் கற்பழிக்கபட்டனறாம்! எதோ சில மிருகங்கள் அதை செய்தன. அதற்கு மதமா காரணம்? மதம் கற்பழிக்க சொல்கிறதா?//
இதே கேள்வியை நானும் கேட்கலாம் அல்லவா! எங்கோ ஆப்ரிக்காவில் எவனாவது ஏதாவது செய்தால் அதற்கு இஸ்லாம் காரணமாக முடியுமா? குர்ஆனில் அவ்வாறு சொல்லப்ட்டிருக்கிறதா என்று ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்?
//எவளோ ஒரு நடிகை மதம் மாறினால் முஸ்லிம் மதம் புனிதமாகிவிடுமா?//
அந்த நடிகை புனிதம் அடைந்துள்ளார். முன்பு செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டுள்ளார்.
//நடிகன் ரவிசந்திரன் கூட இரண்டாவது மனைவியை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். அவரும் (முதல் மனைவியிடமிருந்தும், சட்டத்திலிருந்தும் தப்பிக்க வேண்டியே) பாதுகாப்பு தேடி அந்த (இழி செயல்களிலிருந்து பாதுகாக்கும்) மதத்திற்கு மாறினார்.//
இப்படி எல்லாம் சொல்வீர்கள் என்பதால்தான் அதையும் மறுத்து தனது காணொளியில் விபரமாக கூறியுள்ளாரே! பார்க்கவில்லையா?
//அந்த காலத்தில் வாளை கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்றால் அதை இப்போதும் செய்கிறார்கள் என்றா சொல்கிறோம்? இப்போது செய்தால் விட்டுவிடுவோமா?//
முன்பு வாளால் மதம் மாற்றப்பட்டவர்கள் தற்போதய மோடியின் இந்துத்வா ஆட்சியில் தாய் மதம் திரும்ப வேண்டியதுதானே! நிறைய சலுகைகளும் பாதுகாப்பும் கிடைக்குமே? ஏன் மாறவில்லை?
முன்னாள் நடிகை மோனிகா, தாம் முஸ்லிமாக மாறியதற்கு வேறெந்தக் காரணங்களும் இல்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்த பிறகும், வக்கிர சிந்தனையுடன் தினமலம் 'சினிமா கிசுகிசு' என்ற பெயரில் அவதூறான செய்தியை வெளியிட்டு தனது குலத்தொழிலை காட்டியுள்ளது.
தென்னிந்திய மொழிகளில் வந்த 70 படங்களில் நடித்தபோது கிடைக்காத பணம், முஸ்லிமாக மாறிய பிறகு மலேசிய தொழிலதிபரை மணந்த பிறகு கிடைக்கும் என்று எழுதியதன் மூலம் தினமலத்தின் பொதுபுத்தி பல்லிளிக்கிறது. பணம்தான் குறிக்கோள் என்றிருந்தால் அவரது அழகுக்கு அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ள சாஃப்ட்வேர் அம்பியைக் கூட மணந்திருக்க முடியும்.
சிலவருடங்களுக்கு முன்பு நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைதானபோது, சில நடிகைகளைப் பற்றி அவதூறாக எழுதியதற்காக தென்னிந்திய திரைத்துறையினர் கொதிந்தெழுந்தத பிறகு, தின மலம் எடிட்டர் லெலின் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டான். மன்னிப்புக் கேட்டபிறகும், பாதிக்கப்பட்டவர்கள் கண்டித்தனர். காணொளி: http://youtu.be/XnqeA0mnuRc
எனினும், தினமலத்தின் வக்கிரம் தொடர்கதையாகவே இருக்கிறது. சகநடிகைகளைப்பற்றி அவதூறாக எழுதிய தினமலத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டித்ததுபோல், தற்போது தங்கள் துறையிலிருந்து கெளரவமாக விடுவித்துக்கொண்டு செல்லும் முன்னாள் சகநடிகையான மோனிகா (ரஹிமா) அவர்களின் மத மாற்றத்தை அவதூறாகக் கொச்சை படுத்தியதையும் கண்டிக்காவிட்டால் தினமலத்தின் வக்கிரம் தொடரவே செய்யும்.
பெண்ணுரிமை பேசுவோர் தின மலத்தின் வக்கிர சிந்தனையைக் கண்டிக்காமலிருப்பதன் மூலம், இவர்களின் இரட்டைவேடமும் பல்லிளிக்கிறது.
- By jalaluddeen
சத்தியம் டி.வி. செய்தி வாசிப்பாளர்
திரு.கார்கே நடிகன் அவர்கள் மோனிகா
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை பற்றி
தன் முக நூலில் (கார்கே நடிகன்)
கருத்து வெளியிட்டுள்ளார் ....
இஸ்லாத் ஓர் இனிய மார்க்கம்..
தொடர்ந்து திரையுலக பிரபலங்கள்
இஸ்லாத்தை தழுவுகின்றனர்..
நேற்று மோனிகா...
இஸ்லாத்தை தெரிந்துகொள்ள நானும் சில காலம் முற்பட்டேன்...
என்ன தான் இருக்கிறது இஸ்லாத்தில்...
உன்மை தான் !
இஸ்லாத்தில் ஏதோ இருக்கிறது..
இறை நெறியும்...
இல்லற நெறியும்...
இன்ப வாழ்கை நெறியும்...
இன்னும் ஈர்க்கும் தங்க சுரங்கம் தான் இஸ்லாம்..
'புர்ஹா எனக்கு பாதுகாப்பை தருகிறது: குர்ஆனை ஆராய்ந்தேன். எந்த அறிவியல் கருத்தோடும் மோதவில்லை: இந்த குர்ஆன் இறை வேதம் என்று நம்புகிறேன்: இந்த காலத்திலும் நேர்மையாக வாழும் முஸ்லிம்கள் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினர்:' இதுதான் அவர் இஸ்லாத்துக்கு மாறக் காரணம் எனறு தனது பேட்டியில் கூறுகிறார்.
இவ்வாறு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததால் புகழ் குறையும்: சினிமாவில் கிடைத்த பணம் குறையும்: வசதி வாய்ப்புகள் குறையலாம்: சுற்றத்தார்களால் ஏசப்படலாம்: அனைத்தையும் தாங்கிக் கொண்டு இன்று இஸ்லாமே நிரந்தர தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
சினிமாவில் முன்பு அரை குறை ஆடைகளோடு நடித்த பாவங்கள் இன்று இஸ்லாத்தை ஏற்றதனால் அழிக்கப்படுகிறது. குர்ஆனும் அதனை உறுதிப்படுத்துகிறது. இனிமேல் தவறுகளில் ஈடுபடாமல் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து தனது தாயையும், தனது உறவினர்களையம் அரவணைத்து செல்வாராக! வாழும் நாட்டுக்கும், பின்பற்றும் மார்க்கத்துக்கும் விசுவாசமாக இருப்பாராக! இந்த அழகிய முடிவை எடுக்கும் துணிச்சலைக் கொடுத்த அந்த ஏக இறைவனுக்கும் நன்றி பாராட்டுவாராக!
ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
நேற்று இரவு புதுப்பட்டினம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்ட மாற்று மத சகோதரர் அவருடைய வாக்கு மூலத்தால்(இஸ்லாமியர்கள் என்னை வெட்டவில்லை-முன் விரோதம் தான் காரணம்) கைது செய்யப்பட்ட நம் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதாக செய்தி கிடைத்துள்ளது.
முன் விரோதம் காரணமாக இந்த சந்தர்ப்பத்தில் பழிவாங்கினால் அந்த பழி இஸ்லாமியர்கள் மேல் விழும் என்று திட்டம் போட்ட கயவர்களை காவல்துறை கைது செய்து தக்க தண்டனை வாங்கி தந்து குற்றவாளி தண்டிக்கப்படனும்.
by abdul rahman
//எனவே ஒரு தூய நம்பிக்கையாளன் “காஃபிர்”களைக் கொன்று மதக்கடமையாற்றுவது முக்கியம். அப்போதுதான் அல்லாவின் சுவனத்தில் 72 கன்னிகளுடன் ஜல்சா பண்ணமுடியும். இல்லாவிட்டால் நரகம்தான்.//
ஹி...ஹி... மறுபடியும் பொய்யா! குர்ஆனில் எந்த இடத்தில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்று வசன எண்களை குறிப்பிடுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.
//அவரின் மத கருத்தியல்படி கற்சிலையை வழிபடும் நாமெல்லாம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.//
இந்து மத வேதங்களே கற்சிலைகளை வழிபடுபவர்கள் நஷ்டமடைந்தவர்கள் என்கிறதே! இதற்கு உங்கள் பதில் என்ன?
//சரி, சினிமாவில் நடிப்பதே தவறு என்றால் இவரது மதத்தை சேர்ந்தவர்கள் (ஆர்யா, ஷாம், நாசர், முமைத் கான், தன இடுப்பழகை உலக மக்களுக்கு திறந்து காட்டிய நஸ்ரியா, முதுகில் துணியே இல்லாத குஷ்பு, வடக்கே உள்ள ஏகப்பட்ட நடிகை, நடிகர்கள்) தவறு செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்? ஆக, முஸ்லிம் மதம் ஒரு தவறு செய்பவர்களின் கூடாரம்தானே?//
தவறு யார் செய்தாலும் தவறுதான். அரை குறை ஆடைகளோடு இளைஞர்களை கெடுப்பதைத்தான் நமது சினிமாக்கள் செய்து வருகின்றன. அவர்களாக மோனிகாவைப் போல மனம் மாறி சினிமாத் தொழிலை விட வேண்டும்.
//இந்து மதத்தில் இருந்துகொண்டு சினிமாவில் நடித்தால் அவர் புனிதம் கெட்டவர். ஆனால் அவளே முஸ்லிமாக மாறிவிட்டால் புடம்போட்ட த்ங்கமாகிவிடுகிறார். அப்படி என்னதான் செய்துஅவர்களை சொக்க தங்கமாக மாற்றுகிறார்கள்?//
இனி இந்த பாவமான சினிமா தொழிலை செய்ய மாட்டேன் என்றும் தையல் தொழிலோ அல்லது ஏற்றுமதி இறக்குமதி தொழிலோ செய்து பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னது உங்களுக்கு ஆச்சரியமாக படவில்லையா? மனிதர்களை திருத்த ஒரு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை இரண்டொரு குர்ஆனின் வசனங்கள் அந்த மனிதர்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றி விடுகிறது. இன்னும் ஒரு இரண்டொரு வாரத்தில் பிரபல நடிகர் ஒருவர் இஸ்லாத்தில் இணையப் போகிறார். கோபப்படாமல் எதனால் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது என்று சிந்தித்து குறைகளை களைய முயற்சி செய்யுங்கள்.
அதை விடுத்து காவல் துறை உதவியோடு முஸ்லிம்களை இம்சை படுத்தினால் இந்த மார்க்கம் மேலும் வளரும். எதிர்ப்பில் வளர்ந்ததுதான் இஸ்லாம்.
//அவரது வருகை தடை செய்யப்பட வேண்டும்.// - Ranga rajan
//I am very soory to say that unnecessary publicity is given in “Tamilhindu” to a person who is thinking about 72 virgins.// -Gopalasamy
உண்மை சுடும்.
இந்த தளம் இந்து மதத்தின் பெருமைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் நான் வந்து பின்னூட்டம் இட வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் தினம் ஒரு பதிவாக இஸ்லாத்தின் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி சில கட்டுரைகளை இந்த தளம் வெளியிடும்போது அதற்கு மறுப்பு தெரிவிப்பது எனது கடமையாகிறது. இந்த தளம் என்னை அனுமதிக்கா விட்டாலும் இங்கு வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் எனது தளத்தில் பதில்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். நடு நிலைவாதிகள் இரண்டு பேராவது உண்மையை விளங்கிக் கொண்டால் அது போதும் எனக்கு.
அடுத்து மாற்றுக் கருத்து இல்லாமல் உங்களுக்கு நீங்களே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தால் படிப்பவர்களுக்கு போரடித்து விடும். அதனையும் கவனத்தில் கொள்ளுங்கள். :-)
//இஸ்லாத்தில் இருந்தபடியே அரைகுறை ஆடைகளோடு ஆடிப்பாடி நடிப்பவர்களின் பாவங்கள் ?????//
தவறுதான். சினிமாவினால் சமூகத்துக்கு எந்த வகையிலாவது நன்மையிருக்கிறதா? அவர்கள் திருந்தி அந்த துறையை விடுத்து மற்ற துறைகளின் பக்கம் கவனம் செலுத்த வேண்டும்.
//சினிமாவினால் சமூகத்துக்கு எந்த வகையிலாவது நன்மையிருக்கிறதா?//
நிறைய இருக்கிறது. அது ஒரு நல்ல பொழுதுபோக்கை மனிதர்களுக்கு வழங்குகிறது. அது ஒன்று போதாதா? அதுமட்டுமல்ல, சினிமாவின் மூலம் பல அறிய கருத்துக்களை சமுதாயத்துக்கு சொல்ல முடியும். ஒரு புத்தகத்தில் கூறும் விஷயத்தை சினிமாவின் மூலம் மிகவும் ரசனையோடு, உணர்வுபூர்வமாக சொல்ல முடியும். இதை அனுபவிப்பதற்கு கலை ரசனை வேண்டும். 7ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு காட்டுமிராண்டிக்கு தன்னுடைய மூளையை அடகு வைத்துவிட்டால் எப்படி கலை ரசனை இருக்கும்? அதனால்தான் இஸ்லாத்தில் தீவிர பற்று உள்ளவர்கள் சைக்கோக்களாக இருப்பதை பார்க்கிறோம்.
ஒரு சினிமா படத்தின்மூலம் பல கோடிபேரை அணுக முடியும். இது எப்படிப்பட்ட வலிமையான ஊடகம்! மற்ற தொழில்துறைகளை போல் சினிமாவும் ஒரு தொழில்துறை. அதன்மூலம் பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். சினிமா தொழிலில் இருப்பவர்கள் ஒழுக்கம் இல்லாமல் இருந்தால் அதற்காக சினிமா என்ற சிறந்த, வலிமையான ஊடகத்தை எப்படி குறை கூற முடியும்? அப்படி குறை கூறுவது அறிவீனம்.
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல படங்களை நான் ரசித்து பார்க்கிறேன். குறிப்பாக ஹாலிவுட் படங்களை மிகவும் ரசித்து பார்க்கிறேன். ஆனாலும் என்னிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. என்னுடைய நண்பனும் அப்படிதான். இப்படி எத்தனையோபேர் இருக்கிறார்கள்.
Post a Comment