
'நான் என் முதல் படத்தில் கூட கேமராவுக்கு முன்னால் இந்த அளவு வெட்கப்பட்டதில்லை. என் மகள் வயதை யொத்த சோனாக்ஷி சின்ஹா, அனுஸ்கா ஷெட்டி போன்ற இளம் வயது ஹீரோயின்களோடு நெருக்கமாக நடிப்பது எனக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. கடவுள் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கொடுக்கும் மிகப் பெரிய தண்டனை இது' என்று அங்கலாய்த்திருக்கிறார் ரஜினி காந்த்..
இன்னும் சில நாட்களில் ரிலீஸாகவிருக்கும் லிங்கா படத்தில் இள வயது ஹீரோயின்களோடு நடிப்பதைப் பற்றியே நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
09-12-2014
தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். கதை இவர் கேட்டுத்தான் ஓகே ஆகிறது. இசை யார் என்பதற்கு இவரது அனுமதி வேண்டும். கூட நடிக்கும் ஹீரோயின்கள் யார் என்பதையும் இவர்தான் முடிவு செய்ய வேண்டும். இவர் படத்தைப் பொருத்த வரை டைரக்டர் தயாரிப்பாளர் எல்லாம் அடுத்த இடத்தில்தான் வருவார்கள்.
எனவே இந்த கிழ வயதிலும் இளம் நடிகைகளோடு உல்லாசமாக டூயட் பாடுவதற்கு ஆசைபட்டு விட்டு 'இது எனக்கு கடவுள் தந்த தண்டனை' என்று சொல்வதற்கும் அசாத்திய மனத் துணிச்சல் வேண்டும். அது ரஜினியிடம் நிறையவே இருக்கிறது. 'தலைவா... நீயில்லாமல் நானில்லை' என்று தமிழன் இவர் படத்துக்கு கற்பூரம் ஊற்றி ஆராத்தி எடுக்கும் காலமெல்லாம் இது போன்ற தமாஷ்களை நாம் தினமும் பத்திரிக்கையில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment