
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் திரையில் பிரபலமாக வலம் வந்த நடிகை தேவயானி. ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும் ஆனார். திருமணத்துக்குப் பிறகு சில சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது அதை எல்லாம் ஓரங்கட்டி விட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் ஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த ஆசிரியர் தொழிலானது தனக்கு மிகவும் நிம்மதியைத் தருவதாக பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமா உலகைப் பொருத்த வரை ஆண் நடிகர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. அறுபது வயதையும் தாண்டி அவர்களால் ஹீரோவாக நடிக்க முடியும். கமல், ரஜினி இதற்கு சிறந்த உதாரணம். பெண் நடிகைகள் சில ஆண்டுகள் மிக பிரபலமாக பேசப்படுவர். அவர்களின் இளமை முடிந்தவுடன் எவராலும் கண்டு கொள்ளப்படாமல் கழட்டி விடப்படுவர். மார்க்கெட் இழந்த எத்தனையோ நடிகைகள் பாலியல் தொழிலில் வீழ்ந்து தாங்களும் தங்களின் சுற்றத்தாரையும் படு குழியில் தள்ளி வரும் காட்சியைத்தான் பார்க்கிறோம். அந்த வகையில் இல்லாமல் இந்த நடிகை திருமணமும் முடித்து கவுரமான வேலையிலும் சேர்ந்துள்ளார். இவரை பாராட்டுவோம்.
சினிமாவில் சேர்ந்து பேரும் புகழும் அடையலாம் என்று தினமும் வீட்டை விட்டு ஓடி வரும் பல பெண்களின் கதை கடைசியில் கண்ணீரில்தான் பரிதாபமாக முடிகிறது. இது ஒரு மாய உலகம். இதை நம்பி குடும்பத்தை உதறி சென்னையை நோக்கி ஓடி வரும் பல பெண்கள் ஒளியை தேடி வேகமாக வந்து தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் விட்டில் பூச்சியை ஒத்தவர்கள் என்றால் மிகையாகாது.
தகவல் உதவி
என்டிடிவி
05-12-2014
1 comment:
அருமையான பதிவு.நன்றி சகோதரரே.எனது பாராட்டுக்கள். தங்களின் மூளை தங்கள் தலையில்தான் இருக்கின்றது. என்பதற்கு இக்கட்டுரை நிருபணம்.ஆனால் பல வேளைகளில் மூளையை சவுதியில் வைத்து விட்டு கட்டுரை எழுதுவதுதான் வேதனையாக உள்ளது. இருப்பினும் மது ஒழித்தலில் தங்களுக்கு இருக்கும் ஆா்வம் பாராட்டுக்குாியது. தொடரட்டும் அறப்பணி. வாழ்க வாழ்க
Post a Comment