

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக உயர்ந்தவர் நடிகை மோனிகா. இவர் அழகி, சண்டைக்கோழி, பகவதி, சிலந்தி, நதிகள் நனைவதில்லை உள்பட பல படங்களில் நடித்தவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய மோனிகா, தனது பெயரைக் கூட எம்.ஜி.ரஹிமா என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். மேலும் மதுரையை சேர்ந்த ஏற்றுமதி நிறுவன தொழில் அதிபர் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் மோனிகா–மாலிக் திருமணம் நந்தம்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும் பங்கேற்கவில்லை.
தகவல் உதவி
தினமணி
11-01-2013
சினிமா என்ற நரக படுகுழியில் வீழ்ந்து கிடந்த இந்த சகோதரி உண்மை மார்க்கத்தை உணர்ந்து இன்று இல்லறம் என்ற மற்றொரு அடியை எடுத்து வைத்துள்ளார். அழகிய வாழ்வு முறையை தேர்ந்தெடுத்த சகோதரியை கரம் பிடித்துள்ள சகோதரர் மாலிக்கையும் பாராட்டுவோம்.
குர்ஆனும் நபிகளும் காட்டித் தந்த வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டு இல்லறம் நல்லறமாய் அமைய நாமும் வாழ்த்துவோம்.
"பாரகல்லாஹூ லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ ஹைர்"
பொருள்: "இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக. உங்கள் இருவரின் சந்ததிகளுக்கும் அருள் பொழிவானாக. உங்களிருவரையும் நல்லறங்களில் ஒன்றிணைப்பானாக."
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: அஹ்மத்.
http://www.youtube.com/watch?v=zh4doTCki0Y
பத்திரிக்கைக்கு முன்பு அவர் அளித்த பேட்டி...
http://suvanappiriyan.blogspot.com/2014/05/blog-post_30.html
இஸ்லாம் மதத்துக்கு இவர் மாறியது சம்பந்தமாக முன்பு நான் இட்ட பதிவு!
'இறைவனின் வெற்றியும் உதவியும் வரும்போது!
முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது!
உமது இறைவனை புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்!'
-குர்ஆன் 110: 1,2,3
உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான் என்பதற்கு நடிகை மோனிகாவின் இந்த மன மாற்றம் சிறந்த உதாரணமாக உள்ளது.
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உமக்கு உதவி செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; "நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதை எனக்கு செய்த உபகாரமாகக் கருதாதீர்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நம்பிக்கைக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் புரிந்துள்ளான்" என்று கூறுவீராக!
குர்ஆன் : 49:17
ஆம். மோனிகா இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கு எந்த பெருமையும் இல்லை. மாறாக அவர் ஒரு சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்டு அவர் பெருமை பெறுகிறார்.
3 comments:
அக்கா மதம் மாறி ஒரு ஆண்டு கூட ஆகலை, இஸ்லாமிய தொழில் அதிபருடன் திருமணமாம். சில நாட்களுக்கு முன் இப்படிதான் ஒரு துரோகியும் திருமணம் செய்தார். இந்த எழவுக்கு தான் அங்கே போகிறீர்கள் என்பது தான் தெரிகிறதே. ஒருத்தியை அல்லது ஒருவரை கல்யணம் பண்ண மதம் மாறுகிறேன் என்று உண்மைய சொல்லிவிட்டு போக வேண்டியது தானே. என்னத்துக்கு இஸ்லாமில் போனால் பாலும் தேனும் வடிகிறது என்று ஊத்தை வசனங்களை பேசிவிட்டு போக வேண்டும். வெட்கம் கேட்ட ஜென்மங்கள்
//உலகம் முழுக்க இஸ்லாம் வாளால் பரவவில்லை. அதன் அழகிய நடைமுறையினாலும் குர்ஆனின் ஆளுமையினாலும்தான்//
கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி போல இதுவும் பழைய நகைச்சுவையாக இருந்தாலும் எப்போது கேட்டாலும் குபீர் என்று சிரிப்பை வரவழைக்க கூடியது. Evergreen comedy dialogue
அவனுக்கு துலுக்க பெண் ஒருவரை பிடித்திருந்தது அங்கே போனாரு. அக்காவுக்கு ஒரு துலுக்க ஆணை பிடித்திருந்தது போனாங்க, ரெண்டு பேர் செயலில் இருந்தும் இது தான் அப்பட்டமாக தெரிகிறதே.
Post a Comment