Followers

Thursday, January 08, 2015

பிகே போன்ற படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெற்றிகரமாக ஏன் ஓடுவதில்லை?

சகோதரர் நாம் மனிதர்கள்!

//எனக்கு ஒரு சந்தேகம்...இந்துக்கள் அதிகம் இருக்கும் இந்த நாட்டில் இந்து மதத்தை கிண்டல் செய்யும் பீ.கே போன்ற படங்கள் சக்கை போடு போடுகின்றன.....கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாட்டில் வெளி வந்த ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் படமும் சக்கை போடு போட்டது.......இதே போன்று இஸ்லாமை அல்லது நபியை விமர்சித்தோ இஸ்லாமியர்கல் அதிகம் வாழும் நாட்டில் ஒரு படம் வெளிவந்து நன்றாக ஒடுமா?// - நாம் மனிதர்கள்!

இந்து மத வேதங்கள் என்ன சொல்கிறதோ அதன் படி இந்துக்கள் நடப்பதில்லை. மாறாக பெரும்பான்மையோர் அதற்கு எதிராகவே நடக்கின்றனர்.

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

-------------------------------

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

------------------------------

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

-------------------------------

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

-------------------------------

யாந்தி தேவன் விருதா தேவன்
பித்ர யாந்தி பித்ர விருதா
புதானி யாந்தி புதேஜியா
யாந்தி மதியாஜி நெயிமாம்
(9 : 25)- கீதை

தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களிடத்திலும் முன்னோர்களை வணங்குபவர்கள் முன்னோர்களிடத்திலும் சாத்தான்களை வணங்குபவர்கள் சாத்தான்களிடத்திலும் போவார்கள். ஏக இறைவனை வணங்குபவர்களோ இறைவனாகிய என்னிடம் வருவார்கள்.

--------------------------

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
-யோவான் 1 : 18

--------------------------

மேலே வானிலும் கீழே புமியிலும் மற்றும் நீரிலும் உண்டாகி இருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும் எந்த ஒரு சிலைகளையாகிலும் நீ எனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
-பைபிள் (யாத்திராகமம் 20 : 1-5)

-------------------------

ஒரே ஒரு மெய்யான கடவுள்தான் இருக்கிறார். அவரே சர்வ வல்லமை உடையவர்: உன்னதமானவர்: வானத்தையும் புமியையும் சமுத்திரத்தையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவருமான சிருஷ்டகர்.
-பைபிள் (அப்போஸ்தலர் 4 : 18-24)

------------------------

இந்து மதமும் கிருத்தவ மதமும் ஏக இறைவனையே வணங்கச் சொல்ல தெருவுக்கு ஒரு கடவுளை உங்கள் இஷ்டத்துக்கு உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? முக்கடவுள் கொள்கையை கிருத்தவத்தில் நுழைத்தது யார்? பைபிள் ஏக இறைவனையே வணங்கச் சொல்ல இறைத் தூதரான ஏசுவை ஏன் வணங்குகிறீர்கள்? இது பற்றி என்றாவது சிந்தித்துள்ளீர்களா?

“நபியே! இறைவனாகிய என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்' என்று கூறுவீராக.”
-குர்ஆன் 2 : 186

புரோகிதர்களிடம் செல்லாதீர்கள்: உண்டியலில் எனக்காக சாசு போடாதீர்கள். உங்களின் தேவை எதுவோ அதனை என்னிடமே கேளுங்கள். உங்கள் அருகிலேயே இருக்கிறேன். என்று நம்மை படைத்த இறைவன் கூறும் போது அதற்கு மாற்றமாக நடப்பது யார் குற்றம்? இவ்வாறு புரோகிதர்களால் ஏமாற்றப் படுவதைத்தான் பிகே படமும் கண்டிக்கிறது.

இந்து கிருத்துவத்தில் வேதக் கருத்துக்கள் திரிக்கப் பட்டதால் அதன் உண்மைத் தன்மையை சிறிது சிறிதாக இழந்ததால் மக்களுக்கு மதங்களின் மேல் உள்ள பிடிப்பு போய் அந்த மதத்துக்கு எதிரான கருத்து கொண்ட படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

இஸ்லாமியர்கள் இன்று வரை தங்கள்து வேதத்தில் கை வைக்காமல் எந்த மாற்றமும் செய்யாமல் அதன் தனித் தன்மையைப் பாதுகாக்கின்றனர். அந்த வேத வசனங்களையும் அதனைக் கொண்டு வந்த தூதரையும் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கின்றனர். இந்த இஸ்லாத்தால் அழகிய வாழ்வு முறையை பெற்றுக் கொண்டதே இந்த பிடிப்புக்கு காரணம். எனவே தான் இஸ்லாத்தையோ, நபிகளையோ கிண்டலடிக்கும் சினிமாக்களை நஞ்சாக வெறுக்கின்றனர் முஸ்லிம்கள்.

இந்துக்களும் கிருத்தவர்களும் தங்கள் வேதங்கள் கூறும் ஏக இறைக் கொள்கையை கடை பிடிக்கத் தொடங்கி விட்டால் இஸ்லாமியர்களைப் போல அவர்களுக்கும் தங்கள் மதங்களின் மேல் பிடிப்பு ஏற்பட தொடங்கி விடும். அதன் பிறகு பிகே போன்ற படங்களுக்கு இந்தியாவில் மதிப்பிருக்காது. அவ்வாறு நீங்கள் ஏக இறைக் கொள்கைக்கு மாறி விட்டால் இந்து கிருத்தவத்தை கிண்டலடிக்கும் படங்களை எடுக்கவும் சினிமாக் காரர்கள் முன் வர மாட்டார்கள்.

முயற்சித்துத்தான் பாருங்களேன்.!

5 comments:

Anonymous said...

ராஞ்சனா படம் பாகிஸ்தானில் தடை செய்ய பட்டது காரணம் ஒரு ஹிந்து முஸ்லிம் பெண்ணை காதலிப்பது போல் கதை இருந்தாதால் அதுவும் இந்தியாவில் ஒரு ஹிந்து ஆண் இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்ணை காதலிப்பதற்கு கூட பாகிஸ்தானில் தடை.
ஆனால் சமீபத்தில் வெளிவந்த பிகே என்னும் படத்தில் பாகிஸ்தானிய முஸ்லிம் ஆண் இந்தியாவை சேர்ந்த ஹிந்து பெண்ணை காதலிக்கிறார் திருமணமும் செய்து கொள்கிறார் (எத்தனாவது மனைவியாக வாக்கபட்டார் என்று எல்லாம் கேட்ககூடாது) லவ் ஜிஹாத் நல்லமுரைய்ல் நமது பெண்கள் மனதில் புகட்டி உள்ளார்கள். அது மட்டும் இல்லை கோவிலுக்கு செல்லும் ஹிந்துக்களை பார்த்து உங்களுக்கு கடவள் மீது பக்தி இல்லை பயம் என்கிறார் (அப்போ மெக்காவிற்கு செல்பவர்கள் பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை) , சிவன் வேடத்தில் இருப்பவரை கக்கூசில் விழுந்து ஓட ஓட துரத்துகிறார், சாமியார்கள் எல்லாம் போலி என்று காட்டுகிறார் (முல்லாக்கள் புனிதர்கள் பொழும்
இஸ்லாமிய ஆண்கள் நல்லவர்கள் என்றும் சித்தரிக்க) படம் 300 கோடி இந்தியாவில் மட்டும் வசூலாகிறது.
ஹிந்துக்களே இன்னும் 2000 வருடம் ஆனாலும் உங்களை திருத்த முடியாது.

Anonymous said...

சில நாட்களாக ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான இயக்கம் கூட்டங்களை நடத்தியது. அந்த கூட்டத்துக்கு எவ்வளவு ஆதரவோ அதை விட எதிர்ப்பே அதிகம் இருந்தது.//

நல்ல விஷயம். எந்த நிகழ்வுக்கும் ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். போக போக துலுக்கர்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை அவர்களும் உணரும்போது துலுக்கர்களுக்கு கச்சேரி தான். உணர்ந்தவர்கள் இப்போது தான் துவங்கி உள்ளனர்.//பிறப்பில் தானே உயர்ந்தவன்: மற்றவரெல்லாம் எனக்கு அடிமை: எங்கு சென்றாலும் எப்பாடு பட்டாவது அரசு உத்தியோகத்தில் புகுந்து விடுவது: உருவத்திலும் ஒற்றுமை: தான் முன்னுக்கு வர மற்றவர்களை சூழ்ச்சிகள் செய்து பின்னுக்கு தள்ளுவது: என்று யூதர்களும் பார்பனர்களும் பல விதங்களில் ஒத்து போவதை நாம் பார்க்கலாம்.//ஹா ஹா,, திறமை உள்ளவன் எங்கே போனாலும் முன்னணியில் தான் இருப்பான் திறமை இல்லாதவன் இட ஒதுக்கீடு என்று கேட்டு போராடுவது இயற்கை தான். அண்ணன் பீஜே இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதை விட தன்னுடைய இனத்தவர் திறமைகளை வளர்த்து கொள்ள ஆலோசனை செய்யலாம். இல்லை என்றால் கடைசி வரை துலுக்க இனம் கூமுட்டை இனமாகத்தான் இருக்கும். பாஸ்கரர், ஆரிய பட்டர் போன்று பல பிராமணர்களும் அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் இன்னும் துறைகளில் பலவற்றை சாதித்து உள்ளனர். உலகின் பல முக்கிய பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் நிகழ்த்தியது யூதர்களே.துலுக்கன் என்ன செய்தான் .......... பூத கண்ணாடி வைத்து தேடினால் எங்கேயாவது ஒரு துலுக்கர் குண்டூசி கண்டு பிடித்தார் என்று ஒரு தகவல் இருக்கும். கடவுளின் நேரடி மதத்தை பின்பற்றுபவர்கள் உலகிற்கு செய்த நன்மை இது தான். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திறமை உள்ளவன் தனது மூளையை பயன்படுத்தி கண்டுபிடித்த விசயங்களை குரான்ல அப்பவே சொல்லி இருக்கு என்று சொல்லி கண்டுபிடித்தவனை கேவலபடுத்துவதில் ஈமாந்தாரிகளை மிஞ்ச முடியாது.தமிழ் நாட்டில் உள்ள புரோட்டா பிரியாணி கடைகளை கணக்கெடுத்தால் நூற்றுக்கு தொண்ணூறு சதம் ஈமாந்தாரிகள் தான் நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை காட்டுவது அதில் தான்.

Rahman Fayed. said...

//துலுக்கன் என்ன செய்தான் .......... பூத கண்ணாடி வைத்து தேடினால் எங்கேயாவது ஒரு துலுக்கர் குண்டூசி கண்டு பிடித்தார் என்று ஒரு தகவல் இருக்கும்.// "முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்"


உலகின் பலநூறு அரிய கண்டுபிடிப்புக்களை முஸ்லிம்களால் சம கால உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவைகளில் பல பின்னர் மறைக்கப்பட்டதுடன் அதை காப்பி (Copy) பண்ணியவர்கள் தம்மால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டதுடன் அவர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம்பெற்றும் விட்டது. அவ்வாறான ஒருசில கண்டுபிடிப்புக்களின் உண்மைத்தன்மையை பார்ப்போம்.


14 ஆம் நூற்றாண்டளவில், காலித் என்ற எதியோப்பியாவின் ஆட்டு இடையன், தனது ஆடுகள் ஒரு குறித்த பழத்தை சாப்பிட்டவுடன் புதுத்தெம்புடன் செல்வதை அவதானித்தான். பின்னர் அவன் அந்த பழக்கொட்டைகளை சூடாக்கி அருந்திப்பார்த்தான். அவனுக்குள்ளும் புத்துணர்ச்சி ஏற்படுவதை உணர்ந்தான். அவன் அருந்தியதுதான் உலகின் முதலாவது காஃபி (Coffee).


இது எத்தியோப்பியா முழுவதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டில் மக்காவுக்கு யாத்திரை செல்வோர் , இரவு வணக்கங்களுக்கு நித்திரைவிழிப்பதற்காக இதை அங்கு கொண்டுசெல்ல, அந்த நேரத்தில் மக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த துருக்கியர், அதனை மிகவும் விரும்பி அருந்தினர். பின்னர் 1645 இல் துருக்கியில் இருந்து வர்த்தக நோக்கத்துக்காக இத்தாலியின் வெனிசுக்கு இந்த காஃபி ஏற்றுமதி செய்யப்பட்டது.


அது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகெங்கும் பரவியது. பெயர்கூட அரபியின் கவ்வா, துருக்கியின் கொவ்வே என்று மருவி பின்னர் அதுவே இத்தாலியின் கஃபே (caffe) யாகி, ஆங்கிலத்தில் காஃபி (Coffee) யாகியது.

உண்மையில் ஓர் உருவத்தை பார்க்க வேண்டுமானால் உருவத்திற்கே ஒளி இருக்கவேண்டும். 10 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்கர்கள் கண்ணில் இருந்து ஒளி உருவத்தை நோக்கி செல்வதாகவும் அதனால்தான் கண்ணால் பார்க்கமுடிகிறது என்று நம்பிய காலங்களில், அதே நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற வான சரித்திர ஆய்வாளரும், கணக்கியல் நிபுணருமான இப்னு ஹைதம் என்பவர் ஒரு முறை தனது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு ஜன்னலின் சிறிய துவாரத்தினூடாக சென்ற வெளிச்சம் எதிர்பக்க சுவர்களில் பாரியளவில் பிம்பமாக தோன்றுவதை அவதானித்தார்.


அதைவைத்து ஆராய்ச்சி செய்த அவர், துவாரம் சிறியதாகிற போது, பிம்பங்களின் தரம் அதிகரிப்பதை கண்டுபிடித்தார். அதுவே அவர் முதலாவது கேமராவை (Camera) கண்டுபிடிக்க காரணமாகியது. Qamara என்ற அரபு சொல்லின் அர்த்தம் இருட்டு என்பதாகும்.

Rahman Fayed. said...


செஸ் (Chess) என்பது பண்டைய இந்தியாவில் ஆடப்பட்டு இருந்தாலும், அதன் இன்றைய வடிவத்தை கண்டுபிடித்தவர்கள் பாரசீகர்கள்.


பின்னர் அந்த ஆட்டம் இஸ்லாமிய ஸ்பைனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஐரோப்பியாவில் பிரபல்யமடைந்தது.

ரைட் சகோதரர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஸ்பெயினில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்ற முஸ்லிம் பொறியியலாளர் மனிதனால் பறக்க முடியும் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பினார். இதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.


இறுதியாக 852 ஆம் ஆண்டு பாரசூட் போன்ற விமானத்தை உருவாக்கி தமது தலைநகரில் இருந்த பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் இருந்து தலைநகரை (Cordoba) ஒரு சிறிய வலம் வந்தார். எனினும் இது பெரியளவில் சாத்தியமாகவில்லை. இருபது வருடங்களாக அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றறிந்து 875 ஆம் ஆண்டு ஒரு பெரிய மலையில் இருந்து குதித்து 10 நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்து காட்டினார். அந்த நேரம் அவருக்கு வயது 70.


இதை கௌரவிக்கும் முகமாக இன்றும் பாக்தாத் விமான நிலையத்தில் ஓர் நினைவுஸ்தூபி இருப்பதும், சந்திரனின் வளைவினை அளக்கும் குறியீடாக Ibn Firnas என்ற அளவுகோல் பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கை) பாதி என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தாவர எண்ணெய்யையும், சோடியம் ஹைட்ரோக்சைட் ஒன்று சேர்த்த இன்றைய சோப்பு (Soap) எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களே இன்றைய ஷாம்பூ (shampoo) வையும் கண்டுபிடித்தனர்.

Crankshaft எனப்படும் வாகன இஞ்சினில் இருக்கும் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல வைக்கும் இயந்திரம் அல்- ஜசாரி என்ற பொறியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.


இதுவே பிற்காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகன உற்பத்திக்கு உந்து சக்தியாகமாறியது. இவரே இன்றைய வாகனங்களின் பிஸ்டன் (piston) மற்றும் வால்வுகளின் (valves) முன்னோடி.

10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்-சஹ்ராவி என்ற மருத்துவரே இன்றைய சத்திரசிகிச்சைகளின் (Surgical Treatment) முன்னோடியாவார். இன்றைய நவீன சத்திர சிகிச்சையில் பாவிக்கப்படும் 200 ற்கும் மேற்பட்ட கருவிகள் அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

மேலும் வில்லியம் ஹாவிக்கு 300 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த இப்னு நபிஸ் என்ற மருத்துவர் மனிதனின் இரத்த சுற்றோட்டத்தை (Blood Circulation) கண்டுபிடித்தார். இதற்கும் மேலதிகமாக இவர்களே மயக்கமடைய செய்தல் (Anesthetics) முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

காற்றாடி மூலம் நீர் இறைத்தல் முறை, உலகிற்கு 634 ஆம் ஆண்டு வாழ்ந்த பாரசீக கலிஃபாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டிலேயே இது ஐரோப்பாவில் புழக்கத்திற்கு வந்தது.

தடுப்பூசி ஏற்றும் முறையை லூயிஸ் பாய்ச்சர் கண்டுபிடித்ததாக உலகம் நம்புகிறது. ஆனால் அது முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1724 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்த ஆங்கிலேய தூதுவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சின்ன அம்மை போன்ற நோய்களுக்காக சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் முறை ஐரோப்பியர்களுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே துருக்கியில் வழக்கத்தில் இருந்துவந்தது.

மையை தொட்டு எழுதும் முறையில் இருந்து மையை பேனாவிற்குள் கொண்ட fountain pen யை கண்டுபிடித்தவர் 953 ஆம் ஆண்டு வாழ்ந்த எகிப்தின் மன்னராகும்.


அல் –ஜிப்ராவை பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இதனை கண்டுபிடித்த அறிஞர் அல்- கவாரிஸ்மி ஆவார். இவரின் பிரபல்யமான புத்தகத்தின் பெயரே அல்- ஜிப்ரா வல் முகாபிலா. அதுவே அல்- ஜிப்ராவாக மாறியது. இதற்கு மேலதிகமாக இவருடன் சேர்ந்து இருந்த அல்- கிந்தி எனும் கணக்கியலாளர் cryptology ஐ கண்டுபிடித்தவர்.

சிர்யாப் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அலி இப்னு நாபி என்பவரே இன்றைய கண்ணாடியை கண்டுபிடித்தவர்.

Rahman Fayed. said...

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <> சுட்டவும்...


9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இன்றைய காசோலை (Cheque) முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். பல நாடுகளுக்கும் சென்று வர்த்தகம் செய்யும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தமது பணத்தை பாதுகாப்பதற்காகவே இதனை அறிமுகம் செய்தனர். அரபியின் saqq என்ற வார்த்தையே cheque என்று மருவியது. அன்று சீனாவில் பணத்தை வைப்பு செய்துவிட்டு பக்தாத்தில் மீளப்பெறும் முறை முறை இருந்திருக்கிறது.

கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்றும் சூரியனை உலகம் ஓர் நேர்கோட்டில் சுற்றிவருவதாகவும் கூறுவதற்கு 500 வருடங்களுக்கு முன்பாகவே மாபெரும் வானவியலாளர் இப்னு ஹசம் இதனை கூறிவிட்டார். 9 ஆம் நூற்றாண்டிலேயே உலகின் சுற்றளவு 40,253.4 km என்று எழுதியும் வைத்திருந்தார். (40,075.16 Km என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்)


அல்- இத்ரீஸ் என்பவரே உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர்

அல்- இத்ரீஸ்

குறிப்பு:
-----------
இதற்கும் மேலதிகமாக பல நூறு கண்டுபிடிப்புக்கள் நிச்சியமாக இருக்கின்றன.


இஸ்லாமிய ஸ்பெயினின் (அந்தலூசியா) வீழ்ச்சியும், பாக்தாத் மீதான மங்கோலிய படையெடுப்பும் முஸ்லிம்களின் அறிவியலின் ஒட்டுமொத்த அழிவுக்கு காரணமாகியது. அந்தலூசியா வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டாலும் அங்கிருந்த அறிஞர்கள் வெறியேற அனுமதிக்கப்படவில்லை.


அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து (100%) நூல்களும் மொழிமாற்றம் செய்து தருமாறு வற்புறுத்தப்பட்டனர். அனைத்து நூல்களையும் மொழி மாற்றுவதற்கு மட்டும் 4 வருடங்கள் சென்றது. அதன் பின்னர் original நூல்கள் அனைத்தும் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன.


அதைப்போல அப்பாசியர்களின் காலம் முதல் அறிவியலின் சிகரமாக விளங்கிய பாக்தாத் மங்கோலியர்களால் முற்றுகையிடப்பட்ட வேளை, பாக்தாத் நூலகத்தில் இருந்த இலட்சக்கணக்கான புத்தகங்களை (எத்தனை இலட்சம் புத்தகங்கள் என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது) டைக்ரீஸ் நதியில் வீசி எறிந்தனர். புத்தகங்களின் மையினால் அந்த நதி கருப்பு நிறமாக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் நடைபெற்றிருக்காவிட்டால் நாம் காணும் இன்றைய உலகு வேறுவிதமாக இருந்திருக்கக்கூடுமோ?