Followers

Sunday, July 12, 2015

'சலீம்' திரைப்படம் மூலம் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரர்!





முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனும் எண்ணத்தை சலீம் திரைப்படம் மாற்றியது! இஸ்லாத்தை ஏற்ற இளைஞர் !

திருச்சியை சேர்ந்த நண்பர் வீடியோ சிராஜின் மகன் ஜாவித் தஃவாவில் ஆர்வமுள்ள சகோதரர்! அவர் நேற்று போன் செய்து எனது நண்பருக்கு தஃவா செய்து வருகிறேன் ! நீங்கள் கொஞ்சம் அவரோடு பேசினால் நன்றாக இருக்கும் என்றார் !

சரி இப்தாருக்கு அழைத்து வாருங்கள் என்றேன் ! வரமுடியவில்லை கொஞ்சம் லேட்டாகும் என்றார்! பரவாயில்லை இரவுத் தொழுகைக்கு முன் அழைத்து வாருங்கள் என்றேன் ! சுமார் 8.30 மணியளவில் வந்தார்கள்!

வந்தவரிடம் ஊர்.பெயர் . தொழில் எல்லாம் விசாரித்து விட்டு அவருக்கு ஏகத்துவம் , தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் ஐந்து கடமைகளில் கட்டமைக்கப் பட்டுள்ள இஸ்லாம் குறித்து விரிவாக எடுத்துரைத்து விட்டு, இணை வைப்பைக் குறித்து எச்சரித்து விட்டு இஸ்லாத்தை பின்பற்றினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் பலன்கள் குறித்து விளக்கினேன் !

விரிவாக விளக்கி விட்டுஇதுதான் இறைவனால் அருளப்பட்ட சரியான வழி என்பதை ஒப்பக் கொள்கிறீர்களா ? என்று கேட்டதும் ஆம் இதுதான் உண்மை என்றார் ! இதை ஏற்றுக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடையலாம் எந்த நஷ்டமும் எனும் போது என்ன தயக்கம் ?

மனிதன் மனிதனாக வாழ இதுதான் வழி எனில் இதுதான் நீங்கள் செல்லவிருக்கும் இலக்குக்கான இறுதி வாகனம்! இதைத் தவற விட்டால் உங்களின் இலக்கை அடைய முடியாது ! இந்த வாகனத்தில் என் தந்தை ஏறவில்லையே நான் எப்படி ஏறுவது ? என் தாத்தா இந்த வாகனத்தை பார்த்ததே இல்லையே ? இந்த வாகனத்தில் ஏறி பயணித்தால் என் ஊர் என்ன சொல்லும் ? என்னை சுற்றி உள்ள சொந்த பந்தம் என்ன சொல்லும் ? என்று பார்த்துக் கொண்டிருந்தால் வண்டி போய் விடுவது போல் வாழக்கை முடிந்து போய் விடும் ! நிச்சயமில்லாத இந்த உலகில் எதற்காக அதைத் தள்ளிப் போட வேண்டும்?

இல்லை ! நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன் என்று கலிமாவை மொழிந்து சுமார் பத்து மணியளவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் ! அல்ஹம்து லில்லாஹ் !

பின்னர் இஸ்லாத்தின் பக்கம் முதல் ஈர்ப்பு எப்படி வந்தது ? என்று கேட்ட போது சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டிர்களே ? என்றார் !

இல்லை சொல்லுங்கள் என்றதும் சலீம் படம் பார்க்கும் வரைக்கும் பத்திரிகைகள், தொலைகாட்சிகள் சொல்வது போல் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றுதான் எண்ணி இருந்தேன் !

ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த பின் என் கருத்தை மாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலும் ஏற்பட்டது ! அப்போது தான் நண்பர் ஜாவித் முலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டேன் ! இன்று தங்களால் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டேன் என்றார் ! அல்ஹம்து லில்லாஹ் !

இது அவனுடைய நேர்வழி அதை தான் நாடியோருக்கு வழங்குகிறான் ! இது இறைவனின் ஒளி ! அதை உங்கள் உள்ளத்தில் ஏற்றி விட்டான் ! இனி அது பிரகாசிக்கும் ! உங்களின் செயல்கள் இனி ஒளிமயமாகும் ! அந்த ஒளி உங்களை சுற்றி உள்ள மற்றவர்களையும் ஈர்க்கும் என்று கூறிய போது அவரது முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது! அல்ஹம்து லில்லாஹ் !

[குறிப்பு: சினிமா நம் மக்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து அதை தஃவாவுக்கு பயன்படுத்த வேண்டும் எனும் கருத்துக்கு இச்சம்பவம் வலுச்சேர்க்கிறது!]

-செங்கிஸ் கான்

2 comments:

Dr.Anburaj said...


ஒரு இந்து இறந்து அரேபியனானான். ஒரு தமிழன் இறந்து அரேபியனானான். ஒரு இந்தியன் இறந்து அரேபியன் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது.ஒரு அறிவாளி முட்டாள் ஆகிவிட்டான். யாவர்கும் ஈமின் என்று உலக மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்த இந்து மதத்தைவிட்டு விட்டு காபீா்கள் என்று பேதம் கற்பித்து படுகொலைகள் செய்யும் ஒரு கூட்டத்தாாின் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது.உலக அமைதிக்கு ஆதரவாளாின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது. இன்னும் நிறைய சொல்லலாம் சுவனப்பிாியரே. இறைவன் இந்துக்களின் பக்கம் என்பதை விரைவில் தாங்கள் விளங்கிக் கொள்வீா்கள்.

ASHAK SJ said...

1. ஹிந்து என்பது மதம் அல்ல , ரிக் யஜுர் சாம அதர்வணம் 4 வேதத்திலும் ஹிந்து என்ற வரத்தை இல்லை
2. 4 வேதத்தின் படி கடவுளுக்கு உருவம் இல்லை ஹிந்து என்று சொல்லகூடிய மூடர்கள் கற்சிலைகளை குப்பையில் எரிந்து விட்டு வரவும் பின்பு இஸ்லாத்தை பற்றி விமர்சிக்கவும் - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு