Followers

Thursday, December 04, 2014

'டிஸ்கோ முல்லா' கைது செய்யப்பட்டார்!





'டிஸ்கோ சாந்தி' கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன 'டிஸ்கோ முல்லா'! அதாவது பாகிஸ்தானில் ஜூனைத் சம்சாத் என்ற பாப் இசை பாடகன் ஒருவன் இருந்தான். பல ஆல்பங்கள் இவனது பெயரைக் கொண்டு மிக அதிகமாக விற்று தீர்ந்தது. கராச்சி மாகாணத்தை சேர்ந்தவன். 2001 ம் ஆண்டு பாப் இசை தொழிலை விட்டு விட்டு இஸ்லாத்தின் மூலம் புரோகித தொழிலை தொடங்கினான். தப்லீக் ஜமாத்தில் மிக ஆர்வமாக பணியாற்றினான். முரீது கும்பலை சேர்ந்தவன். இங்கும் நல்ல வருமானம். முரீது கொடுக்கும் போது தனது பழைய பாப் நடனத்தையும் கூடவே சேர்த்துக் கொண்டான். இது மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானது. கிறித்தவர்கள் 'ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பாராக' என்று நெற்றியில் ஒரு தட்டு தட்டினால் அந்த மக்கள் எப்படி துடித்து துள்ளி விழுகிறார்களோ அதே போன்ற ஒரு ட்ரிக்தான் இந்த ஆட்டமும். இஸ்லாத்துக்கு எதிராக வேலை செய்ய யூதர்களால் தயாரிக்கப்பட்டவனாகவும் இருக்கலாம். காணொளியை பார்த்து நம்ம மவுலவி என்ன ஆட்டம் ஆடுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். :-)

தற்போது தனது பிரசாரத்தில் நபிகள் நாயகம் மனைவியரில் ஒருவரை தவறாக பேசி அதனால் சர்ச்சை ஏற்பட்டு கோர்ட்டினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளான். தண்டனை கிடைத்தவுடன் தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளான். 'நான் எனது அறிவை இழந்து என்ன பேசுகிறேன் என்று விளங்காமல் பேசி விட்டேன். என்னை முஸ்லிம்கள் மன்னித்து தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை அளித்துள்ளான். தற்போது வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இறைவனும் அவரது தூதரும் காட்டித் தராத எந்த வணக்கமும் முடிவில் சம்பந்தப்பட்டவர்களை படுகுழியில் தள்ளி விடும் என்பதற்கு ஜூனைத் சம்சாத் என்ற இந்த கிறுக்கு மவுலவியின் முடிவு ஒரு சிறந்த உதாரணம்.

நம் தமிழகத்திலும் முரீது கோஷ்டிகள் ஆங்காங்கே உண்டு. ஜமாலி போன்ற கிறுக்கர்கள் இதனை ஆதரிக்கக் கூடியவர்களே. தவ்ஹீத் வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது ஓரளவு இந்த மூடர்கள் அடக்கி வாசிக்கிறார்கள். உங்கள் ஊர்களில் இது போன்று மூரீது கும்பல்கள் யாராவது தென்பட்டால் உடன் விளக்கத்தைக் கேட்டு அவர்களை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுங்கள். உங்களையும் என்னையும் இறைவன் குர்ஆனின் நேரான வழியிலும் நபிகள் நாயகம் காட்டித் தந்த வாழ்வு முறையிலும் கடைசி வரை இருந்து மரணிக்கச் செய்வானாக!

ஏ ஆர் ரஹ்மானுக்கும், யுவன் சங்கர் ராஜாவுக்கும்(அப்துல்லா) நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இசையை ஒரு தொழிலாக செய்து கொள்ளுங்கள். அது சரியா தவறா என்பதை இறைவன் தீர்மானித்துக் கொள்வான். ஆனால் அந்த இசையை வணக்கமாக்குகிறேன் என்ற பெயரில் ஏடா கூடமாக எதையாவது செய்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள்.

தகவல் உதவி
அல்ஜஜீரா
04-12-2014

No comments: