'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, April 30, 2015
'ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும் பாபா ராம்தேவ்!
ஆயுர்வேத மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 'புத்ரஜீவக் பீஜ்' (ஆண் குழந்தையை தரும் லேகியம்) பாபா ராம் தேவ் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்டு தற்போது மார்க்கெட்டில் விநியோகிக்கப்படுகிறது. பாபா ராம் தேவ் ஹரியானா மாநிலத்தின் விளம்பர தூதுவராகவும் பிஜேபி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பெண் குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தைகள் வறுமைக்கு பயந்து கழுத்து நெரித்து கொல்லப்படுகின்றன. இந்த நிலையில் அரசின் தூதுவர் ஒருவரே ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது பலரின் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பெண் குழந்தைகளை காக்க வேண்டும் என்று ஒரு பக்கம் மோடி பிரசாரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள லேகியம் விற்பது எந்த வகை நியாயம். பெண் குழந்தை பெற்றுக் கொள்வது பாவம் என்பது பாபா ராம் தேவின் எண்ணமா? அறிவியல் ரீதியாகவும் இது மக்களை ஏமாற்றும் புரட்டு வேலை. பாராளுமன்றத்தில் ஜனதா தள் மூத்த தலைவர் தியாகி தான் ஒரு மருந்து கடையில் இந்த லேகியம் வாங்கியதாக அனைவருக்கும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சன் அந்த மருந்து பாக்கெட்டை சுகாதார மந்திரி நத்தாவிடம் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும் போது 'ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண் குழந்தைகள் கொடுமை படுத்தப்படும் சூழலில் அதனை தடுக்க வேண்டிய அரசு அதற்கு எதிர் மறையாக செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது' என்றார். இந்த மூடப்பழக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் என்று பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
ஹரியானாவில் இந்த மருந்தை வாங்க பலரும் போட்டியிடுகின்றனர். மருந்து கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. பாபா ராம் தேவ் மக்களின் மூடப் பழக்கத்தை பயன் படுத்தி அருமையாக கல்லா கட்டுகிறார். :-)
சாமியார்களின் ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் கோமாளித் தனங்கள் நிறைவேறப் போகிறதோ பொறுத்திருந்து பார்போம்.
தகவல் உதவி
ஜீ நியூஸ்
30-04-2015
http://www.financialexpress.com/article/industry/companies/controversy-hits-ramdev-drug-promising-birth-of-male-child-hits-modis-beti-bachao-campaign/68323/
http://zeenews.india.com/news/india/uproar-in-rajya-sabha-over-baba-ramdevs-infertility-medicine-divya-putrajeevak-seed_1587536.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment