Followers

Tuesday, September 08, 2015

இந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்!

இந்துக்களின் கடவுள் கொள்கை பற்றி ஒரு அலசல்!

//ஒரு இந்துவாகப்பட்டவர், எச்சமயத்தவர் கருத்தையும் — அது உகந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்வார். சமயத்தை நோக்கமாட்டார். அவரைப் பொதுச்சமயத்தார் என்று முலாம் பூசவும் மாட்டார்.
அப்படி நோக்கினால் — வேளாங்கண்ணிக்கோ, நாகூர் தர்க்காவுக்கோ இந்துக்கள் செல்ல மாட்டார்கள்.
— சந்த கபீர், ஷீரடி சாயிபாபா போன்றவர்கள் இந்துக்களால் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கப்பட்டிருக்கமாட்டார்கள்.//

அய்யா அரிசோனரே! இந்துக்களாகிய உங்களுக்கு ஒரு தீர்க்கமான கடவுள் கொள்கை இல்லாததால் கண்ட இடத்திலும் கையை தூக்கி கும்பிட்டுச் செல்கிறீர்கள்.தாங்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த கல்வி என்னும் பகுத்தறிவை வெறும் வயிற்றுப் பிழைப்பிற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.சரியான உண்மையானா ஒரே கடவுளை அடையாளம் காண உங்கள் பகுத்தறிவு தவறியதால், வேளாங்கன்னி,நாகூர் என்று ஓடுகிறீர்கள்.எம்மதமும் சம்மதம்,எல்லா நதிகளும் முடிவில் கடலுக்கே செல்கின்றன என்ற முரண்பாடான கொள்கைகளை சரி காண்கிறீர்கள்.

ஓர் இறைவனை வணங்குவதும் இந்துமதம், பல தெய்வங்களை வணங்குவதும் இந்து மதம்,உருவத்தை வணங்குவதும்,அருவத்தை வணங்குவதும் இந்து மதம்.தெய்வமே இல்லை எனும் நாஸ்திகனும் இந்துதான்.அழியக்கூடிய பலவீனமான மனிதர்களுக்கு தேவைப்படும் மனைவி,குடும்ப சுகம்,மக்கள் செல்வம் அனைத்தையும் எல்லாம் வல்ல கடவுள்களிடமும் காண முடிகிறது.படைத்தவனுக்கும் படைப்பினங்களும் எந்த வேறுபாடும் இல்லை.செத்து மடியும் ஜென்மங்களும் ,என்றும் நித்திய ஜீவிதமாக இருக்கக்கூடிய சிருஷ்டி கர்த்தாவும் ஒன்றாக இருக்க முடியுமா?உங்களுக்கு எல்லாமே ஒன்று.ஆம்! பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்டால் இது சாத்தியமே!

//பலமுறை சிவபெருமான் பெயர் குறிப்பிடப்படும் திருமந்திரத்தில் கடவுள் பெயர், குறிப்பிடப்படவில்லை என்னும் நீங்கள் திருமந்திரத்தையே படிக்கவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது.//

அய்யா அரிசோனரே! தாங்கள் சைவம் என்ற ஒரு சமயத்தை திருமூலர் பேசுவதாக கூறுகிறீர்கள்.ஆனால் திருமூலர் ஒரு சமயம் நன்று மற்றது தீது என்கிற வாதத்தை “மாய மனிதர் மயக்க மதுமொழி” என்கிறார். சமயங்களின் அடிப்படையில் பேசுபவர்கள் இறைவனை உள்ளவாறு உணர்ந்தவர் அல்லர். இறைவன் சமயங்களுக்கு அப்பாற்பட்டவன். ஆகவே அறுசமயங்களால் முடிவான பொருள் என்று கூறப்படும் தன்மை இல்லாதவன், இதைப்பற்றி நாம் ஆராயும்பொழுது கிடைக்கும் தெளிவு நமக்கு, நிலையான வீட்டின்பத்தை அளிக்கும்.

“ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே” (திருமந்திரம் – 1533)

சமயங்களின் நோக்கம் முடிவான பரம்பொருளை அடையும் வழியைத் தொட்டுக் காட்டுவதுதான். அதற்கு மாறாக சமயவாதிகள் தத்தம், சமயங்களே சிறந்தது என்றும் மற்றவை தாழ்ந்தது என்றும் கூறுவார்களேயானால் அவர்கள் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயைப் போல் இருப்பர் என்று கூறுகிறது நீங்கள் படித்த திருமந்திரம்.

“ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையத் தார்களே”. (திருமந்திரம் – 1558)

ஆகவே,திருமூலரை சைவராக்கி நீங்கள் குன்று குரைத்தெழு நாயாக வேண்டாம்.

-ஷாலி





27 comments:

Dr.Anburaj said...

குருடா்களாகிய தாங்களுக்க வானவில்லின் வா்ணஜாலத்தை மதீப்பிடும் தகுதி கிடையாது. ஆதாம் ஏவாள் எந்த மொழியில் தொழுகை நடத்தினாா்கள். எந்த அரபு பள்ளியில் படித்தாா்கள்.பா்தா போட்டாா்களா ? சுன்னத் செய்தா்களா ? ஒலுவு செய்தாா்களா ? திருமணம் செய்தாா்களா ? குரான் ஓதினாா்களா ? ரசுலை போற்றினாா்களா ? ஹஜ் போனாா்களா ? எந்த உடை உடுத்தினாா்கள் ? எந்த கடையில் வாங்கினாா்கள் ? தைத்தாா்களா ? போா்த்திக்கொண்டாா்களா ? வீடு கட்டினாா்களா ? எந்த மொழியில் பேசினாா்கள் ? அநத மொழியை எங்கே படித்தாா்கள் ? அவர்களுக்கு ஆபேல் காயின் என்ற ஆண்மக்கள் பிறந்தாா்கள்.பிறந்தவா்களில் ஆவேலை காயின் கொன்று விட்டான். காயினை சாியத் நீதிமன்றம் விசாாித்ததா? நிதிமன்றம் எங்கே இருந்தது ?எனன தண்டனை கிடைத்தது ? தண்டனை எப்படி நிறைவேற்றப்பட்டது ? காயினுடைய மனைவி யாா்? பெற்ற தாயாகிய ஏவாளா ??????? இவ்வளவு அசீங்கமான கதையை ஏன் கட்டுக் கதை என்று நிராாிக்க தங்களுக்கு தைாியம் இல்லை ? இந்தியாவில் மனிதன் காட்டுமிராண்டிகளாகத்தான் வாழ்ககையை ஆரம்பித்தான். மனிதனை பண்படுத்தும் பணி நடந்து கொண்டுயிருக்னிற்து. மனிதன் பலவித நிலைகளில் பக்குவம் பெற்று வருகின்றான். அதற்கு அத்தாட்சிதான் இன்றைய இந்தியா.பலவித மனப்பக்குவ நிலைகளில் உள்ள சமூகங்களைக் காணலாம். இவர்களுக்கு உன்னதங்களை காட்டும் வழியை பலரும் செய்து வருகின்றாா்கள். நிச்சயம் அது அரேபியமனாவது அல்ல. ஏக வழிபாடு என்ற பெயாில் மனித படுகொலையை யாரும் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை.நல்லது செய்யவதில் கூட ஆவேசம் வெறித்தனம் இல்லை. இந்துக்கள் யாரும் அகதியாக ஆஸ்திாியா ஆஸதிரேலியா ஜொமனி போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடவில்லை.சிாியாவில் உள்ள புராதானச் சின்னங்களை குண்டு வைத்து தகா்க்கும் காடையா்களை குரான் உருவாக்கி வருகின்றது. அகதிகள்ள உருவாவதற்கு சியா சன்னி முஸ்லீம் பிாிவினைதான் காரணம். ஒரு வேதம் ஒரு மதம்.ஒரே அடையாளம் ஒரு ரசுல் தாருல் இசுலாம்என்ற நாடு என்றகொள்கையோடுதுவக்கப்பட்ட இசுலாமிய வல்லாதிக்க இயக்கம் முகம்மதுவின் காலத்தில் இரத்த ஆற்றில் நீந்தியது. இன்னும் இரத்த ஆற்றை பிறப்பித்துக் கொண்டிருக்னிற்து. கோடிக்கணக்கான வேறுபாடுகள் மத்தியில் இந்துக்கள் அபாரமான ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றாா்கள். இந்துக்ளுக்குள்ள பக்குவம் அரேபிய காடையா்களுக்கு கிடையாது. நல்ல கனியை கொடுப்பது நல்ல மரம். அன்பை அமைதியை கொடுக்கும் இந்துமதம் உயா்ந்தது. இரத்தக்களறியை உருவாக்கும் அகதியை உருவாக்கும் அரேபிய நாகாீகம் ஏகத்துவம் என்ற நயவஞசக போா்வையோடு வரும் காடைத்தனம் இந்தியாவிற்கு தேவையில்லை.

முட்டாளே நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டா் இராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய Hindu view of Life என்ற புத்தகத்தைப் படித்துப் பாா். கிறுக்குப் புத்தி க்கு தெளிவு பிறக்கும். நல்ல புத்தி வரும். இந்தியாவிலும் இரத்த ஆறு ஓடவைக்கலாம் என்ற உமது ஈனப்புத்தி திட்டம் தோல்வி அடையும்.

Dr.Anburaj said...

குரான் படித்தவா்களின் குரானின் தாயகத்தில் வாழ்பவன் ஏக இறைவனை வணங்குபவன் யோக்கியதை
Why old Saudi men are marrying Syrian teenage refugee girls
Posted by Zakaria Virk
The Toronto Star , March 22, 2013, Syria’s child brides:
‘My daughter is willing to sacrifice herself for her family’
Refugee brides: Woman takes a cut to help Syrian refugee girls in Jordan find Arab grooms from all over Middle EastAMMAN, JORDAN—Nezar’s face is tight with expectation as she arrives for the meeting. She is a heavy-set mother of 12 and as she arranges herself on the small sofa in Um Majed’s living room she removes her black veil and the pious black gloves that allow her to shake hands with men who are not her relatives.Um Majed sets down small cups of hot Turkish coffee to ease the tension. Nezar is a Syrian refugee and looking for a husband for her daughter. She lists the girl’s qualities.“She is tall and pretty,” she tells Um Majed. “She finished the seventh grade.”“There is one available. He is Saudi,” Um Majed answers. This is what Nezar wants to hear. Saudis, flush with petrodollars, will pay well. She has high hopes for this Saudi.So does Um Majed who will earn a $287 fee if the two sides agree to the match.Um Majed, 28, is also a Syrian refugee, a former housewife from Homs. Um Majed isn’t her actual name but a respectable Arab moniker meaning ‘mother of Majed,’ her young son. She doesn’t want her full name published because of her shame about what she does for a living: procuring brides, some as young as 12, for men as old as 70 from all over the Middle East in exchange for money.Nezar too was a homemaker in Homs who arrived in Jordan last year. Her husband was a taxi driver but he can no longer work because he has a heart condition. Her son is badly injured.
“He was a fighter with the resistance army and they were removing a roadblock the regime set up on the street when he was hit by a missile,” she explains. “Four others died. He has had three surgeries and needs another one.”Her daughter Aya is their best hope.
“My daughter is willing to sacrifice herself for her family,” Nezar says. “If the war had not happened I would not marry my daughter to a Saudi. But the Syrians here are poor and have no money.”Nezar’s daughter is 17. The Saudi groom is 70.
Stories of men fighting and dying to overthrow President Bashar Assad’s regime have fixated the world but for women the war has different, troubling dimensions. Syrian women and their children make up 75 per cent of the 429,000 refugees in Jordan. The vast majority do not live in the camps set up by the Jordanian authorities. They flood into cities like Amman where they live on the charity of kindly Jordanians and aid organizations.Many of these women are not equipped to support their families, having been raised to keep the home and hearth while husbands and fathers provided for them. The true cost of how the war is ripping apart the nation is evident in the brutal life choices Syrian women are forced to make to survive.Why old Saudi men are marrying Syrian teenage refugee girls Posted by Zakaria Virk

y.

Dr.Anburaj said...

He was a fighter with the resistance army and they were removing a roadblock the regime set up on the street when he was hit by a missile,” she explains. “Four others died. He has had three surgeries and needs another one.”
Her daughter Aya is their best hope.
“My daughter is willing to sacrifice herself for her family,” Nezar says. “If the war had not happened I would not marry my daughter to a Saudi. But the Syrians here are poor and have no money.”Nezar’s daughter is 17. The Saudi groom is 70.
Stories of men fighting and dying to overthrow President Bashar Assad’s regime have fixated the world but for women the war has different, troubling dimensions. Syrian women and their children make up 75 per cent of the 429,000 refugees in Jordan. The vast majority do not live in the camps set up by the Jordanian authorities. They flood into cities like Amman where they live on the charity of kindly Jordanians and aid organizations.Many of these women are not equipped to support their families, having been raised to keep the home and hearth while husbands and fathers provided for them. The true cost of how the war is ripping apart the nation is evident in the brutal life choices Syrian women are forced to make to survive.Grasping for the security of a husband and home, hundreds of girls are being sold into early marriage. These are undoubtedly forced marriages but the truth has several shades of grey: some mothers believe they are protecting their daughters from further hardship and violence, others are desperate to pay the bills. Yet their voices are rarely heard because their lives are lived behind closed doors, their private tragedies not shared with outsiders.“If you see how Syrians here live you will see why they marry their daughters to whoever will take them,” Um Majed says. “People are poor and they will do anything to pay the rent.”The surplus of desperate Syrian refugees means marriage has become a buyer’s market with some grooms offering as little as $100 cash for a bride.

Dr.Anburaj said...

The legal age of marriage in Jordan is 18 but some religious clerics will marry underage girls for a small fee. This puts the girls at even greater risk for exploitation because some of Um Majed’s clients want a temporary union lasting a few weeks or months after which the girl is returned to her parents.In other words, it is religiously sanctioned prostitution.“One of my brides has been married three, four times,” Um Majed says. “She is 15.”Yet Nezar believes she is saving Aya from a life of hardship. What are her daughter’s prospects in Jordan where she has no right to work? There is little hope of the war ending and returning home. She will soon become a burden on her parents. No, a life in Saudi Arabia with a husband who can provide a home and children, perhaps send money back to Jordan, is the answer.
She admits the marriage market is hazardous. Most of the potential grooms offer a few dollars to leer at her daughter.“You are already selling your daughter, you might as well sell her to someone decent,” she says.
Nezar cuts the meeting short. Aya is having belly-dancing lessons to increase her appeal to the elderly groom.“I will take 3,000 dinars ($4,300) from him,” she tells Um Majed. “If he was younger I would accept 2,000 dinars.”In the old days, the neighbourhood busybody, a matronly figure, was the matchmaker. She would appraise the unmarried girls on her street on behalf of the grooms’ families. At the Turkish bath, the would-be bride was paraded like a prizewinning filly: her mane tugged to check she wasn’t wearing a wig, a walnut cracked between her molars to make sure her teeth were real. In a society where women, especially unmarried girls, do not mingle with men not related to them, or even venture outside the home at risk of being labelled sexually loose, many families relied on matchmakers to find the right bride for their sons.Um Majed raises a cynical eyebrow at this innocent archetype as she strikes a match and lights a cigarette. She became a matchmaker when she approached a local Islamist charity for food and the manager asked if she “knew any pretty girls.”“I have 10 families looking for grooms,” she says. “Their girls are between 12 and 21. The grooms are always in their 40s, 50s, or 70s. They want beautiful girls, the younger the better.”She pauses and takes a drag of the cigarette.
“The Saudis usually ask for 12-year-olds.”As she sees it, life has become about exploiting or being exploited.“I have to feed my children,” she says.
“What does freedom mean?” she asks. “We were living with pride and in our own country. I asked my husband this question. He said that they are Alawites and we fight them. But the Saudis are Sunni like us and they harass Syrian girls. Is this religion? Is this freedom?”Her husband owned a car wash in Homs. Last year, he was hit by a stray bullet and after Um Majed nursed him back to health he joined a militia fighting with the Free Syrian Army.
“I now wish the bullet pierced his heart,” she says bitterly. “He abandoned me to fight and left me with the burden of supporting the family.”

Dr.Anburaj said...

Syrian brides have always been sought after, especially by Gulf Arab men. There is an expression which roughly translates as ‘he who does not marry a Damascene will never know a night of peace.’The stereotype of the houriya, Levantine beauties with pale faces, speaking the melodious Syrian Arabic dialect and purveyors of a famous cuisine holds great appeal. A Syrian hostess’s reputation can rest on the balance between the olive oil and lemon juice in her tabbouleh salad.
In the Middle East, the groom or his family are expected to provide maher, roughly translated as dowry. If he is a good catch he will approach the girl’s family with a fully furnished flat, perhaps a car, and bank statement proving his savings.
Zayed Hamad who runs Kitab al Sunna, a Sunni Islamist charity that helps women refugees and receives funding from Saudi Arabia, says he receives 100 phone calls, emails and even text messages a month from grooms all over the Middle East looking for wives. Some are looking for a bargain.
“Some believe if they marry a Syrian girl it is cheaper,” he says. “I get approached by the brothers but I say it is not my responsibility to find them brides.”
He says it is a good thing as these girls will have more secure futures.
Eman is a typical Damascene beauty with her pale skin and hazel eyes. At 29, she is considered an older bride and has two daughters from her ex-husband whom she divorced because she caught him in bed with his sister-in-law.Eman is tired of the war and its slogans.“I curse the people who call for freedom,” she says. “But Bashar invited the devil to Syria.”

Dr.Anburaj said...

She fled to Amman with her girls late last year. All refugees are meant to stay in the Zaatari camp, a dusty, sometimes violent shanty town on the north border. The main drag is nicknamed the Champs Elysees and sells everything from shoes to shawarmas. Women dig small holes in the ground near their tents to avoid trips in the dark to the public toilets because they are afraid.Eman refuses to live there. “It’s horrible,” she says. Instead, she rents a small apartment in Amman with her children, sister and mother for 150 dinars a month.But life in the capital without the protection of a husband or father is hard. When Eman first arrived she would go to charities and mosques for food and mattresses where her soft Syrian accent immediately attracted attention.“Wherever I go I get proposals,” she says with more weariness than pride. “They ask, can I smell your perfume for 20 dinars? ($28) Can you lift your veil for 35 dinars ($50)? I’d rather die of hunger than do something wrong.”

Just yesterday she heard about a rich man giving away cash at the local mosque so she went to investigate.

“He was giving $100 and gave money to all the others and told me to wait,” Eman says. “When everyone was done he asked me to call him in the morning at his hotel. I said I’d come with my mother. He said come alone. He would give double the money. I told him he was ridiculous.”She works from home, shelling peanuts for a factory and earning 2.5 dinars ($3.50) for every 10 kilograms of nuts she peels. Eman wants to marry soon so she doesn’t have to expose herself to unwanted attention.“I want a real husband and a real marriage, someone like Muhandin,” she says, and giggles. He is a Turkish actor in a popular soap opera.Um Majed, though, has no time for romantic dreams.A new client, a Jordanian man aged 29 wants a young bride from the Zaatari camp. He will give Um Majed fake documents and they will pose as charity workers to gain access to the families and size up their daughters.
“Some families accept 50 dinars (72) to let the groom look at their girls,” she says. She has done this ruse several times.Um Majed will get her cut for brokering the arrangement. But she insists it will be a food package, not cash.
நன்றியுடன்
Read more: http://www.themuslimtimes.org/2013/03/countries/syria/why-old-saudi-men-buying-syrian-teenage-refugee-girls#ixzz3lDv5GOaS

Anonymous said...

suvanappiriyan will never answer the for your reply. he knows Islam is devils religion in the world. If he agree your reply next day his head will be in his body.

UNMAIKAL said...

.

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?

>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.
<<<<



>>>
வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..
<<<


.

>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.
<<<

.

>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.
<<<


.
>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.
<<<


.
****
பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.
*****

****தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? *****

.

****
நள்ளிரவிலும் நாயகியை சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி மட்டும் விர்ரென பறந்துபோய்) ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்
*****
.
>>> உடம்பெல்லாம் பெண்குறி ஆகிய இந்திரன். <<<
.
>>>>ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி? <<<<
.
>>>> அழகியிடம் சிக்கிய காமாந்தகார பகவான்கள்.பகவானின் லீலாவிநோதங்கள். திருமணங்களில் அக்னி சாட்சி, அருந்ததி பார்ப்பது ஏன்? <<<<
.


வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..


.

Dr.Anburaj said...

சில சமயங்களில் தங்களிடம் நற்பண்பு காணக்கிடைக்கின்றது. மேற்படி கடிதங்களையும் தினகரன் தலையங்கத்தையும் வெளியிட்டதற்கு நன்றி.தமிழ மட்டும் தொிந்த வாசகா்கள் அறிய தமிழில் வெளியிடலாமே ?

Dr.Anburaj said...

இந்து மதத்தின் கொள்கை ஏகத்துவம் தான். ஒா் நாமம் ஒா் உருவம் இல்லாற்குக ஆயிரம் திருநாமம் தெள்ளேனாம் கொட்டாமே! ஆனால் மனிதம் காட்டுமிராண்டியாகத்தானே பிறந்தான். படிப்படியாகத்தானே மாறி பாிணமதித்து வருகின்றான்.ஒரு கோவிலில் 10 சிலைகள் இருந்தால் அங்கு 10 குழுக்கள் ஒன்றாகி உள்ளதாக பொருள் படுத்தலாம். ஆகவே முகம்மது ஏக இறைவன் என்ற பெயாில் நடத்திய போா்களும் அதற்குபிறகு அரேபிய காடையா்கள் நடத்தும்
படுகொலைகளும் இந்தியாவில் இல்லை. திருஷ்டி கழிப்பு போல் சைவ -வைணவ சண்டைகள் சில காலம் அரங்கேறின.ஆனால் அறிஞா்கள் தலையிட்டு அதை தீா்த்து வைத்து விட்டாா்கள்.இன்று முறையான சமய கல்வியை இந்துக்களுக்கு அளித்தால் முன்னெற்றம் எற்படும். படிப்படியாக மக்கள் பக்குவம் பெறுவா். உன்னதங்களைக் கற்று கொடுக்க கூடுதல் முயற்சி தேவை. ஆனால் அது அரேபிய காடைத்தனம் அல்ல.அரேபிய ஏகத்துவம் இந்தியாவிற்கு தேவையில்லை.முகம்மது தேவையில்லை. குரான் தேவையில்லை

Dr.Anburaj said...


மகம்மது அலி சின்னா என்ற பெயா் வைத்தாலே புத்தி மிகவும் மட்டமதாகத்தான் இருக்கும்.
புராணங்கள் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன என்ற கருத்தை ஏற்கனவே பதிவு செய்துவிட்டேன். பின் ஏன் ? ஆச்சாாியரது வலைதளம் ஈவேரா புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன். எனது நிலையில் மாற்றம் இல்லை.சம்பிராதயங்கள் காலத்திற்கு தக்கவாறு மாறும். வெட்டிப்பேச்சு பேசி வீண் சண்டை போடமலே!

Dr.Anburaj said...


ஆதாமையும் ஏவாளையும் ஏன் முழு உடையுடன் படைக்கவில்லை? அவர்களை என் நிா்வாணமாக திாிய விட்டான் ? உடை அணிய வேண்டும் என்ற உணா்வை அவர்களுக்கு ஊட்டியது சாத்தான்தானே ? அல்லா வழி நிா்வாணம் சாத்தான் வழி உடைகள் என்று சொல்லலாமா ? உன் அல்லாவுக்கு பிாியமான நிா்வாணத்தை நீ என் பின்பற்றவில்லை ? ஆதாம் நபி என்று விசுவாசிக்கும் அன்பா்கள் அனைவரும் நிா்வாணமாக இனிமேல் இருப்பாா்களாக !ஒழுக்கத்தில் கலாச்சாரத்தில் சமூக வாழிவியலில் விஞ்ஞானத்தில் வாழ்ககை வசதிகளில் கல்வியில் கண்டுபிடிப்புகளில் படிபடியாக வளா்ச்சி கொணடு மானுடம் வளா்ந்து வாழ்ந்து வருகின்றது.
இதில் நியாயதீா்ப்பு நாளில் எந்த சட்டப்படி அல்லா தீா்ப்பு வழங்குவாா் ?


Dr.Anburaj said...


இசுலாம் -அரேபிய மத வாதியாக முகம்மது போதித்த நியாயத் தீா்ப்பு நாள் என்பது ஒரு போதும் சாத்தியமில்லை.அது தவறான போதனை.மூடநம்பிக்கையாகும்.நியாய தீர்ப்பு மற்றும் சொா்க்கம் குறித்து நபி மொழிகள் அனைத்தும் பக்கா கட்டுக் கதை.மனகோளாறின் விளைவாகத் தோன்றியவை.
நியாயத் தீாப்பு அன்று ஒரு ஆணையும் பெண்ணையும்நிா்வாணமாக இருக்க படைத்த அல்லாவுக்கு என்ன தண்டனை????
இன்றும் அந்தமான் தீவுகளில் நிா்வாணமாக வாழும் மக்களளுக்கு எந்த அடிப்படையில் அல்லா நியாயத் தீா்ப்பு வழங்குவாா் ? அந்த மக்களுக்கு ஏதும் செய்யாதஅல்லாவுக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் ?????

Dr.Anburaj said...


திருவாசகத்தின் முழக்கம் டாா்வீனின் பாிணாமக் கொள்கையைக் கண்டு பயப்படவில்லை.
ஆனால் அரேபிய கிறிஸ்தவ மதங்கள் டாா்வினைக்கண்டு ஒன்றுக்கு அடிக்கின்றன.
Pullagi, poodai puzhuvai maramaki,Pala virugamagi pravayai , pambaki ,
Kallai , manitharai peyai , ganangalai ,Val asuraragi , munivaraai , devaraai ,
Chellaaa nindra , ithathavara jangamathukkul ,Yella pirappum piranthu ,ilaithen, yem perumaane.(26-31)


Oh lord by becoming grass, small plants , worms , trees ,
Several types of animals , birds , snakes ,Stone , human beings , ghosts , different types of devils,Strong asuras , sages devas ,

And I traveled all over this spectrum of moving and not moving things ,

And took all types of births and became tired.
Truly I have attained salvation seeing your golden feet,

Oh God, who stood as letter “Om”, in my mind so that I would be saved,

Oh truth, oh purity , Oh Lord who rides on a bull,

Oh God whom Vedas called “Oh Lord”, with great surprise ,

And tried to see you as taller, higher deeper though you are smaller than the small.

Dr.Anburaj said...

ஒரு இந்து டாா்வின் கோட்பாட்டைக்கண்டு ”ஒன்றுக்கு” அடிக்கவில்லை.ஆனால் கிறிஸ்தவ அரேபயி மதவாதிகள் டாாா்வினைக்கண்டு -அறிவியலைக்கண்டு ” ஒன்றுக்கு அடிக்கின்றாா்களே ஏன் ? உயிாியல் பாிணாமம் மட்டும் அல்ல.கல்வி கலாச்சாரம் உடை மொழி பண்பாடு கட்டடக்கலை கலைகள் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் பாிணாமம் இருந்தது.இன்னும் பாிணாமம் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றது.காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் படிப்படியாக பாிணாமம் பெற்றதுபோல் பாிணாமம் இன்றும் நடந்துகொண்டேயிருக்கின்றது.மனிதன் ?புதிய பாிணாமத்தை அடைவான்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !
குறிப்பு:
1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

Dr.Anburaj said...

ஒரு இந்து டாா்வின் கோட்பாட்டைக்கண்டு ”ஒன்றுக்கு” அடிக்கவில்லை.ஆனால் கிறிஸ்தவ அரேபயி மதவாதிகள் டாாா்வினைக்கண்டு -அறிவியலைக்கண்டு ” ஒன்றுக்கு அடிக்கின்றாா்களே ஏன் ? உயிாியல் பாிணாமம் மட்டும் அல்ல.கல்வி கலாச்சாரம் உடை மொழி பண்பாடு கட்டடக்கலை கலைகள் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் பாிணாமம் இருந்தது.இன்னும் பாிணாமம் தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றது.காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் படிப்படியாக பாிணாமம் பெற்றதுபோல் பாிணாமம் இன்றும் நடந்துகொண்டேயிருக்கின்றது.மனிதன் ?புதிய பாிணாமத்தை அடைவான்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !
குறிப்பு:
1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

Dr.Anburaj said...

நான் எழுப்பும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க திறனற்ற அலி தாஙகள் என் விடம் கக்கும் வேலையைச் செய்கின்றீா்கள். தங்களின் கடிதங்கள் அரேபிய கூட்டம் எவ்வளவு வஞ்சக குணம் உடையது என்பதற்கு எடுத்துக் காட்டு.தங்கள் கடிதங்களை பல இந்து இணைய தளங்களுக்கு அனுப்பி வருகின்றேன். இந்துக்களின் சமய சமரச கொள்கையில் திருத்தங்கள் எற்பட. நன்றி எழுதுங்கள்.

Dr.Anburaj said...


காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் மனிதனாய் பாிணமித்தானோ அதுபோல் இன்றும் அவனது பாிணாம பயணம் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது.மனிதன் அதிமனிதன் என்ற நிலையை நோக்கி பாிணமித்துக் கொண்டிருக்கின்றான் என்கிறாா் ஸ்ரீ அரவிந்தா்.-ஆரோவில் பாண்டிச்சோி.மனதை உடையவன் மனிதன்.அதிமனதை உடையவன் அதிமனிதன்.
1902 ல் அலிப்புா் வெடிகுண்டு வழக்கில் கைதாகி சிறைச்சாலைக்குள் இருந்த ஸ்ரீஅரவிந்தாின் கவனம் ஆன்மீகம் பக்கம் திரும்பியது. சுயமாக படித்ததில் ஏராளமான சந்தேகங்கள் ஏற்பட்டது. 1901 ம் வருடம் இறந்து போன் சுவாமி விவேகானந்தா் சிறையில் இருந்த அரவிந்தருக்கு சமய யோக-தியான- அனுஷ்டானங்களை ஆவி வடிவில் போய் அளித்தள்ளாா். அரவிந்தாின் சந்தேகம் தீரும் வரை விவேகானந்தா் விடவே மாட்டாா் என்று அரவிந்தா் கூறுகின்றாா்.சுவாமி விவேகானந்தரே மனிதன் அதிமனிதனாய் பாிணமிக்கின்றான் என்ற கருத்தை அவருக்கு கற்றுக் கொடுத்தாராம்.மேலும் அரவிந்தா் Essays on Gita எனடற ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கின்றாா்.அப்புத்தகம் சுவாமி விவேகானந்தா் தனக்கு பகவத்கீதையை விளக்கியதைத்தான் ஆவணப்படுத்தியிருப்பதாகக் கூறுகின்றாா்.
படிப்பதற்கு ஆச்சாியமாக உள்ளது .

Dr.Anburaj said...


இதில் நியாயதீா்ப்பு நாளில் எந்த சட்டப்படி அல்லா தீா்ப்பு வழங்குவாா் ?
இக் கேள்விக்கு பதில் அளிக்கும் யோக்கியதை உள்ளவன் யாரும் இல்லையா ?
இக் கேள்விக்கு பதில் அளிக்கும் யோக்கியதை உள்ளவன் யாரும் இல்லையா ?
இக் கேள்விக்கு பதில் அளிக்கும் யோக்கியதை உள்ளவன் யாரும் இல்லையா ?

முகம்மதுவின் போதனைகளில் முக்கியமானது நியாய தீா்ப்பு நாள் என்பது.முகம்மதுவின் போதனை பொய் என்ற நிரூபிக்கப்பட்ட பின்

பின் என்ன இந்துவாக மாறி அரசு கெஸட்டீவ் அறிவிப்பு வெளியிட வேண்டியதுதானே ?

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

கடவுள் கொள்கையை பற்றி இறையில்லா இஸ்லாம் தளத்தில் என்னுடன் கலந்துரையாட முன்வருகிறீர்களா? கடவுளை பற்றிய நம்முடைய கருத்துக்களை, நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்வோம். அதை படிக்கிற வாசகர்கள் எது அறிவுக்கு ஏற்புடையது என்று அவர்களே முடிவு செய்யட்டும். என்ன, நீங்கள் தயாரா?

Dr.Anburaj said...


ஆனந்த சாகா் அவர்களே நன்றி.சுவனப்பிாியன் தங்களது சவாலை
எற்க மாட்டாா். அவரது பணி முட்டாள்களிடம் மட்டுமு் எடுபடும். கேள்வி கேடபவனைப் பிடிக்காது. தங்களின் ஆழ்நத கேள்விகளைக் கண்டு சுவனப்பிாியன் ஒன்றுககு அடித்து விடுவாா். எனது கருத்த மீறி சுவனப்பாியன தங்களது சவாலை ஏற்றால் நானும் அதில் பங்கேற்றுக் கொள்வேன்

Dr.Anburaj said...

தமிழ இந்து வலைதளம் -தலீத் களும் கலாச்சார இந்து சமூக ஒருங்கிணைப்பும்
அன்று தமிழ்பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதிசங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த உரையாடலை அவரது மனிஷா பஞ்சகம் விவரிக்கிறது. காசியில் இருந்தபோது சங்கரர் ஹரி காட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறார். வழியில் ஒரு மயானம் குறுக்கிடுகிறது. அங்கு எதிர்ப்பட்ட ஒரு சண்டாளனை நோக்கி, ”என் வழியை விட்டு ஒதுங்கி நில்!” என்று சங்கரர் சொல்கிறார். அதற்கு அந்தச் சண்டாளன், வேதாந்தத்தையே உலகுக்கு உணர்த்திய சங்கரரை நோக்கிக் கேட்கிறான், “வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுணர்ந்து உலகுக்கு போதித்த ஆசாரியரே, நீங்கள் விலகி நிற்கச் சொல்வது யாரை? இந்த உடலையா? அல்லது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவையா? இந்த உடலைத்தான் விலகி இருக்கச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலும் என் உடலும், ஒரே மண்ணால் செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான, கரியவும் சிவந்ததுமான நிறம் மட்டுமே மாறும் பானகள் போலத்தானே? ஒரே பொருளால் ஆனவைதானே? அப்படியிருக்க ஓர் உடல் இன்னோர் உடலை விலகியிருக்கச் சொல்வது எப்படி? எல்லாமே நீங்களே சொல்லியுள்ள மாயை தானே. அப்படியிருக்க ஒரு மாயை இன்னோர் உடலை மாயையை விலகி இருக்கச் சொல்வது எப்படி? மாயையின் ஒரு துண்டு இன்னொரு துண்டை ஏன் விலகச் சொல்லவேண்டும்? நீங்கள் விலகி இருக்கச் சொன்னது இவ்வுடலில் இருக்கும் ஆத்மாவை என்றாலோ, அது உங்களுக்கே தெரியும்; ஆத்மா என்று சொல்லப்படுவது ஒன்றே. அது துண்டு துண்டுகளாகப் பிளவுபடாதது. வெவ்வேறு இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் தனித்தனியாகக் பிரதிபலிக்கக் காணும் சூரியன் போல, வெவ்வேறு பானைகளில் நிரம்பியிருக்கும் தண்ணீர் போல, நம்மைச் சுற்றி எங்கும் நிறைந்திருக்கும் காற்றைப் போல, உங்கள் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவும் என் உடலில் உறைந்திருக்கும் ஆத்மாவும் ஒன்றேயல்லவா? பின் எதை எதனிடமிருந்து ஒதுங்கி இருக்கச் சொல்கிறீர்கள், ஆசாரியரே?” என்று அந்தச் சண்டாளன் கேட்கவே சங்கரர் பிரமித்துப் போய் வாயடைத்து நின்று விடுகிறார்.

ஒரு சண்டாளன், படிப்பறியாதவன், மயானத்தில் வேலை செய்பவன், பாரதத்தில் க்ஷீணமடைந்துள்ள ஹிந்து மதத்திற்குப் புனர்ஜீவனம் கொடுத்து வேதங்களுக்கும் உபநிஷத்துக்கும் விளக்கம் கொடுத்துள்ள தன்னை, தன்னைப்போன்ற ஓர் ஆசாரியனைப் பார்த்து, தான் உலகுக்கு உபதேசித்ததையே தனக்குச் சொல்லிக்காட்டி, இப்படியெல்லாம் உபதேசித்த நீயே இப்போது இப்படிப் பேசுகிறாயே என்று தன்னை திக்குமுக்காடவைத்து விட்ட சம்பவத்தை, தானே உலகறிய எழுதியும் வைக்கும் செயல், தன்னை விமர்சிக்கும், தன்னில் ஆழ்ந்து தன்னைத் திரும்பி நோக்கும் செயல் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னையே தனக்குரைத்துக்கொள்ளும் செயல். இதெல்லாம் கட்டி விட்ட வெறும் கதை என்று சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்பவர்கள், கல்வியறிவில்லாதவனும் தாழ்ந்த குலத்தவனுமான ஒரு சண்டாளன், ஆசாரியனான தன்னையே விசாரணக்குட்படுத்திவிட்ட ஒரு சம்பவத்தை, கற்பனை என்று சொல்லித் தட்டிக்கழிக்க முயன்றாலும், அந்தக் கற்பனையை அவன் ஏன் தன்மேல் சுமத்திக்கொள்ள வேண்டும்? மேலும், இதுகாறும் கடந்து வந்துள்ள 13 நூற்றாண்டுகளாக அதை அழியாது காத்து வந்துள்ள சமூகம், சுய விசாரணயும் திரும்பத் திரும்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் குணம் கொண்டதுமான சமூகம் இந்த ஹிந்து சமூகம் என்பதைத்தான் இன்றும் மறையாதிருக்கும் மனிஷா பஞ்சகம் சாட்சியப்படுத்துகிறது. தன் களங்கங்களையும் வெளிப்படுத்திக்கொள்ளும், தன்னை அவ்வப்போது சுய விசாரணை செய்து கொள்ளும் சமூகம் அல்லவா இது!

எந்தப் பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம்தான். ஆனால், இத்தகைய கண்டனங்களும் சுய விமர்சனங்களும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, தத்துவ தரிசிகளாலும் கவிஞர்களாலும் மகான்களாலும் தொடரப்பட்டு வந்துள்ளன. அந்த விசாரணைகள் தத்துவ நூல்களாக, கவிதைகளாக, காப்பியங்களாக, போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது மனங்கொள்ள வேண்டிய உண்மையல்லவா? அது அவ்வளவு சுலபமாகப் புறந்தள்ளப்படக்கூடும் ஒன்றல்ல.

Dr.Anburaj said...

தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையான, இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஆழ்வார்களும் ஹிந்து மதத்தை ஜனநாயகப்படுத்த முயன்றார்கள். தெய்வத்தை மக்களுக்கு அருகே கொண்டு வந்தார்கள். மக்கள் தாமறிந்த தம் மொழியிலேயே கடவுளுடன் பேச, தொழ, காதல் செய்ய, அவ்வப்போது கோபித்துக்கொள்ளவும் மிரட்டவும் கற்றுக் கொடுத்தார்கள். சைவ சமய நாயன்மார்கள் போல, ஆழ்வார்களிலும் நாம் அரசர்களையும், வைசியர்களையும், பிராமணர்களை மட்டுமல்ல, தாழ்ந்த சாதியைனராகக் கருதப்பட்ட பாணர்களையும் காண்கிறோம். சைவ நாயன்மாரிடையே காணும் திருநீலகண்ட யாழ்ப்பாணரைப் போல் ஆழ்வார்களிடையேயும் ஒரு திருப்பாணாழ்வாரும் இடம் பெற்றுள்ளார். திராவிட வேதமாகச் சிறப்பிக்கப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மொத்தம் நாலாயிரம் பாசுரங்களில், பெருந்தொகையில் 1296 பாசுரங்கள் பாடியுள்ள நம்மாழ்வார், ஆழ்வார்களிலேயே சிறப்பாகக் போற்றப்படுபவர். தத்துவார்த்த சிந்தனை கொண்டவர். எல்லோரையும் விட அதிக அளவில் பின் வந்த ஆசாரியர்களின் வியாக்கியானச் சிறப்புப் பெற்றவர். அந்த நம்மாழ்வாரே தன் பாசுரம் ஒன்றில், தான், தாழ்ந்தோரிலும் தாழ்ந்த சண்டாளன் ஒருவன், நாராயணனின் நாமத்தைப் பஜித்தாலே போதும்; அந்தச் சண்டாளனுக்கும் அடியவனாகவே தன்னைக் கருதுவதாகச் சொல்கிறார்.

thiruppaanazhwarதிராவிட வேதமாகப் போற்றப் படும் ஆழ்வார்கள் பாடி அருளியுள்ள நாலாயிரம் பாசுரங்களும், பெருமாள் கோயில்களில் பிரார்த்தனையின் ஓர் இன்றியாத அங்கமாகப் பாடப்பட்டு வருகின்றன. ஆசாரியர்களிலேயே தன் ஆசார அனுஷ்டானங்களைக் கடுமையாகப் பின்பற்றுபவரான, வேதாந்த தேசிகர், பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஸ்தானத்தைப் பற்றி பலத்த சந்தேகங்கள் இருந்தன. அவர்கள் பிறந்த ஜாதியின் காரணமாக, அவர்கள் பூஜிக்கத் தகுந்தவர்களாவார்களா என்ற பலத்த சந்தேகம். அவர் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. தேசிகர் பிராமணர். அவர் தன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி தன் குரு, பெரியவாச்சான் பிள்ளையை அணுகினார். அவர்தம் குருவும் பிராமணர்தான். தன் தினப்படி பூஜைக்கு ஏற்ற ஒரு மூர்த்தியைக் காட்டி அருளவேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் குரு, “உனக்கு ஏற்ற மூர்த்தி எது எனக் கண்டு கொள்ள, நீயே உன் பூஜை அறைக்குச் சென்று கண்களை இறுக மூடிக்கொண்டு, அங்குள்ள மூர்த்திகளில் ஏதாகிலும் ஒன்றைத் தொடு. உனக்கேற்ற மூர்த்தி உன் விரல்களுக்கிடையில் அகப்படும்!” என்று சொல்லி அனுப்பி விடுகிறார். தெய்வமே அவருடன் விளையாடிவிடுகிறது. தன் குரு உபதேசித்தவாறே, வேதாந்த தேசிகர் தன் வீடு சென்று பூஜை அறையில் உள்ள மூர்த்திகளை கண்களை மூடித் தொட்டபோது ஆழ்வார்களிலேயே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் மூர்த்திதான் அவர் கையில் அகப்பட்டது. வைசியரோ, க்ஷத்திரியரோ கூட இல்லை. திகைத்துப் போன வேதாந்த தேசிகர் தன் குருவிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, குரு, “உன்னை அரித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு தெய்வமே பதில் தந்துவிட்டதல்லவா? இனி நீ, திருப்பாணாழ்வாரைப் பூஜிப்பது மட்டுமல்ல, அவரது, ‘அமலனாதி பிரான்…’ என்று தொடங்கும் அவரது பாசுரத்திற்கே உரையெழுதும். அப்போதுதான் நீர் செய்த அபசாரங்களுக்கு பெருமாளின் மன்னிப்பு கிடைக்கும்!” என்றும் கட்டளையிடுகிறார். தன் குருவின் கட்டளைப்படி, தேசிகாச் சாரியாரும் ‘அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களுக்கும் வியாக்கியானம் எழுதித் தன் குருவிடம் சமர்ப்பிக்கிறார். அதுதான் முனிவாகன போகம் என்று கீர்த்தி பெற்றது. இது குருபரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படும் செய்தி.

Dr.Anburaj said...

இதே திருப்பாணாழ்வார் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, காவிரிக் கரையில் நின்று கொண்டு தன் யாழை மீட்டிக்கொண்டே பெருமாளைப் பாடித் துதித்து வருகையில், பெருமாள் லோகசாரண்ய முனிவரின் கனவில் தோன்றி ”காவிரிக்கரையில் நின்று பாடிக்கொண்டிருக்கும் திருப்பாணாழ்வாரை உம் தோளில் சுமந்து கோவிலுக்கு இட்டு வாரும், யாம் அவர் பாட்டைக் கேட்க ஆவலாயிருக்கிறோம்,” என்று கட்டளையிட்ட கதையும் குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்பட்டுள்ளதுதான்.

பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் நீண்ட காலம் வாழ்ந்த இராமானுஜாச்சாரியாரின் முயற்சியில்தான் மிகப் பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்து எல்லா சாதி மக்களும் வைஷ்ணவர்களாக மாற்றப்பட்டு அவர்களிடையே முன்னர் இருந்த சாதி வேறுபாடுகள் களையப்பட்டு சம அந்தஸ்து பெற்றவராயினர்.

குருபரம்பரைப் பிரபாவம் இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறது. இராமானுஜர் தம் குரு திருக்கோட்டியூர் நம்பி தமக்கு உபதேசித்த திருமந்திரத்தை அவர் ஆணைப்படி ரகசியமாக தனக்குள் வைத்துக்கொள்ளாது, கோயில் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று கூடியிருக்கும் எல்லா மக்களும் கேட்க அந்த ரகஸ்யத் திருமந்திரத்தைச் சொல்ல, திருக்கோட்டியூர் நம்பி, கோபம் கொண்டு, குருவின் ஆணையை மீறிய அபசாரத்திற்கு இராமானுஜன் நரகத்திற்குத்தான் போவார் என்று சபிக்க, அதற்கு இராமானுஜர், திருமந்திர உபதேசத்தைக் கேட்ட அத்தனை ஆயிரம் மக்களுக்கும் முக்தி கிடைக்குமாயின், குருவின் ஆணையை மீறியதற்கு தான் ஒருவன் நரகத்திற்குப் போனால்தான் என்ன? அதையே தான் விரும்புவதாகச் சொன்னாராம்.இராமானுஜரின் வாழ்க்கை முழுதிலுமே இந்த உணர்வு பரவியிருக்கப் பார்க்கிறோம்.

குரு பரம்பரைப் பிரபாவம் இது போன்ற, இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பலவற்றைச் சொல்கிறது.

திருக்கச்சி நம்பிகள் செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பெருமாள் சன்னதியில் பெருமாளின் ஆணைப்படி ஆலவட்டம் வீசும் பணியை மேற்கொண்டவர். தினம் பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தவர். இதன் காரணமாகவே நம்பிகளின் பாதத் தூளியை தொட்டுத் தன் உடல் முழுதும் பூசிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டவன் ஒருவனை நம்பிகள், ”ஏனப்பா இதென்ன செய்கிறாய்?” என்று கேட்க, அதற்கு அந்த எளியவன், “பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள், தங்கள் பாதத் தூளியைத் தொட்டுப் பூசிக்கொள்ளும் எனக்கு மோக்ஷம் உண்டா, என்று” என்று கேட்கிறான். நம்பிகளும் பெருமாளிடம் கேட்டு அவனது எண்ணம் நிறைவேறும் என்று உறுதிகூற, அந்தச் செய்தி சொல்லப்படுகிறது.

Dr.Anburaj said...

குரு பரம்பரை சொல்லும் இன்னொரு கதை விசேஷமானது. திருக்கச்சி நம்பிகளை தன் வீட்டிற்கு அழைத்து அவருக்கு உணவளித்து, அவர் உண்ட உணவின் மிச்சத்தை உண்பது விசேஷம் என்று எண்ணிய இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் தம் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகிறார். இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதம் என்று நம்பிகள் மறுத்தும், இராமானுஜரின் பிடிவாதத்திற்கு இணங்க, இராமானுஜர் தன் மனைவியிடம் திருக்கச்சி நம்பிகளுக்கு போஜனம் செய்விக்கச் சொல்லி கோயிலைப் பிரதக்ஷிணம் செய்து திரும்பலாம் என்று செல்கிறார். வீடு திரும்பிய இராமானுஜர் முன், நம்பிகளுக்கு உணவளித்து அவர் உண்ட இலையை எடுத்தெறிந்து, பின் அந்த தோஷ நிவர்த்திக்காக நீராடி, வேறு உடை தரித்து நிற்கிறார் அவர் மனைவி. இது இராமானுஜர் தன் மனைவியின் செயலால் வேதனையடைந்த காரணங்களில் ஒன்று.

பெரியநம்பிகள் தன் மனைவியுடன் இராமானுஜர் இல்லத்தில் தங்கியிருக்க, இராமானுஜர் மனைவிக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது. பிராமணர் அல்லாத பெரிய நம்பியின் தேவி கிணற்றிலிருந்து இறைத்த நீர் இராமானுஜர் தேவியின் பாத்திரத்தில் தெளிக்க அது தோஷமடைந்த கோபம் சண்டையில் முடிகிறது. வீடு திரும்பிய இராமானுஜர் என்ன விஷயம் என்று கேட்க இராமானுஜரின் மனைவி தன் பாத்திரம் தோஷமானதைச் சொல்கிறார். அதுவே இராமானுஜர் தன் மனைவியைத் துறந்து சன்னியாசமாகக் காரணமாகிறது. “முன்னர் ஒரு முறை பொறுத்தோம்; இனி பொறுப்பதற்கில்லை!” என்று மனைவியைத் தன் பிறந்தவீடு போகச் சொல்லி, தானும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இப்படியான செய்திகள் பல நமக்கு குரு பரம்பரைப் பிரபாவத்தில் சொல்லப்படுகின்றன. வைஷ்ணவக் கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும் சமூகத்தில் எழுப்பப்பட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை அகற்றுவதில் இராமானுஜரின் வைஷ்ணவம் அவர் வாழ்ந்த காலத்திலிருந்தே தன் அணுகலாகக் கொண்டிருந்தது. திவ்யப் பிரபந்தத்தை திராவிட வேதமாக்கியதும் அன்றாட ஆராதனையில் இடம்பெறச் செய்துள்ளதும் இன்றும் நாம் காண்பது.

Dr.Anburaj said...

மூக ஏற்றத் தாழ்வுகளையும் அது ஏற்படுத்தியிருந்த கட்டமைப்புகளையும் தம் கண்டனத்திற்கு உள்ளாக்கியதில், மிகக் கடுமையான உரத்த குரலை எழுப்பியது சித்தர்களே. எந்தச் சமூகத்தை அவர்கள் குற்றம் சாட்டினார்களோ, அந்தச் சமூகத்திலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு அந்தச் சமூகத்தின் குறைகளைக் களைவதே தம் மூச்சாகக் கொண்ட சித்தர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர். சித்தர்கள் வரிசை ஐந்தாம் நூற்றாண்டு திருமூலரிடமிருந்து தொடங்குகிறது. திருமூலர் தாம் கைலாயத்திலிருந்து தமிழ் செய்ய சிவனால் அனுப்பப்பட்டவராக தம்மைச் சொல்லிக்கொள்கிறார். கைலாயம் என்று அவர் சொல்வது இன்றைய கஷ்மீராக இருக்கவேண்டும். கஷ்மீரத்தின் ப்ரத்யாபிக்ஞ சைவத்தின் செல்வாக்கை திருமூலரின் சைவத்தில் காண்கிறார்கள். அவர் தம்மை இடைச் சாதியனராகச் சொல்லிக்கொண்டார். சாதாரண மக்களுடன் அவர் வாழ்ந்தாலும், எந்த ஸ்தாபனப் படுத்தலுக்கும் எதிராக அவர் பேசினாலும், அவரது திருமந்திரப் பாடல் எதுவும் சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடியதல்ல. மந்திரம் என்ற பெயருக்கேற்ப அது மந்திரம் போன்று சுருக்கமாகவும் பூடகமாகவுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

சித்தர் மரபு என்றே அறியப்படும் அவர்கள் எல்லோரும் ஒரே வண்ணம் கொண்டவர்கள் அல்லர். சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள்.

sivavaakkiyarஇவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் சிவவாக்கியர் என்னும் சித்தர். (வேடிக்கையாக சிவ வாக்கியரையும் திருமழிசை ஆழ்வாரையும் ஒருவராகக் கருதுவாரும் உண்டு. ஒருவர் வைஷ்ணவர். மற்றவர் விக்கிரஹ ஆராதனை, கோயில் வழிபாடு, சாதி வேறுபாடு, வேதங்கள், ஆகமங்கள் என அத்தனைக்கும் எதிராக நின்றவர்.)

மிகக் கடுமையான வார்த்தைகளில் சிவ வாக்கியர் சொல்கிறார்:

“பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா.
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டிருக்குதோ?”

உடல் உறவில் பறைச்சியும் பார்ப்பனத்தியும் வேறு வேறாகத் தோன்றுவதில்லை. பஞ்ச பூதங்களால் ஆனதுதான் இந்த உடம்பும், இந்த பிரபஞ்சம் முழுமையும். எல்லாமே பிளவுபடமுடியாத ஒரு முழுமை, இதில் சாதி என்ற வேற்றுமை எங்கிருந்து வருகிறது? என்று சிவ வாக்கியரின் பாடல் ஒன்று கேட்கிறது

சிவ வாக்கியர் பறைச்சியையும் பார்ப்பனத்தியையும் பற்றித்தான் இருவரும் ஒன்றே என்று சொல்கிறார், அவர் தேவரையும், வன்னியரையும் கவுண்டர்களையும் இசை வேளாளரையும் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா என்று திராவிட கழகங்கள் சார்ந்தோரும், தலித் அரசியல்வாதிகளும் சொல்லக் கூடும்.

சித்தர்களும் சரி, இங்கு பேசப்பட்ட மற்ற பெரியார்களும் சரி, பறைச்சி என்றும் பார்பனத்தி என்றும் பேசுவது உருவகங்களாகத்தான். அவர்கள் எல்லா சாதிகளையும் உள்ளடக்கித் தான் பேசுகிறார்கள். மேலும் அவர்கள் பார்வையில் சாதி மட்டுமே உறுத்தும் ஒன்றாக இருக்கவில்லை. அவர்களது பரந்த சிந்தனையில், எல்லாக் கொடுமைகளையும் வேறுபாடுகளையும் போலிகளையும் உள்ளடக்கிய பரந்த பார்வையில் இவையும் அடங்கியவை.

Dr.Anburaj said...

மேலும், இங்கு நான் சாதி வேற்றுமையையும் தலித்துகளைப் பற்றியுமான பாடல்களை மாத்திரமே இங்கு பேசப்படும் பொருளுக்கேற்ப தொகுத்துத் தந்தாலும், இம்மாதிரியான குரல்கள் இங்கு பேசப்படும் பெரியார்கள், ஆசாரியார்கள், கவிஞர்கள், சித்த புருஷர்களோடு மாத்திரம் நிற்பதல்ல. தமிழ் இலக்கியச் சரித்திரத்தின் இரண்டாயிரம் ஆண்டு கால நீட்சியில் தலித்துகளின் சாதி வேற்றுமைகளின் கொடுமைகளை மாத்திரம் பேசியவர்கள் இல்லை. உதாரணமாக, கடைசியாகப் பேசிய சிவ வாக்கியரையே எடுத்துக்கொள்ளலாமே. .

சிவவாக்கியரின் இன்னொரு மிகவும் பேசப்படும் பாடல், நம்மூர் பிராண்டு பகுத்தறிவுகள் மேற்கோள் காட்டும் பாடலின் முதல் இரண்டு அடிகள்

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா

என்று சொல்லி அத்தோடு நிறுத்திக்கொள்வார்கள். அடுத்து வரும் மூன்றாவது அடி,

நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில். –

அவர்கள் உள்ளிருப்பது நாதனில்லை என்ற காரணத்தால். அவர்கள் மேற்கோள்களில், பிரசாரங்களில் இது இடம் பெறுவதில்லை.

உண்மையில் பார்க்கப் போனால் சிவவாக்கியர் சாடுவது போலிகளை, பொய்ம்மையை. இன்னொரு இடத்தில் அவர் சொல்கிறார்:

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே,
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே…

தமிழ் வரலாற்றின், இலக்கிய வரலாற்றின் நீட்சி முழுதும், சமூகக் கட்டமைப்பில் புகுந்துள்ள ஏற்றத் தாழ்வுகளையும், சிந்தனையில் அவ்வப்போது படியும் போலிகளையும் பற்றி அவர்கள் கவலை கொண்டனர். அவற்றிற்கு எதிராகத் தம் குரல் எழுப்பியுள்ளனர் அதில் தலித்துகளும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையினால் இடம் பெற்றனர். அது மிகப் பிரதானமாகத் தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் சமூகம் இழைக்கும் கொடுமை அதன் ஒரு கோடி எல்லையை, உச்சத்தைத் தொடும் காரணத்தால்தான்.

சாதிக் கொடுமையை இந்து சமூகம் எதிா்த்து போராடிக் கொணடிருக்கின்றது என்பதற்கு இவைகள் ஆதாரங்கள்.