Followers

Tuesday, June 21, 2011

சிறுமியின் கற்பை காப்பாற்றிய குர்ஆன் வசனங்கள்!


ஜெத்தா: சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் 'என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!' என்று அவன் கேட்டுள்ளான். திருமணத்துக்கு வந்த உறவினர் என்று நினைத்து அவனுடன் உதவி செய்ய அந்த பெண் சென்றுள்ளாள். வாகனத்துக்கு பக்கத்தில் சென்றவுடன் 'காரில் ஏறு! பரிசுப் பொருள் வீட்டில் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வந்து விடலாம்' என்று சொல்லிக் கொண்டே பின் சீட்டில் அந்த பெண்ணை தள்ளி, வண்டியையும் எடுத்து விட்டான். சாப்பாடு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததால் இங்கு நடந்த இந்த களேபரங்கள் பெண்ணின் குடும்பத்தின் கவனத்துக்கு வரவில்லை.

வெளியேற முயற்ச்சித்த அந்த பெண்ணை 'சத்தம் போடாதே!' என்று மிரட்டவும் செய்துள்ளான். 'உனது தகப்பனாரை எனக்குத் தெரியும். நான் போனில் பேசிக் கொள்கிறேன்' என்று சொல்லவும் சற்று அமைதியாகியிருக்கிறாள் அந்த பெண். அவனின் வீடும் வருகிறது. வீட்டினுள் வந்த அவன் அந்த பெண்ணை அழைத்து சென்று ஒரு அறையில் பூட்டியிருக்கிறான். 10 வயதே ஆன அந்த பெண் என்ன நடக்கிறது என்பதை யூகிப்பதற்குள் எல்லாம் நடந்திருக்கிறது.

பிறகு ஹாலில் அமர்ந்த அவன் சீசா குடிக்க ஆரம்பித்துள்ளான். அரபுகள் நீண்ட குழாய் மூலமாக புகையை இழுத்து விடுவது ஒரு வழக்கம். இதற்கு சீசா குடித்தல் என்று சொல்வார்கள். படங்களில் கூட பார்த்திருக்கலாம். சிலர் இதில் போதை மருந்துகளையும் கலந்து குடிப்பது உண்டு. அரசுக்கு தெரிந்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.

வீட்டில் யாரும் இல்லாததும் அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சீசா குடித்து முடிந்தவுடன் அந்த பெண்ணின் அருகே நெருங்கி வந்துள்ளான். நடக்கப் போவதை உணர்ந்து கொண்ட அந்த பெண் தனக்கு தெரிந்த குர்ஆன் வசனங்களை மளமளவென்று வேகமாக ஓத ஆரம்பிக்கிறாள். இதனால் கோபம் உண்டான அவன் 'குர்ஆன் ஓதுவதை நிறுத்து' என்று கூறி முகத்தில் அடித்திருக்கிறான். இதே போல் பலமுறை முயற்சி செய்தும் ஒவ்வொரு முறையும் அந்த பெண் குர்ஆனை ஓதுவதும் அவன் அடிப்பதுமாக இரவு முழுதும் நடந்திருக்கிறது.

“Every time he came closer to me, I started reciting Quran and he would withdraw” she said.

அவனும் அரபி மொழி பேசுபவன். அந்த வசனங்கள் என்ன சொல்கிறது என்பது விளங்கியதால் அந்த பெண்ணிடம் அவன் நெருங்க மனது இடம் தரவில்லை. இதுபோல் பலமுறை முயற்ச்சித்தும் முடியாமல் போக முடிவில் தனது தவறை உணருகிறான். காலையும் நெருங்கியது. அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு எங்கு பிடித்தானோ அந்த இடத்திலேயே அந்த பெண்ணை இறக்கி விட்டு தலைமறைவாகியிருக்கிறான்.

திருமண மண்டபத்தில் காலை நேரமாகையால் யாரும் இல்லை. பிறகு வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி தனது தகப்பனின் செல் நம்பரை அந்த பெண் கொடுத்துள்ளாள். அந்த நல்ல மனிதர் அந்த பெண்ணின் தகப்பனோடு பேசி அவரை வரவழைத்தார். தனது மகளை கண்டவுடன் தந்தை அழுதது நெகிழ்ச்சியாக இருந்தது.

-நன்றி: அரப் நியூஸ்

21-06-2011

இங்கு நாம் ஒன்றை யோசிக்க வேண்டும். நமது நாட்டை விட இது போன்ற தவறுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கக் கூடிய நாடுதான் சவுதி. இருந்தும் துணிந்து ஒரு பெண்ணை கடத்தி சென்றவனை சமயோஜிதமாக குர்ஆன் வசனங்களை கொண்டு அவனை ஒரு வழிக்கு கொண்டு வந்துள்ளாள் அந்த பெண். இத்தகைய மன உறுதி ஒரு சில பேருக்குத்தான் வரும். அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இந்த சம்பவத்தை இன்று நான் படித்த போது முகமது நபி முன்னொரு காலத்தில் நடந்த ஒரு சமபவத்தை சொன்னது உடன் ஞாபகம் வந்தது. அதையும் பகிருகிறேன்.

2272. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!" என்று தமக்குள் கூறினர்.
அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கிவிட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!


மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!" என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமேவிட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது: ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.


மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!"
என அப்துல்லாஹ்வின் உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :37

டிஸ்கி: முன்பொரு முறை ஒரு இந்து நண்பர் பின்னூட்டத்தில் 'இந்த பாய்ங்க பச்சை அட்டை போட்ட இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பண்ணுகிற ரவுசு தாங்க முடியலடா சாமி....' என்று ஹாஸ்யமாக எழுதியிருந்தார். அவரைப் பொறுத்த வரையில் அது குமுதம், விகடன் போன்ற ஒரு புத்தகமே! உலக முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் குர்ஆனின் ஒவ்வொரு வரியும் இறைவன் சொன்னவையே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக் காட்டு.

17 comments:

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும் மிக மிக அருமையானது இப்படி பல செய்திகள் நாள் தோறும் வந்த வண்ணமே உள்ளது இதையெல்லாம் அழகிய முறை யில் எடுத்துரைக்கும் உங்களை போன்ற வர்களுக்கு வல்ல இறைவன் மென்மேலும் அருட் செய்வானாக

வாஞ்ஜுர் said...

//அவரைப் பொறுத்த வரையில் அது குமுதம், விகடன் போன்ற ஒரு புத்தகமே! உலக முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் குர்ஆனின் ஒவ்வொரு வரியும் இறைவன் சொன்னவையே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்//

கோழியின் அறிவோடு சிந்திப்பவர்களுக்கு வைரமும் கூலாங்கல்லும் ஒன்றே.

இறைவன் அருளிய பகுத்தறிவோடு சிந்திப்பவர்களுக்குத்தான் குர்ஆனின் ஒவ்வொரு வரியும் இறைவன் சொன்னவையே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகும்.

பேராப‌த்தில் சிக்கிய‌ சிறுமியும் பொதுவாக யாவரையும் போல் தொண்டை கிழிய க‌த்தி க‌த்தி முடிவில் சின்னாபின்னாமாக‌ ஆகிடாம‌ல்

இறைவ‌ன் அருளிய‌ திருக்குரானின் வ‌சன‌ங்களை காமுகனின் செவிபட ஓதி அவனை திருத்துவதுடன் தானும் நலத்துடன் திரும்புகிறாள்.

காமுக சிந்தை உருவானவன் கூட இறை வசனத்தை செவியுற்று தன் தீய செயலை விட்டும் அகன்று விடுகிறான்.

அல் குரான் புத்தக வடிவில் மட்டுமில்லாது உள்ளத்திலே கொலுவிருந்து உதவியாய், வழிகாட்டியாய், இருள் நீக்கும் ஒளிவிளக்காய், அறிவு எண்ணிலடங்கா களஞ்சியமாய், சகிப்பாய், அருள் மழை
பொழிகிறது.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும் தயவு செய்து நண்பர் இக்பால் செல்வனின் கொடுக்கி பார்க்கவும் சமிப மாக நீங்கள் அங்கு வரததிர்க்கான காரணம் எனக்கு தெரியும் இருந்தாலும் அந்த பதிவரின் போக்கு களை தெரிந்து கொள்ள நண்பர் ஆஷிக்,எதிர்குரல் அவர்களுக்கும் சொல்ல வும்

suvanappiriyan said...

வஅலைக்கும சலாம்!

// மிக மிக அருமையானது இப்படி பல செய்திகள் நாள் தோறும் வந்த வண்ணமே உள்ளது //

சகோ. பேட்! வாழ்த்துக்கு நன்றி!

//நண்பர் இக்பால் செல்வனின் கொடுக்கி பார்க்கவும் சமிப மாக நீங்கள் அங்கு வரததிர்க்கான காரணம் எனக்கு தெரியும் இருந்தாலும் அந்த பதிவரின் போக்கு களை தெரிந்து கொள்ள நண்பர் ஆஷிக்,எதிர்குரல் அவர்களுக்கும் சொல்ல வும்//

முன்பெல்லாம் அவரது பதிவுகள் ஓரளவு அறிவு பூர்வமாக இருக்கும். நானும் ஆர்வத்தில் பின்னூட்டமிடுவேன். ஆனால் தற்போது சமூகத்தில் எதெல்லாம் தவறோ அதை நியாயப்படுத்தி வரிந்து கட்டிக் கொண்டு பதிவெழுதுகிறார்.

'மனிதனின் மனம் ஓரினப் புணர்ச்சியை சிலரால் விரும்பப் படுவதால் அதை அங்கீகரிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. அது அவர்களின் உரிமை' என்ற கருத்து உள்ளவரிடம் நாம் என்ன வாதிடுவது? திருடனின் மனம் கூட திருடுவது என்ன பாவம் என்று கூறுவதால்தான் அவனும் திருட்டில் ஈடுபடுகிறான்: கற்பழிப்பு முதற்கொண்டு பலரும் தங்களின் தவறை இதுபோல் நியாயப் படுத்தலாம்.

தமிழகத்தின் மிகச்சிறந்த டாக்டரான காமராஜ் தனது தொலைக்காட்சி பேட்டியில் இதுபோன்ற உணர்வு உள்ளவர்களை மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். ஓரினப் புணர்ச்சியில் அதிக ஈடுபாடு யாரிடமாவது உங்களுக்கு வருகிறதென்றால் சம்பந்தப்பட்ட அந்த நபரை சந்திப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று தொலைக் காட்சியிலேயே அழகாக பதிலளிக்கிறார்.

சகோ. ஆஷிக்கும் தனது பதிவில் இவர்களை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்தால் குணமாகலாம் என்று டாக்டர்களின் கருத்துக்களையும் வெளியிட்டார்.

ஓரினப் புணர்ச்சியில் ஊறிப்போன ஒரு இளைஞனுக்கு திருமணம் முடித்து வைத்தால் அதன் பிறகு அந்த பெண்ணின் எதிர்காலம் என்ன ஆகும? அவர்களுக்கு சந்ததி எங்கிருந்து உண்டாகும்? இது இயற்கைக்கு மாற்றமில்லையா? குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அதற்கும் வழி காண்பிக்கிறார்.

படித்த இளைஞர்களான இக்பால் செல்வன் போன்றவர்கள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற தவறுகளை களைய முன்வர வேண்டும். அதை விடுத்து சமூகத்தைக் கெடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்களிடம் விவாதிக்க ஒன்றுமில்லை. இறைவன்தான் அவர்களுக்கு நேர்வழியை காட்ட வேண்டும்.

suvanappiriyan said...

வாஞ்சூர் அண்ணன்!

//கோழியின் அறிவோடு சிந்திப்பவர்களுக்கு வைரமும் கூலாங்கல்லும் ஒன்றே.//

//அல் குரான் புத்தக வடிவில் மட்டுமில்லாது உள்ளத்திலே கொலுவிருந்து உதவியாய், வழிகாட்டியாய், இருள் நீக்கும் ஒளிவிளக்காய், அறிவு எண்ணிலடங்கா களஞ்சியமாய், சகிப்பாய், அருள் மழை
பொழிகிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் சுவனப்பிரியன்,

அருமையான செய்தியை பகிர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஜசாக்கல்லாஹு க்ஹைர்...

///The girl, identified by her initials M.M.S., said the rapist would ask her to stop reciting the Qur'an but when she refused to listen to him, he hit her hard on the face. “Because of my recitations, he was reluctant to touch me,” she said.////

Thanks: Arab News.

சுப்ஹானல்லாஹ்...சுப்ஹானல்லாஹ்..அல்லாஹு அக்பர்.

கல்நெஞ்சையும் கரைக்கும் குர்ஆன்....

பொருள் உணர்த்து ஓதி நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்றுவோம்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

அப்புறம் எதுக்கு ஒயின் ஷாப் வைச்சு நடத்துரீங்க? மத்தவங்கலஎல்லாம் குடிச்சு நாசமா போக வைன்னு உங்க அல்லா சொன்னாரா? அவனுங்களுக்கு எல்லாம் சௌதில ஒரு தண்டனையும் கொடுக்க மாட்டங்களா?

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

சகோ. ஆஷிக்!

//கல்நெஞ்சையும் கரைக்கும் குர்ஆன்....

பொருள் உணர்த்து ஓதி நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் காப்பாற்றுவோம்...//

முஸ்லிம்களிலேயே பலர் பய பக்தியோடு தினமும் அரபியில் குர்ஆனை ஓதுவதோடு சரி. அதன் தமிழ் மொழி பெயர்ப்பை படிக்க ஆர்வப் படுவதில்லை. இந்த நிலை மாறினால் மிகப் பெரும் சமுதாய புரட்சியை இஸ்லாமியர்கள் வாழ்வில் கொண்டு வரலாம்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அனானி!

//அப்புறம் எதுக்கு ஒயின் ஷாப் வைச்சு நடத்துரீங்க? மத்தவங்கலஎல்லாம் குடிச்சு நாசமா போக வைன்னு உங்க அல்லா சொன்னாரா?//

ஒயின் ஷாப் வைத்து நடத்துகின்றவர்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது.


2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.


2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

//அவனுங்களுக்கு எல்லாம் சௌதில ஒரு தண்டனையும் கொடுக்க மாட்டங்களா?//

தண்டனை கொடுக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது? குடிப்பதற்க்கும், மதுவை விற்பதற்கும் சவுதியில் தடை உண்டென்று தெரியாதா?

தடையை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.சுவனப்பிரியன்,

/////அது இறைவனின் வார்த்தை என்பதை இருவரும் உணர்ந்ததால்தான் ஒரு பெரும் தவறு நடக்கவிருந்தது தவிர்க்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!/////

சுபஹானல்லாஹ்..!

முதல் முறையாக ஒரு காமுகன் மேல் கூட பச்சாதாபம் வரவழைக்கிறது இந்த செய்தி என்றால் அதற்கு காரணம் அந்த சகோதரியின் உறுதியான இறை நம்பிக்கைதான்..!

ஒரு காமுகனை கூட மனிதனாக மாற்றுவதற்கும் காரணம், அவனிடம் இருந்த ஓரளவு இறைநம்பிக்கை.

அல்ஹம்துலில்லாஹ்...!

இதற்கெல்லாம் காரணமான அந்த இறைவேதத்தையும் அதனை உலக மனிதர்களுக்கு எல்லாம் ஏற்ற வாழ்வியல் நெறியாக தந்துதவிய இறைவனுக்கும் எக்கணமும் மனிதர்களாகிய நாம் நன்றி சொல்லி வணங்கிக்கொண்டே இருக்கலாம்..!

ஆனால், "ஒரு நாளைக்கு ஐந்து முறை போதும்" என்று கூறிவிட்டான் அந்த கருணையாளன்.

அல்லாஹ் அக்பர்..!

இந்த அருமையான படிப்பினை பெறத்தக்க செய்தியை தமிழ் கூறும் உலகறியச்செய்த தங்களுக்கு அல்லாஹ் கிருபை செய்ய யாசிக்கிறேன், சகோ.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ. ஆஷிக்!

//இதற்கெல்லாம் காரணமான அந்த இறைவேதத்தையும் அதனை உலக மனிதர்களுக்கு எல்லாம் ஏற்ற வாழ்வியல் நெறியாக தந்துதவிய இறைவனுக்கும் எக்கணமும் மனிதர்களாகிய நாம் நன்றி சொல்லி வணங்கிக்கொண்டே இருக்கலாம்..!//

வருகைககும் கருத்துக்கும் நன்றி சகோ. ஆஷிக்!

Anisha Yunus said...

மாஷா அல்லாஹ்,

10 வயதிலும் குர்’ஆனின் வசன் ஆற்றலின் மேல் மாற்றவியலா ஈமான் கொண்ட அந்த பிஞ்சு உள்ளத்தை என்னவென்று சொல்ல? அதைத் தவிர வேறு எதுவும் நம்மைக் காக்காது என்று முடிவெடுத்த அந்த பிஞ்சின் முன் என்னால் நிற்கக்கூட முடியாது என்றே தோன்றுகிறது.

அதே போல், காமுகனாய் இருந்தும், திட்டம் போட்டு செயலாற்றுமளவிற்கு வெறியிருந்த போதும், அதன் மேலே போதையை ஏற்றிக்கொண்டு வந்த போதும் திருக் குர்’ஆனின் வசனங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால்... சுப்ஹானல்லாஹ்...

அல்லாஹு அக்பர் என்பதைவிட வேறென்ன பொருத்தமாய் இருக்கும்... அல்லாஹு அக்பர்...!!

பகிர்ந்தமைக்கு நன்றி சகோ. ஜஸாகுமுல்லாஹு க்ஹைரான் ஃபித் துன்யா வல் ஆக்ஹிராஹ்.

வஸ் ஸலாம்.

Anonymous said...

//தண்டனை கொடுக்க மாட்டார்கள் என்று யார் சொன்னது? குடிப்பதற்க்கும், மதுவை விற்பதற்கும் சவுதியில் தடை உண்டென்று தெரியாதா?

தடையை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். //

Do you thing there is no muslims in Dubai, Abudabi and bahrain? I have seen colorfull bottles in the Airport Dutyfree shops owned and running by Muslims.

suvanappiriyan said...

சகோ. அன்னு!

//பகிர்ந்தமைக்கு நன்றி சகோ. ஜஸாகுமுல்லாஹு க்ஹைரான் ஃபித் துன்யா வல் ஆக்ஹிராஹ்.

வஸ் ஸலாம்.//

வாழ்த்துக்கும் வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.

suvanappiriyan said...

//Do you thing there is no muslims in Dubai, Abudabi and bahrain? I have seen colorfull bottles in the Airport Dutyfree shops owned and running by Muslims.//

இதற்கு இஸ்லாம் என்ன செய்யும்? மனிதர்கள் அனைவருமே இயல்பாகவே ஒரே மன நிலையில் தான் உள்ளார்கள். அவர்களின் சூழல் அவர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றி விடுகிறது. சிலர் என்ன கஷ்டம் வந்தாலும் இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை முறையைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்று சிரமத்துடன் வாழ்பவர் ஒரு ரகம். இவருக்குரிய பரிசுகளை இறைவன் இறப்புக்கு பின்னால் தருவதாக வாக்களிக்கிறான்.

மற்றும் சிலரோ முஸ்லிம்களில் கூட வட்டி வாங்குவது, விபசாரம் புரிவது, மது அருந்துவது, கொலை புரிவது என்று தங்கள் மனம் போன போக்கில் போகின்றனர். இதில் சிலர் சந்தோஷமாகவும் இருக்கின்றனர். இவர்களைப் பொறுத்த வரை இன்பங்கள் அனைத்தையும் இந்த உலகிலேயே அனுபவித்து விடுகின்றனர். மறு உலகில் அந்த நிரந்தர உலகில் எந்த இன்பங்களும் இவர்களுக்கு கிட்டாது. எனவே நஷ்டவாளிகள் உண்மையில் இவர்களே!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

அந்த பிஞ்சு குழந்தையின் ஈமான் எல்லோருக்கும் வர வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

இதன் மூலம் தெரிவது என்னெவெனில், குழந்தைகளை பெற்றோர்கள் திருமண விழாக்கள் போன்ற வைபவங்களில் அருகிலேயே அல்லது கண் படும் துரத்திலேயே இருக்க சொல்லுங்கள். இன்னுமொரு முக்கியமான விஷயம் குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பு தாய்க்கு மட்டும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

//கோழியின் அறிவோடு சிந்திப்பவர்களுக்கு வைரமும் கூலாங்கல்லும் ஒன்றே.//

சரியான உதாரணம்.