
உத்தர பிரதேசம் நொய்டாவில் குலேசரா கிராமத்தில் இந்துக்களை கிறித்தவர்களாக கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறைக்கு ஒரு புகார் வந்தது. காவல்துறை அதிகாரி பிரிஜேஸ் குமார் சிங் இந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை கண்டறிய ஒரு குழுவை அனுப்பினார். அந்த கிராமத்துக்கு சென்ற குழுவினர் விசாரணையில் இறங்கினர்.
விசாரணையின் முடிவில் இது பொய்யான தகவல் என்று தெரிய வந்தது. இது பற்றி காவல் துறை அதிகாரி சொன்ன போது 'ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்பதை தெரிந்து கொண்டோம். இந்த புகாரை கொடுத்தது உள்ளூர் பிஜேபியினர். அந்த கிராமத்தில் கிறித்தவ மாதா கோவிலில் நடக்கும் கூட்டுப் பிரார்த்தனையில் ஒரு சில தலித் மக்கள் தாங்களாகவே விரும்பி கலந்து கொண்டுள்ளனர். மற்றபடி அவர்கள் இந்துக்களாகவேதான் உள்ளனர். தனக்கு பிடித்த கடவுளை ஒருவன் வணங்கினால் அவனை இந்தியாவின் சட்டத்தை கொண்டு தண்டிக்க முடியாது. அது அவரவர்களின் விருப்பம்' என்கிறார்.
தகவல் உதவி
இந்தியன் என்ஸ்பிரஸ்
02-9-2014
காவல் துறை அதிகாரி நியாயமாக நடப்பவராக இருந்ததால் அங்கு நடக்க இருந்த மத மோதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டை கலவர பூமியாக மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிஜேபி யினர் செயல்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இந்து மதத்தில் அந்த தலித் மக்களுக்கு உரிய அந்தஸ்தை கொடுத்தால் ஏன் அவர்கள் இஸ்லாத்தை நோக்கியோ கிறித்தவத்தை நோக்கியோ ஓட வேண்டும்? அவர்களை மனிதர்களாக நடத்துங்கள். மத மாற்றம் தானாகவே குறையும். தலித் மக்களை நான் மிருகத்தை விடக் கேவலமாகத்தான் நடத்துவேன். அதற்காக அவன் வேறு மதத்துக்கும் போய் விடக் கூடாது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் இல்லையா?
இந்துத்வாவாதிகளே! என்று நீங்கள் மனிதர்களாக மாறப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment