Followers

Saturday, September 06, 2014

மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்ற அதிமுக பிரமுகர்!நேற்று ஒரு அதிமுக பிரமுகரின் மகனுக்கு இஸ்லாமிய சகோதரி மணமுடிக்கப் படுவது பற்றிய செய்தி பத்திரிக்கையோடு தமிழக முதல்வரின் படம் போட்டு வலம் வந்தது. நம் சகோதரர்களும் இதைக் கண்டு துடித்து போயினர். இது போன்ற காதல் திருமணங்களை தடுப்பது எப்படி என்று பலரும் பல கருத்துக்களை பகிர்ந்தனர். ராஜ்குமார் & சமீரா பேகம் இருவருக்கும் வரும் 12/09/2014 அன்று காதல் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது ...

இதன் பிறகு கடயநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளையின் சார்பில் உறுப்பினர்கள் ராஜ் குமார் என்ற அந்த சகோதரனை அன்போடு அணுகி இது போன்ற காதல் திருமணங்கள் சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று விளக்கி சொன்னார்கள். இந்து நம்பிக்கையும் இஸ்லாமிய நம்பிக்கையும் ஒருமித்து வாழ்தல் சினிமாவுக்கு சாத்தியப்படலாம். நிஜ வாழ்வில் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்று அழகிய முறையில் எடுத்துக் கூறினார்கள். குர்ஆனின் வழி காட்டுதலையும் நபிகளின் பொன் மொழிகளையும் அன்போடு எடுத்துரைத்தனர். அனைத்தையும் அந்த இளைஞர் பொறுமையாக கேட்டு உள் வாங்கிக் கொண்டார். ராமதாஸைப் போல் இந்த இளைஞர்கள் இஸ்லாமிய மக்களை திரட்டிக் கொண்டு வன்முறையில் இறங்கவில்லை. வெறுப்பை தூரமாக்கி அன்பை தங்கள் கையில் எடுத்தார்கள். அன்பு வென்றது. உள்ளங்களை புரட்டக் கூடிய இறைவன் அந்த இளைஞனின் மனதிலே மாற்றத்தை ஏற்படுத்தினான்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

அந்த அதிமுக பிரமுகரின் மகனின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். நேற்று வெளி வந்த அந்த பத்திரிக்கையை தாம் முகநூலில் வெளியிடவில்லை என்றும் அது தனது தந்தையின் வேலை என்றும் வருத்தப்பட்டார். இனி இஸ்லாமிய முறைப்படி இறைவன் நாடினால் இருவருக்கும் திருமணம் நடைபெறும். இந்த இருவரின் நல்வாழ்வுக்காக நாமும் பிரார்த்திப்போம்.முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 28:56


'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை' என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.

2 comments:

UNMAIKAL said...

பிள்ளையாரப்பா பெரியப்பா, புத்திமதியை சொல்லப்பா! – கீழை ஜஹாங்கீர் அரூஸி


இந்து சமுதாய மக்களின் கடவுள்களில் ஒருவரான விநாயகருக்கு ஒரு பாமரனின் மனம் திறந்த மடல்:

“பிள்ளையாரப்பா பெரியப்பா, புத்திமதியை சொல்லப்பா”என்ற சுலோகத்தை சொல்லிக்கொண்டே உங்களது உருவம் பதித்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறு, சிறு சிலைகளை கையிலேந்தி தத்தமது ஊர்களில் இருக்கும் குளங்கள், ஏரிகளில் கொண்டு போய் எறிந்து விட்டு வந்த காலங்கள் மாற்றப்பட்டு,

தற்போது பிரமாண்டமான உயரங்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு செய்யப்படும் சிலைகளை கடல்களிலும், குளங்களிலும், ஏரிகளிலும் வீசி விட்டு வரும் உங்களது பக்தர்களின் செயலை கண்டிக்காமல் இருப்பது நியாயமா?

நீராதாரத்தில் வாழ்ந்து வரும் மீன் இனங்கள் வருடம் தோறும் செப்டம்பர் மாதங்களில் உங்களது சிலை கரைப்பால் செத்து மடிவது உங்களது கவனத்திற்கு வருவதில்லையா?

முன்னொரு காலத்தில் நீங்கள் இளைஞராய் இருந்தபோது அரச மரத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு குளக்கரையில் குளிக்க வரும் பெண்களை ரசித்த கொடுமையை சகித்து கொள்ள முடியாத அன்றைய பெரியவர்கள் உங்களை செருப்பாலும்,விளக்குமாற்றாலும் அடித்து,துவைத்து அதே குளக்கரையில் தூக்கி எறிந்த நாளை நினைவு படுத்தும் விதமாகவே,
இன்று வரை உங்கள் சிலைகளை கொண்டு போய் செருப்பாலும்,விளக்குமாற்றாலும் அடித்து நீர் நிலைகளில் எறிந்து வரும் உங்களது பக்த கோடிகளின் செயல்கள் உங்கள் மனதை புண்படுத்த வில்லையா?

உங்களது புத்தி சாதுரியத்தால்… உலகமே அம்மை,அப்பன் தான் என்ற தத்துவத்தை வெளிப்படுத்தி அம்மை, அப்பனை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்ட நீங்கள் குளக்கரையில் குளித்துக்கொண்டிருந்த பெண்களை நோட்டம் விட்ட கதையை என்னால் நம்ப முடியவில்லையே?..

கடவுளாய் இருந்த உங்களுக்கு அந்த நேரத்தில் தப்பிக்க கூடவா வழி தெரியாமல் போய்விட்டது?

பாவம் நீங்கள் அன்று செய்த தவறை உங்களது பக்தர்கள் இன்று வரை அதை நினைவுபடுத்தி உங்களை கேவலப்படுத்துவதை என்னால் சகித்து கொள்ள முடியாத போது, உங்களால் எப்படி சகித்து கொள்ள முடிகிறது?

உண்மையிலேயே உங்களை உங்களது பக்தர்கள் வணங்குகிறார்களா? அல்லது இழிவு படுத்துகிறார்களா?

அவர்களுக்கு ஏன் நீங்கள் புத்திமதி சொல்வதில்லை?
எந்த மதமும் பிற சமுதாய மக்களின் உரிமையை பறிக்க சொல்லாத போது, உங்களது பக்தர்கள் மட்டும் உங்களது சிலை ஊர்வலத்தின் போது திட்டமிட்டே பிற சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கோஷம் போடுவதும், வழியில் இருக்கும் இறையாலயங்கள், வீடுகள் என சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்குவதும் தான் நீங்கள் அவர்களுக்கு காட்டி கொடுத்த வழியா?

உங்களின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் வன்முறைகளுக்கு தீர்வே கிடையாதா?

வன்முறையாளர்களை போலீஸ் வேனில் ஏற்றினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர்களுடன் உங்களையும் சேர்த்து போலீஸ் வண்டியில் ஏற்றுவது கொடுமையில்லையா?

அமைதியாய் இருக்கும் தமிழகத்தை உங்களின் பெயரால் யுத்த பூமியாய் மாற்ற துடிக்கும் உங்களது பக்தர்களுக்கு தகுந்த புத்திமதியை சொல்லி இனிவரும் காலத்திலாவது உங்களையும் அசிங்கப்படுத்தாமல்,
பிற சமுதாய மக்களுக்கும் இடையூறு செய்யாமல் நல்லவர்களாய் வாழ்வதற்கு உங்களது பக்த கோடிகளுக்கு தகுந்த நல்லுபதேசம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை “பிள்ளையாரப்பா பெரியப்பா புத்திமதியை சொல்லப்பா”என்று சொல்லி முடிக்கிறேன்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி
- See more at:

http://www.thoothuonline.com/archives/68458#sthash.vzOlqvr4.dpuf

UNMAIKAL said...

திமுகவும் இந்துத்துவமும்! –

“முதுகெலும்பில் ஏதோ பிரச்சனை என்பது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும். முதுகெலும்பே இல்லாத ஜென்மம். திமுகன்னாலே இப்படித்தானா இல்லை இப்படித்தான் திமுகவேயா?”

“ஒரு இந்து திமுகவில் இருப்பதற்கும் உலகின் மிக இழிவான செயலை செய்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.”

“திமுகவை விட கேவலமான கட்சி திமுகவினரை விட கேவலமான ஜன்மங்கள் – இவற்றை பார்க்கவே முடியாது… திராவிடத்தின் ஒரே சாதனை இந்த கேவல ஈன பிறவிகள்தான்.”

- அரவிந்தன் நீலகண்டன்

ஆசிரியர் தினத்திற்கு குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்து வந்த அறிவிப்பிற்கு ‘ஆரிய சூழ்ச்சி இது’ என்று தெரிவித்த கண்டனத்திற்கும் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் பெயரால் வாழ்த்து வந்ததை மறுத்து தி.மு.க வெளியிட்ட அறிக்கைக்கும் இந்துத்துவ வெறியர்கள் ஆற்றிய எதிர்வினைதான் மேலே உள்ளது.

2

இதில் கவனிக்க வேண்டியது, தி.மு.க இத்தோடு இந்தப் பிரச்சினையை மறந்து விடும். ஆனால் இந்துத்துவவாதிகள் இதை விட மாட்டார்கள்.

தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிரச்சாரத்தை தீவிரப் படுத்துவார்கள்.

தங்கள் ஆதரவாளர்களை அதிகப்படுத்துவார்கள். ஊடகங்களும் அதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும். கடந்த காலத்திலும் இதுவே நடந்தது.

தி.மு.கவிற்கும் இந்துத்துவத்திற்கும் உள்ள வித்தியாசம், தி.மு.க தனது கொள்கைகளை மேடைகளில் மட்டுமே பேசி வருகிறது. இந்துத்துவமோ தனது விஷக் கருத்துக்களை அடி மட்ட மக்கள் வரை கொண்டு செல்கிறது.

மேலே இதை எழுதிய அரவிந்தன் நீலகண்டன் பற்றி கூற வேண்டி உள்ளது.

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பிள்ளை சமூகத்தை சேர்ந்தவன். அதி தீவிர இந்துத்துவவாதி. இப்படி சொல்வதை விட வெறி பிடித்த என்ற சொல்லாட்சிதான் சரியாகும்.

இந்துத்துவக் கொள்கையில் ஆழ்ந்த அறிவு கொண்டவன். ஆரம்பத்தில் திண்ணை போன்ற இணைய தளங்களிலும் பின்பு வலைப்பூவிலும் எழுதி வந்தான். அப்போது முஸ்லிம்கள் இவனை எதிர் கொண்டார்கள்.

பின்பு தமிழ் ஹிந்து என்ற இணையதளத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறான். இந்த இணைய தளத்தில் இந்து மதம் அல்லது இந்துத்துவம் பற்றியக் கட்டுரைகளை விட இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிரான கடும் வெறுப்பைக் கொட்டும் வெறிக் கட்டுரைகளே அதிகம் இருக்கும். சமூக நல்லிணக்கத்தில் உண்மையில் அக்கறை கொண்ட ஒரு அரசு இருக்குமானால் கண நேரம் கூட தாமதிக்காமல் இந்த இணைய தளம் முடக்கப்பட்டிருக்கும். அந்த அளவு அபாயகரமான ஒரு இணைய தளம்.

இப்போது இவன் தினமலரில் இந்துத்துவக் கட்டுரைகள் எழுதி வருகிறான். அவ்வப்போது விஜய் டி.வி.இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறான். பிரபல எழுத்தாளர்களை கொண்டு தனது நூல்களை வெளியிட்டு வருகிறான். சமீபத்தில் இவனுடைய ஒரு நூலை ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் வெளியிட்டவர் பா. ராகவன். ஆமாம். ‘நிலமெல்லாம் ரத்தம்’ எழுதிய அந்த பா.ராதான்.

ஃபாலஸ்தீனை பற்றி ஓரளவு தமிழ் சமூகம் அறிந்து கொள்ள உதவிய அந்தப் பா.ரா இப்போது இவனுடைய நட்பால் ஒரு முழுமையான இந்துத்துவவாதி.

இப்போது நடைபெற்ற போரில் ஃபாலஸ்தீனின் காஸா கொழுந்து விட்டு எரிந்த போது இங்கே உள்ள இந்துத்துவவாதிகள் இஸ்ரேலை ஆதரித்து இணையப் பிரச்சாரம் செய்தனர்.

திண்ணை தளம் முதல் ஜெயமோகன் வரை அதை செய்தனர். இந்த அரவிந்தனும் செய்தான். அப்போது அதை அருமை என்று தட்டிக் கொடுத்தார் இந்தப் பா.ரா.

இன்னொரு முக்கியமான விசயம். எழுத்தாளர் ஜெயமோகனின் நெருங்கிய நண்பன். ஜெயமோகனை இணையத்திற்கு அழைத்து வந்து அதை கையாள கற்பித்தவன். இப்படி கொடி கட்டிப் பறக்கிறது இந்துத்துவவாதிகளின் மக்கள் தொடர்பு யுக்தி.

நமது தலைப்பிற்கு வருவோம்,

தி.மு.க இந்த தேர்தலில் தனிமைப்படுத்த பட்டதற்கு இந்துத்துவவாதிகளின் பெரும் பங்கு உண்டு.

பா.ஜ.க ஜெயிப்பதை விட தி.மு.க தோற்பதை அவர்கள் விரும்பினார்கள். இப்போது மீண்டும் ஒரு அருமையான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் தி.மு.க தங்களுக்கு எதிரான இவர்களின் செயல் பாட்டை உணரவில்லை. ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று சொன்ன ஹெச். ராஜாவிற்கு வாழ்த்து சொல்வதும் மோடியிடம் குழைவதுமாக இருக்கிறது தி.மு.க தலைமை.

முஸ்லிம்களுக்கெதிரான அதே வெறுப்பையும் பகையையும் காட்டுகிறார்களே என்று நமக்குத்தான் இவர்கள் மீது பரிவு ஏற்படுகிறது. பெரியார் என்ற ஆளுமையின் தாக்கம் தெரிகிறது.

இந்துத்துவத்தை எதிர்கொள்ள என்ன திட்டம் தி.மு.க விடம் உள்ளது?. திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளை மீண்டும் முழு வீச்சுடன் மக்களிடம் கொண்டு செல்லும் வீரியமான பிரச்சார திட்டமா? இந்தப் பணியில் அனைத்து சமூகத்தையும் ஒருங்கினைத்து இந்துத்துவத்தை தனிமைப் படுத்தும் நுட்பமா? அல்லது இந்துத்துவத்திற்கு அடி பணியும் சமரசமா?

இதைப் பொறுத்துதான் தமிழக எதிர்கால அரசியல் களம் இருக்கும்.


- See more at: http://www.thoothuonline.com/archives/68453#sthash.kXSsYis7.dpuf