Followers

Friday, September 05, 2014

'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை!

இந்தியாவில் தங்களின் கிளைகளை திறக்கப் போவதாக அல்காயிதாவின் தலைவர் ஜவாஹிரி கொடுத்த அறிக்கையை நாம் பத்திரிக்கைகளில் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் இருக்கும் போது திடீரென்று இவர் அறிவிக்க காரணம் என்ன? இந்த செய்தி எங்கிருந்து கசியவிடப்பட்டது?

SITE என்ற செய்தி ஸ்தாபனத்திலிருந்து இந்த செய்தி கசிய விடப்பட்டுள்ளது. இந்த செய்தி ஸ்தாபனமானது இஸ்ரேலுடைய மொசாத்தின் அங்கத்தினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மேலும் நெருக்குதல்களைக் கொடுக்கவும் இந்துத்வாவாதிகளுக்கு இந்து மக்களின் ஆதரவை பெற்றுத் தரும் முகமாகவே இந்த செய்தியை மொசாத் கசிய விட்டுள்ளது.

அஸ்ஸாம் காஷ்மீர் குஜராத் போன்ற மாநிலங்களில் ராணுவத்தாலும் ஆட்சியாளர்களாலும் பல கொடுமைகள் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கலாம். அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது இந்திய முஸ்லிம்களுக்கு தெரியும். காவல்துறையும், நீதித் துறையும் இந்தியாவில் முற்றாக சிதைந்து விடவில்லை. எனவே அல்ஜவாஹிரி போன்ற அமெரிக்க கைக் கூலிகளின் உதவி எந்த இந்திய முஸ்லிமுக்கும் தேவையில்லை என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.

1. சைபல் எட்மண்ட்ஸ் என்ற எஃப்பிஐ அங்கத்தினர் விவரிக்கும் போது அல்ஜவாஹிரி நேடோவில் வேலை செய்த முன்னால் அதிகாரி என்ற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அல்காய்தா என்ற இந்த அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ வால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்றும் தெளிவுபடுத்துகிறார். வளைகுடாக்களில் கால் ஊன்றவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்துத்வாவாதிகளின் கைகளை பலப்படுத்தவும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவே அல்காயிதாவை இஸ்ரேலிய மொசாத் உருவாக்கியதாக விவரித்து கூறுகிறார்.2. SITE என்ற இந்த செய்தி ஸ்தாபனமானது ரிடா கட்ஸ் என்ற முன்னால் இஸ்ரேலிய ராணுவ வீரரின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தற்போது இந்த யூதன் மொசாத்தில் வேலை செய்து வருகிறார். இந்த செய்தி ஸ்தாபனமானது அல்காய்தாவின் முக்கிய செய்திகளை வெளியிடுவதும் மேலும் அமெரிக்காவுக்கு தோதான செய்திகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதும் இதன் முக்கிய பணியாகும்.எனவே இந்திய முஸ்லிம்கள் மொஸாத் மற்றும் இந்துத்வாவின் வலையில் வீழ்ந்து விடாமல் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அல் காய்தாவுக்கு ஆள் சேர்க்கிறேன் என்று எவனாவது உங்களை அணுகினால் உடன் காவல் துறை வசம் அவனை ஒப்படைத்து விடுங்கள்.

நமது நாட்டு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள நமக்கு தெம்பும் தைரியமும் இஸ்லாம் நிறையவே கொடுத்துள்ளது. மொஸாத்தின் கூலிப் படைகளின் உதவியை எந்த முஸ்லிமும் ஏற்க மாட்டான். இந்துத்வா ஆட்சி செய்து வரும் இந்த கால கட்டத்தில் முஸ்லிம்கள் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்வார்களாக! எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நாம் பிறந்த இந்த மண்ணான இந்திய பூமிக்கு விசுவாசமாக என்றும் போல் இருந்து வருவோமாக!

ஆதார சுட்டிகள்:

http://www.veteranstoday.com/2011/09/11/cia-funded-israeli-group-tied-to-al-qaeda-in-german-trial/


http://www.washingtonsblog.com/2013/05/report-u-s-government-worked-with-bin-laden-and-his-top-lieutenant-2-months-after-911.html


http://muslimmirror.com/eng/the-al-qaeda-statement-carried-by-site-intel-is-a-fake-says-bharat-bachao-andolan/5 comments:

UNMAIKAL said...

விநாயகர் ஊர்வலத்தில் முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் வீடுகள் மீது கல்வீச்சு:

பாஜக மாநில பொதுச்செயலாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதல் தொடர்பாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில ஊர்வலம் சென்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டபவர்கள் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

http://www.inneram.com/i-news/tamilnadu/1743-muthupet-affair.html

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=128249

UNMAIKAL said...

முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்
by வினவு, September 5, 2014

தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரில் இந்துமுன்னணி ஏற்பாட்டில் நேற்று (4-09-2014) நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை மாலை 3 மணி முதல் 6.30 மணிக்குள் முடித்துவிட நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதை மீறி தாமதமாக தொடங்கிய ஊர்வலம் மிக மெதுவாக நகர்ந்து பாங்கு ஓதும் நேரத்தில் பள்ளிவாசல் அருகே நெருங்க, போலீசார் தடுப்புவேலி அமைத்து பாங்கு முடியும் வரை தடுத்து வைத்துள்ளனர்.

அப்பொழுது இஸ்லாமியர்கள் மீதான அவதூறு கோஷங்களை எழுப்பியுள்ளார்கள் இந்து முன்னணியினர். அதைத் தொடர்ந்து ஊர்வலம் சென்ற வழியில் இருந்த இஸ்லாமியர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் காவிபயங்கரவாதிகள். இதில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளன. ஒரு கடைக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, ஊர்வலத்தில் தலைமை வகித்த பொன்னுச்சாமி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், முன்னாள் தலைவர் உப்பூர் இளமாறன், இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில கலந்து கொண்டு (வெறி)உரையாற்றிய பா.ஜ.க வின் இல.கணேசன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

விநாயகர் ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது இந்தப் பகுதியில் புதிதல்ல. கடந்த ஆண்டுகளின் ஊர்வலங்களின் போது இஸ்லாமியர்கள் வீடுகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிற ஊர்களிலும் இப்படிப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தி கலவரத்தை தூண்டுவது இந்து மதவெறியர்களின் வாடிக்கை. 2010 விநாயகர் சதுர்த்தியின்போது வேலூர் எம்.பியின் வீட்டில் கூட தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

சென்னை விநாய்கர் ஊர்வலங்களின் போது சாலையில் செல்லும் பெண்கள் மீது தண்ணீர் பீய்ச்சுவது, பொதுமக்கள் மீது அடாவடி செய்வது போன்ற காவிகளின் காலிச் செயல்கள் நாம் அறிந்ததே.

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில், விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் லும்பன்களை ஊர்வலம் விட்டு இஸ்லாமிய எதிர்ப்பு கோஷமிட வைப்பது, பள்ளிவாசல், வீடுகளில் கல்லெறிவது போன்ற காலித்தனங்களை தூண்டிவிடுவது, அதற்கு இஸ்லாமியர்கள் எவரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் அதைக் காரணமாக வைத்து கலவரம் செய்வது, இதுதான் இந்துமுன்னணியின் நோக்கம்.

காவல்துறையின் பாதுகாப்புடன் தான் இந்த காலித்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் இந்துத்துவ காலிகள்

இஸ்லாமிய குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இந்துமத சாமி ஊர்வலங்கள் விரும்பி கேட்டுக்கொண்டாலும் தலித் மக்களின் காலனிக்குள் நுழைவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை. ஆனால் தலித்துகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான காலாட்படையாக பயன்படுத்தும் நோக்குடன் விநாயகர் ஊர்வலங்களில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.


இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. விநாயகர் ஊர்வலத்தை திலகர் ஆரம்பித்து வைத்ததன் நோக்கமே இழந்த பார்ப்பனர்களின் அதிகாரத்தை மீட்பதும், இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரத்தை உருவாக்குவதும்தான்.

அதுமட்டுமல்லாமல் பூலே போன்ற பார்பன எதிர்ப்பாளர்களின் செல்வாக்கிலிருந்து தலித்துகளை கைப்பற்றி அவர்களை பார்ப்பனிய அடியாளாக்குவதற்கு அனைவருக்குமான தெய்வமாக, அனைவருக்குமான விழாவாக ஒன்று தேவைப்பட்டதும் விநாயகர் ஊர்வலத்திற்கு ஒரு காரணம்.

ஆக விநாயகர் ஊர்வலம் ஆரம்பம் முதல் இன்று வரை மக்களை பிளவுபடுத்தி பார்ப்பனியத்திற்கு அடிமைப்படுத்தவும், கலவரத்தை உருவாக்கும் கருவியாகவும் தான் பயன்பட்டு வருகிறது. முன்னர் வடஇந்தியாவில் மட்டுமே செல்வாக்கு செலுத்திய இந்த விழா தற்போது தமிழகத்தை பிடித்த பீடையாக முன்னேறி வருகிறது.

ஊரில் இருக்கும் லும்பன்கள் நிதிவசூலில் ஈடுபட்டு சாலைகளில் கைகோர்த்து நின்று வண்டிகளை மறித்து பொதுமக்களை மறித்து மிரட்டும் உடல்மொழியுடன் நிதி கேட்கிறார்கள்.

தாங்கள் இந்து என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு பார்ப்பனியத்தின் உண்மை முகத்தைப் புரிய வைப்பதன் மூலம் அவர்களை பார்பன இந்து மத மயக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவையையும் இந்த விநாயகர் ஊர்வல கலவரங்கள் உணர்த்துகின்றன.

மோடி ஆட்சிக்கு பிறகு வட இந்தியாவில் திட்டமிட்டு பரப்பப்படும் இந்து மதவெறி, தமிழகத்திலும் வேர் பாய்ச்ச துடிக்கிறது. இந்த நச்சு வெறியை வேரோடு வெட்டுவோம்.

http://www.vinavu.com/2014/09/05/hindu-munnani-incites-violence-using-vinayakar-processions/

k.rahman said...

Please stop this suvanapiriyan. you are making a fool of yourself and tamil muslim community with this type of stupid articles. did you watch the video? he was crystal clear. by blaming everything on mossad and israel you are just passing the buck.

if there is a mistake accept it. nothing wrong with that. even tntj muslims have condemned it very rightly in facebook.

சுவனப் பிரியன் said...

//tamil muslim community//

//tntj muslims//

பூணூல் ஏகத்துக்கும் வெளியே தெரிகிறது. மறைத்துக் கொள்ளவும் :-)

Anonymous said...

சுவனர் என்னதான் செய்வார். கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினாலும், அது இஸ்லாத்துக்கு சாதகமாக இல்லையென்றால் அது பொய் என்று சொல்ல வேண்டும் என்று சிறு வயதில் இருந்து போதிக்கப்பட்டதால் வந்த பிரச்சனை.