Followers

Monday, September 08, 2014

ஒரு ஏழை இந்து சகோதரருக்கு முடிந்தவர்கள் உதவுங்களேன்!முத்துப்பேட்டை கொய்யா மஹால் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் மணி .சமீபத்தில் இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் .இதனால் கடைக்குள் இருந்த அத்துனை பொருட்களும் தீயில் கருகி நாசமாயின .இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார் . பாதிக்கப்பட்ட மணியை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதலை கூறி வருகின்றனர் .

இந்நிலையில் தீயில் கருகிய பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தின் சார்பாக கொய்யா மஹால் அருகே இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றோம் .

பின்னர் நம்மிடம் பேசிய மணி ,"நான் மீண்டும் எனது பெட்டி கடையை திறக்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன் பாய் ,இப்போ என்கிட்டே அறவே பணம் இல்லே பாய் , என்றார்" .உடனே குறுக்கிட்ட நாம் ,"உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகிறது என்றோம்" .

அதற்கு பதிலளித்த அவர் "எனக்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் தேவைப்படுது பாய். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களது இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லி எனக்கு பண உதவி செய்ய சொல்லுங்க பாய்" என்று கண்ணீர் மல்க நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார் .

மணி என்பவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதாலும் ,அவர் பிறவியில் ஊனமாக இருப்பதாலும் ,இதை எல்லாம் காட்டிலும் மணி ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி என்பதாலும் இதனை படிக்கும் எமது இஸ்லாமிய சொந்தங்களே ,நமது தொப்புள் கொடி உறவான ஒரு இந்து சகோதரனுக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்து அவரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இன்றே உதவி செய்து நாளை மறுமை வெற்றியாளர்களாக தங்களை ஆக்கி கொள்ளுங்கள் என்று அன்போடு வேண்டுகிறோம் .நீங்கள் இன்று செய்யும் உதவி ,நாளை அவரை இஸ்லாத்தின் பால் இணைக்க கூடும் என்றும் தெரிவித்து கொள்கிறோம் .

மணியை நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளை செய்யலாம் :

மணி :அலைபேசி -9698548943

சந்திப்பு :ஜே :ஷேக் பரீத்
MA .JOURNALISM AND MASS COMMUNICATION
உறுப்பினர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ,
சென்னை

சகோதரர் மணியிடம் இன்று அலை பேசியில் பேசினேன். ரொம்பவும் வருத்தப்பட்டார். விநாயக சதுர்த்தி ஊர்வல நாள் அன்றுதான் மண்ணெண்ணையை ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்கள்.

'உங்களுக்கு யார் மீது சந்தேகம்?' என்று கேட்டேன்.

'உள்ளூர் பாய்கள் யாரும் இந்த செயலை கண்டிப்பாக செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரிடமும் அண்ணனாகவும் தம்பியாகவும் பழகி வருகின்றேன். இதுவரை எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள இந்த இடத்தில் ஒரு இந்துவின் கடையை கொளுத்தினால் அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணலாம் என்ற நோக்கில் யாரோ செய்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்ல என்னால் முடியவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நான் அங்கு இல்லை. இருக்கும் பணத்தை வைத்து லாக்கர்களை சரி பண்ணிக் கொண்டிருக்கிறேன். வசதியுள்ளவர்கள் கடனாக கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்' என்று கூறுகிறார்.

சேத மதிப்பு இரண்டு லட்சத்துக்கும் மேல் என்கிறார். வசதியுடைய சகோதரர்கள் இந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி மனித நேயத்தை பேணுவார்களாக! அரசும் இது போன்றவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். அதிமுக பிரமுகர்களும் இதற்கு முயற்சிப்பார்களாக!

3 comments:

Anonymous said...

அவரது account detail கொடுத்தால் உதவ விரும்பும் என்னை போன்றவர்கள் உதவ வசதியாக இருக்கும்.

சுவனப் பிரியன் said...

//அவரது account detail கொடுத்தால் உதவ விரும்பும் என்னை போன்றவர்கள் உதவ வசதியாக இருக்கும். //

அவரது தொலைபேசி எண்ணை பதிவிலேயே கொடுத்திருக்கிறேன். அவரிடம் பேசி அக்கவுண்ட் நம்பரை வாங்கிக் கொள்ளவும்.

Salim Mohamed Rafi said...

Dear Mr. Suvanapriyan,

Greetings....

A small amount has been sent to Mr. Manikandan recently and I talked to him and got the confirmation. I would like to thank you for the chance given to us to help him.

Regards,
S. Mohamed Rafi.
Riyadh, Saudi Arabia.