Followers

Monday, September 08, 2014

மூன்று வருடமாக கழிவறையில் சிறை வைக்கப்பட்ட பெண்!பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் ராம்பக் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலிருந்தே மாமனாரும் மாமியாரும் கணவரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனிடையே இந்த பெண் கர்ப்பமாகியிருக்கிறார். அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. ஆண் குழந்தை பெறாததால் கோபமடைந்த மாமனாரும் மாமியாரும் மேலும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். இதன் உச்சக்கட்டமாக அந்த பெண்ணை வீட்டின் ஒதுக்குப் புறத்தில் உள்ள கழிவறையில் சிறை வைத்து விட்டனர். ஒரு நாள் அல்ல. இரண்டு நாள் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக இந்த கொடுமை நடந்தேறியுள்ளது.

அந்த பெண் பசிக்கிறது என்று கேட்டால் ஏதாவது வெளியிலிருந்து கொடுத்துள்ளார்கள். குழந்தையையும் இவர் கண்ணில் காட்டவில்லை. பெண் வீட்டார் மகளைப் பார்க்க வந்தால் ஏதாவது காரணம் சொல்லி அவர்களை விரட்டி விடுவர். கணவன் பிரபத் குமார் சிங், மாமனார் தீரேந்திர சிங், மாமியார் இந்திரா தேவி என்ற இந்த மூன்று மனித மிருகங்கள் கடந்த மூன்று வருடங்களாக அந்த பெண்ணுக்கு இந்த கொடுமையை செய்து வந்துள்ளது. பெயர்களைப் பார்த்தால் ஆதிக்க சாதி இந்துக்கள் போல் உள்ளது. ஓரளவு படித்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் இவர்கள்.

பொறுமையிழுந்த பெண்ணின் தகப்பனார் முடிவில் காவல் துறையில் புகார் செய்துள்ளார். காவலர்கள் வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தனர். முடிவில் கழிவறையின் உள்ளிருந்து சப்தம் வரவே கழிவறையை திறக்கச் சொல்லி உள்ளே சென்றுள்ளனர். காவலர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கிழிந்த துணி, எண்ணெய் தேய்க்காத பரட்டைத் தலை, உடலின் மீது துர் நாற்றம் என்ற கொலத்தில் வீட்டின் மருமகள் ஓரத்தில் ஒடுங்கி கிடந்தார். சமூக ஆர்வலர் குமாரி உடன் அந்த பெண்ணை வெளியில் கொண்டு வந்தார். சூரிய ஒளி படாமல் இருந்ததால் அந்த பெண்ணால் யாரையும் சரியாக பார்க்க முடியவில்லை. வெளியில் வந்தவுடன் அந்த பெண் கேட்டது

'எனது குழந்தை எங்கே'

3 வயது குழந்தையைக் கட்டிக் கொண்டு 'ஓ' வென்று அழுதார். அந்த குழந்தையோ எந்த சலனமும் இல்லாமல் தாயையே வெறிக்க பார்த்தது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்த அனைவரும் கண்கலங்கி விட்டனர். இந்த பெண்ணின் தந்தை ஷியாம் சுந்தர் நடந்த கொடுமைகளை எல்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கணவனும், மாமனாரும், மாமியாரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தையும் அந்த இள வயது பெண்ணும் நேற்று தனது சொந்த ஊருக்கு தந்தையோடு கிளம்பிச் சென்றனர்.

தகவல் உதவி

http://english.manoramaonline.com/news/nation/woman-locked-up-in-bathroom-for-three-years-for-dowry.html

http://timesofindia.indiatimes.com/india/Shocking-tale-of-brutality-In-Bihar-woman-confined-in-bathroom-for-three-years-for-dowry/articleshow/42045327.cms

http://www.news18.com/news/bihar/dowry-harassment-woman-locked-up-in-bathroom-for-three-years-596847.html

----------------------------------------------------------------


நேற்று விநாயக சதுர்த்தியன்று ஐஸ் ஹவுஸ் பகுதியில் இந்துத்வாவினர் குடித்து விட்டு தாளத்துக்கு ஏற்ப ஆட்டம் பாட்டத்தோடு விநாயகரை கொண்டு சென்றனர். திருநங்கைகளும் ஆபாச நடனம் ஆட வைக்கப்பட்டனர். பணம் கொடுத்து கூட்டி வரப்பட்ட குப்பத்து சூத்திரர்கள் தங்களுக்கு எவ்வாறு வலை விரிக்கப்படுகிறது என்பது கூட விளங்காமல் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு இஸ்லாத்தை விமரிசித்து ஆட்டம் போட்டு சென்றனர். அக்ரஹார வீடுகளின் மொட்டை மாடிகளில் பார்பனர்கள் ஒரு வித வெற்றிக் களிப்போடு ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் பணம் நன்கொடையாக கொடுப்பதோடு சரி. ஆட்டம் பாட்டம் போலீஸ் வழக்கு எல்லாம் சூத்திரர்கள் தலையிலே! இங்கு அழைப்பது போல் மயிலை பார்த்த சாரதி கோவிலின் வடமிழுப்புக்கு இந்த ஐயர்கள் சூத்திர்களான நம்மை ஏன் அழைப்பதில்லை என்ற கேள்வியை கேட்க விடாமல் உள்ளே இறங்கிய சாராயம் மழுங்கடித்து விட்டது. தாங்கள் கறி வேப்பிலையாக பயன்படுத்தப் படுகிறோம் என்று இவர்கள் உணரும் காலம் இதே தீவிரவாதம் இந்துத்வாவினர் மீது திரும்பும். வளர்த்த கடாவே மார்பில் பாய்வதை அன்று பிஜேபியினரும் ஆர் எஸ் எஸூம், இந்து முண்ணனியும் உணர்வர்.

நான் இவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் கூட்டி வந்து ஆட்டம் போடும் இந்த குடிகார கூட்டத்தால் இந்து மதத்தை வளர்த்து விட முடியுமா?

மேலே பீகாரிலே 3 ஆண்டுகளாக வரதட்சணை கொடுமையால் சிறை வைக்கப்பட்ட இது போன்ற ஆயிரக்கணக்கான சகோதரிகளை உங்களால் மீட்டெடுக்க முடியுமா?

இன்னும் ஆதிக்க சாதி தெருக்களிலே செருப்பை தூக்கி நடக்கிறானே இந்த நாட்டின் மண்ணின் மைந்தன் அவனது நிலையைத்தான் சீராக்க முடியுமா?

எதுவுமே உங்களால் கண்டிப்பாக முடியாது. இந்த வன்முறைக் கும்பலால் வெறுப்புற்று இஸ்லாத்தை நோக்கி இன்னும் கூட்டம் கூட்டமாக வரத்தான் போகிறார்கள். உங்கள் வாழ்நாளிலேயே அதனை பார்ப்பீர்கள்.

No comments: