Followers

Tuesday, September 02, 2014

"என் மனம் அலைபாயுதே! என்ன செய்வேன்!" - பாலசுப்ரமணியம்!

//அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த பதிலிலிருந்து மற்றொரு கேள்வி பிறந்துவிடுகிறது. முடிவே இல்லையா? என்ன செய்வேன்!!!!!//

-பாலசுப்ரமணியம் (நாத்திகர்)

இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடக்கும் மனப் போராட்டம். எந்த ஒன்றையும் நமது மனதானது போதும் என்று பொருந்திக் கொள்ளாது. மேலும் மேலும் சந்தேகங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். ஒரு முடிவை எட்டுவோம். உடன் அடுத்த கேள்வி வந்து தொக்கி நிற்கும்.

நான் அனைத்தையும் கரைத்து குடித்தவன்.எனக்கு தெரியாதது ஒன்றுமே இந்த உலகில் இல்லை என்று எவருமே சொல்லி விட முடியாது. நாம் கற்றது கையளவுதான்: கல்லாதது உலகளவு: நமது உடலில் உள்ள உயிரைப் பற்றி என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? அது எங்கிருந்து வருகிறது? அது எங்கே செல்கிறது? அதனை ஆட்டுவிப்பவன் யார்? என்ற பல கேள்விகளுக்கு இன்று வரை பலருக்கும் விடை கிடைக்கவில்லை. இதே கேள்வி அன்றைய மக்கா சிலை வணங்கிகளுக்கும் இருந்தது.

'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85

குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது.

உயிரைப் பற்றி சில யூதர்கள் முகமது நபியிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புஹாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.

பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது 'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.' -குர்ஆன் 17:85 என்று திருக்குர்ஆன் வசனத்தை கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

-ஸஹீஹூல் புகாரி 125
Volume :1 Book :3

இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முகமது நபி ஏற்கெனவெ தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது இது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.

இதுதான் மனிதனின் அறிவின் எல்லை. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் உலக விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆய்வு செய்தாலும் ஒரு முடிவை எட்ட முடியாது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் இறைவனை சுயமாக ஒரு மனிதனால் அறிந்து விட முடியாது என்பதற்காக தனது வேதங்களை அந்த அந்த காலங்களில் தூதர்களின் மூலமாக இந்த உலகுக்கு இறைவன் அனுப்பி வைத்திருக்கிறான். யாரும் இதுவரை பார்த்திராத அந்த இறைவன் தான் எப்படி பட்டவன்? தனது உருவம் எப்படி இருக்கும்? தனக்குள்ள தனித்தன்மை என்ன? என்பதை அவனாக விளக்காத வரை நம்மால் விளங்கி விட முடியாது.

தனது சுய அறிவில் இறைவனை தேடப் போனால் அது எங்கு கொண்டு போய் விடும் என்பதற்கு சிறந்த உதாரணத்தை நமது நாட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். இறைவன் அவர்களுக்கு முன்பு அருளிய வேதங்களில் இறைவனுக்கு தெளிவான இலக்கணங்களை கொடுத்திருக்க அதை தூரமாக்கி தங்கள் கற்பனையை தட்டி விட்டதனால் இன்று தெருவுக்கு ஒரு கடவுளை பார்க்கிறோம். இத்தகைய அறியாமையிலிருந்து நாம் விலகி இறைவன் சொன்ன இலக்கணத்தின்படி நாம் இறைவனைக் காண முயற்சிப்போமாக!. அதில் வெற்றியும் பெறுவோமாக!

7 comments:

Anonymous said...

//'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.'
-குர்ஆன் 17:85

குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. //

நிஜமாவே வியப்பின் உச்சத்திற்கு நான் போய் விட்டேன் சுவனபொரியர். 'எல்லாம் கடவுள் செயல், அதை புரியும் அறிவு மனிதனுக்கு இல்லை'' இவை தான் இந்த வசனத்தின் சாராம்சம், இது எப்படி உங்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு போச்சிது. முகமதுவிடம் கேட்ட கேள்விக்கு அழகாக சமாளித்து பதில் சொல்லி விட்டார், பொதுவாக உங்கள் இனமே மூளையை அடகு வைத்திருப்பதால் உங்களுக்கு உச்சிக்கு பிடித்திருக்கிறது. நிசமா உங்க கூட்டத்தோட அறிவ பார்த்து நான் வியக்கேன்.

குரான் சிந்திக்க மட்டும் தான் சொல்கிறது அண்ணாச்சி, ஆனால் அதற்க்கான வாசல்களை எல்லாம் அடைத்து வைத்து விட்டது. எனவே தான் உங்களுக்கு இதெல்லாம் வியப்பின் உச்சிக்கே போகிறது .

// 'மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது' என்று கூறுகிறது. //

எனக்கு தெரியாத ஒன்றை பற்றி என்கிட்டே கேட்டால் நான் கூட இப்படி தான் சொல்வேன் அய்யா, எப்படி இது உங்களால் மட்டும் முடியுது

Andandan Krishnan
Kanyakumari

Anonymous said...

முந்தா நாள் என் மருமக பிள்ளை 5 வயசு பொடியன் என்கிட்டே கேட்டான் "மாமா நம்ம வீடு கோழி எப்போ முட்டை போடும்னு" நன் சொன்னேன் "எனக்கு அத தெரியிற அறிவு கிடையாது கண்ணா, அது கடவுளுக்கு தான் தெரியும். முட்டை போடும்போது நாம சாப்பிடலாம்" அப்படின்னு பதில் சொன்னேன். உங்க சித்தாந்தப்படி நான் சொன்ன பதிலும் உங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு போகணுமே. சாதாரண கோழி அது எப்போ முட்டை போடும்னே நமக்கு தெரியலையே. என்ன சொல்றீங்க

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

//அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது 'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்' என்று கூறுவீராக.' -குர்ஆன் 17:85 என்று திருக்குர்ஆன் வசனத்தை கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

-ஸஹீஹூல் புகாரி 125
Volume :1 Book :3//

தவறாக எண்ணாதீர் சொப்பன பிரியர், முட்டாளாக இருப்பவன் தான் முஸ்லிமாக இருக்க முடியும் போல் இருக்கிறது. கொஞ்சம் மூளை உள்ளவனே புரிந்து கொள்வான் இதை படித்தால், முகமது எந்த அளவுக்கு பிராடுத்தனம் பண்ணிருக்கார் என்பதை.நடந்து போறாராம், அவர்கிட்ட கேள்வி கேக்கிராங்க, உடனே அல்லா ஓடி வருகிறார் பதில் சொல்ல, அதுவும் அதுவும் உப்பு சப்பில்லாத "அய்யயோ எனக்கு ஒன்னும் தெரியாது" என்கிற மாதிரியான பதில். இறை செய்தியா அது. அடேயப்பா இப்டிதான் அவருக்கு எல்லா வஹீயும் வந்துது போல. எத்தனை காலத்திற்கு இந்த ஏமாற்று வேலை.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

//தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். //

நித்யானந்தா வகையராக்களுக்கு குருவே முகமது தான் போலிருக்கிறது. அவர்களும் இப்படி தான் செய்கிறார்கள், எதாவது கேட்டால் கடவுளுக்கு உடனே போன் போட்டது போல் கண்ணை மூடி கொண்டு உருட்டுவது அதன் பிறகு எதாவது பதில் என்ற பெயரில் உளறுவது, இதெல்லாம் முகமது தான் அறிமுக படுத்தினார் என்று நினைக்கிறேன்.

//ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை//

எனக்கு ஒன்னும் தெரியாது, எல்லாம் கடவுளுக்கு தான் தெரியும், அறிவு குறைவு" அடேயப்பா என்னா அறிவு பூர்வமான விசயம் இது, இது கூட விளங்கலைனா எப்படிப்பட்ட மக்களா இருந்திருக்காங்க, அப்படியே அப்பாவிகள் தலையில் கடவுள் பெயரில் மிளகாய் அரைத்து விட்டு போய் விட்டார்.
ஆனால் இந்த நூற்றாண்டிலும் அவரை பின்பற்றுபவர்கள் அப்படியே இருப்பது தான் நம்மை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு போகிறது.

//அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.//

கண்டிப்பாக தீர்வு காண காண முடியாது அண்ணாச்சி. எனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்றதுல இருந்து என்ன தீர்வை காண முடியும். என்னா அறிவியலு,


Anandan Krishnan
Kanyakumari

tamilan said...

இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!

சூரியன் கூடப் புணருவான் பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்.

சூரியன், சந்திரனின் வீட்டில் நின்று, சந்திரன் சூரியனை எதிர் கொள்ளும் பவுர்ணமி தினமே ஆவணி அவிட்ட தினமாம்.

சூரியன் - சந்திரன் வீட்டில் நின்றானாமே!

இந்தச் சந்திரன் பூமியிலிருந்து 27 லட்சத்து 38 ஆயிரத்து 800 மைல் தூரத்தில் இருக்கிறது. (இவர்களின் புராணக் கதைப்படி பார்த்தால் இந்தச் சந்திரன் தனது குரு பத்தி னியின் கற்பை அழித்தான் – முனிவரின் சாபத்தினால் கிரகணத்துக்கு ஆளானான்).

சூரியனை எடுத்துக் கொண்டால் பூமியிலிருந்து 9 கோடியே 28 லட்சத்து 30ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளது. 9 கோடி மைலுக்கு மேல் உள்ள சூரியன் 27 லட்சம் தூரத்தில் உள்ள சந்திரன் வீட்டில் நின்றானாமே - இப்படி எழுதப்பட்டுள்ள கட்டுரைக்குத் தினமலர் கொடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா! அறிவு திறனும் ஆவணி அவிட்டமும் நன்றாக ஒரு முறை வயிறு குலுங்கக் குலுங்க சிரியுங்கள் - உடலுக்காவது நல்லது!

இந்தச் சூரியனுக்கு அவாளின் புராணம் சொல்லும் கதை என்ன தெரியுமா?

சூரியனின் ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து பிறந்தவன். இவன் இந்திர லோக வினோதங்களைக் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் - இதனால் வாலி என்பவன் பிறந்தான்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் - அதனால் சுக்ரீவன் பிறந்தானாம் - இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!

இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500 (செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான். ஹி..... ஹி....


--------------------- மின்சாரம் அவர்கள் 12-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

tamilan said...

நம் கடவுள்கள் நம்மை ஏய்ப்பவையாக, நம்மை மடையர்களாக ஆகும்படியாக ஆக்கி வருகிறது.

நம் கடவுள் தன்மையில் இருந்து வரும் கேடு என்னவென்றால், கடவுளை ஒரு உருவமாகக் கற்பித்துக் கொண்டு, அதற்கு ஆக வீடு வாசல், (கோவில்) பெண்டு பிள்ளை, சொத்து சுகம், போக போக்கியம் ஆகியவை செய்து கொடுத்து அனுபவிக்கச் செய்கிறோம்.

அப்படிப்பட்ட கடவுள் நம்மை இழி ஜாதியாய்ச் சிருஷ்டித்தது என்று கூறிய எவனோ அயோக்கியன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நம்மையும் நாமே இழி ஜாதியாய்க் கருதிக் கொண்டு, அக்கடவுளைத் தொடவும், நெருங்கவும் செய்வது தோஷம் - கூடாது என்று நம்பி எட்ட நிற்கிறோம்.

இதனால் நம்மை நாமே கீழ்மைப் படுத்திக் கொண்டோம் என்று ஆகிறதா? இல்லையா? இப்படிப்பட்ட மடத்தனமும், மானமற்ற தனமும் உலகில் வேறெங்காவது காணமுடியுமா?

இன்றைய நம் கோவில்கள் எவ்வளவு பெரிய கட்டடங்கள்? எவ்வளவு அருமையான சிற்பங்கள்? அவைகளுக்கு எவ்வளவு கோடி ரூபாய் சொத்துகள்? அவைகளுக்கு எவ்வளவு பூசை உற்சவ போக போக்கியங்கள்? இவை யாரால் ஏற்பட்டன? யாரால் கொடுக்கப்பட்டன? ஆனால், அவை மூலம் பயனடைந்து, உயர்ந்த மக்களாக ஆகிறவர்கள் யார்? அவைகளுக்கெல்லாம் அழுதுவிட்டு, கிட்ட நெருங்கக்கூடாத மக்களாய், எட்டி நின்று இழிவும், நட்டமும் அடைகின்றவர்கள் யார்?

நீங்கள் உண்மையாய்க் கருதிப் பாருங்கள்!

இந்த நாட்டில் உள்ள பல ஆயிரக்கணக்கான கோவில்களில், ஒரு கோவிலையாவது, மேல் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் பார்ப்பனர்கள் கட்டியிருப்பார்களா?

அவைகளுக்கு இன்று இருந்துவரும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பெறுமான சொத்துகளில், ஒரு ரூபாய் பெறு மான சொத்தாவது பார்ப்பனர்களால் கொடுக்கப்பட்டிருக்குமா?

நாம் கோவில்கட்டி, நாம் பணம் கொடுத்து, பூஜை உற்சவம் செய்வித்து, இதற்குப் பணம் கொடுத்த நாம் ஈன ஜாதி, இழி ஜாதி, நாலாஞ் ஜாதி, சூத்திர ஜாதி, அய்ந்தாம் ஜாதி, கடை ஜாதி என்பதாக ஆவானேன்?

நம்மைப் பல வழியாலும் ஏய்த்துச் சுரண்டி அயோக்கியத் தனமாகக் கொள்ளை கொண்டு வாழும் பாடுபடாத சோம்பேறிப் பித்தலாட்டப் பார்ப்பனன் மேல் ஜாதியாக இருந்து வருவானேன்? இதைச் சிந்தித்தீர்களா? சிந்திக்க யாராவது இதுவரை நமக்குப் புத்தி கூறி இருக்கிறார்களா?

நாம் ஈனஜாதி, இழி மக்கள் என்று ஆக்கப்பட்டதற்குக் காரணம் இந்தக் கடவுள்கள் தான் என்பதையும், நாம் முட்டாள்கள், மடையர்கள் ஆனதற்குக் காரணம் இந்தக் கடவுள்களுக்குக் கட்டடம் சொத்து போக போக்கியச் செலவு கொடுத்ததுதான் என்பதையும் இப்போதாவது உணருகின்றீர்களா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்பது நம்மைச் சூத்திரனாகவும், நம்மை ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பானைப் பிராமணனாகவும் ஆக்கியிருக்கிறதா? இல்லையா?

அதுபோலவேதான் நம் தர்மங்கள் என்று சொல்லப்படும் மனுதர்மம், புராணம், கீதை, இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களில் அல்லாமல் வேறு எதனாலாவது, நம்மைச் சூத்திரன், சூத்திரச்சி, வேசி மகன், தாசி மகன், அடிமை, கீழ்ஜாதி என்று யாராவது சொல்ல இடமிருக்கிறதா? காரண காரியங்கள் இருக்கின்றனவா?

ஆகவே நமது இழிவுக்கும் ஈனத்துக்கும் மேற்கண்ட நம் கடவுள், மதம், தர்ம சாஸ்திரங்கள் எனப்பட்டவை அல்லாமல், வேறு ஒன்றும் காரணம் அல்ல என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நமது கடவுள்கள் காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பிக்கப்பட்டவை, அல்லது கண்டு பிடிக்கப்பட்டவை, அல்லது நமக்குத் தெரிய வந்தவை. நமது மதமும், மனிதனுக்கு நாகரிகம், பகுத்தறிவுத் தெளிவு இல்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்தபோது, அப்போதுள்ள அநாகரிக மக்களால் உண்டாக்கப்பட்டதாகும். நமது ஒழுக்கம் நீதி என்பவைகளும் அக் காலத்துக்கு ஏற்ப, அக்காலத்தில் உள்ள அறிவுக்கேற்ப ஏற்பட்டவையாகும்.

இன்று எந்த ஒருஒழுக்கத்தை, நீதியை நாம் விரும்புகிறோமோ, மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றோமோ அப்படிப்பட்ட நீதியும், ஒழுக்கமும் கொண்ட கடவுள் மதம் வேண்டும். எப்படிப்பட்ட அறிவை முன்னேற்றத்தை விரும்புகிறோமோ, அப்படிப்பட்ட கடவுள், மதம், நீதி, தர்மம் கொண்ட கடவுள், மதம் வேண்டும்.
இன்று அப்படிப்பட்ட கடவுள், மதம் நமக்குண்டா?

நம் கடவுள்களிடம் இல்லாத அயோக்கியத்தனங்கள் இன்று உலகில் எந்த அயோக்கியனிடமாவது உண்டா?

நம் மதத்தில் இல்லாத காட்டுமிராண்டித்தனங்கள், மூடநம்பிக்கைகள் எந்த மடையனிடமாவது - குடுக்கைத் தலையனிடமாவது உண்டா?

மூன்று பெரிய கடவுள்கள், அவைகளுக்கு ஈட்டி, மழு முதலிய ஆயுதங்கள். மாடு, பருந்து முதலிய வாகனங்கள், பெண்டாட்டி பிள்ளை குட்டிகள், போதாதற்கு வைப்பாட்டிகள், மேலும் பல குடும்பப் பெண்களை விரும்பி, கட்டிய கணவனுக்குத் தெரியாமல் வேஷம் போட்டு, உருமாறி விபசாரம் செய்வதில் அம்மூவரும் ஒருவரை ஒருவர் போட்டி போடுவதில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள். - தந்தை பெரியார்

--->கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா? <---

Anonymous said...

இவுங்கல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க. பதில் தெரிலனா ஈ மெயில ஹேக் பண்ண பாப்பாங்க.