Followers

Saturday, September 06, 2014

மத்திய பிரதேசத்தில் இஸ்லாத்தை ஏற்ற நான்கு பேர் கைது!

மத்திய பிரதேசம் போபால்: இங்குள்ள சிவபுரி கிராமத்தில் துலாராம் ஜாதவ், மணிராம் ஜாதவ்,கேஷவ், மக்குபாய் ஜாதவ் என்ற பெயர்களுடைய நான்கு தலித்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். இதில் மணிராம் ஜாதவ் தனது பெயரை அப்துல்லா என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர்களின் மனைவிகளும் இஸ்லாத்தை ஏற்க பரிபூரண சம்மதம் தெரிவித்துள்ளனர். தீண்டாமைக் கொடுமை, கூட்டு பாலியல் வன் புணர்வு, கொலை என்று தினமும் தீண்டாமையால் அவதிப்படும் இந்த மக்கள் விடிவு தேடி இஸ்லாத்தை நோக்கி செல்கின்றனர். இது பொறுக்குமா இந்துத்வாவாதிகளுக்கு?

காவல் துறையில் சென்று கட்டாய மத மாற்றம் நடக்கிறது என்று புகார் கொடுத்துள்ளனர். மத்தியிலும் மாநிலத்திலும் காவிகளே ஆட்சி செய்வதால் காவல் துறை அந்த நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதன் பிறகு நீதி மன்றத்தில் நடந்த விசாரணையில் நான்கு பேருமே "நாங்கள் எவராலும் நிர்பந்திக்கப்படவில்லை. எங்களின் சுய சிந்தனையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். குர்ஆனின் சட்டங்களை படித்து விளங்கியே இந்த மாற்றத்தை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று ஆணித்தரமாக சொன்னார்கள். வேறு வழியின்றி இவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது நீதி மன்றம்.

மதம் மாறுதல் சம்பந்தமான கோர்ட் ஆணை 1968ன் படி ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறினால் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து அதன் பிறகே மாற முடியும். இதனை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனைக் கூட அரசால் கொடுக்க முடியுமாம். நேற்று இது சம்பந்தமாக கோர்ட்டில் கையெழுத்திட நால்வரும் வந்த போது விஎச்பி, பஜ்ரங்தள் போன்ற இந்துத்வாவாதியினர் இந்த நால்வருக்கு எதிராக ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பிக் கொண்டு வந்தனர். இஸ்லாத்துக்கு இவர்கள் சென்று விட்டால் அடிமைகள் நமக்கு எங்கிருந்து கிடைப்பார்கள் என்ற ஆற்றாமை இந்துத்வாவாதியினரான உயர்ஜாதி இந்துக்களுக்கு இருந்திருக்கலாம். ஆதிக்க சாதியினர் தலித்களை சமமாக நடத்தவும் மாட்டார்கள்! சமத்துவம் இஸ்லாத்தில் கிடைக்கிறது என்று அங்கு சென்றால் அங்கும் காவல்துறையையும், நீதி மன்றத்தையும் அவர்களிடம் காட்டி பயமுறுத்தினால் அவர்களுக்கு என்னதான் வழி என்றாவது இந்துத்வாவாதிகள் சொல்லட்டுமே!

மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்வா ஆட்சி நடக்கிறது. அப்பாவி முஸ்லிம்கள் பலர் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களின் எதிர்காலம் இந்தியாவில் கேள்விக்குறியாக இருக்கிறது. இத்தனை இடர்பாடுகள் இருந்தும் இந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி ஏன் வருகிறார்கள்? தவறு எங்கிருக்கிறது? என்று இனிமேலாவது இந்துத்வாவாதியினர் சிந்திக்க மாட்டார்களா?

சிந்திப்பீர்களா? இனி நீங்கள் சிந்திப்பீர்களா? தலித்களை சமமாக நடத்துவீர்களா?

தகவல் உதவி
என்டிடிவி
04-09-2014

1 comment:

UNMAIKAL said...

விநாயகனின் ‘மர்ம’ விளையாட்டுக்கள் by வே.மதிமாறன்

கிராமங்களில் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தோடு தலித் மக்கள் குடியிருக்கும் ‘சேரி’க்குள்ளும் வரச் சொன்னால், தனக்கு தீண்டாமை ஒட்டிக் கொள்ளும் என்று சிலிர்த்துக் கொண்டு போகும் இந்து கடவுள்கள்…

நகரங்களில் தலித் இளைஞர்களுக்கு ‘இந்துக்கள்’ என்று முக்கியத்துவம் கொடுத்து;
இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர் தெருவழியாக அதுவும் மசூதிகள் வழியாகத்தான் போவேன் என்று பிள்ளையார் அடம் பிடிப்பதின் மர்மம் என்ன?

சென்னை மீனவர்களை இந்துக்கள் என்று அடையாப்படுத்தி, விநாயகரை மீனவர் குடியிருப்புகளுக்கும் மீனவரை விநாயகர் ஊர்வலத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்துச் செல்லும் இந்து அமைப்புகள்;
திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி, அடிக்கடி பல்லக்கில் உலா வரும் பார்த்தசாரதியையும்,
மயிலாப்பூர் கோயிலை சூத்திர பக்தர்கள் சும்மா சும்மா சுற்றி சுற்றி வருவதைப் போல், அடிக்கடி அக்ரஹாரத்தைச் சுற்றி வருகிற மயிலை கபாலிஸ்வரனையும்,
மிக அருகில் இருக்கும் மீனவர் குப்பத்திற்குள் வீதி உலா அழைத்துச் செல்லாமல் இருப்பதின் மர்மம் என்ன?

2004 டிசம்பர் 26 அன்று சென்னை மண்ணின் மைந்தர்களான மீனவர்களை பலி கொண்டது சுனாமி.
எஞ்சியவர்கள் உயிர் தப்ப அருகிலிருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலிஸ்வரர் கோயில்களை நாடி ஓடினார்கள்;
ஆனால் அந்த பிரம்மாண்ட இந்துக் கோயில் கதவுகள் மீனவ ‘இந்துக்களுக்கு’ திறந்து தங்க இடம் தந்தால் அசுத்தம் செய்து விடுவார்கள் ‘தீட்டாகி’ விடும் என்று மூடியே இருந்தது.

100 சதவீதம் இந்துக்களான சென்னை மீனவர்களுக்கு சுனாமி தாக்குதல்களின் போது, கிறிஸ்த்துவ சாந்தோம் சர்ச் கதவுகளே திறந்து அடைக்கலம் தந்தது.

‘அடைக்கலம் தந்தவன் மீனவர்களுக்கு அந்நிய மதக்காரன்.’ விரட்டி விட்டவன் சொல்கிறான்.
சுனாமியின் போது விரட்டி அடித்தவர்கள் இப்போது விநாயகன் சிலையோடு மீனவ குப்பங்களுக்குள் ‘இந்து’ விளையாட்டு விளையாட வருவதின் மர்மம் என்ன?

கோயில்களில் விநாயகர் உட்பட சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி வணங்கும் கடவுள்களுக்கு, வழக்கமாக மிருதங்கம், கடம், வீணை, புல்லாங்குழல் போனறவைதான் இசைக்கப்படும்; வீதி உலா புறப்படும்போது நாதஸ்வரம், தவில் கொண்டு தான் வாசிப்பார்கள்.

ஆனால் இப்போது விநாயகர் நகர் உலா புறப்படும்போது ‘பறை’ அடித்து கொண்டாடுவதின் மர்மம் என்ன?

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே. - வே.மதிமாறன்