
அஸ்ஸாம் மாநிலத்தில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர். ஒரு பெண் பத்தாம் வகுப்பும் மற்ற பெண் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தனர். நிலாம் பஜார் என்ற இடத்தில் இந்த பள்ளி அமைந்துள்ளது. சென்ற புதன் கிழமையிலிருந்து இந்த இரு பெண்களும் வீட்டுக்கு வரவில்லை. எனவே காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். நேற்று இந்த பெண்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டனர். இது கற்பழிப்பு கொலையா அல்லது வேறு பிரச்னைகளா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கிராமத்து மக்கள் 'இவர்களை கற்பழித்து கொன்று விட்டு அதனை மறைக்க தூக்கில் ஏற்றியுள்ளனர்' என்கின்றனர்.
கரீம் கஞ்ச் காவல் துறை அதிகாரி நபின்சிங் செய்தியாளர்களிடம் பேசும் போது 'இரண்டு உடல்களையும் போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கைக்காக காத்திருக்கிறோம்' என்கிறார். வழக்கம் போல் இது காதல் தோல்வி என்று சொல்லி ஆதிக்க சாதி இளைஞர்கள் சுதந்திரமாக வெளியில் உலா வருவர். இது வழக்கமாக நடப்பது தானே! மனமுடைந்த ஒரு பெண்ணால் இவ்வளவு உயரம் மரத்தின் மேல் ஏறி தூக்கில் தொங்க முடியுமா? இதற்கு சாத்தியமா? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்ததை நமது நாட்டு நீதி மன்றங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு தான் இதே போல் உத்தர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விட்ட கொடுமையை பார்த்தோம். தலித்களின் உயிரானது அவ்வளவு இலகுவாக தெரிகிறது ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு!
வெட்கப்படுங்கள் ஆட்சியாளர்களே!
வெட்கப்படுங்கள் ஆண் மக்களே!
வெட்கப்படுங்கள் ஆதிக்க சாதியாளர்களே!
வெட்கப்படுங்கள் இந்திய குடிமகன்களே!
வெட்கப்படுங்கள் இந்துத்வவாதிகளே!
தகவல் உதவி:
தி ஹிந்து நாளிதழ், என்டிடிவி
05-09-2014
No comments:
Post a Comment