
நான் கை கூப்புகிறேன்
அவர் கை கொடுக்கிறார்
…….எனக்குப் புரிகிறது
நடக்கிறேன்
கடக்கும் கண்கள்
கணைகளாகின்றன
…….எனக்குப் புரிகிறது
மருத்துவர்
பதிக்கும் ஸ்டெத்தோடு
பதிகின்றன விரல்கள்
…….எனக்குப் புரிகிறது
கடைக்காரர்
சில்லரை தருகிறார்
சீண்டுகின்றன விரல்கள்
…….எனக்குப் புரிகிறது
எடிஎம்மில்
எனக்கு முன்னால் நிற்பவர்
வழிவிட்டு வழிகிறார்
…….எனக்குப் புரிகிறது
ரயிலில்
இடம்விட்டு எழுகிறார்
இடிப்பதுபோல் நிற்கிறார்
…….எனக்குப் புரிகிறது
நாற்பதைத் தாண்டியவள் நான்
எனக்கே இந்நிலை
உங்களுக்கும் புரியும்
புரியமட்டுமே முடியும்
பாம்புகளை விழுங்க
தவளைகளால் முடியாது
சக்தியும்
சகதியுமாய் சமுதாயம்
சகிப்போம்
கவிதை ஆக்கம்
அமீதாம்மாள்
1 comment:
அருமை..
Post a Comment