'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, May 30, 2018
துப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்!
துப்புறவு தொழிலாளர்களுடன்
புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்!
பொதுவாக துப்புறவு
பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உடைகள் சுத்தமாக இருக்காது. கடுமையான வேலை காரணமாக
உடைகளில் வியர்வை நாற்றமும் அடிக்கும். எனவே சமூகத்தில் இவர்களை ஒதுக்கியே வைத்திருப்பர்.
நம் நாட்டிலோ தோட்டிகள் என்று கூறி முற்றாக அவர்களை ஒதுக்கி வைத்திருப்போம். அந்த உடையோடு
வந்தால் பல கொவில்களுக்குள்ளும் விடுவதில்லை.
ஆனால் இஸ்லாம் இதனை
கண்டிக்கிறது. உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவு என்கிறது இஸ்லாம். சில நாட்கள் முன்பு
நமது தமிழகத்தில் துப்புறவு தொழிலாளர்களை மண்டபத்துக்கு அழைத்து அவர்களோடு சமமாக அமர்ந்து
இஸ்லாமியர் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டோம்.
அதே போல் இங்கு புனித
மெக்கா பள்ளியின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ் அவர்கள் துப்புறவு தொழிலாளர்களோடு ஒன்றாக
அமர்ந்து நோன்பு திறக்கும் காட்சியை பார்க்கிறோம். இஸ்லாம் சமத்துவத்தை வெறும் வாயளவில்
வைக்காமல் செயல்படுத்தியும் காட்டுகிறது.
https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/948377788676496
Tuesday, May 29, 2018
பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!
'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக்
கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன்
நெற்றி.'
-குர்ஆன் 96 : 14,15,16
இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.
-குர்ஆன் 96 : 14,15,16
இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.
குர்ஆன் இங்கு
பொய் சொல்பவர்கள், தவறான
நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது.
பொய் சொல்வதற்கும், தவறான நடத்தை
நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் ?
ஒரு மனிதனின்
மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அங்கு நமது
தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல்
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy
& Physiology என்ற புத்தகம் மூளையின்
செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு
சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில். இந்த முன் பக்கம்
என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில்
அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு
காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண்டுகோலாய்
இருக்கிறது.
இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.
இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.
ஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.
ஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.
“அறிவியல் சொல்கிறது,
விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா?
அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா?
அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
…….
“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
“ஆம் ஐயா..”
“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் இல்லை’ என்று. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”
“ஒன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”
“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.
“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
(பேராசிரியர் தன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
“அப்படியென்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையான’ அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”
(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
“யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் என்ன சொல்கின்றன?”
“அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை என்று.”
“மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போனது!)
“நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”
“அது தான் ஐயா.. இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”
இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.
Subscribe to:
Posts (Atom)