Followers

Monday, May 21, 2018

என்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1


என்னை கவர்ந்த இஸ்லாம் - பாகம் 1
ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - ரமழான் 2018

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/943672442480364/



10 comments:

Dr.Anburaj said...

மாணிக்கவாசகரின் பக்தியும், விஞ்ஞான அறிவும்
திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது. அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். சிவபுராணத்தில், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.

இவண், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள முயல்வோம்.

சிவனின் கருணையைப் பெறும் வழி:

தினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை முணுமுணுக்கிறோம். இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா? வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா? சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன? மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோருமேத்தப் பணிந்து[5]. — சிவபுராணம்: 93-95

சிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல குருட்டுநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன. கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து. ஒரு டேப் ரிகார்டரோ, ஐபாடோ, டாப்லெட்டோ, சி.டி. பிளேயரோ நம்மைவிடச் சிற்ப்பாக துதிப்பாடல்களைப் பிழையேதுமின்றிப் பல்லாயிரம்முறை சொல்லும் திறன்படைத்தவை. பொருளறியாமல் சொல்லும் அவற்றிற்குக் கிடைக்காத முக்தியா, பிழையுடன் பொருளறியாது சொல்லும் நமக்குக் கிட்டிவிடும்?

எப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார். எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.

எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தால் அவரால் இப்படி வழிகாட்டமுடியும்!

Dr.Anburaj said...

அவரின் அறிவியல் திறன்:

எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது. சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம். ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம். பள்ளிகளில் கற்பிக்கப்படும் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது. இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6] – சிவபுராணம்– 26-31

உயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார். ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார். அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது. இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்?

Dr.Anburaj said...

மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது. இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறியவாகப் பெரியோன்; — 1-6

இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம். பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

Image result for அண்டம்

சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார். அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம். நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால், கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் எயிற்றியிருப்பதைக் கண்ணுறும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

Dr.Anburaj said...

அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம். ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.

யானை முதலா எறும்பு ஈறாய

ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)

ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் — போற்றித் திருவகலல்: 11-25

மிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்; அப்படி வளரத் துவங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:

Dr.Anburaj said...

தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது. அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும். அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும். மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும். நாங்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும். ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும். ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும். எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும். பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பாய்யும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.

மனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.

ஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே. மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.

Dr.Anburaj said...

கவி வன்மை:

திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை. அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.

அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன. இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்!

பலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார். இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.

சிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.

கீர்த்தித் திரு அகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப்பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார். அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு. இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.

திருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தைவிடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.

மரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.

மார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம். தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்கவேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின் நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமைபெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக்கவிதைகளில் மாறிவிடுகிறார்.

இதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமைமூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியைழுச்சியில் மாறுகிறார். கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காக்கக் காத்திருக்கும் அடியார்களைப்பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப்பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.

நாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.

ஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப்பெற்று, சிவபெருமானைத் துதிக்கவேண்டும். இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி1 எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!! போற்றி, போற்றி!!!!

Dr.Anburaj said...

தெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்

தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய்
கைவிடாது எம்மை நீ ஆண்டருள் செய்குவாய்
பவக்கடல் தாண்டவே செய்குவாய் தெய்வமே
நின்பதம் எம்அரும் தோணியாய் நிற்குமே.


ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு எண்ணிடும்
எல்லாப் பொருட்களும் எண்ணி முடித்தபின்
எஞ்சிடும் த்ருக்கினைப் போலவே எம்உளம்
நின்திருப் பாதத்தில் ஒன்றிடச் செய்குவாய்


அன்னமும் ஆடையும் தேவையாம் யாவுமே
இன்னல்ஒன் றின்றியே தந்தெமைக் காத்து, மேல்
செல்வராய் மாற்றிடும் நீ ஒரு மூர்த்தியே
வல்லமை உள்ளவன் எங்கட்குத் தம்பிரான்


ஆழியும் அலைகளும் காற்றொடு ஆழமும்
போலவே நாங்களும் மாயையும் நின்திரு
மேன்மையும் நின்அருள் ஜோதிப் பிரகாசமும்
நீயுமாய் என்னுளே நின்று விளங்குவாய்

ocean

நீயன்றோ சிருஷ்டியும் சிருஷ்டிக்கு நாதனும்
சிருஷ்டிக்கு இலக்காக நிற்கும் பிரபஞ்சமும்;
நீயன்றோ தெய்வமே சிருஷ்டிக்கப் பட்டுள
யாவுமாய் மாறிடும் எல்லாப் பொருட்களும்.

siva1

நீயன்றோ மாயையும் மாயாவி ஆவதும்
மாயா வினோதனாய் நின்றிடும் நாதனும்
நீயன்றோ மாயா விலாஸத்தை மாற்றியே
ஸாயூஜ்யம் நல்கிடும் ஸத்குண சீலனும்.

maya

நீ ஸத்யம் எங்கும் நிறைவான மெய்ப்பொருள்
நீ சித் எனும் ஞானம்; நீயே ஆனந்தமும்;
நிகழ்வதும் வருவதும் போனதும் வேறல.
நீயன்றோ ஓதிடும் ஓர் மொழி ஆவதும்.

trimurthi

அகம்-புறம் எங்கணும் இடைவெளி இன்றியே
நின்றிடும் நின்பதம் மேன்மையாம் மென்பதம்;
வாழ்த்துகின்றோம் உன்னை வாழிய நாதனே
வாழ்க நீ வெல்கஎம் நாதனே தெய்வமே.

vr

வாழ்க மகாதேவ வெல்கஎம் நாதனே
தீனதயாளனே ஏழைபங்காளனே
வெல்கஎம் நாதா சிதானந்த மூர்த்தியே
தயாசிந்துவாம் கருணாகர ஜயஜய.

an1

ஆழமாய் உள்ளதாம் நின்திரு ஆழியாம்
ஆழியில் நாங்கள் அனைவரும் ஆழுவோம்
ஆழ்வதால் நித்தியம் வாழுவோம் வாழுவோம்
ஆனந்த வாரியில் வாழுவோம் வாழுவோம்.

(ஸ்ரீநாராயணகுரு அவர்கள் இயற்றிய துதி பாடல்)
தமிழில் திரு.துளசிராம் ஐயா-

நன்றி தமிழ்ஹிந்து

Dr.Anburaj said...

ஆரவாரமில்லாத உறுதியான வேலை:

….. பெரிய பதவியில் அமர்ந்திருக்கிற ஒவ்வொருவனும் பெரியவனாக இருப்பான். மேடையின் மீது பிரமாதமான வெளிச்சமுள்ள விளக்குகள் ஒளி வீசுகையில் கோழையும் கூடத் துணிவுள்ளவனாக ஆகி விடுவான். உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது! யாருக்குத் தான் நெஞ்சு துடிக்காது? தனது முழு சக்தியையும் காட்டி வேலை செய்கிற வரையில் யாருடைய நாடி தான் படபடவென வேகமாகத் துடிக்காது?

ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் சிறு புழு தான் உண்மையில் மிக உயர்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. அது மௌனமாகத் தன் கடமையைச் செய்கிறது. உறுதியாகக் கணத்துக்குக் கணம் மணிக்கு மணி அது தன் வேலையைச் செய்துகொண்டே போகிறது.

Ram and Squirrel

……ஒரு அணில் இருந்ததாம். அது மணலில் புரண்டுவிட்டு முன்னும் பின்னும் ஓடிப் பாலத்தின் மேல் சென்று தன் மீதுள்ள மணலை உதறிற்றாம். இவ்வாறாகச் சிறு அளவில் ராமருடைய அணியில் மணலைப் போட்டு அந்த அணில் வேலை செய்ததாம்.

குரங்குகள் சிரித்தன. ஏனெனில் அவை முழு மலைகளையும், முழுக் காடுகளையும் பெரிய மணல் மூட்டைகளையும் அணைக்காகச் சுமந்து வந்தன. ஆதலால் மணலில் புரண்டுவிட்டுத் தன் உடலைச் சிலிர்த்து உதறிய அச்சிறு அணிலைக் கண்டு அவை சிரித்தன.

ராமர் அது கண்டு “இந்தச் சிறு அணில் வாழ்க; தனது முழுச் சக்தியுடன் தன்னுடைய வேலையை அது செய்து வருகிறது. ஆகவே உங்களிடையே மிகப் பெரியவரைப் போல, அந்த அளவுக்கு இதுவும் உயர்ந்ததாகும்” என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்.

Dr.Anburaj said...

உங்களது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள்:

இமாலயப் பகுதிகளில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னே மிக நீண்ட பாதை கிடந்தது.

எங்களுடன் கூடக் கிழவர் ஒருவர் இருந்தார். நூற்றுக் கணக்கான மைல்களுக்கு வழி முழுவதும் ஒரே ஏற்ற இறக்கமாக உள்ளது. தமக்கு முன்னே உள்ள நீள் வழியைக் கண்டதும் அந்தக் கிழவரான துறவி, “ஓ! ஐயனே! இவ்வளவு தூரத்தை எப்படிக் கடந்து செல்வது? இனிமேல் என்னால் நடக்கவே முடியாது. எனது மார்பு வெடித்தே விடும்” என்றார்.

“உங்கள் காலுக்குக் கீழே பாருங்கள்” என்று கூறினேன். அவரும் பார்த்தார். “உங்களுடைய கால்களின் கீழே இருக்கிற பாதை நீங்களே கடந்து வந்த பாதையாகும். உங்கள் முன்னே நீங்கள் காணுகின்ற பாதையும் இதைப் போன்றதே தான். அதுவும் விரைவில் உங்களது காலின் கீழ் வந்துவிடும்” என்றேன்.

மிகப் பெரிய உயர்ந்த விஷயங்களெல்லாம் உங்கள் காலின் கீழ் உள்ளன. ஏனெனில் நீங்கள் தெய்வீக நட்சத்திரங்கள். இவையெல்லாம் உங்கள் காலின் கீழ் கிடக்கின்றன. நீங்கள் விரும்பினால் கைப்பிடி நிறைய நட்சத்திரங்களை எடுத்து விழுங்கிவிட முடியும். உங்களது உண்மை இயல்பு அப்படிப்பட்டதாகும்.

வலிவுடனிருங்கள். எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டுவிட்டு அப்பாற் செல்லுங்கள். விடுதலை பெறுங்கள்.-சுவாமி விவேகானந்தா்.

Dr.Anburaj said...

இந்திய பண்பாடு இலக்கியம் வரலாறு சம்பந்தப்பட்ட பதிவுகளை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.