Followers

Tuesday, May 29, 2018

சகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்!


சகோதரர் பால விக்னேஷூக்கு கிடைத்த உதவிகள்!

துபாயிலிருந்து நண்பர் Bilal Aliyar தான் அந்த வழக்கை எடுத்து வந்தார். தமாம் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பாலவிக்னேஷ் என்ற தேனீ மாவட்டத்து இளைஞன் இரண்டே கால் வருடமாக ஊர் போக இயலாமல் கஷ்டப்படுவதாகவும், ஏஜெண்ட்டால் ஏமாற்றப்பட்டு மிகக்குறைவான சம்பளத்தில் பணிபுரிந்து வரும் அவர் ஊருக்குப் போக விரும்புவதாகவும் கம்பெனி அனுமதிக்கவில்லை என்றும் நீங்கள் ஏதும் உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார்.

களம் இறங்கினோம். தொடர்புடைய எண்களுக்கு அலைபேசியதில் முதலில் எவ்வித மதிப்புமில்லை.தெரிந்ததுதானே.. அடுத்தபடியாக அந்த பாலவிக்னேஷை நேரடியாக அவருடைய மேலாளரிடத்தில் அலைபேசியை கொண்டு கொடுக்க சொல்லி பேசினோம். உரிய பதில் தராவிடில் இந்தியத் தூதரகத்தில் புகார் செய்வோம்.இனி உங்கள் நிறுவனம் எந்த இந்தியனையும் வேலைக்கு எடுக்காதபடி தடுப்போம் என்றெல்லாம் பேசியது பலனைத் தந்தது.

அவருடைய பணியின்போது நிறுவனத்துக்கு கொடுக்கவேண்டிய கொஞ்சம் தொகை இருந்ததை கொடுத்துவிட்டால் அனுப்பிவிடுகிறோம் என்று சொல்ல பால விக்னேஷிடம் அதை உறுதிப்படுத்தினேன். பின் தமாம் நண்பர் Manickavels Somasundaram தொடர்பு கொண்டு பேசினேன். நீங்கள் பணம் கொடுங்கள், நான் அனுப்பி வைக்கின்றேன் என்றேன். நேரடியாக போய் பணம் தந்தார். அவருக்குரிய பணத்தை நண்பர் Jiyavudeen Mohamed மூலம் அனுப்பி வைத்தேன். பணம் கிடைத்த அன்றே அவருக்கு எக்ஸிட் அடிக்கப்பட்டு அவருடைய உறவினர் ஒருவர் கொடுத்த பயணசீட்டு உதவியால் நாடு திரும்பினார் பாலவிக்னேஷ். அவருடைய அக்கா கணவர் சற்றுமுன் அவர் வீடு திரும்பியதை உறுதிபடுத்தினார்.

சொன்னவுடன் செயலாற்றிய நண்பர் மாணிக்கம் இரண்டு நாட்கள் அவருடனே சுற்றி அவரும் அவர் நண்பரும் சேர்ந்து விமானம் ஏற்றி அனுப்பும் வரை உடன் இருந்திருக்கிறார். சொன்னவுடன் பணம் அனுப்பிய ஜியா பாய், அதை சேர்த்து செயலாற்றிய மாணிக்கம் எல்லோர்க்கும் என் பேரன்புப் ப்ரியங்கள்.

ஒரு மனிதரை வாழ வைத்தவர் ஒரு சமூகத்தை வாழவைத்தவர் போலாவார் என்பது நபிமொழி. இந்த நோன்பு நாளில் அப்படி ஒரு உதவி செய்ய வாய்ப்பளித்த இறைவனுக்கே எல்லாப் புகழும்.

ஷேக் முஹமது அவர்களின் பதிவிலிருந்து......




1 comment:

Dr.Anburaj said...


மனிதனுக்கு மனிதன் இப்படி ஒரு உதவியைச் செய்யாவிடில் அவன் மனிதனாகப் பிறக்கவில்லை என்றுதான் அா்த்தம்.

உதவி செய்தோருக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.