Followers

Monday, May 14, 2018

பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவன தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என்பதால் அவர் அனைத்து பொருப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இனி இம்மையிலும் மறுமையிலும் இறைவன் அவரிடம் விசாரித்துக் கொள்வான். குர்ஆன் ஹதீஸில் சிறந்த புலமையுள்ளவர் இவ்வாறு சைத்தானின் சூழ்ச்சிக்கு அடிமையானது ஆச்சரியத்தை வரவழைத்தது.

அதே நேரம் அவரது ஆய்வுகளையும் தூரமாக்க வேண்டும் என்று சிலர் கருத்து பதிகின்றனர். இன்று வரை அவரது ஆய்வுகளில் நான் எந்த குறையும் காணவில்லை. தனிப்பட்ட நடத்தைகளில் ஒருவர் தவறியிருந்தால் அவரது ஆய்வுகளை தூரமாக்க வேண்டும் என்ற வாதம் சரியானதன்று. குர்ஆனுக்கும் குர்ஆனுக்கு மாறுபடாத ஆதாரபூர்வமான ஹதீஸூகளுக்கும் மாற்றமாக அவர் ஏதும் கருத்துக்கள் சொல்லியிருந்தால் அதனை தூரமாக்குவோம். 30 ஆண்டு காலம் அவர் செய்த ஆய்வுகள் மலைக்க வைக்கக் கூடியவை. முழு இஸ்லாமிய உலகுக்கும் பலனளிக்கக் கூடியவை.

அவரது ஆய்வுகளில் மிகவும் ஆர்வம் காட்டிய நாம் அவரது தனிப்பட்ட வாழ்வை ஆய்வு செய்யவில்லை. அது நமக்கு தேவையுமில்லை என்பதால் ஒதுங்கியிருந்தோம். ஆனால் எவர் மீதும் பரபூரண நம்பிக்கை வைப்பது மிகப் பெரிய தவறு என்பதை பிஜே உணர்த்தி விட்டார். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தற்போது உள்ள நிர்வாகிகள் இறைவனுக்கு மறுமையில் பதில் கூற வேண்டும் என்ற நினைப்போடு தங்களின் நிர்வாகத்தை நடத்துவார்களாக!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இந்த இயக்கம் பல இளைஞர்களின் தியாகத்தால் உருவானது. 30 வருட கால உழைப்பை நாம் வீணாக்கி விடக் கூடாது. அறியாத மக்களை நல்வழிப்படுத்த இனி நபிமார்கள் வரப் போவதில்லை. ஏகத்தவ வாதிகளான நாம் தான் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகளாவிய அளவில் யூத சதியானது இஸ்லாமிய இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் குறி வைத்து இயங்குகிறது. யூத சதிகளுக்கு நாம் பலியாகி விடக் கூடாது. தனி மனித துதி இல்லாமல் இந்த ஏகத்துவ இயக்கத்தை மேலும் சிறப்பாக கொண்டு செல்வோம். வருங்கால நமது சந்ததியினரை அறிவு சார்ந்த மக்களாக மாற்றுவோம்.

இன்று வரிந்து கட்டிக் கொண்டு குறை கூறுபவர்கள் எல்லாம் பிஜே விவகாரம் வெளியாவதற்கு முன்னாலும் எதிர்த்துக் கொண்டிருந்தவர்களே. ஏளனம் செய்து கொண்டிருந்தவர்களே... அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காது நமது பயணத்தை தொடர்வோம். வரும் ரமலானை மறுமைக்கு பயனுள்ளதாக ஆக்குவோம்.

-சுவனப்பிரியன்

4 comments:

vara vijay said...

What is the case

Dr.Anburaj said...

ஏகத்தவ வாதிகளான நாம் தான் அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உலகளாவிய அளவில் யூத சதியானது இஸ்லாமிய இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் குறி வைத்து இயங்குகிறது. யூத சதிகளுக்கு நாம் பலியாகி விடக் கூடாது.

----------------------
அரேபிய வல்லாதிக்க வாஹாபியா்களின் சதிகளால்தான் உலகை பயங்கரவாத செயல்களால் மனித இரத்த வெள்ளத்தில் முழ்கடித்து வருகின்றார்கள். யுதர்களுக்கும் - உலகில் ஒரு சிறுபான்மை சமுதாயத்திற்கு-108 நோபல் பரிசுகளைப் பெற்ற சமூகத்திற்கு பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த வஹாபிக காடையா்களால்தான் இந்தியாவிலும் இந்துக்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் அரங்கேறி வருகின்றது.
இந்த வஹாபிக காடையா்களால்தான் பாக்கிஸ்தானிலும் இந்துக்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் அரங்கேறி வருகின்றது.
இந்த வஹாபிக காடையா்களால்தான் பங்களாதேஷ் என்ற கிழக்கு பாக்கிஸ்தானிலும் இந்துக்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்கள் அரங்கேறி வருகின்றது.

------------------------------------------------------------------------
தங்களின் பதிவு இசுலாமிய தக்கியா விற்கு ஒரு உதாரணம்.

vara vijay said...

Nithyanada?

Dr.Anburaj said...

என்னதான் இருந்தாலும் ஒழுக்கம் பேணப்படும் ஆா்வத்தை

நான் பாராட்டியே தீர வேண்டும்.

ஒழுக்கம் குறைந்தவா்களை துணிச்சலுடன் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தில் இருந்து வெளியேற்றியதற்கு அந்தரங்க காரணங்கள் இருக்குதோ இல்லையோ- ஊா் அறிந்த காரியம் ஒழுக்கக் கேடு - பெண் பொன் ஆகிய இரு குற்றங்கள். துணிந்து தவறு செய்தவா்களை நீக்கியதற்கு ஒரு ஒழுக்க உறுதி வேண்டும். ஜமாத்திடம் அது உள்ளதே. வாழக வாழ்த்துக்கள். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்.
---------------------
யுதர்களின் சதி என்ன இருக்கின்றது.