Followers

Tuesday, May 15, 2018

மாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்!


மாற்று மதத்தவரையும் எந்த அளவு வசீகரித்துள்ளார்!

வாசிப்போம்! யோசிப்போம்! Xavier S John பதிவிலிருந்து.....

சகோ.பீஜே அவர்களின் சர்ச்சை பற்றிய பதிவு போடவில்லையென்றால் நான் முகநூலில் இருந்து என்ன பிரையோஜனம்...

சகோ.பீஜே அவர்கள் விஷயத்தில் இரு சாராரை காண முடிகிறது...

ஒருவர் அவருக்கு ஆதரவு தருபவர் மற்றவர் அவரை சாடுபவர்... முதலாமவரில் சிலர் அவர் தவரிழைத்தாலும் கொள்கையே எங்களுக்கு தலைவன் என்கின்றனர்... இரண்டாமவர்களில் இவரே யோக்கியன் இல்லாத போது இவரின் கொள்கை அனைத்தையும் தூக்கி போட வேண்டியதுதானே என்கின்றனர்...!

 இதை நான் வேறு கோணத்தில் அனுகுவதோடல்லாமல் இதற்கான முற்றுப்புள்ளியாக ஒரு சிறு யோசனை கூறுகிறேன்... சரியெனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்...

பொதுவாகவே நம்மில் பலருக்கு ஒரு எண்ணம் உண்டு... அறிவுரை சொல்பவர் யோக்கியமில்லாத போது அவரின் அறிவுரையை மனம் ஏற்காது இது மனித இயல்பு...!

ஆனால் அறிவுள்ளவர்கள் சிந்திக்கக்கூடியவர்கள்,,, அறிவுரையோ  யோசனையோ யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களே தவிர சொன்னவரை தனி நபர் ஆய்வுக்கு உட்படுத்தமாட்டார்கள்...!

இந்த உலகிலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கும் போது இது ஒரு சாதாரண அற்ப விஷயம்... இதற்கான தீர்வையும் குர்ஆன் ஹதீஸ் களிலிருந்தே பார்ப்போம்...

சரி கொஞ்சம் தெளிவாக சொல்கிறேன்,,,
நபிகளார் காலத்தில் ஷைத்தான் எதையோ திருட வந்து மாட்டிக்கொண்டதாகவும் அதை பிடித்து கட்டிப்போட்டிருந்தபோது அந்த ஷைத்தானாகப்பட்டது குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை (பெயர் ஞாபகமில்லை) ஓதிக்காண்பித்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டதாகவும் ஹதீதில் படித்திருக்கிறேன்...!

நபிகளாரோ அவருடனிருந்தவர்களோ... நீயே ஒரு வழிகெடுக்கும் ஷைத்தான், நீ எங்களுக்கு ஓதிக்காட்டுகிறாயா என்று அந்த அத்தியாயத்தை தூக்கி எரிந்துவிட்டார்களா என்ன...?

இதன் மூலம் நாம் பெற்ற படிப்பினை... ஒருவர் நல்லவரோ கெட்டவரோ அவர் கூறும் நல்ல விஷயங்களை கேட்டுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்... அவர் பற்றிய ஆய்வு நமக்கு தேவையுமில்லை, அவரை சாடவோ சாபமிடவோ நமக்கு அதிகாரமில்லை. அவ்வாறு செய்யும் பட்சத்தில் தீர்ப்பு நாள் என்று ஒன்று இருப்பதை நாம் மறந்துவிட்டோம் அல்லது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று பொருள்... ஒரு வேளை அவரால் யாராவது நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருந்தால்...  வழக்கு தொடுத்து இந்த உலகில் தண்டனை பெற்றுத்தரலாம்... மறுமையிலும் அவரை நீங்கள் மன்னிக்காமல் அங்கேயும் தண்டனை வாங்கித்தரலாம்...! ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் மன்னிக்காதவரை படைத்தவனும் மன்னிக்கமாட்டானென்பது உங்களுக்கு தெரியும்...!

அது போக அவருடைய கொள்கையையும் தூக்கி எரியவேண்டுமென்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அவர் கூறிய கொள்கைகள் எதுவும் அவரின் சொந்த கருத்துக்களில்லை... அவைகளனைத்தும் குர்ஆன் ஹதீதிலிருந்து திரட்டப்பட்டு பாமரனுக்கும் எளிதில் புரியக்கூடிய விதத்தில் எடுத்துரைத்தார்... அதை தூக்கி எரிய வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.!!

மேலும்... சகோ.பீஜே போன்றவர்களுக்காகவே பல வசனங்களை படைத்தவன் அன்றே குர்ஆனில் கூறாமளில்லை...

2:44. நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இதைப்படிக்கும் வேளையில் என்னையும் சகோ.பீஜே அவர்களுக்கு முட்டுக்கொடுப்பவர்களின் ஒருவன் என்று முடிவு செய்துவிட வேண்டாம்... நான் ததஜ என்ற இயக்கத்திலும் இருந்ததில்லை வேறு எந்த இயக்கத்திலும் இருக்கவுமில்லை...!

மாறாக 2006 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்திட்ட ஐந்து வருடம் வின் டிவியில் சகோ.பீஜே அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன்... அப்போது நான் நாத்திகன் உங்கள் பாஷையில் காஃபிராக இருந்த சமயம்... முதல் இரண்டாண்டுகள் இவருடைய நிகழ்ச்சியைப்பார்த்து ஏளனம் செய்திருக்கிறேன் மனதுக்குள் சிரித்திருக்கிறேன்... அதன் பிறகு அவரின் குர்ஆன் ஹதீஸின் எளிமையான ஆதாரங்கள் என்னை சிறிதளவு சிந்திக்கவைத்தது... அவ்வளவுதான் சகோ.பீஜே விற்கும் எனக்குமான தொடர்பு... அன்றும் இன்றும் என்றுமே சரி அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை... ஏனென்றால் அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய சொந்தக்கருத்துக்களில்லை என்பது எனது ஆறாவது அறிவிற்கு தெரியும்... இவர் மட்டுமல்ல அதன் பின் ஜாஹிர் நாயக், அஹ்மத் தீதாத் போன்றோர்களையும் நான் தலைவராக ஏற்றுக்கொள்ள வில்லை... அவர்களின் கருத்தும் அவர்களின் சொந்த கருத்தில்லை என்பதை நானறிந்திருந்தேன்...!!

உஹது போர்களத்தில் எதிரிகள் நபிகளாரின் மண்டையை உடைத்த வேளையில் நபிகளார் அவர்களைப்பார்த்து கூறினார்... இறைதூதரை இரத்தம் பார்த்த சமூகம் எவ்வாறு சொர்கம் செல்லும் என்றவுடன் அவரின் இந்த வார்த்தையைக்கண்டித்து...

நபியே இதில் உமக்கு எவ்வித அதிகாரமுமில்லை அவர்கள் செய்த நன்மையின் காரணமாக சொர்கம் செல்வதும். அவர்கள் செய்த தீமையின் காரணமாக நரகம் செல்வதும் எம்மிடமே உள்ளது... என்று படைத்தவன் இறக்கிய ஒரு வசனத்தை பார்க்கிறோம்... இது சும்மா டைம்பாஸுக்காகன்னு நினைச்சிங்களா...? இதுவும் படிப்பினை அதாவது ரஸூல் (ஸல்) அவர்களுக்கே ஒருவரை சாபமிட அதிகாரமில்லை என்கிற போது நீங்களும் நானும் எம்மாத்திரம்...!!

மனிதனை பலகீனமானவனாக படைத்திருக்கிறோம்... என்று கூறுகிறான் அப்படியிருக்க அந்த பலகீனத்தால் தவறு செய்த ஒருவரை சாபமிட்டு நீங்கள் பாவத்தை சேர்த்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது படைத்தவன் பார்த்துக்கொள்ளட்டும் நமக்கு அதில் அதிகாரமில்லையென்று மௌனமாகப்போகிறீர்களா...?

முடிவு உங்களுடையது...!!!

49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.



7 comments:

Dr.Anburaj said...

நபிகளார் காலத்தில் ஷைத்தான் எதையோ திருட வந்து மாட்டிக்கொண்டதாகவும் அதை பிடித்து கட்டிப்போட்டிருந்தபோது அந்த ஷைத்தானாகப்பட்டது குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை (பெயர் ஞாபகமில்லை) ஓதிக்காண்பித்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டதாகவும் ஹதீதில் படித்திருக்கிறேன்...!

நபிகளாரோ அவருடனிருந்தவர்களோ... நீயே ஒரு வழிகெடுக்கும் ஷைத்தான், நீ எங்களுக்கு ஓதிக்காட்டுகிறாயா என்று அந்த அத்தியாயத்தை தூக்கி எரிந்துவிட்டார்களா என்ன...?
------------------------------------------
அண்டப்புளுகு ஆகாய புளுகு. பையித்தியக்காரன் கூட இதை நம்ப மாட்டான்.நான் நம்பவில்லை.

Dr.Anburaj said...

ஆமீனா ஒரு கேள்விக்குறி

கடந்த வாரம், முஹம்மவின் இளமைக் காலம் பற்றிய சில குறிப்புகளுக்காக இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது தற்செயலாக islam4theworld.net என்றொரு இஸ்லாமிய தளத்தை பார்வையிட நேர்ந்தது.
Why another Rasul (Messenger) in Arabia என்ற பதிவில் முஹம்மதின் பெற்றோர்களைப்பற்றி மிக சுருக்கமாக விவரித்திருந்தார்கள். எல்லா இஸ்லாமிய தளங்களும் இதைத்தானே செய்துகொண்டிருக்கின்றன புதிதாக இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

விஷயமல்ல விவகாரமே இருக்கிறது!

அதற்கு முன் முஹம்மதின் பாட்டனார் அப்துல் முத்த்லீப் தனது சந்ததியினரை பெருக்கிக்கொண்ட கதையை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

அப்துல் முத்தலிப் தனக்கு ஹாரித் என்ற ஒரு மகனைத் தவிர, நீண்டகாலமாக வேறு குழந்தைகள் இல்லையே என்று ஏங்கித் தவித்தவராக இருந்தார். தனக்கு பத்து மகன்கள் பிறந்து, அவர்கள் வாலிப வயதை அடைந்தால், அவர்களில் ஒருவரை தனது கடவுளான ஹபலுக்கு பலியிடுவதாக வேண்டிக்கொள்கிறார். என்ன ஆச்சரியம்..! அப்துல் முத்தலீபிற்கு பத்து மகன்கள் பிறந்து வாலிப வயதை அடைகின்றனர்.

எப்படி ?

அந்தப்புரத்தில் மனைவியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் என்ற அறிவுபூர்வமான யுக்தியை செயல்படுத்துகிறார்.

முதல் மனைவி ஸும்ரா பின்த் ஜனத்ப் பிற்கு
ஹாரித் இப்ன் அப்துல் முத்தலீப்

இரண்டாம் மனைவி லுப்னா பின்த் ஹஜர்-க்கு
அப்துல் உஜ்ஜா இப்ன் அப்துல் முத்தலீப் (அபூ லஹ்ப்)

மூன்றாம் மனைவி ஃபத்திமா பின்த் அம்ர்-க்கு
அபூதாலிப் இப்ன் அப்துல் முத்தலீப்
அல்-ஜுபைர் இப்ன் அப்துல் முத்தலீப்
அப்துல்லா இப்ன் அப்துல் முத்தலீப்

நான்காம் மனைவி ஹாலா பின்த் வஹ்ப்-பிற்கு
ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப்
குத்தம் இப்ன் அப்துல் முத்தலீப்
ஹிஜில் இப்ன் அப்துல் முத்தலீப்
ஸஃபியா பின்த் இப்ன் அப்துல் முத்தலீப்

ஐந்தாம் மனைவி நாதிலா பின்த் குபப் அல் கஸ்ரஜ்-க்கு
அப்பாஸ் இப்ன் அப்துல் முத்தலீப்
தரார் இப்ன் அப்துல் முத்தலீப்

இப்படியாக ஸஃபியா என்றொரு மகளுடன் பத்து மகன்கள் என்ற தனது இலக்கை வெற்றிகரமாக அடைகிறார். அவர்கள் வாலிப வயதை அடைந்தவுடன், முன்னர் வாக்களித்தவாறு, ஒருவிதமான குருட்டு தைரியத்தில் எந்த மகனை பலியிடுவதென்று அறிய அம்புகளில் பெயரை எழுதி ஹபல் என்ற தங்களது கடவுளின் சிலையின் முன்னிலையில் குலுக்கல் முறையைத் தேர்தெடுக்க, அதில் அப்துல்லாவின் பெயர் வந்துவிடுகிறது. உடனே மகனை அறுத்து பலியிடுவதற்கு அவரென்ன காட்டுமிராண்டி இப்ராஹீமா?

அதனால் அறிவுபூர்வமாக ஹபலுக்கு அல்வா கொடுக்க நினைக்கிறார். மீண்டும் அம்புகளை வைத்து குலுக்கல் முறையில் ஹபலுடன் பேரம் பேசுகிறார். அல்லாஹ்வுடனே பேரம் பேசுவது இருக்கையில் ஹபலுடன் பேரம் பேசுவதில், நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

பலியாக பத்து ஒட்டகம் வேண்டுமா அல்லது அப்துல்லா வேண்டுமா என்று பேரம் துவங்குகிறது. ஹபல், அப்துல்லாதான் வேண்டும் என்று அம்பின் மூலம் கூறிவிடுகிறது. அதிர்ச்சியடைந்த முத்தலீப் மீண்டும் இருபது ஒட்டகமா அல்லது அப்துல்லாவா என்கிறார். ஹபல், அப்துல்லாவைத் தேர்தெடுக்கிறது. பத்து ஒட்டகங்கள் என்ற வீதத்தில் எண்ணிக்கை அதிகரித்தவாறு பேரம் நீண்டு கொண்டே செல்கிறது. அப்துல் முத்தலீப் விடுவதாக இல்லை ஹபலும் விடுவதாக இல்லை. இறுதியில் நூறு ஒட்டகமா அல்லது அப்துல்லாவா என்ற பெரிய பேரத்தை முவைக்கிறார். ஹபல் சலிப்படைந்து விட்டது போலும், இவன் இப்படியே பேரம் பேசிப்… பேசி…ப்… வெறுப்பேற்றி பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவான் என்று அஞ்சியோ… என்னவோ நூறு ஒட்டகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஹபல் மட்டும் தனது முடிவில் உறுதியாக இருப்பின் நாம் ”இறையில்லா இஸ்லாம்” என்ற இந்த இணையதளத்தை இயக்கவேண்டிய தேவை இருந்திருக்காது! முஸ்லீம்கள் ஹபலுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள்!
அப்துல் முத்தலீப் நூறு ஒட்டகங்களை அறுக்க முடிவு செய்கிறார். இத்தனை ஒட்டகங்களின் இறைச்சியையும் முத்தலீபும் அவரது மகன்கள் மட்டுமே தின்று தீர்க்க முடியாது. எனவே தனது உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எல்லோரையும் அழைத்து பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்.
அந்த விழாவிற்கு பின்னர் ”ஜுஹ்ரா” குலத்தின் தலைவர் வஹ்ப் பின் அப்து மனாஃப் பின் ஜுஹ்ராவின் இல்லத்திற்கு செல்லும் முத்தலீப், அங்கு வஹ்ப் பின் அப்து மனாஃபின் பாதுகாப்பில் இருந்த அவரது சகோதரர் மகள் ஆமீனா பின்த் வஹ்பை தனது மகன் அப்துல்லாவிற்கு திருமணம் செய்துதருமாறு கோரிக்கை வைக்கிறார்; வஹ்ப் சம்மதிக்கிறார். விஷயம் இத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.

Dr.Anburaj said...

அங்கிருந்த வஹ்ப் பின் அப்து மனாஃபின் மகள் ஹாலா பின்த் வஹ்ப்-ன் மீது அப்துல் முத்தலீப்பின் கண்கள் பாய, ஹாலா பின்த் வஹ்பைத் தனக்குத் திருணம் செய்து தருமாறு மீண்டும் கோரிக்கை வைக்க, அதற்கும் அவர் சம்மதிக்கிறார். இவ்வாறாக அப்துல் முத்தலீபிற்கும் அவரது மகன் அப்துல்லாவிற்கும் ஒரே நாளில், ஒன்றாக திருமணம் நிகழ்கிறது. ஆமீனாவும் ஹாலாவும் ஏறக்குறைய சமவயதுடையவர்கள். இன்னும் சில அறிவிப்புகளில் திருமணத்திற்குமுன் அப்துல்லாவின் முகத்தில் ஒருவிதமானா பிரகாசம் தென்பட்டதாகவும் (வேறென்ன முஹம்மதுதான்!) அதைப்பெற்றுக்கொள்ள பெண்கள் பலர் போட்டியிட்டனர்; இறுதியில் அந்த வாய்ப்பு ஆமீனாவிற்கு கிடைத்தது என்றும் கூறுகின்றனர்.



திருமணம் முடிந்தவுடன் வழக்கமாக எல்லோரும் என்னென்ன செய்வார்களோ அதைத்தான் தந்தையும் மகனும் தவறாமல் செய்தனர். கிளுகிளுப்பாக சில நாட்கள் கழிந்த்து. கிளுகிளுப்பு போதும் மகனே! வியாபரத்தை கவனிக்க கிளம்பு என்று அப்துல்லாவை ஷாம்(தற்பொழுதைய ஈராக்-சிரியா) தேசத்திற்கு அனுப்புகிறார். பல மாதங்கள் அவர் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணியை முடித்து திரும்பி வரும் வழியில் நோய்வாய்ப்படும் அப்துல்லா யஸ்ரிப்பி(மதீனா)லிருந்த உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுகிறார். செய்தியைக் கேள்விப்பட்ட முத்தலீப் தனது முத்த மகன் ஹாரிதாவை அப்துல்லாவை அழைத்துவர அனுப்புகிறார். அப்துல்லாவின் வியாபாரக்குழு அடங்கிய மூடுவண்டிகள் யஸ்ரிப்பி(மதீனா)லிருந்து மக்காவிற்கு கிளம்பிய பொழுதே அப்துல்லா இறந்து, உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும் அறிகிறார். அப்பொழுது அப்துல்லாவின் வயது இருபத்து ஐந்து.

அப்துல்லா ஷாம் செல்வதற்கு முன்பே ஆமீனாவின் வயிற்றில் தனது கருவை விதைத்திருந்தார். முத்தலீப் மட்டும் சளைத்தவரா என்ன? அவரும் தனது புது மனைவி ஹாலாவின் வயிற்றில் ஒரு சிங்கக்குட்டியை உருவாக்கிவிட்டார். அந்த சிங்கக் குட்டி வேறுயாருமல்ல ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப் தான்! ஆமீனாவின் வயிற்றிலிருப்பது நமது கதாநாயகர் சூப்பர் ஸ்டார் முஹம்மது என்பதை அறிவீர்கள்.

Dr.Anburaj said...

இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா?

ஒரே நாளில் முத்தலீப்பிற்கும் அப்துல்லாவிற்கும் திருமணம் நிகழ்ந்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு வியாபார விஷயமாகச் சென்ற அப்துல்லா திரும்பிவரவேயில்லை என்பது மட்டுமல்ல இறந்தும் விடுகிறார். அவர் அப்படிச் சென்றபொழுதுதே ஆமீனா கர்ப்பிணியாக இருந்ததாகவும் islam4theworld.net இணையதளம் கூறுகிறது. அப்படியானால் ஹம்ஸாவும் முஹம்மதுவும் சமவயதுடையவர்களாக இருக்கவேண்டும் அல்லது ஹம்ஸா முஹம்மதைவிட வயதில் இளையவராக மட்டுமே இருக்கமுடியும்.

ஆனால், அல்லாஹ்வின் சிங்கம் என வர்ணனை செய்யப்படும் ஹம்ஸா இப்ன் அப்துல் முத்தலீப், கிபி 625 நிகழ்ந்த உஹது போரில் வஹ்ஷி இப்ன் ஹர்ப் என்பவரால் கொல்லப்படுகிறார். இஸ்லாமிய ஆதாரங்கள், அப்பொழுது ஹம்ஸாவின் வயது 59 என்கிறது. அதாவது ஹம்ஸா, முஹம்மதை விட நான்கு வருடங்கள் முதியவர். 625-59=566. ஹம்ஸா கிபி 566-ல் பிறந்திருக்கிறார். (சிலர் ஹம்ஸா, முஹம்மதைவிட 2 – 4 ஆண்டுகள் முதியவராக இருக்கலாம் என்கின்றனர்)

இது எப்படி சாத்தியமாகும்?

நான்கு வருடங்களாக முஹம்மது, தனது தாயார் ஆமீனாவின் கர்ப்பத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?

தஜ்ஜால்

Dr.Anburaj said...

படிப்பதற்கே அசிங்கமாக உள்ளது. நாகரீகம் தெரியாக காட்டுமிராண்டிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு.படித்த நடிப்பு மனிதர்கள்
Iran: Zaweh Girl Children Get Married At 11
17 May 2018
The average marriage age for girls is in Zaweh is 11. Zaweh is a village located near a town by the same name in Razavi Khorassan Province in northeastern Iran.
Ali Baghdar Delgosha, advisor in youths’ affairs the Governor of Razavi Khorassan Province, made the announcement at a meeting entitled, “The Forgotten Childhood,” held on Monday, May 14, 2018, at the School of Literature of Ferdowsi University of Mashhad.
Delgosha pointed out, “According to last year’s census, 63,000 girls under 15 have married in Tehran. A more regretful statistic belongs to some townships of Razavi Khorassan Province such as Zaweh where the average marriage age for girls is 11 years old.”கடந்த ஆண்டில் மட்டும் 65000 சிறுமிகள் -15 வயதிற்குட்பட்டவா்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளாா்கள். ஈரானின் பல பகுதிகளில்பெண்களின் திருமண வயது 11.கொடுமை.கொடுமை.
11 வயது சிறுமிக்கு அவசர தேவை ஆண்குறியா ?
https://women.ncr-iran.org/iran-women-news/5080-iran-zaweh-girl-children-get-married-at-11

Dr.Anburaj said...

படிப்பதற்கே அசிங்கமாக உள்ளது. நாகரீகம் தெரியாக காட்டுமிராண்டிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு.படித்த நடிப்பு மனிதர்கள்
Iran: Zaweh Girl Children Get Married At 11
17 May 2018
The average marriage age for girls is in Zaweh is 11. Zaweh is a village located near a town by the same name in Razavi Khorassan Province in northeastern Iran.
Ali Baghdar Delgosha, advisor in youths’ affairs the Governor of Razavi Khorassan Province, made the announcement at a meeting entitled, “The Forgotten Childhood,” held on Monday, May 14, 2018, at the School of Literature of Ferdowsi University of Mashhad.
Delgosha pointed out, “According to last year’s census, 63,000 girls under 15 have married in Tehran. A more regretful statistic belongs to some townships of Razavi Khorassan Province such as Zaweh where the average marriage age for girls is 11 years old.”கடந்த ஆண்டில் மட்டும் 65000 சிறுமிகள் -15 வயதிற்குட்பட்டவா்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளாா்கள். ஈரானின் பல பகுதிகளில்பெண்களின் திருமண வயது 11.கொடுமை.கொடுமை.
11 வயது சிறுமிக்கு அவசர தேவை ஆண்குறியா ?
https://women.ncr-iran.org/iran-women-news/5080-iran-zaweh-girl-children-get-married-at-11

Dr.Anburaj said...

செங்கொடி யின் சவால்

இஸ்லாம் ஆணாதிக்கப் பார்வையோடு தான் பெண்களை அணுகுகிறது என்பது நேர்மையாக சிந்தித்துப் பார்க்கும் எவருக்கும் புலப்படும். சட்டரீதியாக நான்கு திருமணமும் அதற்கு அப்பாற்பட்டு எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தானே இஸ்லாத்தின் நிலை. பணம் இருந்தால் புகுந்து விளையாடு, இல்லாவிட்டால் நோன்பு நோற்று உன் இச்சையத் தணித்துக் கொள் என்பது தானே ஹதீஸ்களின் வழியாக நாம் அறிவது. இதைத்தானே பிஜே வும் செய்திருக்கிறார். என்ன தற்போது அடிமை முறை கிடையாது என்பதனால், குரானுக்கு விளக்க உரை எழுதிய தகுதி தனக்கு இருக்கிறது என்பதால் உதவி தேடி வரும் பெண்களை தன்னுடைய அடிமைகள் என்பதாக கருதிக் கொண்டார் பிஜே. அவ்வளவு தானே வித்தியாசம். இதற்காகத் தான் பிஜே விலக்கப்பட்டிருக்கிறார் என்றால், இஸ்லாத்தின் வரலாற்றில் எத்தனை பேரை நீக்குவது? ஏன் முகம்மது நபியையே நீக்க வேண்டியதிருக்குமே.
அஷ்ஷவ்த் தோட்டத்தில் நடந்த கூத்தை புஹாரி 5255 விளக்குகிறதே இதன் பொருள் என்ன என்பதை படித்தவர்கள் யாரும் விளக்குவார்களா? முகம்மது தேன் குடித்த கதையை குரான் தஹ்ரீம் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் விளக்குகிறதே குரானில் கரை கண்டவர்கள் யாரேனும் இதில் ஒழிந்திருப்பதை எடுத்துக் கூறுவார்களா? இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக குரான் வசனம் 33:52 முகம்மது நபியை போதும் நிருத்திக் கொள் என்று கட்டளை இடுகிறதே. எதை நிறுத்தச் சொல்கிறது என்று யாரேனும் ஆய்வு செய்து முடிவை அறிவிப்பார்களா? இன்று பிஜே செய்ததை தானே அன்று முகம்மது நபியும் செய்திருக்கிறார். பிஜேவை நீக்கியவர்கள் முகம்மது நபியை என்ன செய்வார்கள்? தான் உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பிஜேவை நீக்கியவர்கள், முகம்மது உருவாக்கிய

இஸ்லாத்திலிருந்தே முகம்மது நபியை நீக்கி விடுவார்களா?

இதை இங்கு கேள்விகளாக எழுப்புவதன் காரணம் பாலியல் வக்கிரங்கள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து வைத்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு மட்டுமே. படிப்பவர்களை கோபப் படுத்துவதற்காக அல்ல