Followers

Monday, May 14, 2018

CMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....


CMN சலீம் அவர்களின் பதிவிலிருந்து....

இஸ்லாமியத்தில் தீவிரம் காட்டும் முஸ்லிம்கள் குறி வைத்து பல வடிவங்களில் முடக்கப்படும் சதி வேலைகள் உலகில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிற ஒன்றுதான்.

உம்மத்தின் உள்ளத்தை உலக ஆசாபாசங்களில் இருந்து திருப்பி அவர்களுக்குள் ஆன்மீகத்தை ஆழமாக ஊடுருவச் செய்யும் ஈமானியப்பணி, இஸ்லாமிய அழைப்புப்பணி, உம்மத்தின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு பணி, போன்றவற்றை உலகில் யார் தீவிரமாக சிந்திக்கின்றாரோ அதை செயல்வடிவத்தில் காட்டுகின்றாரோ அவர் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு ஜென்ம பகையாளியாவார்.

இந்த பகை வரலாறு 1438 ஆண்டுகளாக தொடருகிறது.இது உலகின் இறுதிநாள் வரை தொடரும்.

ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்கள் மீது பிற சமூகம் கொண்டுள்ள நன்மதிப்பும் முஸ்லிம் அறிஞர்களின் சிந்தனை பேச்சு எழுத்து போன்ற ஆற்றல்கள் மற்றும் அனுகுமுறை மீதான ஈர்ப்பும் தான் இஸ்லாமிய அழைப்பு பணியின் அடித்தளம்.

இந்த அடித்தளத்தை நொறுக்கும் வித்தைகளில் Ph.d செய்யும் விரோதிகள் இன்று உலக அரங்கில் ஏராளமானோர் உள்ளனர்.

ஆண் அறிஞர்கள் மீது பொருளாதாரம் பெண் தீவிரவாதம் போன்ற தாக்குதல்கள் அல்லது கொலை செய்வது.பெண் அறிஞர்கள் மீது உளவியல் மற்றும் ஒழுக்கம் தொடர்பான தாக்குதல்கள் இவை சர்வ சாதாரணமாக உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

சமீபகால உதாரணங்களாக அமெரிக்காவின் நூ'மான் அலி கான்,யாஸ்மின் முஜாஹிதா, ஐரோப்பாவின் தாரிக் ரமதான், சிம்பாப்வேயின் முஃப்தி மென்க், இந்தியாவின் சாகிர் நாயக்,M.M.அக்பர்,அரபுநாடுகளில் கணக்கு வழக்கில்லாமல் ஆயிரக் கணக்கானோர்,

துருக்கி,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,மலேசியா,சிங்கப்பூர், இந்தோனேஷியா.....பட்டியல் நீள்கிறது.

குற்றச்சாட்டுகள் அனைத்தும் மேல குறிப்பிடப்பட்டுள்ள வகையினை மட்டுமே கொண்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய அறிஞர்கள் தலைவர்கள் சிந்தனையாளர்கள் அனைவரும் சாதாரன மனிதர்களிடம் காணப்படும் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று முட்டாள் தனமாக நாம் நம்பும் காரணத்தால் தான் அவர்களின் குறைகள் தவறுகள் வெளிவரும் போது அல்லது திட்டமிட்டு வெளிப்படுத்தப்படும் போதும் நமக்கு மண்டை சூடாகிப் போகிறது.

வரலாற்றில் ஒவ்வொரு காலத்திலும் ஏகத்துவத்தை கொண்டு உம்மத்தில் சீர்திருத்தம் செய்த இஸ்லாமியப் புரட்சியாளர்கள் (முஜத்தீத்கள்) இமாம்கள் அறிஞர்கள் ஆகியோரின் செயல்பாடுகளை அணுகுமுறைகளை கவனத்தில் கொள்ளாமல் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்தை நிச்சயம் சீரழித்து சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

வாழ்வியல் முறைகள்,வணக்க வழிபாடுகள் ஆகியவற்றில் நடுநிலை பேணும் அளவிற்கு மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளாமல் அறியாமையில் மூழ்குவது....அல்லாஹ் வழங்கிய அறிவைக் கொண்டு ஆய்வு செய்யாமல் தங்களை ஈர்த்த அறிஞர்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்புவது....அறியாத தெரியாத விவகாரங்களில் அதிகமாக விவாதங்கள் செய்து முரண்பட்டுக் கொள்வது.....

.......இவைதான் இன்றைய உம்மத்தின் தூய்மைப்படுத்தப்பட வேண்டிய அழுக்குகள்.

இந்த அழுக்குகள் உம்மத்திற்குள்ளேயும் வெளியேயும் வெறுப்புகளையும் விரோதங்கங்களையும் மட்டுமே சம்பாதித்து தரும்.வாழ்நாள் முழுவதும் உம்மத்திலிருந்து ஒதுங்கி தனிமைப்பட்டு ஒரு வகையான மனநோயாளி போல உம்மத்தை ஏசுவதும் பழிப்பதுமாக வாழவேண்டிய நிலை ஏற்படும்.

இதைத்தான் இஸ்லாத்தின் விரோதிகள் எதிர்பார்க்கின்றனர்.

பலியாகிவிடாமல்.....பழி தீர்ப்பதில் ஈடுபடாமல்.....

உம்மத்தை ஒருங்கிணைப்பதற்கும் இஸ்லாத்தின் எழுச்சிக்கும் நேரத்தையும் காலத்தையும் செலவிடுவோம்.


No comments: