Followers

Sunday, May 20, 2018

குலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி!


குலாப் யாதவ் குடும்பத்தினரின் மகத்தான பணி!

உத்தர பிரதேசத்தின் ஆஜம்காட் நகரில் உள்ளது கோரியா கிராமம். இந்த கிராமத்தில் அதிசயத்தக்க ஒரு நிகழ்வு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த குலாப் யாதவ் என்று இந்து தினமும் ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு எழுந்து அனைத்து முஸ்லிம் வீடுகளுக்கும் சென்று 'பாய்! ஸஹர் நேரம் வந்து விட்டது பாய்... எழுந்திருங்கள்' என்று தனது குச்சியால் தட்டி எழுப்புகிறார்.

இது பற்றி இவரிடம் கேட்டபோது 'ஒரு நல்ல காரியத்துக்கு நாம் உடந்தையாக இருப்போமே என்ற எண்ணத்தில்தான் இதனை செய்கிறோம். முன்பு எனது அப்பா செய்தார். அதன் பிறகு இந்த பணியை எனது அண்ணன் செய்தார். அவருக்குப் பிறகு தற்போது நான் செய்கிறேன். என்னோடு எனது மகனும் தற்போது உடன் வருகிறான்' என்று சொன்னபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

மாட்டுக் கறி வைத்திருந்தான் என்று கூறி மனிதனை கொல்லும் உத்தர பிரதேசத்தில்தான் குலாப் யாதவ் போன்ற சிறந்த இந்துக்களும் வாழ்கின்றனர்.



7 comments:

Dr.Anburaj said...

Great fool and slave to arabian imperialism.

Dr.Anburaj said...

கைகேயி ‘மன்னன் ஆணை இது’ என்று கூறுதல்

‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்,
தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற்கொண்டு
பூழி வெங்கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்’ என்றாள். (12)

(ஆழி – கடல்; தாழ் இருஞ்சடைகள் – தொங்குகின்ற பெரிய சடைகள்; பூழி – புழுதி; வெங்கானம் – கொடிய கானகம்; நண்ணி – சென்று)

கடல் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் பரதனே முடிசூடி ஆட்சி செய்வான். நீ நாட்டை விட்டுப் போய், சடாமுடி தாங்கி, செய்வதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து, புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி, பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வரவேண்டும் என்று அரசன் கூறினான் – இவ்வாறு கைகேயி சொன்னாள்.

கைகேயி சொற்கேட்ட இராமன் நிலை

இப்பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கில்
ஒப்பதே முன்பு பின்பு; அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா! (13)

(எம்மனோரால் – எம்மைப் போன்றவர்களால்; செவ்வி – அழகு)

இப்பொழுது எம்மைப் போன்றவர்களால் சொல்லுவதற்கு எளிதோ? யாரும் சொல்லித் தீராத நற்குணங்களையுடைய இராமனுடைய திருமுகத்தின் அழகைப் பார்த்தால், அது கைகேயி சொன்னதைக் கேட்பதற்கு முன்பும், கேட்ட பின்பும் ஒன்று போலவே, செந்தாமரை போலவே இருந்தது. ஆனால், அந்தச் சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்த சமயத்தில், மலர்ந்த செந்தாமரையை வென்று விட்டது!

Dr.Anburaj said...


சீற்றம் கொண்ட இலக்குவனுக்கு இராமன் உரைத்தது

‘நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். (14)

(நறும்புனல் – நல்ல நீர்; அற்றே – அது போல; பதி – தலைவன், தந்தை; பயந்து – பெற்று; புரந்தாள் – வளர்த்தாள்; மைந்த – மகனே; வெகுண்டது – கோபித்தது)

மகனே! என்றும் நீரோடும் நதியில் ஒரு சில காலங்களில் நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது, அந்த நதியின் குற்றம் அன்று. அது போல, (என்னை வனவாசம் போகச் சொன்னது) நம் தந்தையின் குற்றம் அன்று. (அப்படி வரம் வாங்கியது) நம்மைப் பெற்றுக் காப்பாற்றி வளர்த்த கைகேயியின் அறிவின் குற்றம் அன்று. அவள் மகன் பரதனது குற்றமும் அன்று. இது விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றம். இந்தச் செயலுக்கு இவர்களை எல்லாம் காரணமாக்கி நீ கோபித்தது ஏன்?’ என்றான் (அன்பு மிகுதியால், தம்பியை மகனே என்றது).

சீதை நானும் உடன் வருவேன் எனல்

‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்றிலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்றாள். (15)

(இகந்த – இல்லாத; ஒருவுகின்றனை – விட்டுச்செல்கிறாய்; ஊழி – பிரளயம்; அருக்கன் – சூரியன்; யாண்டையது – எங்குள்ளது; ஈண்டு – இங்கு)

பரிவில்லாத மனத்துடன், ஒரு சிறு பற்று கூட இல்லாமல், என்னை விட்டுவிட்டுச் செல்வேன் என்கிறாய். பிரளய காலத்துச் சூரியன் போல எரியும் இடம் எங்குள்ளது? (காட்டிலே வெப்பம் இப்படி இருக்கும் என்று இராமன் முன்பு கூறியதைச் சுட்டுகிறாள்). உன் பிரிவைக் காட்டிலும் அந்தப் பெரிய காடு சுடுமோ? என்றாள்.

இராமன் காடு செல்வது கேட்ட மாந்தர் நிலை

கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல?
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால். (16)

(கிள்ளை – கிளி; பூவை – நாகணவாய்; பூசை – பூனை; மாற்றத்தால் – சொல்லால்)

இராமன் வனவாசம் செல்வான் என்று சொல்லிய சொல்லால், கிளியும், நாகணவாய்ப் பறவையும் (மைனா) அழுதன. மாளிகையின் மாடங்களுக்கு உள்ளே இருந்த வீட்டுப் பூனைகள் அழுதன. வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் கூட அழுதன. பெரியோர்கள் அழுததைப் பற்றி என்னவென்று சொல்வது?

இராமன், சீதை, இலக்குவன் மூவரும் வனத்துக்குள் போதல்

தையல்தன் கற்பும், தன் தகவும், தம்பியும்,
மை அறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்ய தன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு,
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே. (17)

(தையல் – பெண், சீதை; தகவு – மேன்மை; மை – குற்றம்; உணர்வு – ஞானம்; செய்ய – நிமிர்ந்த; சேமம் – பாதுகாப்பு; அல்லின் நாப்பண் – நள்ளிரவில்)

சீதையின் கற்பும், தனது மேன்மைப் பண்பும், தம்பியாகிய இலக்குவனும், குற்றமற்ற கருணையும், ஞானமும், சத்தியமும், நிமிர்ந்த தனது வில்லும் ஆகிய இவற்றையே பாதுகாவலாகக் கொண்டு நள்ளிரவில் அந்தக் காட்டு வழியிலே ஐயன் இராமன் சென்றான்.

குகனின் ஓடத்தில் ஏறி கங்கையைக் கடத்தல்

‘விடு, நனி கடிது’ என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன் நெடு நாவாய், முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். (18)

(கடிது – வேகமாக; முடுகினன் – செலுத்தினான்; நாவாய் – ஓடம்; முரி திரை – அலையடிக்கின்ற; நீர்வாய் – நீரோட்டத்தில்)

‘வேகமாக விடு’ என்று இராமன் கூற, அவனிடத்து உடம்பும் உயிரும் போன்ற நட்பை உடைய குகன், அலையடிக்கின்ற நீண்ட நீரோட்டத்தில் பெரிய ஓடத்தை விரைந்து செலுத்தினான். அந்த ஓடம் இளம் அன்னப்பறவை நீரில் நீந்துவது போலச் சென்றது. கரையிலே நின்றவர்கள் பெரும் துன்பமடைந்தார்கள். மறையவர்கள் நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

Dr.Anburaj said...

பரதன் படையுடன் வருவதைத் தொலைவில் கண்டு குகன் உரைத்த வீர உரைகள்

அஞ்சன வண்ணன், என் ஆருயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசெய்திய மன்னரும் வந்தாரே !
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், நாய்க்குகன் என்று எனை ஓதாரோ? (20)

(அஞ்சனம் – மை; செஞ்சரம் – சிவந்த அம்பு; உஞ்சு – உய்ந்து, தப்பித்து)

மை போலும் கரிய திருமேனி அழகன், என் ஆருயிர் நாயகன் இராமன் அரசு ஆளாதபடி, சூழ்ச்சியால் அந்த அரசாட்சியைக் கைப்பற்றி அடைந்த மன்னர் பரதர் இதோ வருகிறார்! தீ உமிழும் எனது சிவந்த அம்புகள் இவர்கள் மேல் செல்லாமல் போய்விடுமோ? இவர்கள் (என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும் இடத்துக்குப்) போய்விட்டால் ‘நாய்க்குகன்’ என்று உலகத்தவர்கள் என்னைப் பற்றி சொல்லாமல் இருப்பார்களா?

பரதனின் தவக் கோலம் கண்டு குகன் மனம் உருகுதல்

வற்கலையின் உடையானை, மாசடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ, விம்முற்று, நின்று ஒழிந்தான். (21)

(வற்கலை – மரவுரி; மெய்யானை – உடல் கொண்டவனை; மதி – சந்திரன்)

(அருகில் வர வர), மரவுரி ஆடையை உடுத்தி, புழுதி படிந்த உடம்புடன், நல்ல கலைகளில்லாத சந்திரன் போல ஒளியிழந்த முகத்துடன், கல்லையும் கனியச் செய்யுமளவு துயரத்துடன் கூடிய பரதனை குகன் பார்த்தான். கையிலிருந்த வில் தானே சோர்ந்து கீழே விழ, துன்பத்தால் கலக்கமுற்று ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

பரதன் இராமன் திருவடிகளை முடிமேல் சூடிச் செல்லுதல்

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்,
முடித்தலம் இவை என, முறையின் சூடினான்;
படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் –
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். (22)

(அடித்தலம் – பாதுகை; முடித்தலம் – திருமுடி, கிரீடம்; படித்தலத்து – மண்ணில்; பொடித்தலம் – புழுதி; பொலம்கொள் – பொன்மயமான)

இராமனின் இரண்டு பாதுகைகளையும், அழுத கண்களோடு, எனக்குத் திருமுடிகள் இவையே என்று பரதன் முறையாகத் தலைமேல் சூடிக்கொண்டான். பின்னர், புழுதி படிந்து விளங்குகிற பொன்மயமான திருமேனியுடைய பரதன், மண்ணில் விழுந்து வணங்கி, மீண்டும் (அயோத்திக்குச்) சென்றான்.

Dr.Anburaj said...

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி

நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9-பட்டினத்தாா்

Dr.Anburaj said...

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13

Dr.Anburaj said...

கொல்லா விரதம் குவலயம்எல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே
Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
« Older posts
தாயுமானவரின் பராபரக்கண்ணி-54:
August 17, 2012 — suriyodayam
கண்ணாவாரேனும் உனைக் கைகுவியாராயின் அந்த
மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே.
Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
தாயுமானவரின் பராபரக்கண்ணி-53:
August 16, 2012 — suriyodayam
துச்சமென வேண்டா இத்தொல்லுலகில் அல்லல்கண்டால்
அச்சம் மிகஉடையேன் ஐயா பராபரமே.
Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
தாயுமானவரின் பராபரக்கண்ணி-52:
August 15, 2012 — suriyodayam
நேச நிருவிகற்ப நிட்டைஅல்லால் உன்அடிமைக்கு
ஆசையுண்டோ நீஅறியாத தன்றே பராபரமே
Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
தாயுமானவரின் பராபரக்கண்ணி-51:
August 11, 2012 — suriyodayam
சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்காசை பராபரமே
Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
தாயுமானவரின் பராபரக்கண்ணி-50:
August 9, 2012 — suriyodayam
சொன்னத்தைத் சொல்வதல்லால் சொல்லற என்
சொல்லிறுதிக்
கென்னத்தைச் சொல்வேன் எளியேன் பராபரமே


Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
தாயுமானவரின் பராபரக்கண்ணி-49:
August 8, 2012 — suriyodayam
பாடிப் படித்துலகில் பாராட்டி நிற்பதற்கோ
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே
Posted in தாயுமானவரின் பராபரக்கண்ணி. Leave a Comment »
தாயுமானவரின் பராபரக்கண்ணி-48:
November 10, 2010 — suriyodayam
எள்ளளவு நின்னைவிட இல்லா எனைமயக்கில்
தள்ளுதலால் என்னபலன் சாற்றை பராபரமே