Followers

Wednesday, May 30, 2018

துப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்!


துப்புறவு தொழிலாளர்களுடன் புனித மெக்கா பள்ளி இமாம் சுதைஸ்!

பொதுவாக துப்புறவு பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் உடைகள் சுத்தமாக இருக்காது. கடுமையான வேலை காரணமாக உடைகளில் வியர்வை நாற்றமும் அடிக்கும். எனவே சமூகத்தில் இவர்களை ஒதுக்கியே வைத்திருப்பர். நம் நாட்டிலோ தோட்டிகள் என்று கூறி முற்றாக அவர்களை ஒதுக்கி வைத்திருப்போம். அந்த உடையோடு வந்தால் பல கொவில்களுக்குள்ளும் விடுவதில்லை.

ஆனால் இஸ்லாம் இதனை கண்டிக்கிறது. உழைத்து உண்ணும் உணவே சிறந்த உணவு என்கிறது இஸ்லாம். சில நாட்கள் முன்பு நமது தமிழகத்தில் துப்புறவு தொழிலாளர்களை மண்டபத்துக்கு அழைத்து அவர்களோடு சமமாக அமர்ந்து இஸ்லாமியர் சாப்பிட்டதை மறந்திருக்க மாட்டோம்.

அதே போல் இங்கு புனித மெக்கா பள்ளியின் இமாம் அப்துல் ரஹ்மான் சுதைஸ் அவர்கள் துப்புறவு தொழிலாளர்களோடு ஒன்றாக அமர்ந்து நோன்பு திறக்கும் காட்சியை பார்க்கிறோம். இஸ்லாம் சமத்துவத்தை வெறும் வாயளவில் வைக்காமல் செயல்படுத்தியும் காட்டுகிறது.

https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/948377788676496










No comments: