Followers

Tuesday, May 29, 2018

ஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.


ஒரு ஆசிரியரும் மாணவனும் கலந்துரையாடுகின்றனர்.

அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

ஆம் ஐயா..

நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது கடவுள் இல்லை என்று. இதற்கு நீ ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.

சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?”

“”
இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனிதன் உருவானான். பேராசிரியர் பதிலுரைத்தார்.

உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(
பேராசிரியர் ன் தலையை இல்லை என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

அப்படியென்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ஒருவகையா அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(
மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(
வகுப்பறை கொல்லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் ன்ன சொல்கின்றன?”

அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை ன்று.

மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
(
மாணவரின் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போனது!)

நீ எனக்கு மூளை இருக்கிறதெ நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!

அது தான் ஐயா.. இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

1 comment:

suseela said...

கடவுளாக இருக்க வேண்டுமென்ற ஆசை சாத்தானுக்குத்தான் இருந்தது. தந்திரமான வழிகளில் தன் சுயநல ஆசையை அவன் தீர்த்துக்கொண்டான்.கொலைபாதகனான’ சாத்தான், தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என நினைக்கிறான்.
தான் படுதந்திரமாகச் செல்வாக்கு செலுத்துவதை மக்களிடமிருந்து மறைப்பதற்காக அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.