Followers

Thursday, May 03, 2018

ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்

சேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல்லாம் இவ்வாறு பொதுப் பணியில் இறங்கினால் தமிழக ஏரிகளும் குளங்களும் சுத்தமாகும். தண்ணீரும் சேகரமாகும்.


2 comments:

Dr.Anburaj said...

விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம்
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம்
இதயத்தைக் கோயில் ஆக்கிடுவோம் |
விவேகானந்தரின் குரலை முழங்கி
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம்
பொதுநலம் பேணி உழைத்திடுவோம் |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி
தியாகத்தின் உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம்
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய் விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||

Dr.Anburaj said...

இந்து நண்பர்களுக்கு தனியாக ஸ்ரீராமா் சீதை படம் போட்டு அச்சடித்து அளித்த முஸ்லீம் சகோதரா் வாழ்க

தேர்தல் வாக்குகளுக்காக அரசியல் கட்சிகள்தான் மதப்பிரிவினையை தூண்டி விடுகின்றன, மத மோதல்களின் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருக்கிறது.

ஆனால், அதையெல்லாம் மீறி, மதங்களுக்கு அப்பால் இந்துக்களும்,முஸ்லிம்களும் இன்னும் சகோதரர்களாகவே இருந்து வருகிறார்கள், விட்டுக்கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உறவை வளர்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

பாஜக தலைவர்களில் ஒரு சிலரும், இந்துத்துவா அமைப்புகள் சிலவும் இந்தியா இந்து நாடு, ராமர் கோயிலுக்கு எதிராகப் பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.இந்நிலையில் அவர்களுக்கு இந்தச் சம்பவம் மிகச்சிறந்த உதாரணமாக அமையும்.

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டம், பாஹசாரி கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம், தங்களின் மகள் திருமணத்துக்கு இந்துக்களும் வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பிடித்தமான ராமர், சீதை படம் பொறித்த பத்திரிகைகளை அச்சடித்து வழங்கி அழைத்து இருக்கிறார்கள். தங்களின் உறவினர்களுக்குத் தனியாக ஒருவிதமான பத்திரிகையும் அளித்து திருமணத்துக்கு அழைத்து இருக்கிறார்கள்.

முகமது சலீம் என்பவரின் மகள் ஜஹானா பானுவுக்கும், யூசுப் முகம்மது ஆகியோருக்கும் கடந்த மாதம் 29-ம் தேதி திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்காகவே இரு விதமான பத்திரிக்கைகளை அச்சடித்து இரு தரப்பினரையும் அழைத்து இருக்கிறார்கள்.

இது குறித்து மணப்பெண்ணின் சகோதரரும், முகம்மது சலீமின் மகனுமான ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:

பாரம்பரிய இஸ்லாமிய வழக்கப்படி எங்கள் உறவினர்களைத் திருமணத்துக்கு அழைக்க 300 பத்திரிக்கைகளை அச்சடித்தோம். அதேபோல எங்களுக்குப் பழக்கமான, நட்புவட்டாரத்தில் இருக்கும் இந்துக்களையும், இந்து நண்பர்களையும் அழைக்க அவர்களுக்குத் தனியாக ராமர், சீதா படம் பொறித்து தனியாக அழைப்பிதழ் அச்சடித்தோம்.

இந்துக்கள் வீடுகளில் நடக்கும் திருமணத்துக்கு அச்சடிக்கும் அழைப்பிதழ் போன்று அந்த அழைப்பிதழ் இருந்தது. ராமர் சீதை படம், தேங்காய், பழம்,பூ குங்குமம், ஹோமம் எரிதல் போன்ற படங்களுடன் பத்திரிகை அச்சடிக்கப்பட்டு இருந்தது.

எங்கள் அனைவருக்கும் இந்து நண்பர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு ஏற்றார்போல் பத்திரிக்கை இருக்க வேண்டும் என்பதால், ஒட்டுமொத்த குடும்பமும் அமர்ந்து பேசி இந்த முடிவை எடுத்தோம். சிறப்பு அழைப்பிதழ்களை அடிப்பதில் மணமகன் வீட்டாரும், உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இந்துக்கள் எப்போதும் எங்களுக்கு நண்பர்கள், சகோதரர்கள் என்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற நட்பு செயல்கள் தொடரும். அதில் சந்தேகம் இல்லை. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், இடைவெளி குறைந்து ஒற்றுமை வளர வேண்டும் என்பதே எங்களது ஆசையாகும்.

மற்ற மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு நாங்கள் மதிப்பு கொடுத்தால், நிச்சயம் முஸ்லிம் சமூகத்தினரை அனைவரும் மதிப்பார்கள். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்