பெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி
அழைக்காமல் "மாலிய அகதி" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக
இருக்கின்றது.
இவன் தான் முஹம்மது கஸ்ஸாமா. பிரான்ஸ் நகரிலே , மூன்றாம்
மாடியொன்றிலே குழந்தையொன்று தொங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கணமும் அது கீழே
விழுந்து விடலாம் என்ற நிலை. பிரான்ஸ் மக்களெல்லாம் தீயணைக்கும் படை வரும்வரை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில் , தன்னுயிரைத்
துச்சமென மதித்து மாடிகள் தாவி ஏறிய உண்மையான "சூப்பர்மேன்".
முஹம்மது கஸ்ஸாமா மன்சா மூஸாவின் வாரிசு. பிரான்ஸு நகர மக்களெல்லாம் "குளிப்பது" தெய்வ
குற்றம் என்று நம்பிக்கொண்டிருந்த 14ஆம் நூற்றாண்டில் , அறிவியல்
, கல்வி , கலாச்சாரம் என்று பலதுறைகளில் கொடிகட்டிப்பறந்த மாலியப்
பேரரசின் சந்ததி.
இன்றைய உலகின் முதல் பணக்காரன் ஜெப் பேசொஸ். இவருடைய
சொத்துக்களின் மதிப்பு $100 பில்லியன்கள். ஆனால் , அந்த
மன்சா மூஸாவின் சொத்து இன்று வரை சரியாக மதிப்பீடு செய்யப்பட முடியாதுள்ளது
என்கின்றது லண்டனின் டைம்ஸ் பத்திரிகை. மதிப்பிட முடியாத சொத்துக்களின்
சொந்தக்காரன் அவர். இவர் ஹஜ்ஜுக்காக எகிப்து வழியாகப் பயணித்தபோது அங்குள்ள
ஏழைகளுக்கெல்லாம் தங்கக்காசுகளை அள்ளி வழங்கினார். இதனால் எகிப்திலே ஒரு பெரிய
பணவீக்கத்தையே இவர் தோற்றுவித்தார். இதுவொரு வரலாற்று உண்மை.
இவ்வாறான பூர்வீகத்தைக் கொண்ட முஹம்மது கஸ்ஸாமா ஒரு அகதி
அல்ல. பிரான்ஸ் நாடு மாலி நாட்டின்மீது மேற்கொண்ட காலனித்துவத்தின் பலியாள் (victim) அவன்.
ஏசி மாளிகைக்குள் இருந்து கொண்டு, மாலியில் உள்ள மக்களைக் கொள்வதற்காக
கோழை மேக்ரோன் தன் வான்படைக்கு உத்தரவிட்டுக்கொண்டிருக்கையில், தன்னுயிரைத்
துச்சமென மதித்து பிரான்சியப் பிள்ளையொன்றைக் காப்பாற்றிய வீரன் அவன்.
நினைவிருக்கட்டும் அவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா!
Via Mohamed Faizal
https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/947802748734000
1 comment:
ஒருவரது வீரம் தீரம் தியாகம் ஆகியவற்றை பாராட்டும்போது அவரது மதம் என்ன சாதி என்ன என்பதை கடைசியாக மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டால் போதும். முஸ்லீம்கள் என்றால் பெயரில் மதம் தொிந்து விடும். தொலைக்காட்சியில் தாவி தாவி ஏறும் காட்சியைக் கண்டேன்.மனம் மிக மகிழ்ந்தேன். சாதனைக்கு வாழ்த்துக்கள்.
---------------------------
காதியானி இயக்கத்தைச் சாா்ந்த பாக்கிஸ்தான் அனுவிஞ்ஞானிக்கு நோபல் பாிசு கிடைத்தது. இந்தியாவில் காதியானி ஜமாத் அவர் காதியானி ஜமாத்தைச் சோ்ந்தவா் என்ற கருத்திற்கு மிக அதிக விளம்பரம் கொடுத்து பிரச்சாரம் செய்தது.ஆனால் இந்தியா வந்தபோது மேற்படி கருத்தை கண்டித்து தன்னை ஒரு காதியானி என்ற சிறுவட்டத்திற்கள் அடைத்தது குறித்து வருத்தம் தொிவித்தாா்.
-------------------------------------------------------
சாதனைகள் ஒரு சாதிக்கோ மதபிாிவுக்கோ சொந்தமானதல்ல.
---------------------------------------------------------------------
உகாண்டா நாட்டில்எண்டபி நகரத்தில் கடத்தி வைக்கப்பட்ட இஸ்ரேலிய பயணிகள் விமானத்தை இஸ்ரவேல் ராணுவ நடவடிக்கை எடுத்து அற்புதமாக மீட்டது. உலகத்தில் இதுவரை எந்த நாடும் இவ்வளவு அற்புதமான ராணுவ சாகசத்தைச் செய்து காட்டவில்லை.
நினைவில் கொள்ளுங்கள்
சாதனைகள் ஒரு சாதிக்கோ மதபிாிவுக்கோ சொந்தமானதல்ல
Post a Comment