Followers

Wednesday, May 09, 2018

மோடியின் வாயிவிருந்து உண்மையே வராதா?


மோடியின் வாயிவிருந்து உண்மையே வராதா?

ர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் சுதந்திர இந்தியாவின் ராணுவ வரலாற்றையே மாற்றிச் சொல்கிறார்கள். கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப் பகுதியைச் சேர்ந்த கரியப்பா, திம்மய்யாவை நேரு அவமானப்படுத்தினார் எனப் பேசியிருக்கிறார்கள். விக்கிபீடியாவைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும், 1949 ஜனவரி 15-ல் நாட்டின் முதல் ராணுவ தளபதியாக பொறுப்பேற்றது திம்மையா அல்ல கே.எம். கரியப்பா என்று.

. கடந்த 1947-48-ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் பிரிட்டிஷ் கமாண்டர்களால்தான் வழிநடத்தப்பட்டது. அதன்பிறகு இந்தியா, கரியப்பாவைத் தேர்வு செய்தது. லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த அவரிடம் டெல்லி மற்றும் கிழக்கு பஞ்சாப் படைத் தலைமை ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் கரியப்பா, மேஜர் ஜெனரல் கே.எஸ். திம்மய்யாவை தேர்வு செய்து காஷ்மீர் படைப்பிரிவின் தளபதியாக்கி அனுப்பினார். இருவரின் இனிஷியலிலும் உள்ள கே கோதன்தேரா என்ற இனக் குழுப் பிரிவைக் குறிக்கும். இருவருமே காஷ்மீர் பிரச்சினையில் ஹீரோவானார்கள். தளபதியும் ஆனார்கள்.

திம்மய்யாவுக்கும் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனனுக்கும் இடையே சிறுசிறு உரசல்கள் ஏற்பட்டன. கம்யூனிச சிந்தனை கொண்ட மேனனுக்கு திம்மய்யாவை பிடிக்கவில்லை.

தனது பணியில் அடிக்கடி குறுக்கிட்ட அமைச்சரின் போக்கு திம்மய்யாவுக்கும் பிடிக்கவில்லை. 1959-ல் தனது பதவியை கோபத்தில் ராஜினாமா செய்தார் திம்மய்யா. ஆனால் பிரதமர் நேரு கேட்டுக் கொண்டதால் பதவிக் காலம் முடியும்வரை (1961) பணியில் இருந்தார்.

இருவருமே குடகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாமர மக்களுக்கு இருவரையும் பிரித்துப் பார்ப்பதில் குழப்பம் ஏற்படலாம்.. தப்பில்லை. ஆனால் பிரதமரும் அவரது அலுவலகமும் எப்படி குழப்பம் அடையலாம்?

பாகிஸ்தானுடன் 1947-48, 1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளிலும், சீனாவுடன் 1962-ம் ஆண்டிலும் போரிட்டோம். . 1971-ம் ஆண்டு போரைத் தவிர வேறு எதிலும் தெளிவான வெற்றி கிடையாது நமக்கு. 1962-ல் தோல்விதான். 65-ம் ஆண்டிலும் ஏறக்குறைய அதே நிலைதான். 1947-48 போர் இன்னும் முடிந்ததாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், நமது ராணுவம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் என ஒவ்வொரு முறையும் சொல்லப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல்வாதி - ராணுவம் தொடர்பான ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவமும் அதன் தளபதிகளும் தவறே செய்ய மாட்டார்கள். எந்தப் பின்னடைவுக்கும், தோல்விக்கும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்றுக் கொள்வார்கள். வெற்றியை இரு தரப்பும் கொண்டாடுவார்கள். 1999-ல் நடந்த கார்கில் போர் பின்னடைவுக்கு பெரும் காரணம் ராணுவத் தலைமையின் தோல்விதான், வாஜ்பாய் அரசு காரணமல்ல. எப்படி பாகிஸ்தான் ராணுவம் யாருக்கும் தெரியாமல் இந்திய எல்லைக்குள் அவ்வளவு தூரம் ஊடுருவ முடிந்தது? உடனே ஒரு கதை தயாரானது. அரசு உளவாளிகளின் செயல்பாடு சரியில்லை என செய்தி பரப்பப்பட்டது. ஒரு சில ராணுவ அதிகாரிகளே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இந்தியா சந்தித்த போர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் யேல் பல்கலையின் பேராசிரியர் ஸ்டீவன் வில்கின்சன் எழுதிய ஆர்மி அண்ட் நேஷன்: தி மிலிட்டரி அண்ட் இந்தியன் டெமாக்ரசி சின்ஸ் இன்டிபென்டன்ஸ் என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தில் சீக்கியர்களின் ஆதிக்கம் குறித்த அரசியல்வாதிகளின் அச்சத்தையும் மற்ற இனத்தவரைஅதிகம் சேர்க்க விரும்பியது குறித்தும் எழுதியிருக்கிறார். இறுதியில், மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் பாபு ஜகஜீவன்ராம் எடுத்த முடிவு பின்பற்றப்பட்டதாகக் கூறுகிறார்.
1962-ம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, இந்திய ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்ய முடிந்ததற்கு அதன் பிறகு பதவிக்கு வந்த ராணுவ அமைச்சர்களான ஒய்.பி. சவாணும் ஜகஜீவன்ராமும் தான் காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

1962-ம் ஆண்டு தோல்விக்கு ராணுவத் தளபதிகளாக இருந்த தாப்பரும் பி.எம்.கவுலும்தான் குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதியான கிருஷ்ண மேனன் மீது பழி விழுந்தது.

ராணுவத் தளபதிகள் எப்போதுமே, எதையுமே சரியாகத்தான் செய்வார்கள்.. அரசியல்வாதிகள்தான் அவர்கள் பணியில் குறுக்கிட்டுக் கெடுப்பார்கள். கரியப்பா, திம்மய்யா, சவுத்ரி, மானெக் ஷா ஆகியோருக்கு முடிவுகள் எடுப்பதில் போதுமான சுதந்திரம் கொடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாகியிருக்காது.. சீனர்களுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்திருக்கலாம்... திபெத்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.. 1965-ல் பாகிஸ்தானை இல்லாமல் செய்திருக்கலாம்.. 1971-ல் வங்கதேச விடுதலைக்குப் பிறகு மேலும் 15 நாள் போரிட்டிருந்தால், மேற்கு பாகிஸ்தானைக் கூட ஆக்கிரமித்திருக்கலாம்.. என பிரச்சாரம் நடக்கிறது.

. ‘கரியப்பா, திம்மய்யா, சவுத்ரி ஆகியோர் அப்போதைய பிரதமர்களிடம், தயவுசெய்து இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என கெஞ்சினார்கள். ஆனால் அன்னிய சக்திகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, நேரு - காந்தி ஆட்சியாளர்கள் அதற்கு மறுத்தனர் என்கிறார்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். மோடியும் இங்கிருந்துதான் வந்தவர். அதனால் மோடியும் அவரது கூட்டாளிகளும் இப்படித்தான் உண்மை தெரியாமல் பேசுவார்கள்.

சேகர் குப்தா,
தி பிரின்ட் தலைவர், முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்




1 comment:

Dr.Anburaj said...


நமது நாட்டின் நமது பிரதமா் திரு.நரேந்திரமோடி அவர்கள் ஒன்றும் கைநாட்டுப் போ்வழியல்ல.
இன்று உலகில் உள்ள மிகப் புகழ் வாய்ந்த தலைவா்களில் அவரும் ஒருவா்.மறந்து விட வேண்டாம்.
தாங்களின் பதிவு முடிவாக என்ன கருத்தை முன் வைக்கின்றது ? conclusion ?

முடிவு இல்லாத ஒரு பதிவு.
திரு.மோடி மீது அவதுாறு என்பதுதான் தங்கள் முயற்சி.

லெ.ஜெனரல் கவுல் போர்முறைகளில் அதிக அனுபவம் இல்லாதவா். உணவு வழங்கல் துறையில் அதிக காலம் பணியாற்றியவா்.அவரை போர் முக்கியத்துவம் வாய்நத பதவிகளில் நியமித்து மத்திய அரசு தவறு செய்தது.

காஷ்மிரை ஆண்ட இந்து மன்னா் திரு.ஹரி சிங் .இந்தியாவடன் இணைய சம்மதம் தெரிவிக்கவில்லை. உடனேபாக்கிஸ்தான் ராணுவம் சீருடை அணியாமல் காஷ்மீரில் உள்ள இந்துக்கள் மீதும் இந்தியாவிற்கு ஆதரவான முஸ்லீம்கள் மீதும் கொடும் தாக்குதல் நடத்தியது.செத்துக்கொண்டிருப்பவன் இந்து என்று அறிந்தும் முட்டாள் நேரு ராணுவ உதவியை அளிக்க மறுத்து விட்டாா். உள்துறை அமைச்சா் திரு.படேல் அவர்கள் நிபந்தனையின்றி ராணுவ உதவி செய்ய விரும்பினாா்.ஆனால் முட்டாள் நேரு இந்தியாவுடன் இணைந்தால்தான் உதவி இல்லையெல் செத்து ஒழியட்டும் என்று
கொடூமதியினராக செயலற்று இருந்தாா். படுகொலையை கட்டுப்படுத்த கவா்னா் ஜெனரல் மவுண்ட பேட்டனும் உதவ வில்லை. இந்துக்கள் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டாா்கள். வேறு வழியின்றி இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க சம்மதம் தெரிவித்தாா் மன்னா் திரு.ஹரிசிங்.அதற்குள் காஷ்மீா் விமானதளத்தின் அருகில் பாக்கிஸ்தான் கலவர படைகள் வந்து விட்டது. சிலஇந்து இளைஞா்களின் மகத்தான தியாகத்தால் இந்திய போர் விமானங்கள் ஸ்ரீ நகா் விமான நிலையத்தில் இறந்கி பாக்கிஸ்தான் கலக படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை தீவிரமான நடத்தி அவர்களை பின்னுக்கு தள்ளிக்கொண்டிருந்தாா்கள். திடீரென்று விளம்பர பிரியன் நேரு ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்றார்கள். இன்னும் ஒருவாரம் கொடுங்கள். திரு.ஹரிசிங் ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுவதையும் பிடித்து விடலாம். என்று உறுதியாக தெரிவித்து விட்டார்கள். ஆனால் சர்வாதிகாரமாக யாரையும் ஆலோசிக்காமல் கிறுக்கத்தனமாக ராணுவ நடவடிக்கையை நிறுத்த நிாவாக உத்தரவு அளித்தாா் கிறுக்கன் நேரு. விளையு கணிசமான பகுதிகள்-இன்றைக்கு ஆசாத் காஷ்மீா் என்று அழைக்கப்படும் காஷ்மீர் பரப்பில் பாதி - பாக்கிஸ்தானியா் வசம் சிக்கிவிட்டது. இன்று வரை அதை மீட்கவே முடியவில்லையே.
இரத்தக்களறி தொடா்கதையாக உள்ளது.
ஐநா சபையில் தன்னை ஒரு பெரிய ஜனநாயகவதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன்னை ஒரு சமாதான காவலராகக் காட்ட கருத்துக்கணிப்ப நடத்தி அதன்படி காஸ்மீா் மக்கள் பாக்கிஸ்தானோடு அல்லது இந்தியாவோடு இணைந்து கொள்ளலாம் என்று ஒப்புதல் அளித்தார்.
காஷ“மீரிகள் என்று பேசுவதே தவறு.அங்கு இருப்பவா்கள் இந்துக்களும் முஸ்லீம்கள்தான். இந்துக்களின் வாழ்வாதாதரத்தை நல்வாழ்க்கையை -இந்துக்களை காபீா்கள் என்று இழிவு படுத்தும் முஸ்லீம்கள் காக்க மாட்டார்கள்.எனவே சிறுபான்மை பெரும்பான்மை என்ற வகைப்படுத்தும் இனவெறி கொள்கையிலிருந்து மாறுபட்டு- பாரம்பரியமாகவே இந்துஸ்தானத்தில்தான் காஷ்மீர் இருப்பதை நினைவில் கொண்டு இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக்கொண்டது முற்றிலும் நியாயமானது. தென் இந்தியா அளவிற்கு பெரிய நிலப்பரப்பான பாக்கிஸ்தானில் உள்ள இந்துக்களை வெட்டிக்கொன்று குற்றுயிராக்கி இந்தியாவிற்கு துரத்திவிட்டு இரத்தவெறி கொண்டு காஷ்மீரத்து இந்துக்களையும் நாடேடியாக்கிட அரேபிய காடையா்கள் துடித்தாா்கள்.நேரு என்று கோமாளி அவர்களுக்கு உதவினாான்.
ஜெனரல் கரியப்பாவின் கருத்துக்களுக்கு உரிய மரியாதை நேரு கொடுக்கமால்எதோ 1ம் வகுப்பு சிறு பையன் போல் ” நான் சொல்வதை கேளும்” என்று மரியாதையின்றி பேசி அவமானப்படுத்தனாா் நேரு .

திரு.மோடி அவர்கள் சொன்னது உண்மை.உண்மை.உண்மை.