Followers

Sunday, May 20, 2018

சகோதரர் CMN. சலீம்அவர்களுக்கு.......


சகோதரர் CMN. சலீம்அவர்களுக்குTNTJ மன்சூரின் அறிவுரைகள் ஏக இறைவனின்  திருப்பெயரால்..

 மௌவி பீ.ஜெயினுல் ஆபிதின் இனி என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதி உள்ளீர்கள்

அதில் சகோதரர் பீ.ஜெ அவர்களின் ஆய்வுகள்,ஏகத்துவ பிரச்சாரங்கள் கடந்துவந்த பாதை, செய்த தியாகங்கள், ஏகத்துவ சித்தாந்தத்தை இளைஞர்கள் மத்தியில் விதைத்த வரலாறு என அனைத்தயைும் மிக துள்ளியமாக பட்டியலிட்டு முதல் பாதியில் எழுதியுள்ளீர்கள்...

மீதம் பாதியில் சில முரண்பட்டகருத்துக்கள் எழுதியுள்ளதால் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்..
மற்றப்படி பி.ஜெ செய்த தவறை நியாப்படுதத்துகிறோம் என்று நினைக்க வேண்டாம்...

அன்று முதல் இன்று வரை இந்த ஜமாஅத்  ஏகத்துவ பயணம் அதன் பாணியிலயே பயணித்து வருகின்றது...

இதை நோக்கி அலை அலையாய் இளைஞர்கள் கூட்டம் வந்தாலும்!
இதிலிருந்து சிலர் எல்லா கட்டத்திலும் பிரிந்தும் சென்றுள்ளார்கள் என்ன காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பிரிந்து சென்றவர்கள் இன்று இஸ்லாமிய கட்சியின் தலைவர்களாக இருக்கிரார்கள்...

இந்த ஜமாஅத் அரசியலை முன் நிறத்தி ஆரம்பிக்கப்பட்டதா?
இல்லை முஸ்லிம்களுக்கு ஏகத்துவத்தை எத்தி வைக்க ஆரம்பிக்கப்பட்டதா?

ஆரம்பத்தில் கொழுத்திய ஏகத்துவ ஜோதிதான் இன்று இளைஞர்களின் உள்ளத்தை காட்டு தீயாய் மாற்றியுள்ளது...

10 பேர் இருக்கும் பொழது என்ன சொன்னோமோ, அதயேதான் 10இலட்சம் ஆன பிறகும் சொல்கிறோம்!
அதில் மாற்று கருத்து உள்ளதா???
பிறகு எப்படி உங்களால் மக்கள் பெருக பெருக அகம்பாவ போக்கு மிகைத்துவிட்டது என்று சொல்ல முடிகிறது...?

ஆரம்பத்தில் பி.ஜெ.யின் ஏகத்துவ பயணத்தை புகழ்ந்து பட்டியலிட்ட நீங்கள், பிறகு அதே ஏகத்துவ பயணத்தை அகம்பாவம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது...

ஹதீஸ் மறுப்பு, ஜகாத், சூனியம் இவைகள் எல்லாம் இஸ்லாமிய மரபுகளை தான்டி தான்தோன்றிதனமாக பேசவைத்தது என்று எழுதியுள்ளீர்கள்!

உலகளாவிய சரவதேச உலமாக்கள் எத்தனை ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள்..!

எத்தனை அறிவிப்புகளை இது பலஹீனமான செய்தி என்று மார்க ஃபத்வா கொடுத்துள்ளார்கள்,

எத்தனை ஹதீஸ் அறிவிப்பாளர்களின் அறிவிப்பை இட்டுக்கட்டியது என்று சொல்லியுள்ளார்கள்,

எத்தனை அறிவிப்பாளர்களை இவர் நம்பகத்தன்மைவாய்ந்தவர் என்று சொல்லியுள்ளார்கள்....

புஹாரி புத்தகத்தை எழுதிய இமாம் முஹம்மது(புஹாரி) எத்தனை அறிவிப்பாளர்களின் அறிவிப்பை பலஹீனம் என்று குறிப்பிட்டுள்ளார்...

எத்தனை அறிவிப்பாளர்களை இவர் பொய்யர் என்று சொல்லியுள்ளார்...

எத்தனை அறிவிப்பாளரை இவர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழாத மனிதர் என்று சொல்லியுள்ளார்....

முஸ்லிம்,திர்மிதி,நஸயி,அஹமது, இன்னும் ஏராளமான நூல்களில் எத்தனை ஹதீஸ்களை குறிப்பிட்டு இது பலஹீனமான ஹதீஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்...
இவர்களையெல்லாம் என்ன செய்யலாம்???
இவர்களைபற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன???
ஏதோ தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான் ஹதீஸை மறுக்கின்றது என்று எழுதியுள்ளீர்கள்...
அதே தவ்ஹீத் ஜமாஅத் எத்தனை ஹதீஸ்களுக்கு உயிரூட்டியுள்ளது,
மார்க அறிஞர்கள் என்று தன்னை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்பவர்கள் எத்தனை ஹதீஸ்களை குழிதோன்டி புதைத்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியுமா???

ஜகாஅத், சூனியம் எல்லாம் வரம்புமீறி தனது கற்பனைக்கு ஏற்றவாறு சொல்லியுள்ளார் என்று எழுதியுள்ளீர்கள்,

சரி நீங்கள் சரியான கருத்தை சொல்லுங்கள்!

இல்லையென்றால் சர்வதேச மார்க்க அறிஞர்களிடம் இதைப்பற்றி ஆய்வு செய்யுங்கள்....

ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கலாமே!

ஆரம்பகால ஏகத்துவ பிரச்சாரங்கள் அனைத்தும் இவைகளையெல்லாம் முன்நிறுத்தி செய்யப்பட்டவை தானே?

ஆரம்பகாலத்தில் நாங்கள் சொன்ன,

இதில் எதாவது ஒரு மாற்று கருத்து இருந்தததா???

அன்றைக்கு சொன்னதையேதான் இன்றும் சொல்கிறோம், என்றும் சொல்வோம்...


உயிருக்கும் மேலான நபிதோழர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்...
யார் உயிரைவிட மேலானவர் நபி(ஸல்) அவர்களா? இல்லை நபி தோழர்கள், இமாம்களா? அறிஞர்களா?

மார்க அடிப்படையில் ஒரு தெளிவான முடிவுக்கு வாருங்கள்....

நபிதோழர்களை அவன்,இவன்,லூசு, கிருக்கன் என்றெல்லாம் சொன்னதாக எழுதியுள்ளீர்கள்...

இது அபான்டமாக தெறியவில்லையா உங்களுக்கு????

நபிதோழர்களை யார் இழிவாக பேசியது சுன்னத் ஜமாஅத்தினர், தர்ஹா வழிபாட்டினர் பரப்பும் அதே அவதூறைத்தான் நீங்களும் பரப்புகிறீர்கள்...

நபிதோழர்களை அசிங்கப்படுத்தியது யார்???

இஸ்லாத்தின் பெயரால் இன்று இருக்கக்கூடிய அனாச்சாரங்களை உருவாக்கி நபிகளாரை கேவலப்படுத்தி, நபிதோழர்களை அசிங்கப்படுத்தி அவுலியாக்கள்,மகான்கள்,பெரியார்கள்,

இமாம்கள் என்று படைத்த இறைவனுக்கு நிகராக வைத்து வழிப்படுகிறார்களே....

அவர்களா? நாங்களா????

மார்கம் படித்த உலமாக்களை விமர்சனம் செய்ததாக எழுதியுள்ளீர்கள்!

மார்கம் படித்த உலமாக்கள் எத்தனை பேர் இணைவைப்பு கொள்கையை பகிரங்கமாக பிரச்சாரம் செய்து குரான் ஹதீஸுக்கு மாற்றமான காரியங்களை செய்து மக்களை வழிக்கெடுக்கிறார்கள்...

அவர்களுடன் கொஞ்சி பேச சொல்கிறீர்களா???

பி.ஜெ தவறு செய்துள்ளார் என்று அறிவுரை கூறு வந்துள்ளீர்கள்...!

அதேபோலதான் மார்க அறிஞர்கள் மார்கத்தின் பெயரால் செய்த தவறுகளை சுட்டி காட்டியுள்ளோம்...

இந்த ஜமாஅத் பி.ஜெ என்ற தனிமனிதரின் உழைப்பால் உருவானது அல்ல...
படைத்த இறைவனின் உதவியுடன் இலட்சக்கனக்கான ஏகத்துவாதிகளின் வியர்வை, உழைப்பில் உருவானது...

பி.ஜெ தவறு செய்துள்ளார் அதில் மாற்றுக்கருத்து இல்லை...

அவர் செய்த தவறுக்காக அவர் உருவாக்கிய இந்த கட்டமைப்பு அவரையே தூக்கியுள்ளது.

அவருக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்...

அதே நேரத்தில் ஜமாஅத் மீதும்

குர்ஆன்,ஹதீஸ் கொள்கை மீதும் உங்களுடைய தவறான புரிதலை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்தால்...

அதற்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்...

மற்றபடி எந்தவொரு தனிப்பட்ட விரோதமோ,பகையோ உங்கள் மீது கிடையாது...
சத்தியத்தை யார் சொன்னாலும் அதை வரவேற்போம்....

வெறும் வரலாறு மட்டும் சமூக மாற்றத்தை உருவாக்காது...

ஒற்றுமையை! படைத்த இறைவனின் வார்த்தையின் மூலமாக மட்டுமே உண்டாக்க முடியும்...
அதை தவிற வேறு எப்படி நீங்கள் கூப்பாடு போட்டாலும்! அது பகல் கனவே....

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துகொள்ளுங்கள் பிரிந்துவிடாதிர்கள்!
திருக்குர்ஆன் 3:103

அன்புடன்
அ.மன்சூர் வேலூர்

https://www.facebook.com/nazeersuvanappiriyan/posts/942742249240050

14 comments:

Unknown said...


இறையில்லாஇசுலாம் என்ற இணையதளத்தில் ஒரு கட்டுரை- அரேபிய மத கலாச்சார நம்பிக்கைகள் குறித்து- தங்களின் பதிலை பதிவு செய்வீர்களா .( வர வர எனது கடிதங்களை வெளியிட மறுத்து வருகின்றீா்கள் )

அண்மையில் முகநூல் விவாத மொன்றில், “தங்கையை அனுபவிப்பதற்கு தனிமனித சுதந்தரத்தில் எந்ததடையும் இல்லையாமே?" என்றும் “நீ பென்(ண்) உரிமை பற்றி பேசுகின்றாய் மனிதனுக்குள் உறவுமுறை இறைவன் ஏற்படுத்தியது நாஸ்த்தீவாதிக்கித்தான் எதுவும் இல்லையே; தாயும் சேயும் உங்களுக்கு ஒன்றுதானப்பா நீ ஏன் பென்னுரிமை(பெண்ணுரிமை) பற்றி யோசிக்கற தம்பி” என்றும் முஹம்மதிய அடிமைகள் கேள்வியை எழுப்பியிருந்தனர். இதில் இக்கேள்வியின் கருத்துகள் உள்முரண்பாடானது என்று எளிதாக எங்களால் நிராகரிக்க முடியும். இருப்பினும் மதப்புரோகிதர்களால் மூளை சலவை செய்யப்பட்ட சிந்திக்கத் மறுக்கின்ற அப்பாவி முஃமின்களை மீட்டெடுக்க முயற்சியாகவே இப்பதிவை எழுதுகிறேன்.
இவர்கள் மட்டுமல்ல இன்னும் பலர் இதுபோல போகிறபோக்கில் சேற்றைவாரி இறைமறுப்பாளர்கள் மீதுவீசியெறிந்து தங்களுக்குள் சுய இன்பம் அடைந்து கொள்வதும் புதிதல்ல. விவாதங்களில் அவர்கள் முட்டுச்சந்தில் சிக்கிக்கொள்ளும் பொழுது அவர்களிடமிருந்து இத்தகைய தாக்குதல்கள் வெளிப்படுவதும், கடவுள் படைத்த முதல் இணையர்களாக அவர்கள் கருதும், ஆதாம்-ஏவாளிலிருந்து மனித குலம் எப்படிப் பல்கிப் பெருகியது என்ற எதி ர்கேள்விக்கு, மழுப்பலான பதில்களுடன் அவர்கள் கடந்து விடுவது வாடிக்கை. நம்முடைய முஃமின்களின் கேள்விக்கு விரிவான பதிலைக் காண்பதற்கு முன்,
ஆப்ரஹாமிய மதங்கள் கூறும் ஆதாம்-ஹவ்வாவிலிருந்து மனித குலம் எப்படிப் பெருகியது என்பதைக் கவனிப்போம்.
ஆதாமின் இரு மகன்களான, ஹாபீல்-காபீல் (ஆபேல்-காயீன்) இருவரும் கடவுளுக்கு பலி செலுத்திய விவகாரத்தில் காபீல், ஹாபீலைக் கொலை செய்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 4:4-9;குர்ஆன் 5:27-31) ஆனால் இவர்களின் தலைமுறை எப்படிப் பெருகியது என்ற கேள்விக்கு, இவற்றை வலியுறுத்தி போதிக்கும் பைபிள் பழையஏற்பாடு மற்றும் குர்ஆனில் பதில் இல்லை.
ஏன்இல்லை?
ஆசரிப்புக் கூடாரமும், பலிபீடமும், விதவிதமான பலிகளையும், அதை நிறைவேற்றும் சடங்கு முறைகளையும், பலி மிருகங்களின் கொழுப்பையும் குண்டிக் காய்களையும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று விலாவாரியாக சொன்ன கர்த்தருக்கும்; முஹம்மதிற்கு, ஆண்மை விருத்தி லேகியம் தயார் செய்யவும், அவருக்கும் விதவிதமாக மனைவிகளையும் அடிமைப் பெண்களையும் வழங்கி, விந்தை எங்கு எப்படிச் செலுத்த வேண்டுமென்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அல்லக்கை அல்லாஹ்விற்கும், ஆதாமின் தலைமுறை எவ்வாறு பெருகியது என்பதை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஏனோ வெட்கப்படுகின்றனர்.
சரி, ஆதமின் மகன்கள் இருவரும் எதற்காகப் பலிசெலுத்த சென்றனர்?
...............2

Dr.Anburaj said...

he History of al-Tabari, Volume I, page 307-314_லிருந்து சுருக்கமாக,
ஆதாம்-ஹவ்வா இணையர்களுக்கு, ஒவ்வொரு பிரசவத்திலும் ஒரு ஆண் குழந்தையுடன் ஒருபெண் குழந்தையும் பிறந்தது. அவ்வாறு ஒரு பிரசவத்தில் பிறந்த மகனுக்கு மற்ற பிரசவத்தில் பிறந்த ஒரு சகோதரியை திருமணம்(?) செய்து வைப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். அதுபோல் ஆதாமிற்கு ஹாபீல், காபீல் என்ற இரு ஆண் குழந்தைகள் இரு பெண் குழந்தைகள் இரட்டையர்களாப் பிறந்தனர். காபீல் உழவுத் தொழில் செய்பவனாகவும் ஹாபீல் கால்நடைகளை மேய்ப்பவனாகவும் இருந்தனர். காபீல் இருவரை விடப் பெரியவன். காபீலின் (அவனுடன் பிறந்த) சகோதரி ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட அழகானவள். யார் வேண்டுமானாலும் எந்த சகோதரியையும் திருமணம் செய்து கொள்ளலாம் அவனுடன் இரட்டையர்களாகப் பிறந்த குறிப்பிட்ட அந்த சகோதரியைத் தவிர என்றொரு நடைமுறையை தனது குடும்பத்தில் செயல்படுத்துபவராக ஆதாம் இருந்தார். எனவே ஹாபீலுடன் பிறந்த பெண்ணை காபீலுக்கும், காபீலுடன் பிறந்த பெண்ணை ஹாபீலுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். இதை காபீல் ஏற்கவில்லை. காரணம் ஹாபீலுடன் பிறந்த சகோதரியைவிட, தன்னுடன் பிறந்த சகோதரியே தனக்கு மிகவும் பொருத்தமானவளாக இருப்பாள் என காபீல் நினைத்தான். காபீலிடம், உன்னுடன் இரட்டையராகப் பிறந்த உனது சகோதரி உனக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல என்று ஆதம் கூறுகிறார். இதை காபீல் ஏற்கமறுக்கிறான். இவ்விவகாரத்திற்கு சரியான முடிவை எட்டுவதற்காக ஆதாம், மகன்கள் இருவரையும் அழைத்து கடவுளுக்கு பலி செலுத்தும் போட்டியை வைக்கிறார். இதில் ஹாபீல் கால்நடை மேய்ப்பவன், காபீல் உழவுத் தொழில் செய்பவன். இவரும் அவரவர் வசம் இருக்கும் நல்ல பொருட்களைக் கடவுளுக்குக் கொடுத்து அழகிய சகோதரியை அடைய நினைக்கின்றனர்.
காபீல், தன்னிடமிருந்த விளைந்த கதிர்களையும், ஹாபீல் கால்நடைகளில் இளம் கன்றுகளை வைத்தும் பலிசெலுத்துகின்றனர். பாவம் காபீல்! அல்லாஹ்/கர்த்தர் இரத்த வெறிபிடித்த கடவுள் என்பதை அவன் அறியவில்லை. இரத்த பலியை ஏற்றுக்கொண்டு, காபீலின் விளைந்த கதிர்களை கடவுள் நிராகரிக்கிறான். இதனால் பொறாமை கொண்டு கோபமடைந்த காபீல், ஹாபீலுடன் தனிமையில் இருக்கும் நேரம்பார்த்து, தலையில் தாக்கி கொன்று விடுகிறான். ஆடை கலைந்து வெட்கத்தலங்கள் வெளியான நிலையில் இறந்து கிடக்கும் ஹாபீலின் உடலை என்ன செய்வ

Dr.Anburaj said...

ஆதாமின் குடும்பத்தில் இருந்த திருமண(!) நடைமுறையும், கடவுளுக்குப் பலி செலுத்தும் போட்டியும் நிச்சயமாக அல்லாஹ்வினால் பயிற்றுவிக்கப் பட்டதாகவே இருக்க முடியும். காரணம் ஆதாம் ஒரு களிமண். அதற்கு எந்த அறிவும் கிடையாது பொருட்களின் பெயர்களைக்கூட அல்லாஹ் கற்பித்துக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. (நான் அல்லாஹ் என்று மட்டும் குறிப்பிடுவதால் கர்த்தரை விசுவாசிப்பவர்கள், நமது கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று வருத்தம் கொள்ளக் கூடாது. அவர்கள்அல்லாஹ் என்பதற்குப் பதிலாக கர்த்தர் என்று அந்தந்த இடங்களில் திருத்தி வாசித்துக் கொள்ளவும்)
ஆதாமிற்கே சுயமாக சிந்திக்கும் அறிவில்லை எனும் பொழுது அவனிருந்து தோன்றிய ஹவ்வாவிற்கும் அவர்களிலிருந்து தோன்றிய வாரிசுகளுக்கும் அதே நிலைமைதான் என்பது தெளிவு. ஒருவரின் அறிவு என்பது சமுதாய அனுபவங்களிலிருந்து பெறப்படுவது. ஆதாம் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பொருத்தவரையில் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு அல்லாஹ் மட்டுமே. அதனால் அவர்களின் அறிவாற்றலைப் பற்றி மேலும் கூறத்தேவையில்லை.
ஹாபீலின் உடலை போட்டுவிட்டு காபீல் ஓடும்வரை ஹூரிகளின் நினைவில் மயங்கிக் கிடந்தானோ என்னவோ தெரியவில்லை, டொட்டொடைங்ய்ங் என்ற பின்னணி இசையுடன் “யு ஆர் அண்டர் அரெஸ்ட்!” என்று பழைய திரைக்கதைகளின் முடிவில் வரும் காவல்காரர்களைப் போல அல்லாஹ்வும் வருகிறான். காபீலால் கொலை செய்யப்பட்ட ஹாபீலின் உடலை மறைப்பது எப்படியென்பதை ஒருகாகத்தை அனுப்பி வகுப்பெடுக்கிறான் (குர்ஆன் 5:31). இதன் மூலம் அல்லாஹ்வின் வழிமுறையை மனிதனுக்குக் கற்பித்த முறையில் காகம் என்ற பறவையும் முஹம்மதியத்தில் இரண்டாவதாக வந்த இறைத் தூதராகிறது. முஹம்மதியத்தைப் பொருத்தவரையில் சவ அடக்கமென்பது மிகக் கண்ணியமான வழிபாடு. இவர்களின் ஒரு சவ அடக்கத்தை அருகிலிருந்து கவனித்திருந்தால் நான் கூறுவதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.


இறந்த உடலில் உயிர் அல்லது ஆன்மா மட்டும்தான் இல்லை. மற்றபடி அப்பிணத்திற்கு அனைத்து உணர்வும் இருக்கு மென்பது முஹம்மதிய ஐதீகம்.
- மேற்படி வரிகள் உண்மையா ? சுவனப்பிரியன்.

Dr.Anburaj said...

உயிர் இல்லாத உடலில் ஐம்புலன்களின் உணர்வுகள், பேச்சுக்கள், சிந்தனைகள் அனைத்தும் இருக்கும் என்பது முஹம்மதிய அறிவியல். அது மட்டுமல்ல மனிதனின் நிலையான, உண்மையான வாழ்க்கை பிணமான பின்புதான் துவங்குகிறதென்பது முஹம்மதியத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. இத்தகைய மாபெரும் வாழ்கையின் துவக்கத்தை முதன்முதலில் மனித இனத்திற்குக் கற்பித்துக்கொடுக்க வந்த காகம்நபி(அலை) அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஹாபீல், காபீல் சிலை வணக்கம் செய்ததையும் அதனால்தான் இந்துக்கள் காகத்திற்கு பிண்டம் போடுகிறார்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அல்லாஹ், காபீல் மற்றும், காகம்நபி(அலை) அவர்களும் சேர்ந்து ஒரு வழியாக ஹாபீலின் பிணத்தை பூமியில் குழிதோண்டி புதைத்து விடுகின்றனர். இன்றும் காகம்நபி(அலை) அவர்கள் கற்பித்துக் கொடுத்த சுன்னாவைப் பின்பற்றியே இன்றும் முஹம்மதியர்கள் சவ அடக்கம் செய்கின்றனர். அதோடு தன் கடமை பணி செய்து கிடப்பதே என்று அல்லாஹ் மீண்டும் ஹூரிகளைக் காணச் சென்று விட்டான்.
ஆனால் கர்த்தருக்கு கோபம் தீரவில்லை, தனக்கு முதன் முதலாக பர்பிக்யூ உணவைக் கொடுத்தவனைக் கொன்று விட்டானே என்ற கோபம். காபீலை நோக்கி, “நீ நிலத்தைப் பயிரிடும் போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய்” என்றுச பிக்கிறார். “பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டு பிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்று காபீல் புலம்பினான். காபீலைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழுபழி சுமரும் என்று சொல்லி, கர்த்தர் தன் சாயலாகவே அவனைப் படைத்துவிட்டதால் இரக்கம் கொண்டு காபீலைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்கொன்று போடாதபடிக்குக் ஒரு அடையாளத்தைப் போட்டார். அங்கிருந்து வெளியேறிய காபீல் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள் என்று கூறி பைபிள் பழைய ஏற்பாடு அவனது கதையை நிறைவுக்குக் கொண்டு வருகிறது (ஆதியாகமம் 4:11-17).
அன்றைய கதை சொல்லிகள் உழவர்களின் அவல நிலைக்கு காரணமாக, காபீலின் மீதான சாபத்தையும் அல்லாஹ் நெற்கதிரை பலியாக ஏற்காததையும் கொண்டு வடிவமைத்திருக்கலாம் என்பதை நான் சொல்லாமலேயே யூகித்திருப்பீகள் என நினைக்கிறேன்.
இந்த செய்தியை சற்று வெவ்வேறு வடிவங்களில் தபரி குறிப்பிடுகிறார். தபரி தரும் இவ்விளக்கத்தை ஆபிரஹாபிய முஃமின்கள் ஏற்கமாட்டார்கள். இதுபொய்; இட்டுக் கட்டப்பட்டது; அறிப்பாளர் வரிசை குறைபாடுடையது; அறிவிப்பாளருக்கு உடல்நிலை சரியில்லை; சளி பிடித்திருந்தது; வயிற்றுப் போக்கு இருந்தது; அறிவிப்பாளரின் தாடிமயிரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது; கோள் மூட்டி விடுபவர்களாக இருந்தனர்; பொய்யுரைப்பவராக இருந்தனர்; குர்ஆனுக்கு முரண்படுகிறது; குர்ஆனைவிட விரிவாக செய்திகளைக் கூறுவதால் ஏற்க முடியாது என்றெல்லாம் மறுக்கலாம். பொய்யான செய்திகளைக் கொண்டு விவாதிப்பதால் இதற்கு பதிலளிக்கத் தேவையில்லை என்றும் நழுவலாம். அவர்களிடம் நாம் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், இவை இறை மறுப்பாளர்களாகிய எங்களது கைச்சரக்குகள் அல்ல. உங்களது நம்பிக்கைகளில் பற்றுகொண்ட மனிதர்கள் எழுதிவைத் திருப்பவைகள்; அன்றைய முஃமின்களிடையே இருந்த நம்பிக்கைகளைத்தான் தபரி தொகுத்துத் தருகிறார். அன்றைய முஃமின்களிடம் இத்தகைய நம்பிக்கைகள் இருந்ததேயில்லை என்று நினைப்பவர்கள் அதற்கான ஆதரங்களைத் தரலாம். மதவாதிகள் போற்றிப் புகழும் புனிதர்களின் கதைகள்… மன்னிக்கவும்! வரலாறுகளும் இதேபோன்ற அன்றைய மக்களின் நம்பிக்கைகள்தான்.

Dr.Anburaj said...

நம்முடைய விவாதத்திற்கு, அன்றைய மக்களிடையே நிலவிலிருந்த நம்பிக்கைகளைத் தபரி எழுதியிருக்கிறார் என்றளவில் முடித்துக் கொள்ள முடியும்; ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. அன்றைய ஆப்ரஹாமிய அடிமைகள் இவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கு ஏதாவது ஒரு தொடக்கம் இருக்கவேண்டுமே? நம்மிடைய இன்று புழக்கத்தில் இருக்கும் பழையஏற்பாடு ஆதியாகமமத்தின் மற்றொருவடிவமான “The book of Jubilees”-ல் இதற்கானப் பதில் இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் இருப்பினும் சிறு அறிமுகம்,


The book of Jubilees என்ற இத் தொகுப்பு 50 அதிகாரங்களைக்கொண்ட, பழம் பெரும் எத்தியோப்பிய யூதர்களின் நூலாகும். சிறிய ஆதியாகமம் என்றும் அழைக்கப்படுகிறது. கிபி 1947-1956-ல், West Bank, Qumran பகுதியிலுள்ள 12 குகைகளிலிருந்து ஹிப்ரு மொழியில் எழுதப்பட்ட 980திற்கும் மேற்பட்ட சுருள்களும், 50,000-க்கும் மேற்பட்ட பைப்ரஸ் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டது. Dead sea scrolls என்றயப்படும் இக்கையெழுத்துப் பிரதிகளில் சுமார் 230 சுருள்கள் இன்றைய பழைய ஏற்பாட்டிலுள்ள செய்திகளையும், சுமார் 15 சுருள்களில் பழைய ஏற்பாட்டில் இல்லாத செய்திகளைக் கூறுகிறது. இந்த 15 சுருள்கள் The book of Jubilees செய்திகளுடன் பொருந்துகிறது. இக் கையெழுத்துப் பிரதிகளின் காலம் கி.மு.இரண்டாம்நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தையதாக இருக்கலாமென்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
மோஸே, சினாய் மலையில் நாற்பது இரவு-பகல் இருந்தபொழுது கடவுளின் கட்டளைப்படி ஒரு தேவதூதனால் மோஸேவிற்குக் கற்பிக்கப்பட்டதாக துவங்குகிறது. அதாவது முஹம்மதிய முறையில் தேவதூதன் வழியாக வெளிப்பாடுகள் கொடுக்கப்பட்டதாகத் துவங்குகிறது (முஹம்மதியர்கள் மகிழ்ச்சியாக தாடியைக் கோதிவிட்டு, சட்டைக் காலரையும் தூக்கி விட்டுக்கொள்ளலாம்) 7 x 7 என்ற முறையில் வாரங்களாக, 49 வருடங்களாகப் (Jubilee) பிரித்து கதை சொல்லப் பட்டிருக்கிறது. பெரும்பாலும் பைபிள் பழைய ஏற்பாட்டுடன் பொருந்திப் போவதுடன், அதில் கூறப்படும் கதைகளுக்கு மேலதிக விபரங்களையும் கூறுகிறது. பைபிள் தொகுப்பில் மட்டுமல்ல அவர்களது பிரச்சாரங்களிலும் திட்டமிட்டு தவிர்க்கப்படும் செய்திகளிலிருந்து நமக்குத் தேவையான பகுதிகள்…

Dr.Anburaj said...

லேவியராகமம் 18:9
உன்தகப்பனுக்காவது உன்தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
என்று கட்டளையிட்ட கர்த்தர், ஆப்ரஹாம் சாராளை நிர்வாணமாக்கும் பொழுது அமைதியாக இருந்ததேன்? ஆப்ரஹாமின் காலத்தில் வேறுபெண்களே இல்லையா?
“நடக்கமாட்டதவன் சித்தப்பன் வீட்டிலிருந்து பெண் எடுத்தானாம்!” என்றொரு பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் அதற்கு மிகச்சரியான உதாரணம் நம்முடைய முஃமின்கள்தான். நாம் மேற்கண்ட லேவியராகமம் 18:9_ன் கட்டளையை, கண்ணுமணி தனது தேவைகளுக்கேற்ப மறுபடியும் மாற்றிக் கொண்டார். உடன் பிறந்த சகோதரசகோதரிகளின் குழந்தைகளுக்கிடையே அதாவது சிற்றப்பா சின்னம்மா குழந்தைகளுக்கிடையே திருமண உறவென்பது முஹம்மதை அடி பிறழாமல் பின்பற்றும் முஃமின்களிடையே இன்றும் வழக்கிலிருப்பதுதான். இது எங்களது கண்ணுமணி பொண்ணுமணியின் பாரம்பரியம் என்று மிகநெருங்கிய சகோதர இரத்த உறவுகளுக்கிடையே திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

இதற்கு உதாரணங்களை, முஹம்மதுவின் இரகசியக் காதலிகள் உம்முஹானி, கவ்லா மற்றும் அலீ-ஃபாத்திமா என நிறைய உதாரணங்களை அவர்களது வரலாற்றிலிருந்தே காண்பிக்க முடியும்.
இவர்களின் கதை இப்படியென்றால் சநாதன தர்மம் என்று பீற்றிக் கொள்ளும் இந்து மதத்தில் கூறப்படும் கடவுளர்களின் ஒழுக்கக் கேடுகளையும், அந்நிய பெண்களை அடைவதற்காக இவர்கள் நிகழ்த்திய காம வெறியாட்டங்களையும், இது போதாதென்று புத்ரோ உற்பத்திக்காகப் புண்ணிய ஆத்மாக்களென்று போற்றப்படும் ரிஷிகளும், ரிஷி பத்தினிகளும் நிகழ்த்திய ஒழுக்கக் கேடுகளையும் நினைத்தாலே அருவெறுப்பில் உடலெல்லாம் கூசுகிறது. நாம் இவற்றை விவாதிக்கத் துவங்கினால் இவைகள் மட்டுமே பல பதிவுகளாகிவிடும். மேலும் இவற்றைப்பற்றி தந்தைப் பெரியார் அவர்கள் மிகவிளக்கமாக 100 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்துவிட்டார்.
தாயின் உடன் பிறந்த சகோதரனை அதாவது தாய் மாமனைத் திருமணம் செய்வது இந்து மத வழக்கம். உடன் பிறந்தவர்களின் குழந்தைகளுக்கிடையே திருமணமென்பது முஹம்மதின் வழிமுறை. இவர்கள் இருவருமே ஒருவரையொருவர் எள்ளி நகையாடுவது வேடிக்கை. நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமண உறவு வேண்டாமென்பதுதான் மருத்துவ அறிவியல் கூறும் செய்தி.

Dr.Anburaj said...

தாய் மாமனைத் திருமணம் செய்யும் வழக்குடையவர்கள் சிறுவயது முதலே அந்த உறவு முறையைச் சொல்லி வளர்க்கப்படுகின்றனர்; அவர்கள் மனரீதியாக அதற்கு தயாராகவும் ஆகிவிடுகின்றனர்; ஆனால் சிறுவயது முதலே சகோதர உறவைச் சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளை, வளர்ந்தவுடன் திருமண உறவிற்குள் தள்ளிவிடும் முஃமின்களை என்னவென்று சொல்வது?
சரி… நாம் முஃமின்களின் கேள்விக்கு வருவோம்.
“தங்கையை அனுபவிப்பதற்கு தனிமனிதசுதந்தரத்தில் எந்ததடையும் இல்லையாமே?"
“நீ பென்(ண்) உரிமைபற்றி பேசுகின்றாய் மனிதனுக்குள் உறவுமுறை இறைவன் ஏற்படுத்தியது; நாஸ்த்தீக வாதிக்கித்தான் எதுவும் இல்லையே! தாயும் சேயும் உங்களுக்கு ஒன்றுதானப்பா; நீ ஏன் பென்னுரிமை (பெண்ணுரிமை) பற்றி யோசிக்கற தம்பி”
உண்மையில் இவர்களுக்கு அவர்களது மதத்தைப் பற்றியும் தெரியாது; இறை மறுப்பாளர்களைப் பற்றியும் தெரியாது. மதப் பரப்புரைகளில் முல்லாக்கள் முழம் போடுவதை மட்டுமே உண்மையென நம்பி, நம்மிடம் அதையே அளந்து காண்பிக்கின்றனர். தங்களிடம் இருப்பது போல தீர்க்கதரிசிகளும் வழிகாட்டும் புத்தங்களும் இல்லாமல் எப்படிவாழ முடியுமென்று நினைக்கின்றனர். இறை மறுப்பாளர்கள் என்றால் முஃமின்களது செயல்பாடுகளுக்கு, வழமைகளுக்கு எதிராக அனைத்து விதத்திலும் செயல்படக் கூடியவர்கள் என்ற உளறல்களை உண்மையெனக் கொள்கின்றனர். யூதர்களுக்கு மாறு செய்யுங்கள், கிருஸ்தவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்ற மனநோயாளி முஹம்மதுவின் சிந்தனைகள் பாரம்பரியமாக முல்லாக்களால் கடத்தப்படுவதுதான் இதற்குக் காரணம். அதே கண்ணோட்டத்தில் நம்மையும் காண்கின்றனர். நல்ல வாய்ப்பாக முஹம்மது, “யூதர்கள் வாயினால் உணவருந்துகிறார்கள் அதற்கும் நீங்கள் மாறு செய்யுங்களென்று போதிக்கவில்லை; இல்லையெனில் முஃமின்களின் பாடு திண்டாட்டமாகப் போயிருக்கும்.
தன்னைக் கடவுளின் தூதனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மாற்று நம்பிக்கையிலிருந்தவர்கள் மீது திடீர்த் தாக்குதல்கள் நிகழ்த்தி, கொலை, கொள்ளை, சூறையாடல்கள் இன அழிப்பு செய்து, பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றிய ஒரு வெறியனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கும் கும்பல்களுக்கு மனித நேயத்தை வலியுறுத்தும் இறை மறுப்பாளர்களைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியுமில்லை.

Dr.Anburaj said...

டெல்லியில் 9 வயதே நிரம்பிய சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், இலங்கை ஏறாவூரில் 13 வயது சிறுவனிடம் இந்திரிய ஆராய்ச்சி செய்து அவனது குறிகளை வீங்கிப் போகச் செய்ததும், தாருன் நுஸ்ரா மதரஸாவில் 18 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டதும் மதக் கல்வியைப் போதிக்கும் மதரஸா ஆசிரியர்களால்தான். இவர்களின் கதை இப்படியென்றால் கிருஸ்தவ மதபோதகர்களின் ஒழுக்கம், போப் பகிரங்க மன்னிப்பு கேட்குமளவிற்கு உலகப் புகழ்பெற்றது.

ஆசிஃபாவை கொடுஞ் சித்திரவதை செய்து
வன்புணர்வு கொண்டு கொலை செய்த
மதவெறியர்களுக்கு ஆதரவாக
தேசியக் கொடியேந்தி செல்லும்
ஊர்வலம்.
நாங்களும் சளைத்தவர்களல்ல என்கின்றனர் இத்துதுவ மதவெறியர்கள். கடந்த ஜனவரி 10 தேதி குதிரை மேய்க்கச் சென்ற எட்டு வயது கூட நிறைவடையாத ஆஸிஃபா என்ற சிறுமியைக் கடத்தி, கோவில் கருவறையில் வைத்து 8 நாட்களுக்கு கூட்டு வன்புணர்வு செய்து கொல்வதும், அக்கொலைக்கு இந்து மதப்பற்றை காரணமாகக்கூறி, நியாயப்படுத்தி, ஊர்வலமாகச் சென்ற மிருகங்களையும் மனிதாபிமானமற்ற இக்கொடூரச் செயலை மதத்தின் பெயரால், சார்ந்திருக்கும் இயக்கத்தின் பெயரால் ஆதரிக்கும் மதவெறியர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை .சிறுமி ஆஸிஃபாவின் விவகாரத்தில் மட்டுமல்ல, அரியலூர் நந்தினியை தனது நண்பர்களுடன் கூட்டு வன்புணர்வு செய்து கொன்ற மணிகண்டனும் சநாதன தர்மத்தை நிலை நிறுத்த போரடிய/ போராடிக் கொண்டிருக்கும் ஒரு இந்துத்துவ போராளிதான்.
நடைமுறை வாழ்வில் மதம் மற்றும் மதவாதிகள் கற்பிக்கும்ஒழுக்கத்திற்கு, சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும், மண்ணடி மகா சந்நிதானம், நித்தியானந்தம் போன்ற மதகுருமார்களின் 18+ ஆடியோ-விடியோக்கள் மேலும் சில ஆதரங்கள். இத்தகைய ஒழுக்க சீலர்களுக்கு இறை மறுப்பாளர்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? என்றும் எளிதாக இப்பதிவை முடித்துக் கொள்ளலாம் ஆனால் விவாதமுறையில் இது “Quoque fallacy” என்றாகிவிடும். எனவே நாம் விவாதத்தைத் தொடருவோம்.
ஆறுவயது பெண் குழந்தையைக்கூட இச்சையுடன் கண்ட ஒருமன நோயாளியின் தலைமையில், பெண்களைக் கழுதையாக, கால்நடையாக, விளை நிலமாகவும், அடிமையாக மொத்தத்தில் உயிருள்ள ஒரு உடைமையாக மட்டுமே காண்பதற்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்து வருபவர்களால் இப்படித்தான் சிந்திக்கமுடியும். நோய்வாய்ப்பட்ட தங்களது சிந்தனையைக் கொண்டு இறை மறுப்பாளர்களைக் காண்பதுடன், நம்மை மடக்குவதாக நினைத்து இப்படியொரு கேள்வியை முன்வைக்கின்றனர்.
ஆனால் அவர்களையும் அறியாமல், இரண்டு கேள்விகளிலும் இறை மறுப்பாளர்கள் தனிமனித சுதந்திரத்தையும், பெண்ணுரிமையைப் பேணுகிறவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஆம்! இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தனிமனித சுதந்திரத்தையும் பெண்ணுரிமை மட்டுமல்ல பகுத்தறிவையும், அறிவியல் சிந்தனையையும் ஆதரிப்பவர்கள்; அதைக் கொள்கையாகக் கொண்டவர்கள் .மனைவியின் விருப்பமின்றி கணவன் உறவுகொள்வதைக் கூட வன்புணர்ச்சியாகக் கருதுவதுதான் தனிமனித சுதந்திரத்தின் நிலை. கணவன் படுக்கைக்கு அழைத்தால் விருப்பமே இல்லையெனினும், சமைப்பதைக்கூட அடுப்பில் அப்படி விட்டுவிட்டு ஓடோடிச் சென்று அவனது இச்சையைத் தீர்த்து வைப்பதே மனைவின் கடமையென்று போதிக்கும் மதவாதிகளால் தனிமனித சுதந்திரத்தை புரிந்து கொள்ள முடியாது!

Dr.Anburaj said...

இன்னொரு விவாதத்தில் “சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளை ஏன் “உங்கள்” அறிவியலால் தடுக்க முடியவில்லை?” என்று ஒரு முஃமின் நம்மை நோக்கி கொதிக்கிறார். இதில் வேடிக்கை என்ன வென்றால், இந்த மூடர்கள் அறிவியலின் பலன்களை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்துக்கொண்டு அறிவியலை எதிர்த்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதுதான். இப்பிரபஞ்சத்தில் மதப் புத்தங்கள் மட்டுமே முழுமையானது அதை மறுதலிக்கும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் எந்த ஒன்றையும் இவர்களால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அறிவியல் என்றால் என்னவென்று தெரியாத இவர்களைப் பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா எனத் தெரியவில்லை.
அறிவியல் என்பது, மதப் புத்தகங்களைப்போல ஏழாம் வானத்திலிருந்து குதித்து வந்த ஒன்றல்ல. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கான காரணங்களை, பகுத்தறிந்து உண்மைகளைக் கண்டறியும் தேடலுக்கான ஒருகருவி. அனுபவங்களை சோதனைகள், தரவுகள் மூலம் காரணங்களை சரிபார்க்கும் ஒரு முறைமை. இவ்வாறு காரணங்கள் தெளிவாகுமிடங்களில் கடவுளை மறைத்து வைப்பதாற்கான இடமில்லாது போவதால் மதவாதிகள் அறிவியல் மீது பாய்கின்றனர்; சபிக்கின்றனர். அறிவியல் ‘சிந்தனையை’ ஆதரிப்பதால், வேறு வக்கற்றுப்போய் இறை மறுப்பாளர்களை உணர்வுகளற்ற இயந்திரங்களாக, ஒழுக்க நெறிகளைப் பின்பற்றாதவர்களாக பொது வெளியில் சித்தரித்து வெறுப்பை பொழிகின்றனர். நான் முன்பே கூறியதுபோல அவர்களது விவாதம் முட்டுச்சந்துக்குள் சிக்கிக்கொள்ளும் பொழுது வேறு வழி தெரியாததால் புளுகு மூட்ட்டை அறநெறிகளுக்குள் கடவுளை மறைத்து வைக்கின்றனர். ஒருவேளை புனித புத்தகங்களின் வழிகாட்டுதல்(?) மட்டும் இல்லையெனில், மதவாதிகளுக்கு தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு காணத் தெரியாமல் போயிருக்குமோ?
பதிவின் துவக்கதில் கண்ட கேள்விகள் மூலம் எங்களைப் போன்ற இறை மறுப்பாளர்களை எள்ளி நகையாடி சுயஇன்பம் அடைந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்பட்டிருந்தாலும் உண்மையில் இக்கேள்விகளில் நான் காண்பது, மதப் புத்தகங்கள் எது சரியெனச் சொல்கிறதோ அதைத் தெரிந்தால் மட்டுமே தவறை இனப் பிரித்துக் காணமுடியும்; கடவுள் என்பது நல்லவைகளுக்கான ஒரு முழுமையான ஒப்பீட்டு சட்டகம் (Reference frame); எனவே கடவுள் இருக்கிறது என்ற வாதத்தையே மதவாதிகள் நிலைநிறுத்த விரும்புகின்றனர் என்பதைத்தான்.
அறநெறிகளும் சமுதாய ஒழுக்கங்களும், தன்னைப் போல பிறரையும், அவர்களின் உணர்வுகளை தன்னுடையதாக கருதுவதுவதிலிருந்தும் உருவாகிறது; இவ்வுணர்வு அனைத்து உயிரினங்களிலும் இயல்பாகவே இருப்பதுதான். தனிமனிதர்களின் இரக்க குணமும் பச்சாதாப உணர்வுகளும் சமுதாய ஒழுங்காக பரிணமிக்கிறது.

Dr.Anburaj said...

இதை முஃமின்களால் ஏற்க முடியாது என்றும், அந்த இயல்பை நமக்குள் விதைத்தது கடவுள்தான் என்றும் வாதிடுவார்கள். “அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதி மிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன” (புகாரி 6000, 6469) என்பார்கள். அன்பிற்கான ஒப்பீட்டுச் சட்டகம் அல்லாஹ் என்பதே இந்த ஹதீஸ் கூறும் செய்தி.
இவர்கள் முன்வைக்கும் கதைகளின் அடிப்படையில் நோக்கினால் அன்பு மட்டுமல்ல, அனைத்துமே இவர்களின் கடவுளிலிருந்து மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. சரி… அன்றிலிருந்தே இருப்பிலிருக்கின்ற ஒழுக்கக்கேடுகளும், தீமைகளும் எங்கிருந்து வந்தது?

காபீலின் விவகாரத்தில் தனது அழகிய சகோதரியை அடைவதற்காக அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை ஏற்கமறுத்த குற்றத்துடன் திட்டமிட்டுக் கொலைக் குற்றமும் புரிந்திருக்கிறான். அவன் இவ்வாறு செயல்படக் காரணம் யார்? அவனது மனதில் இத்தகைய இச்சையை உருவானது எப்படி? ஷைத்தான் காரணமாக இல்லையென்பதை குர்ஆன் 5:30 சொல்கிறது. இவ்விடத்தில் சர்ப்பம் எதுவும் வந்ததாக பைபிளும் சொல்லவில்லை.
சாத்தானிடமிருந்து அல்லது சர்ப்பத்திடமிருந்து அல்லது தடுக்கப்பட்ட அந்தப் பழத்திலிருந்து இக்குணங்கள் கடத்தப்பட்டதா?
ஆதாமின் விவகாரத்தைப் பற்றிக் கூறும் பொழுது, குர்ஆன் 7:27 சைத்தான் சதி செய்து ஆதாம் மற்றும் அவரது துணைவியருக்கும் வெட்கத் தலங்களை வெளியாக்கினான்; வெளியேற்றினான் என்று சொல்கிறது. குர்ஆனைப் பொறுத்தவரையில், எந்த ஒரு இடத்திலும் ஆதாமின் வீழ்ச்சிக்கு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. அவர்களை வெளியேற்றுவது அல்லாஹ்வின் திட்டத்திலேயே இல்லையா? இப்படி துவங்கினால் இது விதி பற்றிய விவாதத்தில்தான் போய் முடியும் எனது நோக்கம் அதுவல்ல.
சரி…! வாதத்திற்காக, அது கடவுளின் திட்டம் இல்லையென்றும், ஆதாமிற்கு பகுத்தறிந்து செயல்படும் அறிவை வழங்கியிருந்தாகவும் ஆதாம் தவறான வாய்ப்பைத் தேர்தெடுத்து வீழ்ச்சியடைந்தாரென்றே வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்-சைத்தான் உரையாடலில் சைத்தானிடம் காணப்பட்ட “கர்வம்” “இறுமாப்பு”, “பொறாமை”, “அடிபணியாமை” போன்றவைகளும் ஆதாம்-சைத்தான் விவகாரத்தில் காணப்படும், “பொய்யுரைத்தல்”, “சதி செய்து ஏமாற்றுதல்” போன்ற ஒழுக்கக் கேடுகளும் சைத்தானுக்குள் வந்தது எப்படி?
சரி… !

Dr.Anburaj said...

ஆதாம்-ஹவ்வா மற்றும் அவரது சந்ததிகளுக்கும் ஏற்பட்ட காம இச்சையையும், காமத்தினால் காபீலுக்குள் ஏற்பட்ட பொறாமையும், வெறுப்பும், அதைத் தொடர்ந்த கொலை செய்யும் எண்ணங்களையும் படைத்தது யார்? “எப்பொழுதிருந்து” இவர்களுக்குள் இம்மாற்றங்கள் ஏற்பட்டதென்பதை ‘டன்’ கணக்கில் எழுதிக் குவித்து வைத்திருக்கும் மூட மத அறிஞர்களின் கூட்டம் இதற்கு என்ன பதிலை வைத்திருக்கிறது?
இக்குணங்களை அல்லது தன்மைகளை சைத்தான் உருவாக்கினான் அல்லது ஆதாம் குழுவினர் தங்களுக்குள் அவர்களே உருவாக்கிக் கொண்டனர் என்று சொல்லுவார்களா? நிச்சயமாக முடியாது! இவற்றை அவரவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர் எனில், இவர்கள் கூறும் கடவுள் மட்டுமே படைப்பாளன் என்ற வாதம் செயலிழந்து போகும்! இதை மதவாதிகளால் ஒருகாலும் ஏற்க முடியாது. இவர்களின் வாதப்படி, ஆதியில் தேவனைத் தவிர எதுவுமில்லை; அவனால் - அவனிருந்து மட்டுமே அனைத்தும் உருவானது என்பதே அவர்களின் முடிவாக இருக்கும் பொழுது, அறநெறிகளுக்கு மட்டும் கடவுளை முன்னிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.
எனவே காபீலுக்கு தனது சகோதரி மீது ஏற்பட்ட ஈர்ப்பும், அதனால் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகள் அனைத்திற்கும் கர்த்தர்/அல்லாஹ்வை மட்டுமே குற்றம்சாட்ட முடியும். அன்பில் 99 பங்கை தன்வசம் வைத்திருப்பதைப் போல, மற்ற ஒழுக்கக்கேடுகளின் 99 பங்கை தன்வசமே கடவுள் வைத்திருக்கவேண்டும். இத்தகைய கேடுகெட்ட ஒன்று எப்படிப் புனிதமானதாக, போற்றுதலுக்குரியதாக, வணக்கத்திற்குரியதாக இருக்க முடியும்?
நம்மிடையே நிலவிலிருக்கும் அன்பு, கருணை, இரக்கம், சமுதாய ஒழுங்குகள்… போன்ற தன்மைகளுக்கு காரணம் கடவுள் அல்ல அவை பரிணாமத்தின் பரிசு. இதை உணர்ந்து கொள்ள பெரிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை நம்மிடையே இருக்கும் வளர்ப்புப் பிராணிகளையும் கால்நடைகளைக் கவனித்தால் போதுமானது. உதாரணத்திற்கு, தனது குஞ்சுகளை அபகரிக்க வரும் பருந்தை தாக்கும் தாய் கோழியின் செயலில் இருப்பதுவும், தனது குட்டிகளை பாதுகாக்கும் நாயின் செயலில் இருப்பதும், கன்றைப் பராமரிக்கும் கால்நடைகளின் செயலில் இருப்பதும் இதுவே! மனிதர்களாகிய நாம் மற்ற விலங்குகளைவிட சற்று மேம்பட்ட சமுதாய விலங்கு. நமது வசதிகளுக்கேற்ப விதிமுறைகளை வகுக்கச் செய்வதற்கும் இந்த உணர்வுகளே காரணம்.
சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கிறது. (குர் ஆன் 13:3).
தஜ்ஜால்

Dr.Anburaj said...


மேற்படி கட்டுரையை வெளியிட்டு அதற்கு தக்க மறுப்பை இருந்தால் வெளியிட்டு தங்களது ஈமானை நிரூபிக்க வேண்டுகின்றேன்.

Dr.Anburaj said...

நன்றி.

ஒழுக்கம் எ ன்பதை கேலிக் கூத்தாகும் அரேபிய குப்பைகளை இசுலாம் என்று மக்களை குழப்பி வரும் மக்களை தஜ்லால் கடுமையாக சாடி வருகின்றாா்.

இவர்களுக்கு தக்க பதிலை அளிக்க வேண்டியது நமது கடமை.இறைதத்துவத்தை இழந்து மக்கள் நாத்திகா்களாக மாறி மாக்கள் போல் வாழும் நிலை ஏற்படக் கூடாது.

எல்லாம் வல்ல இறைவன் ஒரே நேரத்தில் உண்டாகுக என்றால் ஒரே நேரத்தில் ஆயிரம் குடும்பங்கள் உருவாகியிருக்கும். பின் சந்ததிகளை உருவாக்கியிருக்கலாம்.சிறந்த ஒழுக்க விதிகளை மக்களுக்கு அளித்திருக்கலாம். ஆனால் இறைவன் செய்ய வில்லை.இது மதத்தின் பலஹீனம் அல்லவா ? தஜ்லால் சவால் அனைத்து மதத்திற்கும் விடப்பட்ட சவால்தான்.

அ.மன்சூர் வேலூர் said...

ஜசக்கல்லாஹ் கைர்