ஒசாகா மாகாணத்தில் விமான
நிலையத்தில் பள்ளிவாசல்!
ஜப்பானின் மாகாணமான ஒசாகாவின்
விமான நிலையத்தில் புதிதாக இறைவனை தொழுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கை கால்களை
அலம்பிக் கொள்ள தனி இடம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனி தொழுகை அறை. மெக்காவின்
திசையை காட்டும் குறிப்புகள் என்று பல மாற்றங்களை செய்துள்ளது விமான நிலைய நிர்வாகம்.
22 வயதான மலேசிய
மாணவர் அஹமது முஜம்மிர் கூறுகிறார் 'மற்றவர்களின் கலாசாரத்தை மதித்து முஸ்லிம்கள் தொழ இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, இந்தோனேஷியா போன்ற இஸ்லாமிய நாடுகளை பின்பற்றி விமான நிலையத்தில்
தொழும் இடம் அமைக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி' என்கிறார்.
அதே போன்று விமான நிலையத்தில்
உள்ள உணவகங்களில் ஹலால் உணவு தனியாக பரிமாறப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி சமைக்கப்பட்ட
உணவுகள் இனி தடையின்றி கிடைக்கும். மேலும் ஹோட்டல்களில் மது பரிமாறப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானிய அரசின் இந்த மாற்றங்களால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அடுத்த
வருடம் மேலும் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
நமது நாட்டில் கொலை கற்பழிப்புகள்
சிறை பிடிப்பு போன்ற குற்றங்கள் தற்போது அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வெகுவாக
குறைந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் சுற்றுலா மூலம் கிடைக்கும் பெரும்
தொகையை நாம் இழக்க நேரிடும். மோடியின் தலைமையில் இந்தியா கண்ட இழப்புகளில் இதுவும்
ஒன்று.
No comments:
Post a Comment