கேரளத்தின் ஆலுவா
நகரத்தில் நீட் தேர்வு எழுத வந்த 1200 மாணவ மாணவிகள் பரீட்சை எழுத ஹாலுக்குள் சென்று விட்டனர். இவர்களின் பெற்றோர் தங்குவதற்கு
நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழ் நாட்டிலிருந்தும் பல மாணவர்கள் இங்கு
வந்திருந்தனர். சரியான வாகன வசதியும் இல்லை. வெயிலில் செய்வதறியாது தவித்த பெற்றோர்களை
சிவகிரி பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளே தங்க அனுமதித்தது.
'இது வரை முஸ்லிம்களின்
பள்ளியில் உள்ளே சென்றதில்லை. மிகவும் கண்ணியமாக எங்களை அமரச் செய்தனர்.'
'வாகன வசதியும் இல்லாது
தவித்து நின்றோம். முஸ்லிம்கள் இளைப்பாற பள்ளியில் இடம் கொடுத்தனர். மிக்க நன்றி'
பெற்றோர்கள் நெகிழ்ச்சியாக
நன்றி கூறினர்.
பள்ளிவாசல் நிர்வாகி
கூறுகிறார் 'மனிதர்களுக்கு உதவும்
எந்த காரியத்தையும் நாம் செய்வோம். இறைவனும் அதைத்தான் விரும்புகிறான்'
மதவெறியை மாய்ப்போம்:
மனித நேயத்தை வளர்ப்போம்!
No comments:
Post a Comment