Followers

Tuesday, September 11, 2018

நடமாடும் பள்ளி வாசலை பார்த்திருக்கிறீர்களா?

நடமாடும் பள்ளி வாசலை பார்த்திருக்கிறீர்களா?

2020ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வரும் பார்வையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கென்று நடமாடும் பள்ளி வாசலை ஜப்பானிய கம்பெனி ஒன்று வடிவமைத்துள்ளது. 50 நபர்கள் ஒரே நேரத்தில் தொழுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கை கால்கள் அலம்பிக் கொள்வதற்கும் இதே வண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'முஸ்லிம்களுக்கு எங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறான மொபைல் பள்ளிகளை அதிகம் அமைக்கவிருக்கிறோம்' என்கின்றனர் ஜப்பானிய அதிகாரிகள். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அனைத்து மக்களுக்கும் உள்ள உரிமைகளை கொடுத்தால்தான் சாத்தியப்படும். அதனை நன்றாக புரிந்து செயல்படும் ஜப்பானிய அதிகாரிகளை நாம் பாராட்டுவோம்.


No comments: