இஸ்லாம் தந்தையையும் தாயையும் கண்ணியப்படுத்தச் சொல்கிறது. தாயை ஒரு படி மேலேயே வைத்துள்ளது. இதனை விவாதப் பொருளாக வைத்து அழகிய பாடமெடுக்கும் இந்த இஸ்லாமிய நங்கைகளைப் போல மற்ற இஸ்லாமிய பெண்களும் மாறுவார்களாக!
----------------------------------
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி " சீ " எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:23
திருக்குர்ஆன் 17:23
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! " சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:24
திருக்குர்ஆன் 17:24
"அல்லாஹ்வின் துாதரே! மனிதர்களிலேயே நான் தோழமை கொள்ள அதிக உரிமை படைத்தவர் யார்?" என்று நான் கேட்டேன். அதற்க்கு நபி(ஸல்) அவர்கள் "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார் ? எனக்கேட்டேன். "உன் தாய்" என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தாய் " என்றார்கள். அடுத்ததாக யார்? எனக்கேட்டேன். "உன் தந்தை " என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நுால்: புகாரி(5971)
No comments:
Post a Comment