Followers

Tuesday, September 25, 2018

அரேபிய பெயரை பிடிவாதமாக வைத்துக்கொள்வது....

//முஸ்லீம்கள் அரேபிய பெயரை பிடிவாதமாக வைத்துக்கொள்வதும் ஒரு ஆதிக்க மனப்பான்மைதான்.தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள அது சுலபமாக உதவுகின்றது.அதுபோல் இந்துக்கள் பெயருக்கு அடுத்து சாதி பெயரைப்போட்டுக் கொள்கின்றாா்கள். // டாக்டர் அன்பு ராஜ்


தவறான வாதம். இஸ்லாத்தில் அரேபிய பெயரை வைக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அன்பு, மலர்கொடி, அன்பழகன், அறிவழகன் என்ற அழகிய தமிழ்ப் பெயர்களை வைத்துக் கொண்டு அவர் இஸ்லாமியராக தொடரலாம். ஆனால் தமிழகத்தில் இஸ்லாத்தை ஏற்றவுடன் அரேபிய மாற்றிக் கொள்வதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் சாதி வெறியானது புரையோடிப் போயுள்ளது. மணிகண்டன் என்ற ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாக வைப்போம். அந்த பெயரிலேயே அவர் தொடர்ந்தால் அவரது சாதி என்ன என்று தேட ஆரம்பித்து விடுவீர்கள். அதே மணி கண்டன் அப்துல் ரஹ்மானாக மாறி விட்டால் அந்த நிமிடமே அவரது சாதி அவரை விட்டு போய் விடுகிறது. நீங்களும் அவர் எந்த சாதி என்று தேட மாட்டீர்கள்.

எங்களின் முன்னோர்களும் நாயக்கராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, தலித்தாகவோ, பார்பனராகவோ இருந்திருப்பர். ஆனால் இன்று எனது சாதி என்ன என்று எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எனவே தமிழகத்தில் சாதி வெறி என்று ஒழிகிறதோ அதுவரை முஸ்லிம்கள் அரேபிய பெயரையே வைப்பர். சாதி ஒழிந்து விட்டால் தமிழ்ப் பெயர்களை தாங்களாகவே முன் வந்து முஸ்லிம்கள் வைத்தக் கொள்வர்.

ஆனால் இந்து மத சாதி என்பது பிறப்பினாலேயே வருவது. எத்தனை சாதி மறுப்பு கல்யாணம் செய்தாலும் இறப்பு வரை இந்த சாதி உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும். எனவே இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.









5 comments:

Dr.Anburaj said...

காதில் மாலை சுற்ற வேண்டாம் சுவனப்பிரியன் அவர்களே.சாதி மறுப்பு திருமணம் செய்தவா்கள் சாதிகள் பார்க்காது வாழும் திராவிட கழகத்தார்கள் அனைவரும் தமிழ் பெயா்தான் வைத்திருக்கின்றாா்கள். ஒரு முஸ்லீம் தனக்கு சுந்தரம் என்று பெயா் வைத்தால் என்ன கெட்டுப் போய்விடும் ? சுந்தரத்தை இந்து என்று கருதி உன் சாதி என்ன என்று கேட்டால் நான் முஸ்லீம்.எனக்கு சாதியில்லை என்று சொல்லிவிட்டால் முடிந்தது பிரச்சனை.சுந்தரம் ஆன என்னிடம் உன் சாதி என்ன என்று கேட்டால் நான் இந்து எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்லக் கூடியவா்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.சாதிகளாக வாழ்வது முஸ்லீம்கள் ஜமாத் ஆக வாழ்வதற்கு சமம். சாதிகள் கலப்பை எதிா்ப்பதுதான் தவறு. கன்னிப் பெண்ணுக்கும் துறவிக்கும் சாதி கிடையாது.ஒத்த பண்பாடு கலாச்சாரம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்து வேதங்கள் சொல்கின்றன. நாடாா் ஆண்மகனை திருமணம் செய்யும் ஒரு வேறுசாதிப்பெண் நாடாா் சாதி பெண்ணாக மாறிவிடுகின்றாள்.இந்த கருத்தை மக்கள் தங்களின் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் ஏதோ செய்து குழப்பங்கள் செய்து வருகின்றாா்கள். பதவி பணம் அழகு என்றெல்லாம் பல கதைகள் சமய பேதமில்லாமல் உள்ளது.முறையான சமய சமூக கல்வியை இந்துக்களுக்கு அளியுங்களேன்.பாருங்கள் மாற்றத்தை.
நிச்சயம் சொல்கின்றேன் அரேபிய பெயா் வைப்பதுதான் இசுலாமிய சட்டம்.அரேபிய பெயா் இல்லாவிடில் ஜமாத் ஒப்புக்கொள்ளாது.அந்த முஸ்லீம் outcaste ஆகிவிடுவான்.இசுலாம் என்பது அரேபிய வல்லாதிக்க இயக்கம். உலகை அரேபிய மயமாக்குவதே அதன் இலட்சியம். அப்படியிருக்கும் போது போலிவாதங்களை பதிவு செய்து மற்றவர்களை ஏமாற்ற வேண்டாம்.
பத்ரூதீன் என்ற மாணவா் என்னிடம் படித்து வந்தாா். அவர் சைவ உணவு விரும்பி உண்பவா்.அசைவம் சாப்பிட மறுத்து வாழ்ந்து வந்தாா். அவர் தங்கள் ஊா் மக்கள் அசைவம் சாப்பிடாதது பெரும் குற்றம் என்றும் முகம்மது நபியை அவமதிக்கும் செயல் என்று எல்லோரும் என்னை பழிக்கின்றாா்கள் ” என்று பலமுறை என்னிடம் வருத்தம் தெரிவித்தாா்.நான் என்ன சொல்வது.எனக்கும் சைவ உணவுதான் விருப்பமானது.

ASHAK SJ said...

அராபிய பெயர் வைப்பது ஒன்றும் கடமை அல்ல, அழகான அர்த்தத்தை தரும் பெயரைத்தான் இஸ்லாம் வைக்க சொல்கிறது, எனக்கு தெரிந்த பல இந்தோனேசிகளின் பெயர்கள் அராபிய பெயர்கள் அல்ல, ஏன் இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் பெயரே அராபிய பெயர் அல்ல

Dr.Anburaj said...

தங்கள் தெருவில் குடும்பத்தில் எத்தனை முஸ்லீம்கள் சுத்தமான தமிழ் அல்லது இந்திய பெயா்கள் வைத்துள்ளாா்கள் . முகவரி தரலாமா

Dr.Anburaj said...

தங்கள் தெருவில் குடும்பத்தில் எத்தனை முஸ்லீம்கள் சுத்தமான தமிழ் அல்லது இந்திய பெயா்கள் வைத்துள்ளாா்கள் . முகவரி தரலாமா.

இந்த கேள்விக்கு விடை அளிக்க இந்தோனெசியாவிற்கு செல்வானேன்.இந்தியா இல்லையா

ASHAK SJ said...

முதலில் உன் பெயரே தமிழ் பெயர் இல்லை சூத்திரா , நீ எங்க கிட்ட வராத, எங்களுக்கு தமிழ் ஒரு மொழியே தவிர வேறுஒன்றும் இல்லை.