தனக்கு வழங்கிய விருதை இஸ்லாமியருக்கு தந்த எழுத்தாளர்!
விகடன் நடத்திய விருதுகள் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பு சிறு கதைகளை தமிழ் உலகுக்கு வழங்கிய எழுத்தாளர் மதிவாணன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிய மதிவாணன் தனது ஏற்புரையில்...
'ரயிலில் இடம் தர மறுத்ததற்காக ஜூனைத்கான் என்ற இளைஞன் அடித்தே கொல்லப்பட்டான். வண்டியில் மாடு ஏற்றி வந்த குற்றத்திற்காக ஒரு இஸ்லாமியர் அடித்து கொல்லப்படுகிறார். மற்றும் இரண்டு இஸ்லாமியர்கள் பசுவின் பெயரால் அடித்தே கொல்லப்படுகின்றனர். இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொல்லப்பட்டார்களே அந்த நால்வருக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.'
பலத்த கரகோஷத்தோடு இதனை சொன்னார் தோழர் மதிவாணன். விழுந்த இந்த கரவொலியானது மோடி மற்றும் அமீத்ஷாக்களின் காதுகளில் சென்று ஒலிக்கட்டும். இஸ்லாமியர்களை ஒழித்து விட்டால் இந்துத்வாவை வளர்த்து விடலாம் என்று மனப்பால் குடிக்கும் ஹெச்.ராஜா போன்ற தீவிரவாதிகளின் காதிகளிலும் சென்று ஒலிக்கட்டும்.
No comments:
Post a Comment