*தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் TNTJ & ஆல் இந்தியா தவ்ஹீது ஜமாஅத் AITJ கேரளா வெள்ள நிவாரணப் பணிகளின் இறுதி கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது*
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகினார்கள், இவர்களின் நிவாரணத்திற்காக இந்த மாதம் 18,19,20 & 23 தேதிகளில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழ, எரணாகுளம், பாலக்காடு மாவட்டங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பொருளாதார உதவித் தொகை வழங்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கின் துவக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள் நேரிடையாக சென்று கொடுக்கப்பட்டதுடன் மீட்டுப்பணிகளிலும் உதவிகள் செய்தனர் TNTJ & AITJ உறுப்பினர்கள்.
இரண்டாவது கட்டமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், மற்றும் சாலைகள் சுத்தப்படுத்தும் வேலைகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் தான் ஹஜ்ஜுப் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை வந்தது. அப்போதும் கூட தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த அதிகமாேனாரும் பெருநாள் கொண்டாடுவதற்காக சொந்த ஊருகளுக்குக் கூட செல்லாமல், *பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்* என்ற நபிகளாரின் பொன்மொழியை மனதில் ஏற்றுக் கொண்டு பாதிக்கப்ட்ட மக்களின் துயர் துடைக்க களப்பணியாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இறுதியாக, மேலே குறிப்பிட்ட தேதிகளில் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் வரிசையில் செப்டம்பர்23 அன்று வயநாடு மாவட்டத்தில் பனமரம், மானந்தவாடி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு, அதில் இருந்து மிகவும் தகுதியான 250 குடும்பங்களை கண்டறிந்து செப்டம்பர் 24 அன்று மானந்தவாடி கிரீன்ஸ் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வைத்து பொருளாதார உதவியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ௹பாய் 4000 (நான்காயிரம்) வீதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் TNTJ மாநில செயளாளர்களான ஐ.அன்சாரி, திருச்சிசையது, தரமணி யாசிர், கோவை அப்பாஸ், பொருளாளர் காஞ்சி சித்தீக், மற்றும் கேரளா வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் தலைமையில், மானந்தவாடி முனிசிப்பல் சேர்மன் உதவித் தொகை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எடவகை பஞ்சாயத்து தலைவி, மானந்தவாடி வியாபாரப் பெருமக்கள், மற்றும் தவ்ஹீது ஜமாஅத்தின் சேவை மற்றும், கொள்கையில் ஈர்க்கப்பட்ட மக்களும் பெரும்திரளாகக் கலந்து கொண்டார்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
ஹைதுரூஸ்ஆதில்,
கிளைத் தலைவர்
AITJ கோழிக்கோடு.
கிளைத் தலைவர்
AITJ கோழிக்கோடு.
No comments:
Post a Comment